QGIS/C3/Table-Joins-and-Spatial-Joins/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:36, 3 February 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 QGISல், Table Joins மற்றும் Spatial Joins குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- ஒரு பொதுவான field மற்றும் அதே spatial dataவை கொண்ட இரண்டு data-setகளின் attribute tableகளை இணைப்பது
00:19 இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04,
00:26 QGIS பதிப்பு 2.18
00:30 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:36 முன்நிபந்தனை QGIS டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்.
00:42 playerன் கீழ் உள்ள , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள, folder ஐ தரவிறக்கவும்
00:48 தரவிறக்கப்பட்ட zip file லில் உள்ளவற்றை extract செய்து, அதை ஒரு folderலில் சேமிக்கவும்
00:54 நான் ஏற்கனவே, Code filesஐ தரவிறக்கி, extract செய்து, Desktopல் ஒரு folderல் சேமித்துள்ளேன்
01:01 அதை திறக்க folderஐ டபுள்-க்ளிக் செய்யவும்
01:04 extract செய்யப்பட்ட folderல், Stations.shp file ஐ கண்டுபிடிக்கவும்
01:09 Stations.shp file, இந்தியா முழுவதும் உள்ள வானிலை நிலையங்கள் அல்லது விமான நிலையங்களின் இருப்பிடங்களை காட்டுகிறது.
01:17 இந்த டுடோரியலைப் பயிற்சி செய்ய தேவையான பிற fileகளும் இங்கே உள்ளன.
01:23 attribute tableகளை இணைப்பது என்பதன் பொருள், இரண்டு data-setகளுக்கும் இடையே உள்ள attribute dataவை சேர்ப்பது
01:30 ஒரு tableஐ இணைப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன, Table Join, அதாவது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொதுவான column dataகளைக் கொண்ட tableகளை இணைப்பது
01:40 Spatial Joinஎன்பதன் பொருள், அதே spatial dataவை கொண்ட tableகளை சேர்ப்பது
01:46 இந்த டுடோரியலில் நாங்கள் இரண்டு முறைகளையும் செயல்விளக்குவோம்.
01:50 மேலும் தகவலுக்கு இந்த வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
01:54 QGIS interfaceஐ திறக்கவும்
01:57 முதலில், பொதுவான tableஐ கொண்ட attribute tableகளை இணைப்போம்
02:02 இடது பக்கத்தில் உள்ள ல் இருந்து, Add Vector Layer tool ஐ க்ளிக் செய்யவும்
02:07 Add Vector Layer dialog box திறக்கிறது
02:10 Dataset fieldக்கு அடுத்துள்ள Browse பட்டனை க்ளிக் செய்யவும். ஒரு dialog-box திறக்கிறது
02:17 Desktopல் உள்ள Code files folder ல் இருந்து, Stations.shp file க்கு செல்லவும்
02:22 Open பட்டனை க்ளிக் செய்யவும்.
02:25 Add vector layer dialog boxல், Open பட்டனை க்ளிக் செய்யவும்.
02:30 Stations.shp layer, Layers Panelக்கு சேர்க்கப்படும்
02:35 அதற்கான வரைபடம் canvas ல் தோன்றுகிறது
02:39 இந்த வரைபடம் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள வானிலை ஆய்வு நிலையங்களுடன் தொடர்புடைய புள்ளி அம்சங்களைக் காட்டுகிறது.
02:47 இந்த layerக்கான attribute tableஐ திறப்போம்
02:51 Layers Panelலில், Stations.shpஐ ரைட்-க்ளிக் செய்யவும்
02:56 context menu வில் இருந்து, Open Attribute Table தேர்வை தேர்ந்தெடுக்கவும்
03:01 Attribute table திறக்கிறது
03:03 District அம்சம் ஒன்றிற்கான data மட்டுமே இருப்பதை கவனிக்கவும்
03:10 attribute tableஐ சிறிதாக்கவும்
03:13 Layers Panelக்கு spreadsheet ஐ மற்றொரு data-setஆக சேர்ப்போம். இந்த data set , CSV formatல் உள்ளது
03:23 menu bar ல் உள்ள Layer menu வை க்ளிக் செய்யவும். Add layerஐ க்ளிக் செய்யவும்.
03:30 sub-menu வில், Add Delimited Text Layer தேர்வை க்ளிக் செய்யவும்.
03:35 ஒரு dialog box திறக்கிறது
03:38 File Name fieldக்கு அடுத்துள்ள Browse பட்டனை கண்டுபிடிக்கவும்
03:43 ஒரு dialog box திறக்கிறது
03:46 Desktopல் உள்ள Code files folder ல் இருந்து, Rainfall.csv file க்கு செல்லவும். Open பட்டனை க்ளிக் செய்யவும்.
03:54 Delimited Text File dialog boxல், File Format.ஆக CSVஐ தேர்ந்தெடுக்கவும்
04:01 Geometry definitionக்கு, No geometry. ஐ தேர்ந்தெடுக்கவும். மற்ற அனைத்து fieldகளையும் அப்படியே விடவும்
04:09 OK பட்டனை க்ளிக் செய்யவும்.
04:12 QGIS canvasல், Rainfall layer Layers Panelக்கு சேர்க்கப்படும்
04:18 Rainfall layerஐ ரைட்-க்ளிக் செய்யவும்
04:21 context menu வில், Open Attribute Table ஐ க்ளிக் செய்யவும்
04:26 Attribute table திறக்கிறது. attribute table, பல்வேறு மாவட்டங்களுக்கான Januaryல் இருந்து December வரை உள்ள மழை dataவை கொண்டுள்ளது
04:37 Stations attribute tableஐ பெரிதாக்கி, இரண்டு tableகளையும் ஒப்பிடவும்
04:43 Rainfall மற்றும் Stations layerகள் இரண்டிலும் District field பொதுவாக இருப்பதை கவனிக்கவும்
04:50 இப்போது, Rainfall layerல் இருந்து Stations layerக்கு நாம் attribute dataவை சேர்ப்போம்
04:56 Stations attribute tableலில், Districtஎன்று பெயரிடப்பட்ட ஒரு column மட்டுமே இருக்கிறது
05:02 Rainfall dataவை நாம் Stations attribute tableக்கு சேர்ப்போம்
05:07 attribute tableகளை மூடவும்
05:10 Layers Panelலில், Stations layerஐ தேர்ந்தெடுக்கவும்
05:14 இந்த layer, Rainfall layerல் இருந்து புதிய dataவை பெறும்
05:19 Stations layerஐ ரைட்-க்ளிக் செய்யவும்
05:22 context menu வில், Properties தேர்வை க்ளிக் செய்யவும்
05:26 Layer Properties dialog box திறக்கிறது. இடது panelலில் இருந்து Joinsஐ க்ளிக் செய்யவும்
05:33 புதிய windowவில், கீழ்-இடது மூலையில் உள்ள plus குறியை க்ளிக் செய்யவும்
05:39 Add vector join dialog box திறக்கிறது
05:43 Join layer, Join field மற்றும் Target fieldக்கு நாம் தேர்வுகளை தேர்ந்தெடுக்கலாம்
05:51 Join layer, Rainfall layerஆகும் மற்றும் அதிலிருந்து data, Stations attribute tableக்கு சேர்க்கப்படும்
05:59 இங்கு Rainfall layer ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது
06:03 சேர்க்கப்படவேண்டிய Rainfall tableலில், Join field ஒரு field அல்லது attribute ஆகும்
06:10 Join fieldல், drop-down ல் இருந்து Districtஐ தேர்ந்தெடுக்கவும்
06:15 Target field, Stations table உடன் இணைக்கப்பட வேண்டிய field ஆகும்
06:20 Target fieldல், District ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது
06:25 இந்த field, இரண்டு tableகளுக்கும் பொதுவானதாகும்
06:29 Choose which fields are joinedக்கான ஐ check செய்யவும்
06:34 கீழேயுள்ள text-box , இப்போது, columnகள் மற்றும் check-boxகளால் நிரப்பட்டுள்ளது
06:41 Text boxல், Januaryல் இருந்து Annual Average வரையிலான columnகளுக்கான boxகளை check செய்யவும்
06:48 Add vector join dialog boxஐ மூட, OK ஐ க்ளிக் செய்யவும்
06:53 Layer Properties dialog boxல், layer மற்றும் இணைந்த columnகள் பற்றிய தகவல்கள் மேலே குறிக்கப்பட்டுள்ளன.
07:02 Applyபட்டனை க்ளிக் செய்து, பின் OK பட்டனை க்ளிக் செய்யவும்
07:06 QGIS interfaceல், முன்பு காட்டியுள்ளபடி, Stations layerக்கான attribute tableஐ திறக்கவும்
07:14 இந்த table, அனைத்து stationகளுக்கான Rainfall dataவை காட்டுகிறது
07:20 attribute tableஐ மூடவும்
07:23 அடுத்து, இருப்பிடத்தின் அடிப்படையில் இரண்டு data-setகளின் attribute tableஐ எப்படி இணைக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்வோம்.
07:30 Layers Panelக்கு மற்றொரு layerஐ சேர்ப்போம்
07:34 இதற்கு, Add Vector Layer tool ஐ க்ளிக் செய்யவும்
07:38 Add Vector Layer dialog boxல், Browse பட்டனை க்ளிக் செய்யவும்
07:43 Desktopல் உள்ள Code files folder ல் இருந்து Admin.shpக்கு செல்லவும்
07:49 Open பட்டனை க்ளிக் செய்யவும்
07:51 மீண்டும், Add Vector Layer dialog boxல் உள்ள Open பட்டனை க்ளிக் செய்யவும்
07:56 Admin layer, இப்போது Layers Panelக்கு சேர்க்கப்பட்டுவிட்டது
08:00 இந்தியாவின் நிர்வாக மாநில எல்லைகளைக் காட்டுகின்ற Admin layer வரைபடம் திறக்கிறது
08:07 Layers panelலில் உள்ள Admin layerஐ க்ளிக் செய்யவும்
08:11 அதை இழுத்து, Stations layerக்கு கீழே கொண்டு வரவும்
08:15 இப்போது நாம் வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள புள்ளி அம்சங்களைக் காணலாம்.
08:20 Admin layerக்கான attribute tableஐ திறக்கவும்
08:24 attribute table மாநிலங்கள் தொடர்பான தகவல்களைக் காட்டுகிறது.
08:29 Admin attribute tableஐ சிறிதாக்கவும். மீண்டும் Stations attribute tableஐ திறக்கவும்
08:36 இப்போது Stations layer மற்றும் Admin layer ஆகியவற்றிற்கான இருப்பிடத்தின் அடிப்படையில் நாம் attributeகளை இணைப்போம்
08:43 attribute tableகளை மூடவும்
08:47 Vector menuவை க்ளிக் செய்யவும்
08:48 Menuவில் கீழே scroll செய்து, Data Management Toolsஐ க்ளிக் செய்யவும்
08:53 sub-menu வில், Join attributes by locationஐ தேர்ந்தெடுக்கவும்
08:58 Join attributes by location dialog box திறக்கிறது
09:02 Target vector layerக்கான drop-downஐ க்ளிக் செய்யவும்
09:05 இங்கு, attribute tableஐ இணைப்பதற்கு, target vector layerஐ நாம் குறிப்பிட வேண்டும்
09:12 இங்கு நாம் Stations layerக்கு, புதிய dataவை சேர்க்கவேண்டும்
09:17 அதனால், Stations layer தான் Target Layer
09:21 அதனால், drop-down ல் இருந்து Stations [EPSG: 4326]target layerஆக தேர்ந்தெடுப்போம்
09:29 Join vector layerக்கு drop-down ஐ க்ளிக் செய்யவும்
09:33 இங்கு நாம் target layer உடன் சேர்க்கவேண்டிய layerஐ தேர்ந்தெடுக்கவேண்டும்
09:40 drop-down ல் இருந்து, Admin [EPSG: 4326] ஐ தேர்ந்தெடுக்கவும்
09:45 attributeகளை joinசெய்வதற்கு இங்கு நமக்கு பல தேர்வுகள் உள்ளன
09:50 பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள வானிலை ஆய்வு நிலையங்களைக் கண்டுபிடிக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
09:56 அதனால் Geometric predicateன் கீழ் நாம், within check-box ஐ தேர்ந்தெடுப்போம். கீழே scroll செய்யவும்
10:04 Open output file after running algorithmக்கான check-box ஐ check செய்யவும்
10:10 மற்ற settingகுகளை முன்னிருப்பாக அப்படியே விடவும். Run பட்டனை க்ளிக் செய்யவும்
10:17 கீழே உள்ள status bar, செயலாக்க algorithmன் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. செய்முறை முடியும் வரை காத்திருக்கவும்
10:25 Canvasல், Joined layer என்ற ஒரு புதிய layer, Layers Panelலில் சேர்க்கப்படுகிறது
10:32 Joined layerஐ ரைட்-க்ளிக் செய்து, attribute tableஐ திறக்கவும்
10:37 Stations layer.ல் உள்ள ஒவ்வொரு புள்ளிக்கும் இந்த table, Admin layerல் இருந்து அனைத்து attributeகளையும் கொண்டிருக்கிறது
10:45 ஒவ்வொரு புள்ளி அம்சத்திலும் மாநிலத்தைப் பற்றிய தகவல்கள் உள்ளன.
10:49 attribute tableஐ மூடவும்
10:52 Projectஐ சேமிக்க, menu bar ல் உள்ள Project menu வை க்ளிக் செய்யவும். Save As தேர்வை தேர்ந்தெடுக்கவும்
11:01 பொருத்தமான பெயரைக் கொடுத்து தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
11:06 Save பட்டனை க்ளிக் செய்யவும்
11:10 சுருங்கச் சொல்ல,
11:12 இந்த டுடோரியலில் நாம் கற்றது, - ஒரு பொதுவான field மற்றும் அதே spatial dataவை கொண்ட இரண்டு data-setகளின் attribute tableகளை இணைப்பது
11:22 பயிற்சியாக, ஜூன் முதல் டிசம்பர் வரையுள்ள rainfall dataவை stations data உடன் இணைக்கவும்
11:30 Code files folderல் கொடுக்கப்பட்டுள்ள Rainfall.csv மற்றும் Stations.shp file களை பயன்படுத்தவும்
11:37 முடிவு பெற்ற பயிற்சி இவ்வாறு இருக்கவேண்டும்
11:41 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
11:48 Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
11:58 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
12:02 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
12:10 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree