User:Jayashree
From Script | Spoken-Tutorial
|
|
00:02 | கூடுதல் உணவிற்கான பொதுவான வழிகாட்டுதல்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது |
00:14 | 6 மாத குழந்தைகளுக்கு கூடுதல் உணவைத் தொடங்குவதன் முக்கியத்துவம் |
00:19 | மற்றும் 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான கூடுதல் உணவு பற்றிய வழிகாட்டுதல்கள். |
00:27 | இப்போது தொடங்குவோம் |
00:29 | ஒரு குழந்தைக்கு பிறந்த நேரம் முதல் 6 மாதங்கள் வரை பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். |
00:37 | 6 மாத வயது என்பது குழந்தையின் வாழ்க்கையின் 6 வது மாதத்தின் தொடக்கத்தை குறிக்காது. |
00:45 | அவள் 6 மாதங்களை பூர்த்திசெய்து தனது வாழ்க்கையின் 7 வது மாதத்தைத் தொடங்கும் போது தான். |
00:52 | இந்த வயதில், ஒரு குழந்தைக்கு பிரத்யேக தாய்ப்பால் போதாது. |
00:59 | தாய்ப்பால் சேர்த்து, சத்தான வீட்டில் சமைத்த உணவை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். |
01:06 | இதுவே கூடுதல் உணவு என்று அழைக்கப்படுகிறது. |
01:11 | இது 6 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். |
01:18 | குழந்தையை உயரமாகவும், ஆரோக்கியமாகவும், புத்திசாலித்தனமாகவும் உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. |
01:26 | 6 மாத வயதில் கூடுதல் உணவைத் தொடங்குவது முக்கியம். |
01:33 | இல்லையெனில், குழந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தடைப்படும். |
01:39 | குழந்தை பிற்காலத்தில் திட உணவை நிராகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. |
01:47 | கூடுதல் உணவு தாய்ப்பாலூட்டுவதை ஆதரிக்கிறது என்பதை நினைவில் கொள்க. |
01:53 | எனவே, குறைந்தபட்சம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். |
02:00 | வகை, |
02:02 | நிலைத்தன்மை |
02:04 | மற்றும் கூடுதல் உணவின் அளவு குழந்தையின் வயதுக்கு ஏற்ப மாறுபடும். |
02:10 | ஒவ்வொரு வயதினருக்கும் குறிப்பிட்ட பரிந்துரைகள் உள்ளன. |
02:16 | இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் அவை விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. |
02:23 | இப்போது, எல்லா வயதினருக்கும் கூடுதல் உணவளிப்பதற்கான முக்கியமான வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதிக்கலாம். |
02:31 | எந்தவொரு புதிய உணவும் முதலில் ஒரு குழந்தைக்கு தனியாக கொடுக்கப்பட வேண்டும். |
02:37 | இது பிற உணவுகளுடன் பின்னர் சேர்க்கப்பட வேண்டும். |
02:42 | ஒரு குறிப்பிட்ட உணவுக்கு குழந்தைக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்பதை மதிப்பீடு செய்ய இது உதவும். |
02:48 | நல்ல ஊட்டச்சத்துக்கு, பலவகையான உணவுகளை உட்கொள்வது அவசியம். |
02:54 | ஒவ்வொரு 4 வது நாளிலும், குழந்தையின் உணவில் ஒரு புதிய உணவைச் சேர்க்கவும். |
03:01 | முன்பு கொடுக்கப்பட்ட உணவுடன் 1 தேக்கரண்டி புதிய உணவை தொடங்கவும். |
03:08 | படிப்படியாக ஒவ்வொரு நாளும் அதன் அளவை அதிகரிக்கவும். |
03:12 | அனைத்து 8 உணவுக் குழுக்களிடமிருந்தும், ஊட்டச்சத்து நிறைந்த உணவு படிப்படியாக சேர்க்கப்பட வேண்டும். |
03:20 | முதல் உணவுக் குழு தானியங்கள், வேர்கள் மற்றும் கிழங்குகளாகும். |
03:27 | பருப்பு வகைகள், விதைகள் மற்றும் கொட்டைகள் இரண்டாவது குழுவில் உள்ளன. |
03:32 | மூன்றாவது குழு, பால் பொருட்களை கொண்டிருக்கிறது |
03:37 | நான்காவது குழு இறைச்சி, மீன் மற்றும் கோழி. |
03:42 | ஐந்தாவது குழு முட்டை. |
03:46 | வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆறாவது குழு. |
03:52 | ஏழாவது குழு மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள். |
03:57 | கடைசியாக, தாய்ப்பால் கொடுப்பது எட்டாவது குழு. ஆனால் மிக முக்கியமான ஒன்றாகும். |
04:04 | இது மற்ற உணவுக் குழுக்களுடன் தினமும் சேர்க்கப்பட வேண்டும். |
04:11 | ஒரு குழந்தையின் உணவில் அனைத்து 8 உணவுக் குழுக்களும் இருக்க வேண்டும். |
04:17 | ஒரு குழந்தையின் உணவில் இந்த குழுக்களில் 5 க்கும் குறைவாக இருந்தால், அது கடுமையான பிரச்சினைக்கு வழிவகுக்கும். |
04:24 | அதை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். |
04:28 | சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை. |
04:33 | மீதமுள்ள 7 குழுக்களிடமிருந்து உணவை, ஒவ்வொரு நாளும் திட்ட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். |
04:40 | மேலும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 மில்லி விலங்கின் பால் மற்றும் 2 கூடுதல் நேர உனவை கொடுக்கவும். |
04:49 | விலங்குகளின் பாலை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்பு எப்போதும் கொதிக்க வைக்கவும். |
04:55 | இப்போது, குழந்தையின் உணவில் புதிய உணவுக் குழுக்களைச் சேர்ப்பதற்கான வரிசையைப் பற்றி விவாதிக்கலாம். |
05:02 | தாய்ப்பாலுடன், முதல் 5 குழுக்களிடமிருந்து கூடுதல் உணவைக் கொடுக்கத் தொடங்குங்கள். |
05:09 | 6 வயதிற்குப் பிறகு குழந்தைக்கு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் தேவை. |
05:16 | இருப்பினும், ஆரம்ப நாட்களில் கொடுக்கக்கூடிய உணவின் அளவு சிறியதாக இருக்க வேண்டும். |
05:24 | எனவே, முதல் 5 குழுக்களிடமிருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கலாம். |
05:31 | இந்த உணவுகளில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. |
05:38 | குழந்தையின் உயரம் மற்றும் தசை எடையின் வளர்ச்சிக்கு அவை முக்கியம். |
05:45 | குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்ல கொழுப்புகள் முக்கியம். |
05:50 | இந்த உணவுகளுக்குப் பிறகு, காய்கறிகளையும் பழங்களையும் கொடுக்கத் தொடங்குங்கள். |
05:57 | காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. |
06:03 | இருப்பினும், அவை முதல் 5 குழுக்களைப் போல புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்ததாக இல்லை. |
06:11 | எனவே, எடை தேக்கம் அல்லது எடை இழப்பைத் தவிர்ப்பதற்காக அவை பின்னர் தொடங்கப்படுகின்றன. |
06:18 | மேலும், பழங்கள் சுவைக்க இனிமையானவை. |
06:23 | இனிப்பு சுவைக்கு முன் குழந்தைகள் பலவிதமான சுவைகளை சுவைப்பது முக்கியம். |
06:31 | வெவ்வேறு சுவைகளை சுவைப்பது, குழந்தைகள் அதிக உணவுகளை ஏற்க உதவுகிறது. |
06:37 | இது பின்னர் அவர்கள் சில வகை உணவுகளை மட்டுமே உண்பவராக மாறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. |
06:44 | எனவே, மற்ற எல்லா வகையான உணவுகளையும் சேர்த்த பிறகு பழங்கள் குழந்தையின் உணவில் சேர்க்கப்படுகின்றன. |
06:51 | புதிய, பருவகால, உள்ளூர் பழங்களை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. |
06:59 | வழக்கமான உணவுக்குப் பிறகு பழத்தை இனிப்பாக கொடுக்கலாம். |
07:05 | பழச்சாறு குழந்தையின் வழக்கமான உணவில் கலக்கப்படக்கூடாது. |
07:11 | இந்த வயதினருக்கு பழச்சாறு பரிந்துரைக்கப்படுவதில்லை. |
07:16 | இதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் ரெடிமேட் பழச்சாறு இரண்டும் உள்ளடங்கும். |
07:23 | தாய்ப்பால் கொடுப்பதை 2 ஆண்டுகள் வரை தொடர நினைவில் கொள்ளவும். |
07:28 | ஒரு குழந்தை மூச்சுத் திணறக் கூடிய அளவிற்கு கடினமான உணவுகளை வழங்குவதைத் தவிர்க்கவும். |
07:34 | முழு கொட்டைகள், திராட்சை, சுண்டல் மற்றும் பச்சையான கேரட் துண்டுகள் போன்ற உணவுகள் எடுத்துக்காட்டுகள் ஆகும். |
07:44 | புதிதாக சமைத்த, வீட்டில் சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவே குழந்தைக்கு சிறந்தது. |
07:51 | குழந்தை உணவு சேமிக்கப்பட வேண்டுமானால், பாதுகாப்பான சேமிப்பு குறித்த எங்கள் டுடோரியலைப் பாருங்கள். |
07:57 | குழந்தை உணவை பாதுகாப்பான முறையில் தயாரிப்பது மற்றும் பரிமாறுவதும் அதே டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது. |
08:06 | மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். |
08:10 | உணவுடன், கொதித்த பின் குளிவிக்கப்பட்ட நீரையும் 6 மாத குழந்தைக்கு கொடுக்கலாம். |
08:18 | ஒரு நாளைக்கு இரண்டு முறை 30 முதல் 60 மில்லி தண்ணீர் வீதம் கொடுக்கத் தொடங்கலாம். |
08:25 | வெப்பமான காலநிலையில் குழந்தையின் தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்பட வேண்டும். |
08:31 | தாய்ப்பால் மற்றும் நீர், குழந்தைக்கு சிறந்த பானங்கள் ஆகும். |
08:37 | இருப்பினும், அவை சரியாக நேரத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். |
08:42 | உணவுக்கு முன் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவோ அல்லது தண்ணீர் கொடுக்கவோ வேண்டாம். |
08:48 | பசியுள்ள குழந்தை புதிய உணவுகளை சுவைக்க அதிக வாய்ப்புள்ளது. |
08:54 | உணவு கொடுத்த 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது தண்ணீர் கொடுக்கலாம். |
09:02 | ஒரு குழந்தை நன்றாக வளர போதுமான கூடுதல் உணவு அவசியம். |
09:08 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி |