QGIS/C3/Table-Joins-and-Spatial-Joins/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | QGISல், Table Joins மற்றும் Spatial Joins குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- ஒரு பொதுவான field மற்றும் அதே spatial dataவை கொண்ட இரண்டு data-setகளின் attribute tableகளை இணைப்பது |
00:19 | இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, |
00:26 | QGIS பதிப்பு 2.18 |
00:30 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
00:36 | முன்நிபந்தனை QGIS டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும். |
00:42 | playerன் கீழ் உள்ள , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள, folder ஐ தரவிறக்கவும் |
00:48 | தரவிறக்கப்பட்ட zip file லில் உள்ளவற்றை extract செய்து, அதை ஒரு folderலில் சேமிக்கவும் |
00:54 | நான் ஏற்கனவே, Code filesஐ தரவிறக்கி, extract செய்து, Desktopல் ஒரு folderல் சேமித்துள்ளேன் |
01:01 | அதை திறக்க folderஐ டபுள்-க்ளிக் செய்யவும் |
01:04 | extract செய்யப்பட்ட folderல், Stations.shp file ஐ கண்டுபிடிக்கவும் |
01:09 | Stations.shp file, இந்தியா முழுவதும் உள்ள வானிலை நிலையங்கள் அல்லது விமான நிலையங்களின் இருப்பிடங்களை காட்டுகிறது. |
01:17 | இந்த டுடோரியலைப் பயிற்சி செய்ய தேவையான பிற fileகளும் இங்கே உள்ளன. |
01:23 | attribute tableகளை இணைப்பது என்பதன் பொருள், இரண்டு data-setகளுக்கும் இடையே உள்ள attribute dataவை சேர்ப்பது |
01:30 | ஒரு tableஐ இணைப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன, Table Join, அதாவது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொதுவான column dataகளைக் கொண்ட tableகளை இணைப்பது |
01:40 | Spatial Joinஎன்பதன் பொருள், அதே spatial dataவை கொண்ட tableகளை சேர்ப்பது |
01:46 | இந்த டுடோரியலில் நாங்கள் இரண்டு முறைகளையும் செயல்விளக்குவோம். |
01:50 | மேலும் தகவலுக்கு இந்த வலைத்தளத்தைப் பார்வையிடவும். |
01:54 | QGIS interfaceஐ திறக்கவும் |
01:57 | முதலில், பொதுவான tableஐ கொண்ட attribute tableகளை இணைப்போம் |
02:02 | இடது பக்கத்தில் உள்ள ல் இருந்து, Add Vector Layer tool ஐ க்ளிக் செய்யவும் |
02:07 | Add Vector Layer dialog box திறக்கிறது |
02:10 | Dataset fieldக்கு அடுத்துள்ள Browse பட்டனை க்ளிக் செய்யவும். ஒரு dialog-box திறக்கிறது |
02:17 | Desktopல் உள்ள Code files folder ல் இருந்து, Stations.shp file க்கு செல்லவும் |
02:22 | Open பட்டனை க்ளிக் செய்யவும். |
02:25 | Add vector layer dialog boxல், Open பட்டனை க்ளிக் செய்யவும். |
02:30 | Stations.shp layer, Layers Panelக்கு சேர்க்கப்படும் |
02:35 | அதற்கான வரைபடம் canvas ல் தோன்றுகிறது |
02:39 | இந்த வரைபடம் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள வானிலை ஆய்வு நிலையங்களுடன் தொடர்புடைய புள்ளி அம்சங்களைக் காட்டுகிறது. |
02:47 | இந்த layerக்கான attribute tableஐ திறப்போம் |
02:51 | Layers Panelலில், Stations.shpஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
02:56 | context menu வில் இருந்து, Open Attribute Table தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
03:01 | Attribute table திறக்கிறது |
03:03 | District அம்சம் ஒன்றிற்கான data மட்டுமே இருப்பதை கவனிக்கவும் |
03:10 | attribute tableஐ சிறிதாக்கவும் |
03:13 | Layers Panelக்கு spreadsheet ஐ மற்றொரு data-setஆக சேர்ப்போம். இந்த data set , CSV formatல் உள்ளது |
03:23 | menu bar ல் உள்ள Layer menu வை க்ளிக் செய்யவும். Add layerஐ க்ளிக் செய்யவும். |
03:30 | sub-menu வில், Add Delimited Text Layer தேர்வை க்ளிக் செய்யவும். |
03:35 | ஒரு dialog box திறக்கிறது |
03:38 | File Name fieldக்கு அடுத்துள்ள Browse பட்டனை கண்டுபிடிக்கவும் |
03:43 | ஒரு dialog box திறக்கிறது |
03:46 | Desktopல் உள்ள Code files folder ல் இருந்து, Rainfall.csv file க்கு செல்லவும். Open பட்டனை க்ளிக் செய்யவும். |
03:54 | Delimited Text File dialog boxல், File Format.ஆக CSVஐ தேர்ந்தெடுக்கவும் |
04:01 | Geometry definitionக்கு, No geometry. ஐ தேர்ந்தெடுக்கவும். மற்ற அனைத்து fieldகளையும் அப்படியே விடவும் |
04:09 | OK பட்டனை க்ளிக் செய்யவும். |
04:12 | QGIS canvasல், Rainfall layer Layers Panelக்கு சேர்க்கப்படும் |
04:18 | Rainfall layerஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
04:21 | context menu வில், Open Attribute Table ஐ க்ளிக் செய்யவும் |
04:26 | Attribute table திறக்கிறது. attribute table, பல்வேறு மாவட்டங்களுக்கான Januaryல் இருந்து December வரை உள்ள மழை dataவை கொண்டுள்ளது |
04:37 | Stations attribute tableஐ பெரிதாக்கி, இரண்டு tableகளையும் ஒப்பிடவும் |
04:43 | Rainfall மற்றும் Stations layerகள் இரண்டிலும் District field பொதுவாக இருப்பதை கவனிக்கவும் |
04:50 | இப்போது, Rainfall layerல் இருந்து Stations layerக்கு நாம் attribute dataவை சேர்ப்போம் |
04:56 | Stations attribute tableலில், Districtஎன்று பெயரிடப்பட்ட ஒரு column மட்டுமே இருக்கிறது |
05:02 | Rainfall dataவை நாம் Stations attribute tableக்கு சேர்ப்போம் |
05:07 | attribute tableகளை மூடவும் |
05:10 | Layers Panelலில், Stations layerஐ தேர்ந்தெடுக்கவும் |
05:14 | இந்த layer, Rainfall layerல் இருந்து புதிய dataவை பெறும் |
05:19 | Stations layerஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
05:22 | context menu வில், Properties தேர்வை க்ளிக் செய்யவும் |
05:26 | Layer Properties dialog box திறக்கிறது. இடது panelலில் இருந்து Joinsஐ க்ளிக் செய்யவும் |
05:33 | புதிய windowவில், கீழ்-இடது மூலையில் உள்ள plus குறியை க்ளிக் செய்யவும் |
05:39 | Add vector join dialog box திறக்கிறது |
05:43 | Join layer, Join field மற்றும் Target fieldக்கு நாம் தேர்வுகளை தேர்ந்தெடுக்கலாம் |
05:51 | Join layer, Rainfall layerஆகும் மற்றும் அதிலிருந்து data, Stations attribute tableக்கு சேர்க்கப்படும் |
05:59 | இங்கு Rainfall layer ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது |
06:03 | சேர்க்கப்படவேண்டிய Rainfall tableலில், Join field ஒரு field அல்லது attribute ஆகும் |
06:10 | Join fieldல், drop-down ல் இருந்து Districtஐ தேர்ந்தெடுக்கவும் |
06:15 | Target field, Stations table உடன் இணைக்கப்பட வேண்டிய field ஆகும் |
06:20 | Target fieldல், District ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது |
06:25 | இந்த field, இரண்டு tableகளுக்கும் பொதுவானதாகும் |
06:29 | Choose which fields are joinedக்கான ஐ check செய்யவும் |
06:34 | கீழேயுள்ள text-box , இப்போது, columnகள் மற்றும் check-boxகளால் நிரப்பட்டுள்ளது |
06:41 | Text boxல், Januaryல் இருந்து Annual Average வரையிலான columnகளுக்கான boxகளை check செய்யவும் |
06:48 | Add vector join dialog boxஐ மூட, OK ஐ க்ளிக் செய்யவும் |
06:53 | Layer Properties dialog boxல், layer மற்றும் இணைந்த columnகள் பற்றிய தகவல்கள் மேலே குறிக்கப்பட்டுள்ளன. |
07:02 | Applyபட்டனை க்ளிக் செய்து, பின் OK பட்டனை க்ளிக் செய்யவும் |
07:06 | QGIS interfaceல், முன்பு காட்டியுள்ளபடி, Stations layerக்கான attribute tableஐ திறக்கவும் |
07:14 | இந்த table, அனைத்து stationகளுக்கான Rainfall dataவை காட்டுகிறது |
07:20 | attribute tableஐ மூடவும் |
07:23 | அடுத்து, இருப்பிடத்தின் அடிப்படையில் இரண்டு data-setகளின் attribute tableஐ எப்படி இணைக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்வோம். |
07:30 | Layers Panelக்கு மற்றொரு layerஐ சேர்ப்போம் |
07:34 | இதற்கு, Add Vector Layer tool ஐ க்ளிக் செய்யவும் |
07:38 | Add Vector Layer dialog boxல், Browse பட்டனை க்ளிக் செய்யவும் |
07:43 | Desktopல் உள்ள Code files folder ல் இருந்து Admin.shpக்கு செல்லவும் |
07:49 | Open பட்டனை க்ளிக் செய்யவும் |
07:51 | மீண்டும், Add Vector Layer dialog boxல் உள்ள Open பட்டனை க்ளிக் செய்யவும் |
07:56 | Admin layer, இப்போது Layers Panelக்கு சேர்க்கப்பட்டுவிட்டது |
08:00 | இந்தியாவின் நிர்வாக மாநில எல்லைகளைக் காட்டுகின்ற Admin layer வரைபடம் திறக்கிறது |
08:07 | Layers panelலில் உள்ள Admin layerஐ க்ளிக் செய்யவும் |
08:11 | அதை இழுத்து, Stations layerக்கு கீழே கொண்டு வரவும் |
08:15 | இப்போது நாம் வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள புள்ளி அம்சங்களைக் காணலாம். |
08:20 | Admin layerக்கான attribute tableஐ திறக்கவும் |
08:24 | attribute table மாநிலங்கள் தொடர்பான தகவல்களைக் காட்டுகிறது. |
08:29 | Admin attribute tableஐ சிறிதாக்கவும். மீண்டும் Stations attribute tableஐ திறக்கவும் |
08:36 | இப்போது Stations layer மற்றும் Admin layer ஆகியவற்றிற்கான இருப்பிடத்தின் அடிப்படையில் நாம் attributeகளை இணைப்போம் |
08:43 | attribute tableகளை மூடவும் |
08:47 | Vector menuவை க்ளிக் செய்யவும் |
08:48 | Menuவில் கீழே scroll செய்து, Data Management Toolsஐ க்ளிக் செய்யவும் |
08:53 | sub-menu வில், Join attributes by locationஐ தேர்ந்தெடுக்கவும் |
08:58 | Join attributes by location dialog box திறக்கிறது |
09:02 | Target vector layerக்கான drop-downஐ க்ளிக் செய்யவும் |
09:05 | இங்கு, attribute tableஐ இணைப்பதற்கு, target vector layerஐ நாம் குறிப்பிட வேண்டும் |
09:12 | இங்கு நாம் Stations layerக்கு, புதிய dataவை சேர்க்கவேண்டும் |
09:17 | அதனால், Stations layer தான் Target Layer |
09:21 | அதனால், drop-down ல் இருந்து Stations [EPSG: 4326]ஐ target layerஆக தேர்ந்தெடுப்போம் |
09:29 | Join vector layerக்கு drop-down ஐ க்ளிக் செய்யவும் |
09:33 | இங்கு நாம் target layer உடன் சேர்க்கவேண்டிய layerஐ தேர்ந்தெடுக்கவேண்டும் |
09:40 | drop-down ல் இருந்து, Admin [EPSG: 4326] ஐ தேர்ந்தெடுக்கவும் |
09:45 | attributeகளை joinசெய்வதற்கு இங்கு நமக்கு பல தேர்வுகள் உள்ளன |
09:50 | பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள வானிலை ஆய்வு நிலையங்களைக் கண்டுபிடிக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். |
09:56 | அதனால் Geometric predicateன் கீழ் நாம், within check-box ஐ தேர்ந்தெடுப்போம். கீழே scroll செய்யவும் |
10:04 | Open output file after running algorithmக்கான check-box ஐ check செய்யவும் |
10:10 | மற்ற settingகுகளை முன்னிருப்பாக அப்படியே விடவும். Run பட்டனை க்ளிக் செய்யவும் |
10:17 | கீழே உள்ள status bar, செயலாக்க algorithmன் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. செய்முறை முடியும் வரை காத்திருக்கவும் |
10:25 | Canvasல், Joined layer என்ற ஒரு புதிய layer, Layers Panelலில் சேர்க்கப்படுகிறது |
10:32 | Joined layerஐ ரைட்-க்ளிக் செய்து, attribute tableஐ திறக்கவும் |
10:37 | Stations layer.ல் உள்ள ஒவ்வொரு புள்ளிக்கும் இந்த table, Admin layerல் இருந்து அனைத்து attributeகளையும் கொண்டிருக்கிறது |
10:45 | ஒவ்வொரு புள்ளி அம்சத்திலும் மாநிலத்தைப் பற்றிய தகவல்கள் உள்ளன. |
10:49 | attribute tableஐ மூடவும் |
10:52 | Projectஐ சேமிக்க, menu bar ல் உள்ள Project menu வை க்ளிக் செய்யவும். Save As தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
11:01 | பொருத்தமான பெயரைக் கொடுத்து தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். |
11:06 | Save பட்டனை க்ளிக் செய்யவும் |
11:10 | சுருங்கச் சொல்ல, |
11:12 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, - ஒரு பொதுவான field மற்றும் அதே spatial dataவை கொண்ட இரண்டு data-setகளின் attribute tableகளை இணைப்பது |
11:22 | பயிற்சியாக, ஜூன் முதல் டிசம்பர் வரையுள்ள rainfall dataவை stations data உடன் இணைக்கவும் |
11:30 | Code files folderல் கொடுக்கப்பட்டுள்ள Rainfall.csv மற்றும் Stations.shp file களை பயன்படுத்தவும் |
11:37 | முடிவு பெற்ற பயிற்சி இவ்வாறு இருக்கவேண்டும் |
11:41 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
11:48 | Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
11:58 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
12:02 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
12:10 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |