Synfig/C3/Basic-bone-animation/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Synfig.ஐ பயன்படுத்தி “Basic bone animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம், Synfig.ல் உள்ள Skeleton தேர்வை பயன்படுத்தி, ஒரு கதாபாத்திரத்தை animate செய்யக் கற்போம் |
00:13 | மேலும் நாம் கற்கப்போவது: boneகளைச் சேர்ப்பது, |
00:17 | boneகளை உடலுடன் இணைப்பது, boneகளை animate செய்வது |
00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 OS, |
00:31 | Synfig பதிப்பு 1.0.2 |
00:36 | இப்போது தொடங்குவோம். நாம் Synfigல் உள்ளோம் |
00:40 | எனது கணினியில் நான் சேமித்துவைத்துள்ள, Synfig-character file ஐ திறக்கிறேன் |
00:47 | இந்த file உங்களுக்கு, Code Files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளவும் |
00:57 | உடலின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு layerகளில் இருக்க உறுதிப்படுத்தி கொள்ளவும் |
01:02 | இப்போது, Skeletonஐ பயன்படுத்தி உடலின் மேல் பகுதியை நிலையான மூட்டுகளுடன் பொறுத்த கற்றுக்கொள்வோம். |
01:11 | அதற்கு முன் நாம், groupகளை உருவாக்க வேண்டும். உதாரணத்திற்கு- இடது கை இடது மேல் கை, இடது கீழ் கை மற்றும் இடது உள்ளங்கை ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்க வேண்டும். |
01:25 | அதனால், இந்த மூன்று layerகளையும் நாம் group செய்து, அதை L-hand என பெயரிடவேண்டும் |
01:32 | இவ்வாறே மற்ற layerகளையும் group செய்யவும் |
01:36 | இங்கு காட்டியுள்ளபடி, group layerகளுக்கு, L-hand, R-hand, Head, Neck மற்றும் Trunk என பெயரிடவும் |
01:46 | Save As தேர்வை பயன்படுத்தி இந்த fileஐ save செய்வோம் |
01:50 | Fileக்கு சென்று Save As.ஐ க்ளிக் செய்யவும் |
01:54 | உங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்து, பின் fileன் பெயரை Basic hyphen bone hyphen animation. என டைப் செய்யவும் |
02:03 | பின், Save பட்டனை க்ளிக் செய்யவும் |
02:06 | இப்போது, Layers panel.க்கு செல்லவும் |
02:10 | Group செய்யப்பட்ட இந்த அனைத்து layerகளையும் வைத்து, மேலும் ஒரு groupஐ செய்து, அதற்கு Character என பெயரிடவும் |
02:17 | இப்போது, முக்கோண வடிவத்தை க்ளிக் செய்து, Character group ஐ திறக்கவும் |
02:23 | Character layer.ன் மேல் layerஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
02:27 | New layerக்கு சென்று, பின் Otherக்கு சென்று, Skeleton.ஐ க்ளிக் செய்யவும் |
02:33 | canvasல் நாம் ஒரு boneஐ பெறுகிறோம் |
02:37 | Transform tool ஐ க்ளிக் செய்து, boneனின் பச்சை புள்ளியை தேர்ந்தெடுக்கவும் |
02:42 | mouseஐ அழுத்திக் கொண்டே இழுத்து, boneஐ கதாபாத்திரத்தின் Trunk பகுதிக்கு நகர்த்தவும் |
02:49 | இப்போது, செயல் விளக்கியபடி, boneஐ வைக்கவும் |
02:53 | அடுத்து, boneனின் நீளத்தை சரிசெய்ய, boneனின் orange புள்ளியை பயன்படுத்தவும் |
03:00 | இதற்கு பிறகு, boneனின் ஆரஞ்சு புள்ளியை ரைட்-க்ளிக் செய்யவும் |
03:04 | பின், Create child bone தேர்வை க்ளிக் செய்யவும் |
03:10 | முன்பு விளக்கியபடி, Trunk ன் மேல் பகுதியில் உள்ள, child boneனின் நீளத்தை சரி செய்யவும் |
03:17 | இதே முறையில், கழுத்து, தலை மற்றும் கைகளுக்கு boneகளைச் சேர்த்து சரிசெய்யவும். |
03:41 | இப்போது, Skeleton layer உடம்பினுள் வைக்கப்பட்டது |
03:45 | அடுத்து, உடலின் ஒவ்வொரு பகுதியிலும் boneகளை இணைப்போம். |
03:50 | அதற்கு, Layers panelக்கு செல்லவும். R-upper-arm layerஐ ரைட்-க்ளிக் செய்து, பின் Select all child layers.ஐ க்ளிக் செய்யவும் |
04:00 | canvasக்கு செல்லவும். வலது மேல் கையின் எல்லா nodeகளையும் தேர்ந்தெடுக்க, Shift key ஐ பயன்படுத்தி, mouseஐ அழுத்திக் கொண்டே இழுக்கவும் |
04:11 | Ctrl keyஐ அழுத்தி, பின் Skeleton layer.ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:18 | R-upper-armன் boneனின் ஏதாவது ஒரு nodeஐயும் ரைட்-க்ளிக் செய்யவும் |
04:23 | Link to bone. தேர்வை க்ளிக் செய்யவும் |
04:28 | அதேபோல், Link to bone. ஐ பயன்படுத்தி உடலின் ஒவ்வொரு பகுதியையும் அந்தந்த bone உடன் இணைக்க வேண்டும். |
04:50 | உடலின் ஒவ்வொரு பகுதியும் Skeleton. உடன் இணைக்கப்பட வேண்டும். |
04:56 | அப்போதுதான் நாம் உடலின் அனைத்து பாகங்களையும் boneகளை பயன்படுத்தி animate செய்ய முடியும். |
05:02 | Fileஐ save செய்ய, Ctrl மற்றும் S keyகளை அழுத்தவும் |
05:06 | இப்போது animate செய்யத் தொடங்குவோம் |
05:09 | Layers panel க்கு சென்று, Skeleton layer.ஐ தேர்ந்தெடுக்கவும் |
05:13 | animate editing mode iconஐ ஆன் செய்யவும் |
05:16 | Time track panel க்கு சென்று, cursor ஐ 20 வது frame ல் வைக்கவும் |
05:22 | பல்வேறு வண்ண புள்ளிகளைக் கவனிக்கவும். |
05:25 | நீல புள்ளி சுழற்சிக்கானது. |
05:27 | ஆரஞ்சு புள்ளி அளவிடுதலுக்கானது |
05:30 | மேலும், பச்சை புள்ளி Skeletonல் இடமாற்றத்திற்கு உதவுகிறது. |
05:35 | canvas. க்கு செல்வோம் |
05:38 | வலது கையின் கீழ் கை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள boneனின் நீல புள்ளியைத் தேர்ந்தெடுக்கவும். |
05:44 | செயல்விளக்கியபடி, நீல புள்ளியை நகர்த்துவதன் மூலம் கீழ் கையின் boneஐ நகர்த்தவும். |
05:49 | Time track panel க்கு சென்று, cursor ஐ 32வதுframe ல் வைக்கவும் |
05:56 | Canvas க்கு திரும்பச் சென்று, செயல்விளக்கியபடி, கீழ் கையின் boneஐ நகர்த்தவும் |
06:02 | மீண்டும், Time track panel க்கு சென்று, cursor ஐ 48வதுframe ல் வைக்கவும் |
06:09 | Canvas க்கு சென்று, செயல்விளக்கியபடி, கீழ் கையின் boneஐ நகர்த்தவும் |
06:15 | அடுத்து, அதே frameல் உள்ளங்கை boneனின் நீல புள்ளியைத் தேர்ந்தெடுக்கவும் . |
06:21 | செயல்விளக்கியபடி, உள்ளங்கை bone ஐ நகர்த்தவும் |
06:25 | மீண்டும், Time track panel க்கு சென்று, cursor ஐ 63வதுframe ல் வைக்கவும் |
06:34 | Canvas க்கு திரும்பச் சென்று, செயல்விளக்கியபடி, கீழ் கையின் boneஐ நகர்த்தவும் |
06:40 | இவ்வாறே, L-hand ஐ நாம் animate செய்வோம் |
06:43 | canvasக்குச் சென்று இடது கையின் கீழ் கை எலும்பின் நீல புள்ளியைத் தேர்ந்தெடுக்கவும். |
06:50 | , Time track panel க்கு சென்று, cursor ஐ 20வதுframe ல் வைக்கவும் |
06:56 | Canvasக்கு திரும்பவும் |
06:59 | நீல புள்ளியை இழுத்து, செயல்விளக்கியபடி, இடது கையின் கீழ் கை boneஐ நகர்த்தவும். |
07:06 | இறுதியாக, Turn off animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும் |
07:11 | canvasனின் கீழுள்ள, Seek to beginஐ க்ளிக் செய்யவும் |
07:15 | Playபட்டனை க்ளிக் செய்து, animationஐ play செய்யவும் |
07:28 | மீண்டும், fileஐ save செய்யவும் |
07:31 | இப்போது, previewவை சரிபார்ப்போம் |
07:36 | Fileக்கு சென்று, Preview.ஐ க்ளிக் செய்யவும் |
07:40 | Qualityஐ 0.5க்கும், Frame per secondஐ 24க்கும் மாற்றவும் |
07:45 | Previewபட்டனை க்ளிக் செய்து, பின் Play பட்டனை க்ளிக் செய்யவும் |
07:51 | screenல் animationனின் ஒரு முன்னோட்டத்தை நாம் காணலாம் |
07:56 | Preview windowவை மூடுவோம் |
07:58 | இப்போது, animationஐ render செய்வோம் |
08:02 | அதைச் செய்ய, முதலில் Fileஐயும், பின் Renderஐயும் க்ளிக் செய்யவும் |
08:08 | Render setting windowக்கு செல்லவும் |
08:10 | Chooseஐ தேர்வு செய்து, Save render as window வை திறக்கவும் |
08:15 | File ஐ சேமிப்பதற்கான இடத்தை தேர்வு செய்யவும். நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன் |
08:21 | Fileன் பெயரை Basic hyphen bone hyphen animation dot avi. என மாற்றவும் |
08:27 | Target drop-down menuவை க்ளிக் செய்து, extensionக்கு ffmpeg.ஐ தேர்ந்தெடுக்கவும் |
08:35 | Time tabஐ க்ளிக் செய்து, End time ஐ 70க்கு மாற்றவும் |
08:40 | இறுதியாக, Render.ஐ க்ளிக் செய்யவும் |
08:45 | இப்போது, நமது animationஐ சரிபார்ப்போம் |
08:48 | Desktop க்கு சென்று, Basic-bone-animation. avi.ஐ தேர்ந்தெடுக்கவும் |
08:56 | ரைட்-க்ளிக் செய்து, Firefox web browserஐ பயன்படுத்தி, animationஐ play செய்யவும் |
09:03 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
09:10 | இந்த டுடோரியலில் நாம், Synfig.ல் அடிப்படை bone animation பற்றி கற்றோம் |
09:16 | மேலும் நாம், boneகளைச் சேர்ப்பது, boneகளை உடலுடன் இணைப்பது, boneகளை animate செய்வது, ஆகியவற்றை கற்றோம் |
09:24 | உங்களுக்கான பயிற்சி- |
09:26 | Code filesஇணைப்பில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Synfig file ஐ திறக்கவும் |
09:31 | boneகளைச் சேர்த்து கையை animate செய்யவும் |
09:35 | உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும் |
09:40 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
09:47 | நாங்கள், ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருவிகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
09:55 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
09:59 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
10:06 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |