Synfig/C3/Basic-bone-animation/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 Synfig.ஐ பயன்படுத்தி “Basic bone animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம், Synfig.ல் உள்ள Skeleton தேர்வை பயன்படுத்தி, ஒரு கதாபாத்திரத்தை animate செய்யக் கற்போம்
00:13 மேலும் நாம் கற்கப்போவது: boneகளைச் சேர்ப்பது,
00:17 boneகளை உடலுடன் இணைப்பது, boneகளை animate செய்வது
00:22 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 OS,
00:31 Synfig பதிப்பு 1.0.2
00:36 இப்போது தொடங்குவோம். நாம் Synfigல் உள்ளோம்
00:40 எனது கணினியில் நான் சேமித்துவைத்துள்ள, Synfig-character file ஐ திறக்கிறேன்
00:47 இந்த file உங்களுக்கு, Code Files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளவும்
00:57 உடலின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு layerகளில் இருக்க உறுதிப்படுத்தி கொள்ளவும்
01:02 இப்போது, Skeletonஐ பயன்படுத்தி உடலின் மேல் பகுதியை நிலையான மூட்டுகளுடன் பொறுத்த கற்றுக்கொள்வோம்.
01:11 அதற்கு முன் நாம், groupகளை உருவாக்க வேண்டும். உதாரணத்திற்கு- இடது கை இடது மேல் கை, இடது கீழ் கை மற்றும் இடது உள்ளங்கை ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
01:25 அதனால், இந்த மூன்று layerகளையும் நாம் group செய்து, அதை L-hand என பெயரிடவேண்டும்
01:32 இவ்வாறே மற்ற layerகளையும் group செய்யவும்
01:36 இங்கு காட்டியுள்ளபடி, group layerகளுக்கு, L-hand, R-hand, Head, Neck மற்றும் Trunk என பெயரிடவும்
01:46 Save As தேர்வை பயன்படுத்தி இந்த fileஐ save செய்வோம்
01:50 Fileக்கு சென்று Save As.ஐ க்ளிக் செய்யவும்
01:54 உங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்து, பின் fileன் பெயரை Basic hyphen bone hyphen animation. என டைப் செய்யவும்
02:03 பின், Save பட்டனை க்ளிக் செய்யவும்
02:06 இப்போது, Layers panel.க்கு செல்லவும்
02:10 Group செய்யப்பட்ட இந்த அனைத்து layerகளையும் வைத்து, மேலும் ஒரு groupஐ செய்து, அதற்கு Character என பெயரிடவும்
02:17 இப்போது, முக்கோண வடிவத்தை க்ளிக் செய்து, Character group ஐ திறக்கவும்
02:23 Character layer.ன் மேல் layerஐ ரைட்-க்ளிக் செய்யவும்
02:27 New layerக்கு சென்று, பின் Otherக்கு சென்று, Skeleton.ஐ க்ளிக் செய்யவும்
02:33 canvasல் நாம் ஒரு boneஐ பெறுகிறோம்
02:37 Transform tool ஐ க்ளிக் செய்து, boneனின் பச்சை புள்ளியை தேர்ந்தெடுக்கவும்
02:42 mouseஐ அழுத்திக் கொண்டே இழுத்து, boneஐ கதாபாத்திரத்தின் Trunk பகுதிக்கு நகர்த்தவும்
02:49 இப்போது, செயல் விளக்கியபடி, boneஐ வைக்கவும்
02:53 அடுத்து, boneனின் நீளத்தை சரிசெய்ய, boneனின் orange புள்ளியை பயன்படுத்தவும்
03:00 இதற்கு பிறகு, boneனின் ஆரஞ்சு புள்ளியை ரைட்-க்ளிக் செய்யவும்
03:04 பின், Create child bone தேர்வை க்ளிக் செய்யவும்
03:10 முன்பு விளக்கியபடி, Trunk ன் மேல் பகுதியில் உள்ள, child boneனின் நீளத்தை சரி செய்யவும்
03:17 இதே முறையில், கழுத்து, தலை மற்றும் கைகளுக்கு boneகளைச் சேர்த்து சரிசெய்யவும்.
03:41 இப்போது, Skeleton layer உடம்பினுள் வைக்கப்பட்டது
03:45 அடுத்து, உடலின் ஒவ்வொரு பகுதியிலும் boneகளை இணைப்போம்.
03:50 அதற்கு, Layers panelக்கு செல்லவும். R-upper-arm layerஐ ரைட்-க்ளிக் செய்து, பின் Select all child layers.ஐ க்ளிக் செய்யவும்
04:00 canvasக்கு செல்லவும். வலது மேல் கையின் எல்லா nodeகளையும் தேர்ந்தெடுக்க, Shift key ஐ பயன்படுத்தி, mouseஐ அழுத்திக் கொண்டே இழுக்கவும்
04:11 Ctrl keyஐ அழுத்தி, பின் Skeleton layer.ஐ தேர்ந்தெடுக்கவும்
04:18 R-upper-armன் boneனின் ஏதாவது ஒரு nodeஐயும் ரைட்-க்ளிக் செய்யவும்
04:23 Link to bone. தேர்வை க்ளிக் செய்யவும்
04:28 அதேபோல், Link to bone. ஐ பயன்படுத்தி உடலின் ஒவ்வொரு பகுதியையும் அந்தந்த bone உடன் இணைக்க வேண்டும்.
04:50 உடலின் ஒவ்வொரு பகுதியும் Skeleton. உடன் இணைக்கப்பட வேண்டும்.
04:56 அப்போதுதான் நாம் உடலின் அனைத்து பாகங்களையும் boneகளை பயன்படுத்தி animate செய்ய முடியும்.
05:02 Fileஐ save செய்ய, Ctrl மற்றும் S keyகளை அழுத்தவும்
05:06 இப்போது animate செய்யத் தொடங்குவோம்
05:09 Layers panel க்கு சென்று, Skeleton layer.ஐ தேர்ந்தெடுக்கவும்
05:13 animate editing mode iconஐ ஆன் செய்யவும்
05:16 Time track panel க்கு சென்று, cursor ஐ 20 வது frame ல் வைக்கவும்
05:22 பல்வேறு வண்ண புள்ளிகளைக் கவனிக்கவும்.
05:25 நீல புள்ளி சுழற்சிக்கானது.
05:27 ஆரஞ்சு புள்ளி அளவிடுதலுக்கானது
05:30 மேலும், பச்சை புள்ளி Skeletonல் இடமாற்றத்திற்கு உதவுகிறது.
05:35 canvas. க்கு செல்வோம்
05:38 வலது கையின் கீழ் கை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள boneனின் நீல புள்ளியைத் தேர்ந்தெடுக்கவும்.
05:44 செயல்விளக்கியபடி, நீல புள்ளியை நகர்த்துவதன் மூலம் கீழ் கையின் boneஐ நகர்த்தவும்.
05:49 Time track panel க்கு சென்று, cursor ஐ 32வதுframe ல் வைக்கவும்
05:56 Canvas க்கு திரும்பச் சென்று, செயல்விளக்கியபடி, கீழ் கையின் boneஐ நகர்த்தவும்
06:02 மீண்டும், Time track panel க்கு சென்று, cursor ஐ 48வதுframe ல் வைக்கவும்
06:09 Canvas க்கு சென்று, செயல்விளக்கியபடி, கீழ் கையின் boneஐ நகர்த்தவும்
06:15 அடுத்து, அதே frameல் உள்ளங்கை boneனின் நீல புள்ளியைத் தேர்ந்தெடுக்கவும் .
06:21 செயல்விளக்கியபடி, உள்ளங்கை bone ஐ நகர்த்தவும்
06:25 மீண்டும், Time track panel க்கு சென்று, cursor ஐ 63வதுframe ல் வைக்கவும்
06:34 Canvas க்கு திரும்பச் சென்று, செயல்விளக்கியபடி, கீழ் கையின் boneஐ நகர்த்தவும்
06:40 இவ்வாறே, L-hand ஐ நாம் animate செய்வோம்
06:43 canvasக்குச் சென்று இடது கையின் கீழ் கை எலும்பின் நீல புள்ளியைத் தேர்ந்தெடுக்கவும்.
06:50 , Time track panel க்கு சென்று, cursor ஐ 20வதுframe ல் வைக்கவும்
06:56 Canvasக்கு திரும்பவும்
06:59 நீல புள்ளியை இழுத்து, செயல்விளக்கியபடி, இடது கையின் கீழ் கை boneஐ நகர்த்தவும்.
07:06 இறுதியாக, Turn off animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும்
07:11 canvasனின் கீழுள்ள, Seek to beginஐ க்ளிக் செய்யவும்
07:15 Playபட்டனை க்ளிக் செய்து, animationஐ play செய்யவும்
07:28 மீண்டும், fileஐ save செய்யவும்
07:31 இப்போது, previewவை சரிபார்ப்போம்
07:36 Fileக்கு சென்று, Preview.ஐ க்ளிக் செய்யவும்
07:40 Qualityஐ 0.5க்கும், Frame per secondஐ 24க்கும் மாற்றவும்
07:45 Previewபட்டனை க்ளிக் செய்து, பின் Play பட்டனை க்ளிக் செய்யவும்
07:51 screenல் animationனின் ஒரு முன்னோட்டத்தை நாம் காணலாம்
07:56 Preview windowவை மூடுவோம்
07:58 இப்போது, animationஐ render செய்வோம்
08:02 அதைச் செய்ய, முதலில் Fileஐயும், பின் Renderஐயும் க்ளிக் செய்யவும்
08:08 Render setting windowக்கு செல்லவும்
08:10 Chooseஐ தேர்வு செய்து, Save render as window வை திறக்கவும்
08:15 File ஐ சேமிப்பதற்கான இடத்தை தேர்வு செய்யவும். நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன்
08:21 Fileன் பெயரை Basic hyphen bone hyphen animation dot avi. என மாற்றவும்
08:27 Target drop-down menuவை க்ளிக் செய்து, extensionக்கு ffmpeg.ஐ தேர்ந்தெடுக்கவும்
08:35 Time tabஐ க்ளிக் செய்து, End time ஐ 70க்கு மாற்றவும்
08:40 இறுதியாக, Render.ஐ க்ளிக் செய்யவும்
08:45 இப்போது, நமது animationஐ சரிபார்ப்போம்
08:48 Desktop க்கு சென்று, Basic-bone-animation. avi.ஐ தேர்ந்தெடுக்கவும்
08:56 ரைட்-க்ளிக் செய்து, Firefox web browserஐ பயன்படுத்தி, animationஐ play செய்யவும்
09:03 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
09:10 இந்த டுடோரியலில் நாம், Synfig.ல் அடிப்படை bone animation பற்றி கற்றோம்
09:16 மேலும் நாம், boneகளைச் சேர்ப்பது, boneகளை உடலுடன் இணைப்பது, boneகளை animate செய்வது, ஆகியவற்றை கற்றோம்
09:24 உங்களுக்கான பயிற்சி-
09:26 Code filesஇணைப்பில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Synfig file ஐ திறக்கவும்
09:31 boneகளைச் சேர்த்து கையை animate செய்யவும்
09:35 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும்
09:40 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
09:47 நாங்கள், ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருவிகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
09:55 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
09:59 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
10:06 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree