Synfig/C2/Draw-a-Toy-train/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Synfig.ஐ பயன்படுத்தி “Draw aToy train” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: |
00:09 | அடிப்படை வடிவங்களை வரைவது, வடிவங்களை வண்ணப்படுத்துவது, objectகளை group செய்து நகலெடுப்பது மற்றும் |
00:14 | Guidelineஐ பயன்படுத்தி வடிவங்களை சீரமைப்பது |
00:17 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: |
00:20 | Ubuntu Linux 14.04 OS, |
00:24 | Synfig பதிப்பு 1.0.2 |
00:27 | Synfig.ஐ திறப்போம் |
00:29 | முதலில், பொம்மை ரயிலின் பெட்டியை வரைவோம். |
00:33 | இதற்கு, Rectangle tool. ஐ தேர்ந்தெடுக்கவும் |
00:36 | Tool options, ல், Create a region layer தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும் |
00:42 | இப்போது, canvasல் ஒரு செவ்வகத்தை வரையவும் |
00:46 | layerன் பெயரை, Part-1. என மாற்றவும் |
00:50 | Parameters panel க்கு சென்று, நிறத்தை பச்சை நிறமாக மாற்றவும். |
00:56 | இப்போது, Transform tool ஐ க்ளிக் செய்யவும் |
00:58 | பின், வடிவத்தை தேர்வுநீக்க, canvasக்கு வெளியே க்ளிக் செய்யவும் |
01:02 | canvas.ல் எந்த வடிவத்தையும் வரைந்த பிறகு இந்த படியை செய்ய நினைவில் கொள்க. |
01:07 | நமது fileஐ save செய்வோம் |
01:09 | File.க்கு சென்று, Save as. ஐ க்ளிக் செய்யவும் |
01:13 | Fileன் பெயரை, Toy-Train-animation. என மாற்றவும் |
01:18 | அதை, உங்கள் Desktop.ல் சேமிக்கவும் |
01:21 | இப்போது, Rectangle toolஐ மீண்டும் தேர்ந்தெடுக்கவும் |
01:26 | முந்தைய செவ்வகத்தின் மையத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு செவ்வகத்தை வரையவும். |
01:32 | இது ரயிலின் ஜன்னலாக இருக்கும். |
01:35 | இந்த layerஐ Window. என rename செய்வோம் |
01:41 | அடுத்து, Polygon tool.ஐ க்ளிக் செய்யவும் |
01:43 | Tool options, ல், Create a region layer தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும் |
01:50 | காட்டப்பட்டுள்ளபடி செவ்வகத்திற்கு மேலே ஒரு ட்ரேபீசியத்தை வரையவும். |
01:54 | ட்ரேபீசியத்தை மூட தொடக்க புள்ளியைக் க்ளிக் செய்க. |
01:59 | இந்த layerக்கு Part-2. என மறுபெயரிடவும் |
02:03 | நான் நிறத்தை சிவப்பு நிறமாக மாற்றுகிறேன். |
02:07 | இப்போது, Transform tool.ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:10 | Layers panel.க்கு செல்லவும் |
02:12 | அனைத்து layerகளையும் தேர்ந்தெடுத்து அவற்றை group செய்யவும் |
02:15 | Group layerக்கு Compartment-3. என்று மறுபெயரிடவும் |
02:20 | handleன் ஆரஞ்சு புள்ளியைப் பயன்படுத்தி layerன் அளவை மாற்றவும். |
02:24 | handle.ன் பச்சை புள்ளியைப் பயன்படுத்தி canvas ன் வலதுபுறத்திற்கு அதை நகர்த்தவும் |
02:30 | Ctrl மற்றும் S key களை பயன்படுத்தி, fileஐ Save செய்யவும் |
02:35 | அடுத்து, ரயிலின் சக்கரத்தை வரைவோம். |
02:38 | எந்த வடிவத்தையும் வரைந்த பின் வடிவத்தைத் தேர்வுநீக்க canvasக்கு வெளியே கிளிக் செய்ய நினைவில் கொள்க. |
02:44 | Circle tool.ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:46 | Tool optionsல், Create a region layer தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் |
02:50 | காட்டப்பட்டுள்ளபடி ஒரு வட்டத்தை வரைந்து, நிறத்தை அடர் நீலமாக மாற்றவும். |
02:56 | இப்போது, Star tool.ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:59 | Tool optionsல், Create a star layer தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் |
03:05 | Cursorஐ வட்டத்தின் மையத்தில் வைத்து ஒரு நட்சத்திரத்தை வரையவும். |
03:09 | இப்போது, Transform tool.ஐ தேர்ந்தெடுக்கவும் |
03:12 | 1 handle மற்றும் 2 புள்ளிகள் இருப்பதை கவனிக்கவும் |
03:16 | வடிவத்தின் நிலையை மாற்ற handleன் பச்சை புள்ளியைக் க்ளிக் செய்து இழுக்கவும். |
03:22 | சுழற்சிக்கு handleன் நீல புள்ளியைப் பயன்படுத்தவும். |
03:26 | நடுவிலுள்ள பச்சை புள்ளி, நட்சத்திர வடிவத்தின் வெளிப்புற விளிம்பை சரிசெய்ய உதவுகிறது. |
03:31 | மறுஅளவாக்குவதற்கு கடைசி புள்ளி பயன்படுத்தப்படுகிறது. |
03:34 | நட்சத்திரம் மற்றும் வட்ட layerகள் இரண்டையும் தேர்ந்தெடுக்கவும். |
03:37 | அவற்றை group செய்து, அதற்கு Wheel-1. என்று மறுபெயரிடவும் |
03:41 | இந்த group layerன் அளவை மாற்றி, ரயில் பெட்டியின் கீழே வைக்கவும். |
03:47 | இப்போது, Wheel-1 group layer.ஐ நகலெடுக்கவும் |
03:50 | Wheel-2 என மறுபெயரிட்டு பெட்டியின் மறுமுனைக்கு நகர்த்தவும். |
03:56 | இப்போது அனைத்து group layerகளையும் தேர்ந்தெடுக்கவும் |
03:59 | அவற்றை மீண்டும் group செய்து, Compartment-3. என மறுபெயரிடவும் |
04:04 | இப்போது, Duplicate icon ஐ இருமுறை க்ளிக் செய்யவும் |
04:08 | நகலெடுக்கப்பட்ட group layerகளை, Compartment-2 & Compartment-1 என மறுபெயரிடவும் |
04:17 | Compartment-2 group layerஐ தேர்ந்தெடுக்கவும் |
04:20 | Shift keyஐப் பயன்படுத்தி, handle.ன் நடுவிலுள்ள பச்சை புள்ளியை இழுக்கவும். |
04:24 | Compartment-1 group layerக்கும் அவ்வாறே செய்யவும் |
04:30 | Ctrl மற்றும் S key களை பயன்படுத்தி, fileஐ சேமிக்கவும் |
04:34 | அடுத்து, engineஐ வரையலாம். |
04:36 | Canvasக்கு வெளியே க்ளிக் செய்யவும் |
04:39 | Circle tool ஐ தேர்ந்தெடுத்து, காட்டப்பட்டுள்ளபடி ஒரு வட்டத்தை வரையவும். |
04:43 | Layerக்கு Engine-part-1. என மறுபெயரிடவும் |
04:47 | நிறத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றவும். |
04:50 | பின், Rectangle tool ஐ க்ளிக் செய்து, வட்டத்தின் மேல், அதன் பாதி மறையுமாறு ஒரு செவ்வகத்தை வரையவும். |
04:59 | அதற்கு, Engine-part-2 என மறுபெயரிட்டு, நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றவும். |
05:06 | தற்போதைய செவ்வகத்தின் மேற்புறத்தில் மேலும் ஒரு செவ்வகத்தை வரையவும். |
05:10 | அதற்கு, Engine-part-3 என மறுபெயரிட்டு, நிறத்தை பச்சை நிறமாக மாற்றவும். |
05:17 | அதே rectangle tool ஐ பயன்படுத்தி, காட்டப்பட்டுள்ளபடி ஜன்னலை வரையவும் |
05:22 | அதற்கு, Engine-window. என மறுபெயரிடவும் |
05:26 | Engineனின் layerகளை தேர்ந்தெடுத்து, அவற்றை group செய்யவும் |
05:29 | பின், என Engine.மறுபெயரிடவும் |
05:32 | Ctrl மற்றும் S key களை பயன்படுத்தி, fileஐ Save செய்யவும் |
05:37 | ஏதாவது ஒரு ரயில் பெட்டியின் drop down பட்டியலை க்ளிக் செய்யவும் |
05:40 | Wheel-1 மற்றும் Wheel-2 group layerகளையும் தேர்ந்தெடுத்து copy செய்யவும் |
05:45 | Engine group layer.ல் அதை Paste செய்யவும் |
05:49 | Shift keyஐ பயன்படுத்தி, இந்த சக்கரங்களை engineனின் அடிப்பகுதிக்கு இழுக்கவும். |
05:54 | இப்போது, மேல் rulerலில் இருந்து, ஒரு guidelineஐ இழுத்து, அதை ரயில் பெட்டிகளின் அடிப்பகுதியில் வைக்கவும் |
06:03 | இந்த guideline ரயில் பெட்டிகளையும் engineஐயும் நேர்க்கோட்டில் சீரமைக்க உதவும் |
06:10 | அடுத்து, Engineஐ Compartment-1.ன் பக்கத்திற்கு நகர்த்தி align செய்யவும் |
06:16 | அனைத்து பெட்டிகளையும் இணைக்க ஒரு செவ்வகத்தை வரையவும். |
06:20 | இந்த Layer க்கு Belt என மறுபெயரிட்டு, நிறத்தை கருப்பு நிறமாக மாற்றவும். |
06:27 | Belt layerஐ Layers பட்டியலில் கீழே நகர்த்தவும் |
06:31 | கடைசியாக, ரெயிலை வரைவோம். |
06:33 | Rectangle tool. ஐ க்ளிக் செய்யவும் |
06:36 | இங்கே காட்டப்பட்டுள்ளபடி, சக்கரத்திற்கு கீழே ஒரு செவ்வகத்தை வரையவும். |
06:40 | Layerன் பெயரை Rail என மாற்றி, நிறத்தை black.ற்கு மாற்றவும் |
06:47 | இப்போது ரயில் வரைதல் முடிந்து விட்டது |
06:50 | இறுதியாக, மீண்டும் Ctrl + Sகளை பயன்படுத்தி, நமது fileஐ save செய்யவும் |
06:56 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
07:00 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
07:04 | அடிப்படை வடிவங்களை வரைவது, |
07:06 | வடிவங்களை வண்ணப்படுத்துவது, |
07:08 | objectகளை group செய்து நகலெடுப்பது மற்றும் |
07:10 | Guidelineஐ பயன்படுத்தி வடிவங்களை சீரமைப்பது |
07:13 | உங்களுக்கான பயிற்சி- |
07:15 | இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளபடி Synfig இல் ஒரு பஸ்ஸை வரையவும். |
07:20 | உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும் |
07:24 | இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. |
07:28 | அதை தரவிறக்கி காணவும் |
07:30 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
07:36 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
07:39 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
07:43 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
07:48 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
07:53 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |