GeoGebra-5.04/C2/Overview-of-GeoGebra/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Overview of GeoGebra குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, GeoGebra மென்பொருள் பற்றி |
00:12 | GeoGebra வலைத்தளம் |
00:15 | GeoGebraவின் தரவிறக்கம் மற்றும் நிறுவுதல் |
00:19 | இந்த வலைத்தளத்தில், GeoGebra வின் நன்மைகள் மற்றும் Geogebra டுடோரியல்களின் கண்ணோட்டம் ஆகியன உள்ளன |
00:28 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 16.04 |
00:35 | Windows 10
GeoGebra பதிப்பு 5.x |
00:41 | Mozilla Firefox Browser 67.0
Open jdk 9 and மற்றும் ஒரு வேலை செய்கின்ற Internet இணைப்பு. |
00:51 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள கற்பவருக்கு, அடிப்படை கணிதம் தெரிந்து இருக்கவேண்டும் |
00:57 | முதலில் GeoGebra என்றால் என்ன என்பதை பார்ப்போம் |
01:00 | GeoGebra என்பது ஜியோமெட்ரி, இயற்கணிதம் மற்றும் கால்குலஸிற்கான ஒரு மாறும் மற்றும் ஊடாடும் கணித மென்பொருள். |
01:08 | கணினி உதவியுடன் செய்யப்படுகின்ற ஊடாடும் கற்றலுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். |
01:12 | இது ஒரு இலவச/libre மற்றும் open source cross-platform மென் பொருள் ஆகும் |
01:17 | அதன் code Java programming சூழலில் எழுதப்பட்டுள்ளது. |
01:22 | இப்போது நாம் GeoGebra வலைத்தளத்தை பற்றி கற்போம் |
01:26 | உங்கள் முன்னிருப்பான web browser ஐ திறக்கவும். address bar ல் டைப் செய்க: www.geogebra.org. பின், Enterஐ அழுத்தவும் |
01:37 | இது GeoGebra வலைத்தளத்தின் home page ஆகும் |
01:41 | இப்போது ஆன்லைன் GeoGebra Math Appsஐ பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம் |
01:46 | நீல நிற START GRAPHING பட்டனை க்ளிக் செய்யவும் |
01:49 | GeoGebra Graphic Calculator window ஒரு புதிய tabல் திறக்கிறது |
01:54 | இது ஆன்லைன் GeoGebra window வின் இடைமுகம் ஆகும் |
01:58 | இடைமுகம் பின்வருவனவற்றை கொண்டிருக்கிறது- Algebra காட்சியை காண்பிப்பதற்கு Algebra icon |
02:03 | geometric toolகளைக் காட்டுவதற்கு Tools icon |
02:07 | Table icon, Input bar |
02:11 | Graphics view மற்றும் input barல் மதிப்புகளை input செய்ய Keyboard |
02:17 | Tools iconஐ க்ளிக் செய்வோம் |
02:20 | Geometric toolகள் இடது panelலில் காட்டப்படும். |
02:24 | அனைத்து toolகளும் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. |
02:28 | எல்லா toolகளையும் காட்ட நான் கீழே scroll செய்கிறேன். |
02:35 | ஒரு சிறிய செயல்விளக்கத்தை காட்டுகிறேன். |
02:38 | Lines வகையின் கீழ், line segmentஐ வரைய, Segment toolஐ நான் க்ளிக் செய்கிறேன். |
02:44 | அந்த toolன் கையட்டு மற்றும் HELP கீழே தோன்றுகிறது |
02:48 | இப்போது segment ABஐ வரைய, Graphics காட்சியில் இரண்டு புள்ளிகளை க்ளிக் செய்யவும் |
02:53 | GeoGebra வலைத்தள பக்கத்திற்கு திரும்பச் செல்வோம் |
02:57 | CLASSROOM RESOURCES பட்டனை க்ளிக் செய்யவும் |
03:00 | Classroom Resources பக்கம் திறக்கிறது |
03:03 | இந்தப் பக்கத்தில் கணிதத்தின் வெவ்வேறு கிளைகளுக்கு GeoGebraஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல்வேறு appகள் உள்ளன. |
03:10 | இந்த ஆதாரங்களை நீங்கள் சொந்தமாக பின்னர் ஆராயலாம். |
03:17 | இப்போது நான் Windows 10 மற்றும் Ubuntu Linux 16.04 OS ல் GeoGebraஐ எவ்வாறு தரவிறக்குவது என்று காட்டுகிறேன் |
03:25 | இந்த டுடோரியலைப் பதிவு செய்யும் போது Geogebra Classic 5(ve) GeoGebraவின் நிலையான பதிப்பாகும். |
03:32 | இந்த டுட்டோரியல்களை பயிற்சி செய்ய, GeoGebraவின் எந்த ஒரு 5.x பதிப்பையும் நீங்கள் தரவிறக்கலாம் |
03:39 | Windows 10ல், கட்டப்பட்டுள்ளபடி, browser ல் GeoGebra homepage ஐ திறக்கவும் |
03:45 | Panelலின் இடது பக்கத்தில் உள்ள Apps Downloadsஐ க்ளிக் செய்யவும் |
03:50 | Download GeoGebra Apps பக்கம் திறக்கிறது |
03:54 | GeoGebra Classic 5 பிரிவுக்கு சென்று, DOWNLOAD இணைப்பை க்ளிக் செய்யவும் |
04:01 | Fileஐ சேமிக்கத் தூண்டும் ஒரு dialog box திறக்கிறது |
04:05 | தரவிறக்கத் தொடங்குவதற்கு, Save File பட்டனை க்ளிக் செய்யவும் |
04:09 | உங்கள் இணைய வேகத்தைப் பொறுத்து தரவிறக்க்கம் சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும். |
04:14 | Geogebra Windows installer file, என்னுடைய Downloads folder க்கு தரவிறக்கப்பட்டுவிட்டது |
04:20 | installer fileஐ டபுள்-க்ளிக் செய்யவும். தோன்றுகின்ற dialog box ல் Yes பட்டனை க்ளிக் செய்யவும் |
04:27 | GeoGebra Installer window திறக்கிறது |
04:31 | Welcome to the GeoGebra 5 Setup Wizard செய்தியை அது காட்டுகிறது |
04:37 | மொழிகள் drop down ல், முன்னிருப்பாக English தேர்ந்தெடுக்கப்படுகிறது |
04:41 | நாம் அதை அப்படியே விட்டுவிடுவோம் |
04:44 | இந்த windowவில் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும் |
04:47 | License Agreement dialog boxல், I Agree பட்டனை க்ளிக் செய்யவும் |
04:52 | இந்த windowவில் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும் |
04:55 | Setup Type windowவில், முன்னிருப்பாக Standard ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. நாம் அதை அப்படியே விட்டுவிடுவோம் |
05:04 | பின்னர் நிறுவல் செயல்முறையைத் தொடங்க Install பட்டனை கிளிக் செய்யவும். |
05:09 | நிறுவுதலுக்கு சில வினாடிகள் ஆகும். |
05:12 | Completing the Geogebra 5 Setup Wizard செய்தி தோன்றுகிறது |
05:17 | இப்போது, Finish பட்டனை க்ளிக் செய்யவும் |
05:20 | GeoGebra interface திறக்கிறது |
05:23 | Sign in to GeoGebra தேர்வு கட்டாயமானதல்ல. இதைத் தவிர்த்துவிட்டு dialog box ஐ நாம் மூடலாம். |
05:31 | அடுத்து Ubuntu Linux 16.04 OSல் Geogebra Classic 5ஐ எப்படி நிறுவுவது என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன் |
05:39 | காட்டப்பட்டுள்ளபடி, browser ல் GeoGebra homepage ஐ திறக்கவும் |
05:45 | இடது பக்கத்தில் உள்ள Apps Downloadsஐ க்ளிக் செய்யவும் |
05:49 | Download GeoGebra Apps பக்கம் திறக்கிறது |
05:53 | GeoGebra Classic 5 பிரிவுக்கு சென்று, DOWNLOAD இணைப்பை க்ளிக் செய்யவும் |
06:00 | GeoGebra Classic 5 for Desktop பக்கம் திறக்கிறது |
06:05 | Ubuntu Linuxல் GeoGebraஐ தரவிறக்க, Linux(deb) 64 bit / 32 bit installers for .deb based systems (Debian, Mint, Ubuntu)ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:18 | உங்கள் கணினியின் உள்ளமைவைப் பொறுத்து 64 bit / 32 bitஐ நீங்கள் க்ளிக் செய்யலாம் |
06:25 | நான் 64 bitஐ க்ளிக் செய்கிறேன் |
06:28 | Fileஐ சேமிக்கத் தூண்டும் ஒரு dialog box திறக்கிறது |
06:32 | Save File radio பட்டனை க்ளிக் செய்யவும் |
06:35 | பின் தரவிறக்கத் தொடங்குவதற்கு, OK பட்டனை க்ளிக் செய்யவும் |
06:39 | உங்கள் இணைய வேகத்தைப் பொறுத்து தரவிறக்குதலுக்கு சில வினாடிகள் ஆகும். |
06:44 | geogebra5.deb file Downloads folderக்கு தரவிறக்கப்படுகிறது |
06:49 | .deb fileஐ ரைட்-க்ளிக் செய்து, பின் Open with Software installஐ தேர்ந்தெடுக்கவும் |
06:55 | Ubuntu Software window திறக்கிறது |
06:58 | Windowவில், Install பட்டனை க்ளிக் செய்யவும் |
07:02 | நிறுவுதல் தொடங்கியவுடன், Authenticate dialog-box திறக்கிறது |
07:07 | system password ஐ டைப் செய்து, பின் கீழேயுள்ள Authenticate பட்டனை க்ளிக் செய்யவும் |
07:13 | நிறுவுதல் சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறது |
07:16 | நிறுவுதல் முடிந்தவுடன், நீங்கள் ஒரு Remove பட்டனை காண்பீர்கள் |
07:21 | Ubuntu Software windowவை மூடவும் |
07:24 | Dash Homeஐ பயன்படுத்தி, இப்போது GeoGebraஐ திறப்போம் |
07:28 | Dash Homeஐ க்ளிக் செய்யவும். தோன்றுகின்ற Search bar ல் geogebra என டைப் செய்யவும் |
07:34 | GeoGebra icon தோன்றுகிறது |
07:37 | GeoGebra இடைமுகத்தை திறக்க, iconஐ க்ளிக் செய்யவும் |
07:42 | இப்போது நாம் GeoGebraவின் நன்மைகளை பற்றி கற்றுக்கொள்வோம் |
07:46 | GeoGebra அதன் அனைத்து அம்சங்களிலும் எளிமையானது மற்றும் சாதகமாக மாறக்கூடியது. |
07:51 | இது 2D மற்றும் 3D Graphics முறைகளில் toolகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது |
07:56 | GeoGebra பயிற்சி பணி தாள்கள் மற்றும் கற்றல் பொருட்களை உருவாக்க உதவுகிறது. |
08:01 | GeoGebraல் உள்ள toolகள் கட்டுமானங்கள் மற்றும் கணக்கீடுகள் மற்றும் தேற்றங்களை நிரூபிக்க உதவுகின்றன. |
08:07 | இப்போது, இந்தத் தொடரில் உருவாக்கப்பட்ட தனிப்பட்ட பயிற்சிகளை சுருக்கமாகப் பார்ப்போம். |
08:13 | தொடரின் முதல் பயிற்சி Introduction to GeoGebra ஆகும். |
08:18 | இந்த டுடோரியல், GeoGebra இடைமுகம் மற்றும் geometric toolகள் பற்றி விளக்குகிறது |
08:25 | கோடுகளை எப்படி வரைவது மற்றும் ஒரு கோட்டின் பொருள் பண்புகளை எப்படி மாற்றுவது |
08:30 | Graphics viewன் பண்புகள் |
08:34 | இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ. |
08:37 | ---- Geogebra க்கு அறிமுகத்திலிருந்து ஆடியோவை சேர்க்கவும் 01:17 முதல் 01:36 வரை (Help வரை) ----- |
08:58 | இந்த தொடரில் உள்ள அடுத்த பயிற்சி Basics of Triangles. |
09:03 | இந்த டுடோரியல் பின்வருவனவற்றை விளக்குகிறது, ஒரு முக்கோணத்தை எப்படி வரைவது மற்றும் அதன் அடிப்படை பண்புகளை காட்டுவது |
09:10 | முக்கோணத்தின் உயரங்களையும் முக்கோணத்திற்கு ஒரு உள் வட்டத்தையும் வரைவது. |
09:16 | இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ. |
---- Basic of Triangle டுடோரியலிருந்து ஆடியோவை சேர்க்கவும் 01:36 முதல் 01:52 வரை (triangle வரை)----- | |
09:37 | இந்த தொடரின் அடுத்த டுடோரியல் Congruency of Triangles. |
09:42 | இந்த டுடோரியல் முக்கோணங்களின் congruency விதிகள் மற்றும் அவற்றின் proofகள் பற்றி விளக்குகிறது. |
09:50 | இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ. |
---- Congruency of Triangles ல் இருந்து ஆடியோவை சேர்க்கவும் 00:56 முதல் 01:07 வரை (congruency வரை)----- | |
10:06 | இந்த தொடரின் அடுத்த டுடோரியல் Properties of Quadrilaterals |
10:11 | இந்த டுடோரியல், பல்வேறு வகையான quadrilateralகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் |
10:18 | பல்வேறு quadrilateralகளின் பண்புகளை விளக்குகிறது |
10:22 | இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ. |
---- Properties of Quadrilateralsல் இருந்து ஆடியோவை சேர்க்கவும் 01:17 முதல் 01:36 வரை (Ok பட்டன் வரை)----- | |
10:45 | இந்த தொடரின் அடுத்த டுடோரியல் Types of Symmetry. |
10:49 | இந்த டுடோரியல் பின்வரும் பல்வேறு வகையான சமச்சீர்மை பற்றி விளக்குகிறது: வரி, புள்ளி |
10:57 | சுழற்சி, இடப்பெயர்வு மற்றும் அளவு |
11:04 | இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ. |
---- Types of Symmetry டுடோரியலிருந்து ஆடியோவை சேர்க்கவும் 02:40 வாக்கியம் (அரைவட்டத்தை க்ளிக் செய்யவும் என்பதிலிருந்து தொடங்குகிறது) 02:50 வாக்கியம் வரை (f வரை)----- | |
11:20 | இந்த தொடரின் அடுத்த டுடோரியல் Polynomials. இந்த டுடோரியல் பின்வருவனவற்றை பற்றி விளக்குகிறது: நேரியல் polynomialன் சாய்வு |
11:30 | polynomialன் டிகிரி, பூஜ்ஜியங்கள் மற்றும் ரூட்கள் |
11:34 | Remainder தேற்றம் |
11:36 | polynomialகளின் காரணியாக்கம் |
11:39 | இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ. |
---- Polynomials டுடோரியலிருந்து ஆடியோவை சேர்க்கவும் (00:55 முதல் 01:07 வரை)----- | |
11:56 | இந்த தொடரின் அடுத்த டுடோரியல் Theorems in GeoGebra. |
12:01 | இந்த டுடோரியல் Pythagoras தேற்றம் மற்றும் Midpoint தேற்றத்தை எவ்வாறு கூறுவது மற்றும் நிரூபிப்பது என்பது பற்றி விளக்குகிறது |
12:10 | இந்த டுடோரியலின் வீடியோ கிளிப்பிங் இதோ. |
---- Theorems in GeoGebra டுடோரியலிருந்து ஆடியோவை சேர்க்கவும் 00:58 முதல் 01:06 வரை----- | |
12:23 | பின்னர், இந்தத் தொடரில் மேலும் பல டுடோரியல்களை சேர்ப்போம். இந்த டுடோரியல்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கும். |
12:32 | இப்போது, சுருங்கச் சொல்ல |
12:34 | இந்த டுடோரியலில் நாம், GeoGebra மென்பொருள் மற்றும் GeoGebra வலைத்தளத்தை பற்றி கற்றோம் |
12:41 | மேலும் நாம் GeoGebraவை தரவிறக்கி நிறுவினோம் |
12:46 | GeoGebra வின் பலன்களை கற்றுக்கொண்டோம், மேலும் இந்த இணையதளத்தில் கிடைக்கும் GeoGebra டுடோரியல்களின் கண்ணோட்டத்தை பார்த்தோம். |
12:55 | பயிற்சியாக, GeoGebra இடைமுகத்தை திறந்து Help menu வை படிக்கவும் |
13:02 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
13:10 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
13:18 | இந்த ஸ்போக்கன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த வலைதளத்தை பார்க்கவும் |
13:23 | உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும் |
13:30 | எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
13:33 | ஸ்போக்கன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலின் குறிப்பிட்ட கேள்விகளுக்கானது. |
13:38 | அவற்றில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை பதிவிட வேண்டாம் |
13:43 | இது குழப்பங்களை குறைக்க உதவும். குழப்பம் குறைந்தால், இந்த விவாதங்களை நாம் instructional materialஆக பயன்படுத்தலாம். |
13:51 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
13:58 | மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
14:03 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |