QGIS/C4/Create-Contour-Lines/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:44, 3 February 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது-
00:11 Clipper toolஐ பயன்படுத்தி, DEMல் பகுதியை clip செய்வது
00:16 DEMக்கு contour வரிகளை காட்டுவது
00:20 contour map ல் மிக உயர்ந்த பகுதியை குறிப்பது.
00:26 இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04,
00:32 QGIS பதிப்பு 2.18
00:36 மற்றும் ஒரு வேலை செய்கின்ற Internet இணைப்பு
00:40 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:46 முன்நிபந்தனை டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்.
00:53 இந்த டுடோரியலைப் பயிற்சி செய்யத் தேவையான DEM data, Code files இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.
01:00 அந்த folderன் contentகளை தரவிறக்கி extract செய்யவும்
01:05 நான் Desktopல் இந்த folderஐ சேமித்துள்ளேன்
01:09 அந்த folderஐ திறக்க, அதை டபுள்-க்ளிக் செய்யவும்
01:13 srtm.tif fileஐ ரைட்-க்ளிக் செய்து, Open with QGIS Desktopஐ தேர்ந்தெடுக்கவும்
01:22 திரையில் வரைபடம் திறக்கிறது
01:25 Layer menuவில் உள்ள Add Raster Layer தேர்வை பயன்படுத்தியும் நீங்கள் tif file ஐ திறக்கலாம்
01:33 Canvasல் நிலப்பரப்பின் DEMஐ நீங்கள் காண்பீர்கள்
01:38 Raster menuவில் உள்ள Contour toolஐ பயன்படுத்தி இந்த DEMக்கான Contour lineகளை உருவாக்கலாம்
01:46 Contour lineகள் பற்றி
01:49 இது கடல் மட்டத்திற்கு மேலே அல்லது அதற்குக் கீழே சம உயரத்தின் புள்ளிகளை இணைக்கும் வரைபடத்தில் உள்ள ஒரு வரி ஆகும்.
01:57 வரைபடத்தில் மிக உயர்ந்த மற்றும் குறைந்த உயரமுள்ள பகுதிகளைத் தீர்மானிக்க contour கோடுகள் நமக்கு உதவுகின்றன.
02:04 இந்த வரைபடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கான contour கோடுகளை நாம் வரையலாம்.
02:10 அந்தப் பகுதியை clip செய்ய நாம் Raster menu வில் உள்ள Clipper tool ஐ பயன்படுத்துவோம்
02:16 Raster menuவை க்ளிக் செய்யவும். drop-down ல் Extractionஐ க்ளிக் செய்யவும்
02:23 Clipper ஐ க்ளிக் செய்யவும்
02:26 Clipper dialog-box திறக்கிறது
02:29 Input fileஆக DEM layer ஐ தேர்ந்தெடுக்கவும்
02:33 இங்கு, முன்னிருப்பாக இந்த layer ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
02:38 Output fileக்கு Select பட்டனை க்ளிக் செய்யவும்
02:42 Select the raster file to save the results to dialog-box திறக்கிறது
02:48 dialog-box ல், fileக்கு Clip-DEM.tif என பெயரிடவும்
02:56 கீழ் வலது மூலையில் உள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்
03:01 Clipper dialog-boxல், No data valueக்கான check-box ஐ check செய்யவும். மதிப்பு பூஜ்யமாக இருக்கட்டும்
03:10 Clipping modeதலைப்பின் கீழ் உள்ள Extent ரேடியோ பட்டனை க்ளிக் செய்யவும்
03:16 QGIS windowக்கு மாறவும்
03:19 cursor இப்போது plus(+) குறியாக தெரிகிறது
03:23 இடது mouse பட்டனை அழுத்திக்கொண்டே, விருப்பமான பகுதியை உள்ளடக்கிய ஒரு செவ்வகத்தை வரையவும்.
03:30 இந்த செயல்விளக்கத்திற்கு நான் மும்பை பகுதியை தேர்ந்தெடுக்கிறேன்.
03:35 Clipper dialog-boxல், Load into canvas when finishedக்கு அடுத்துள்ள ஐ check செய்யவும்
03:42 மற்ற முன்னிருப்பான settingகுகளை அப்படியே வைக்கவும்
03:46 கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
03:51 செய்முறை முடிந்தவுடன், OKபட்டன்களை க்ளிக் செய்து pop-up windowக்களை மூடவும்
03:58 Clipper dialog-boxல் கீழ் வலது மூலையில் உள்ள Close பட்டனை க்ளிக் செய்யவும்
04:05 canvas ல் ஒரு புதிய layer load செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்
04:10 Clip-DEM layerஐ தவிர Layers Panelலில் உள்ள அனைத்து layerகளையும் disable செய்யவும்
04:16 இப்போது Contour tool ஐ பயன்படுத்தி, இந்த வரைபடத்திற்கான contour வரிகளை உருவாக்க நாம் தயாராக உள்ளோம்
04:23 Raster menuவை க்ளிக் செய்யவும்
04:26 Extractionக்கு கீழே scroll செய்யவும்
04:29 sub-menu வில் Contourஐ க்ளிக் செய்யவும்
04:34 Contour dialog-box திறக்கிறது. Input file drop-downல் Clip-DEM layer ஐ தேர்ந்தெடுக்கவும்
04:43 Output fileக்கு Select பட்டனை க்ளிக் செய்யவும். Dialog-box திறக்கிறது
04:51 dialog-box ல், fileக்கு Contour.shp என பெயரிடவும். Save பட்டனை க்ளிக் செய்யவும்.
05:00 Contour dialog boxல், Interval between contour linesக்கு 50ஐ தேர்ந்தெடுக்கவும்
05:07 இது 50 மீட்டர் இடைவெளியில் contour கோடுகளை உருவாக்கும்.
05:12 Attribute nameக்கு அடுத்துள்ள check-box ஐ க்ளிக் செய்யவும்
05:17 ஒவ்வொரு contour கோட்டிற்கும் elevation மதிப்பு 'E L E V' என்ற பண்புக்கூறாக பதிவு செய்யப்படும்.
05:24 முடித்தவுடன், Load into canvasக்கு அடுத்துள்ள boxஐ check செய்யவும்
05:29 contour dialog box ன் கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:36 செய்முறை முடிந்தவுடன், OKபட்டன்களை க்ளிக் செய்து pop-up windowக்களை மூடவும்
05:43 Contour dialog-boxஐ மூட, Close பட்டனை க்ளிக் செய்யவும்
05:48 Layers panelலில், Contour என்ற ஒரு புதிய layer சேர்க்கப்படுகிறது
05:53 contour கோடுகளின் நிறத்தை மாற்றுவோம்.
05:57 Contour layerஐ ரைட்-க்ளிக் செய்யவும். Stylesஐ தேர்ந்தெடுக்கவும்
06:03 நிறத்தை மாற்ற முக்கோணத்தை சுழற்றவும் .
06:07 உங்களுக்கு விருப்பமான வண்ணத்தைத் தேர்வு செய்யவும்.
06:11 Layers panelலில் உள்ள மற்ற check-boxகளை uncheck செய்து, மற்ற layerகளை மறைக்கவும்
06:17 Contour layerக்கான Attribute table ஐ திறக்கவும்
06:21 attribute table லில், ஒவ்வொரு வரி அம்சத்திற்கும் E L E V என்ற பெயரில் ஒரு பண்பு உள்ளது.
06:28 இந்த columnல் கொடுக்கப்பட்ட மதிப்பு அந்த contour கோட்டிற்கான மீட்டர்களில் கொடுக்கப்பட்ட உயரம்.
06:35 மதிப்புகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்த column header ல் சில முறை க்ளிக் செய்க.
06:42 முதல் வரிசை நமது dataன் மிக உயர்ந்த உயரத்தைக் குறிக்கிறது.
06:47 Tableன் கீழே scroll செய்யவும், கடைசி வரிசை மிகக் குறைந்த உயரத்தைக் குறிக்கிறது.
06:54 மேலே scroll செய்து, அதைத் தேர்ந்தெடுக்க முதல் வரிசையில் க்ளிக் செய்யவும்
06:59 tool bar ல் உள்ள Zoom map to the selected rows பட்டனை க்ளிக் செய்யவும்
07:06 QGIS windowக்கு மாறவும்
07:09 தேர்ந்தெடுக்கப்பட்ட contour வரியை மஞ்சள் நிறத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதை காண்பீர்கள்.
07:14 இந்த data-setல் மிக உயர்ந்த உயரத்தின் பகுதி இது.
07:20 இந்த projectஐ சேமிக்கவும்
07:23 tool bar ல் உள்ள “Save As” tool ஐ க்ளிக் செய்யவும்
07:27 ஒரு பொருத்தமான பெயரை கொடுக்கவும்
07:30 அதை ஒரு தகுந்த இடத்தில் சேமிக்கவும். Save பட்டனை க்ளிக் செய்யவும்
07:37 சுருங்கச் சொல்ல,
07:39 இந்த டுடோரியலில் நாம் கற்றது, -
07:42 Clipper toolஐ பயன்படுத்தி, DEMல் பகுதியை clip செய்வது
07:47 DEMக்கு contour வரிகளை காட்டுவது
07:51 contour map ல் மிக உயர்ந்த பகுதியை குறிப்பது.
07:56 இதோ உங்கள் பயிற்சி
07:59 DEMல் உங்களுக்கு விருப்பமான பகுதியில் contour வரிகளை உருவாக்கவும். அந்தப் பகுதியின் மிக உயர்ந்த உயரத்தைக் கண்டறியவும்.
08:09 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
08:16 Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
08:26 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
08:30 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
08:38 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree