QGIS/C4/Create-Contour-Lines/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- |
00:11 | Clipper toolஐ பயன்படுத்தி, DEMல் பகுதியை clip செய்வது |
00:16 | DEMக்கு contour வரிகளை காட்டுவது |
00:20 | contour map ல் மிக உயர்ந்த பகுதியை குறிப்பது. |
00:26 | இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, |
00:32 | QGIS பதிப்பு 2.18 |
00:36 | மற்றும் ஒரு வேலை செய்கின்ற Internet இணைப்பு |
00:40 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
00:46 | முன்நிபந்தனை டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும். |
00:53 | இந்த டுடோரியலைப் பயிற்சி செய்யத் தேவையான DEM data, Code files இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது. |
01:00 | அந்த folderன் contentகளை தரவிறக்கி extract செய்யவும் |
01:05 | நான் Desktopல் இந்த folderஐ சேமித்துள்ளேன் |
01:09 | அந்த folderஐ திறக்க, அதை டபுள்-க்ளிக் செய்யவும் |
01:13 | srtm.tif fileஐ ரைட்-க்ளிக் செய்து, Open with QGIS Desktopஐ தேர்ந்தெடுக்கவும் |
01:22 | திரையில் வரைபடம் திறக்கிறது |
01:25 | Layer menuவில் உள்ள Add Raster Layer தேர்வை பயன்படுத்தியும் நீங்கள் tif file ஐ திறக்கலாம் |
01:33 | Canvasல் நிலப்பரப்பின் DEMஐ நீங்கள் காண்பீர்கள் |
01:38 | Raster menuவில் உள்ள Contour toolஐ பயன்படுத்தி இந்த DEMக்கான Contour lineகளை உருவாக்கலாம் |
01:46 | Contour lineகள் பற்றி |
01:49 | இது கடல் மட்டத்திற்கு மேலே அல்லது அதற்குக் கீழே சம உயரத்தின் புள்ளிகளை இணைக்கும் வரைபடத்தில் உள்ள ஒரு வரி ஆகும். |
01:57 | வரைபடத்தில் மிக உயர்ந்த மற்றும் குறைந்த உயரமுள்ள பகுதிகளைத் தீர்மானிக்க contour கோடுகள் நமக்கு உதவுகின்றன. |
02:04 | இந்த வரைபடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கான contour கோடுகளை நாம் வரையலாம். |
02:10 | அந்தப் பகுதியை clip செய்ய நாம் Raster menu வில் உள்ள Clipper tool ஐ பயன்படுத்துவோம் |
02:16 | Raster menuவை க்ளிக் செய்யவும். drop-down ல் Extractionஐ க்ளிக் செய்யவும் |
02:23 | Clipper ஐ க்ளிக் செய்யவும் |
02:26 | Clipper dialog-box திறக்கிறது |
02:29 | Input fileஆக DEM layer ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:33 | இங்கு, முன்னிருப்பாக இந்த layer ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது |
02:38 | Output fileக்கு Select பட்டனை க்ளிக் செய்யவும் |
02:42 | Select the raster file to save the results to dialog-box திறக்கிறது |
02:48 | dialog-box ல், fileக்கு Clip-DEM.tif என பெயரிடவும் |
02:56 | கீழ் வலது மூலையில் உள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும் |
03:01 | Clipper dialog-boxல், No data valueக்கான check-box ஐ check செய்யவும். மதிப்பு பூஜ்யமாக இருக்கட்டும் |
03:10 | Clipping modeதலைப்பின் கீழ் உள்ள Extent ரேடியோ பட்டனை க்ளிக் செய்யவும் |
03:16 | QGIS windowக்கு மாறவும் |
03:19 | cursor இப்போது plus(+) குறியாக தெரிகிறது |
03:23 | இடது mouse பட்டனை அழுத்திக்கொண்டே, விருப்பமான பகுதியை உள்ளடக்கிய ஒரு செவ்வகத்தை வரையவும். |
03:30 | இந்த செயல்விளக்கத்திற்கு நான் மும்பை பகுதியை தேர்ந்தெடுக்கிறேன். |
03:35 | Clipper dialog-boxல், Load into canvas when finishedக்கு அடுத்துள்ள ஐ check செய்யவும் |
03:42 | மற்ற முன்னிருப்பான settingகுகளை அப்படியே வைக்கவும் |
03:46 | கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
03:51 | செய்முறை முடிந்தவுடன், OKபட்டன்களை க்ளிக் செய்து pop-up windowக்களை மூடவும் |
03:58 | Clipper dialog-boxல் கீழ் வலது மூலையில் உள்ள Close பட்டனை க்ளிக் செய்யவும் |
04:05 | canvas ல் ஒரு புதிய layer load செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம் |
04:10 | Clip-DEM layerஐ தவிர Layers Panelலில் உள்ள அனைத்து layerகளையும் disable செய்யவும் |
04:16 | இப்போது Contour tool ஐ பயன்படுத்தி, இந்த வரைபடத்திற்கான contour வரிகளை உருவாக்க நாம் தயாராக உள்ளோம் |
04:23 | Raster menuவை க்ளிக் செய்யவும் |
04:26 | Extractionக்கு கீழே scroll செய்யவும் |
04:29 | sub-menu வில் Contourஐ க்ளிக் செய்யவும் |
04:34 | Contour dialog-box திறக்கிறது. Input file drop-downல் Clip-DEM layer ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:43 | Output fileக்கு Select பட்டனை க்ளிக் செய்யவும். Dialog-box திறக்கிறது |
04:51 | dialog-box ல், fileக்கு Contour.shp என பெயரிடவும். Save பட்டனை க்ளிக் செய்யவும். |
05:00 | Contour dialog boxல், Interval between contour linesக்கு 50ஐ தேர்ந்தெடுக்கவும் |
05:07 | இது 50 மீட்டர் இடைவெளியில் contour கோடுகளை உருவாக்கும். |
05:12 | Attribute nameக்கு அடுத்துள்ள check-box ஐ க்ளிக் செய்யவும் |
05:17 | ஒவ்வொரு contour கோட்டிற்கும் elevation மதிப்பு 'E L E V' என்ற பண்புக்கூறாக பதிவு செய்யப்படும். |
05:24 | முடித்தவுடன், Load into canvasக்கு அடுத்துள்ள boxஐ check செய்யவும் |
05:29 | contour dialog box ன் கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
05:36 | செய்முறை முடிந்தவுடன், OKபட்டன்களை க்ளிக் செய்து pop-up windowக்களை மூடவும் |
05:43 | Contour dialog-boxஐ மூட, Close பட்டனை க்ளிக் செய்யவும் |
05:48 | Layers panelலில், Contour என்ற ஒரு புதிய layer சேர்க்கப்படுகிறது |
05:53 | contour கோடுகளின் நிறத்தை மாற்றுவோம். |
05:57 | Contour layerஐ ரைட்-க்ளிக் செய்யவும். Stylesஐ தேர்ந்தெடுக்கவும் |
06:03 | நிறத்தை மாற்ற முக்கோணத்தை சுழற்றவும் . |
06:07 | உங்களுக்கு விருப்பமான வண்ணத்தைத் தேர்வு செய்யவும். |
06:11 | Layers panelலில் உள்ள மற்ற check-boxகளை uncheck செய்து, மற்ற layerகளை மறைக்கவும் |
06:17 | Contour layerக்கான Attribute table ஐ திறக்கவும் |
06:21 | attribute table லில், ஒவ்வொரு வரி அம்சத்திற்கும் E L E V என்ற பெயரில் ஒரு பண்பு உள்ளது. |
06:28 | இந்த columnல் கொடுக்கப்பட்ட மதிப்பு அந்த contour கோட்டிற்கான மீட்டர்களில் கொடுக்கப்பட்ட உயரம். |
06:35 | மதிப்புகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்த column header ல் சில முறை க்ளிக் செய்க. |
06:42 | முதல் வரிசை நமது dataன் மிக உயர்ந்த உயரத்தைக் குறிக்கிறது. |
06:47 | Tableன் கீழே scroll செய்யவும், கடைசி வரிசை மிகக் குறைந்த உயரத்தைக் குறிக்கிறது. |
06:54 | மேலே scroll செய்து, அதைத் தேர்ந்தெடுக்க முதல் வரிசையில் க்ளிக் செய்யவும் |
06:59 | tool bar ல் உள்ள Zoom map to the selected rows பட்டனை க்ளிக் செய்யவும் |
07:06 | QGIS windowக்கு மாறவும் |
07:09 | தேர்ந்தெடுக்கப்பட்ட contour வரியை மஞ்சள் நிறத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதை காண்பீர்கள். |
07:14 | இந்த data-setல் மிக உயர்ந்த உயரத்தின் பகுதி இது. |
07:20 | இந்த projectஐ சேமிக்கவும் |
07:23 | tool bar ல் உள்ள “Save As” tool ஐ க்ளிக் செய்யவும் |
07:27 | ஒரு பொருத்தமான பெயரை கொடுக்கவும் |
07:30 | அதை ஒரு தகுந்த இடத்தில் சேமிக்கவும். Save பட்டனை க்ளிக் செய்யவும் |
07:37 | சுருங்கச் சொல்ல, |
07:39 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, - |
07:42 | Clipper toolஐ பயன்படுத்தி, DEMல் பகுதியை clip செய்வது |
07:47 | DEMக்கு contour வரிகளை காட்டுவது |
07:51 | contour map ல் மிக உயர்ந்த பகுதியை குறிப்பது. |
07:56 | இதோ உங்கள் பயிற்சி |
07:59 | DEMல் உங்களுக்கு விருப்பமான பகுதியில் contour வரிகளை உருவாக்கவும். அந்தப் பகுதியின் மிக உயர்ந்த உயரத்தைக் கண்டறியவும். |
08:09 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
08:16 | Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
08:26 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
08:30 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
08:38 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |