QGIS/C2/Raster-Data-Styling/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | QGISல் Raster Data Styling குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- ஒரு தொடர்ச்சியான rasterஐ style செய்வது |
00:13 | Raster Calculatorல் ஒரு expressionஐ எழுதுவது |
00:17 | raster பண்புகள் பற்றி. |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, |
00:28 | QGIS பதிப்பு 2.18 |
00:32 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும் |
00:38 | முன்நிபந்தனை டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். |
00:43 | playerன் கீழ் உள்ள , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள, folder ஐ தரவிறக்கவும் |
00:49 | தரவிறக்கப்பட்ட zip file லில் உள்ளவற்றை extract செய்து, அதை ஒரு folderலில் சேமிக்கவும் |
00:56 | என்னுடைய Code files folder இங்கு உள்ளது |
00:59 | Folderஐ திறக்க டபுள்-க்ளிக் செய்யவும் |
01:02 | இந்த folderல் 2000 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் முழு உலகிற்குமான Population Density grid fileகள் இருப்பதைக் காணலாம். |
01:12 | .asc file extensionவுடன் கூடிய இரண்டு fileகள் ASCII format ல் இருக்கின்றன |
01:20 | இந்த fileகளை QGISல் திறப்போம் |
01:24 | Code files folderஐ மூடவும் |
01:27 | நான் இங்கு QGIS interface ஐ திறந்துள்ளேன். Layer menuவை க்ளிக் செய்யவும் |
01:34 | drop-down ல் இருந்து, Add Layerஐ தேர்ந்தெடுக்கவும் |
01:38 | sub-menu ல் இருந்து, Add Raster Layerஐ தேர்ந்தெடுக்கவும் |
01:43 | ஒரு dialog-box திறக்கிறது. நான் Desktopல் உள்ள Code file folder க்கு செல்கிறேன் |
01:52 | .asc file extensionவுடன் கூடிய இரண்டு fileகளை தேர்ந்தெடுக்கவும் |
01:58 | Ctrl keyஐ அழுத்திக்கொண்டே, இரண்டு fileகளையும் க்ளிக் செய்யவும் |
02:04 | Open பட்டனை க்ளிக் செய்யவும் |
02:07 | Coordinate Reference System Selector திறக்கிறது |
02:11 | சில settingகளில், CRS தானாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும் |
02:17 | அத்தகைய சூழ்நிலையில், இந்த window திறக்காமல் இருக்கலாம் |
02:21 | Coordinate Reference System Selector திறக்கவில்லை எனில், இந்த படியை புறக்கணித்து, அடுத்த படியை தொடரவும் |
02:30 | இங்கு பட்டியலில் இருந்து நான் WGS 84 EPSG 4326 ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
02:39 | OK பட்டனை க்ளிக் செய்யவும் |
02:42 | நாம் ஒரே நேரத்தில் இரண்டு layerகளைச் சேர்ப்பதால், Coordinate Reference System Selector இங்கே மீண்டும் திறக்கிறது. |
02:51 | மீண்டும் WGS 84 EPSG 4326ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:58 | OK பட்டனை க்ளிக் செய்யவும் |
03:01 | Canvasல் நீங்கள் grayscale.லில் வழங்கப்பட்ட ஒரு உலக வரைபடத்தைக் காண்பீர்கள். |
03:07 | மெல்லிய pixelகள் அதிக மக்கள் தொகையையும், இருண்ட pixelகள் குறைந்த மக்கள்தொகையையும் குறிக்கின்றன. |
03:15 | Layers Panelலில், இரண்டு raster layerகள் load செய்யப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள் |
03:21 | rasterலில் உள்ள ஒரு pixelலும், அந்த கட்டத்திற்கான மக்கள் தொகை அடர்த்தியின் மதிப்பைக் கொண்டுள்ளது. |
03:27 | pixelன் மதிப்பை காண, toolbarன் மேல் வலது மூலையில் உள்ள Identify Features tool ஐ க்ளிக் செய்யவும் |
03:35 | வரைபடத்தை பெரிதாக்க mouse சக்கரத்தை பயன்படுத்தவும். |
03:38 | raster mapல் எங்கேனும் க்ளிக் செய்யவும் |
03:41 | Identify Results panelலில், pixelன் மதிப்பு காட்டப்படும் |
03:48 | மெல்லியதான pixel அதிக மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் இருண்ட pixel குறைந்த மதிப்பைக் கொண்டுள்ளது என்பதைக் கவனிக்கவும். |
03:57 | Identify Results panelஐ மூடவும் |
04:00 | வரைபடத்தை பெரிதாக்கவும். Pan Map tool ஐ க்ளிக் செய்து, canvasல் வரைபடத்தை சரிசெய்யவும். |
04:09 | மக்கள்தொகை அடர்த்தி முறையை பொருத்தமான வகை styling மூலம் சிறப்பாகக் காணலாம். |
04:16 | Layers Panelலில் உள்ள முதல் layerஐ ரைட்-க்ளிக் செய்யவும் |
04:21 | context menu வில் இருந்து, Properties ஐ தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
04:26 | Layer Properties dialog-box திறக்கிறது |
04:30 | dialog-box ல், Style tab ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:35 | Band Rendering பிரிவின் கீழ், Render typeஐ Singleband pseudocolorக்கு மாற்றவும் |
04:42 | Interpolation, Linear ஆக இருக்கட்டும் |
04:46 | Color drop-downல், Spectralஐ தேர்ந்தெடுக்கவும் |
04:51 | கீழே scroll செய்யவும் |
04:54 | Modeக்கு Continuousஐ தேர்ந்தெடுக்கவும். Classify பட்டனை க்ளிக் செய்யவும் |
05:00 | 5 புதிய வண்ண மதிப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதைக் நீங்கள் காண்பீர்கள். |
05:05 | dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள, Apply பட்டன் மற்றும் OK பட்டனை க்ளிக் செய்யவும் |
05:14 | QGIS Canvas ல், ஸ்பெக்ட்ரல் கலர் ரெண்டரிங்கின் 5 வகுப்புகளில் காட்டப்படும் raster வரைபடத்தைக் காண்பீர்கள். |
05:24 | 1வது layerக்கு, காட்டியுள்ள படிகளை பின்பற்றவும் மற்றும் 2வது layerக்கு raster styleஐ மாற்றவும் |
05:45 | எங்கள் பகுப்பாய்விற்கு, 1990 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு இடையில் மிகப்பெரிய மக்கள் தொகை மாற்றங்களைக் கொண்ட பகுதிகளைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம். |
05:54 | இதற்காக, இரண்டு layerகளிலும், ஒவ்வொரு gridன் pixel மதிப்புகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டுபிடிக்க வேண்டும். |
06:02 | இந்த கணக்கீடுகளுக்கு, நாம் Raster Calculator toolஐ பயன்படுத்துவோம் |
06:07 | menu bar ல் இருக்கும், Raster menuவை க்ளிக் செய்யவும். drop-down ல் இருந்து Raster calculatorஐ க்ளிக் செய்யவும் |
06:16 | Raster Calculator dialog-box திறக்கிறது |
06:20 | Raster bands பிரிவில், bandன் பெயர்கள் காட்டப்படுகின்றன. |
06:26 | ஒவ்வொரு rasterக்கும் ஒரு band மட்டும் இருப்பதால், ஒரு rasterக்கு 1 entryஐ மட்டுமே காண்பீர்கள். |
06:33 | raster calculator, raster pixelகளில் கணித செயல்பாடுகளைப் பயன்படுத்தலாம். |
06:40 | இந்த வழக்கில், 1990 ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை அடர்த்தியை 2000 ஆம் ஆண்டிற்கான மக்கள் அடர்த்தியிலிருந்து கழிக்க ஒரு எளிய சூத்திரத்தை enter செய்ய விரும்புகிறோம். |
06:52 | Raster bands பிரிவின் கீழ், 2000 வருடத்திற்கான raster layerஐ டபுள்-க்ளிக் செய்து, layerஐ தேர்ந்தெடுக்கவும் |
07:00 | expression இப்போது Raster calculator expression பிரிவுக்கு சேர்க்கப்படுகிறது |
07:06 | Operators பிரிவில், subtraction operator பட்டனை க்ளிக் செய்யவும் |
07:12 | மீண்டும் Raster bandsவில், 1990 வருடத்திற்கான raster layerஐ டபுள்-க்ளிக் செய்யவும் |
07:20 | கணக்கீட்டிற்கான சூத்திரம், Raster calculator expression பிரிவில் இப்போது காட்டப்படுகிறது |
07:27 | Result Layer பிரிவின் கீழ், Output layer box ஐ நீங்கள் காண்பீர்கள் |
07:33 | Boxல், உங்கள் output layerன் பெயரை, pop-change.tif என டைப் செய்யவும் |
07:41 | Output format drop-downல், Geo TIFF. ஐ தேர்ந்தெடுக்கவும் |
07:47 | Output CRS தேர்வு தானாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதை அப்படியே விட்டுவிடவும் |
07:54 | Add result to projectஅடுத்ததாக உள்ள boxஐ check செய்யவும் |
08:00 | dialog-box ன் கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும் |
08:04 | Layers Panelலில், புதிய layer load ஐ நீங்கள் பார்ப்பீர்கள் |
08:08 | 3வது layerக்கான வரைபடத்தை பார்க்க, Layers Panelலில், pop-2000 மற்றும் pop-1990 layer களுக்கான check boxகளை uncheck செய்யவும் |
08:21 | இந்த layerன் styleஐ மாற்றுவதன் மூலம் நாம் இன்னும் அதிக தகவல் உடைய வரைபடத்தை உருவாக்க முடியும். |
08:27 | pop-change layerஐ ரைட்-க்ளிக் செய்யவும். context menu வில் இருந்து Propertiesஐ தேர்வை தேர்ந்தெடுக்கவும் |
08:36 | Layer Properties dialog-box திறக்கிறது |
08:40 | சில வரம்புகளில் pixel மதிப்புகள் ஒரே நிறத்தைப் பெற, நாம் layerஐ style செய்ய விரும்புகிறோம் |
08:47 | Metadata tabஐ க்ளிக் செய்யவும். Propertiesபிரிவுக்கு scroll செய்யவும் |
08:55 | maximum மற்றும் minimum மதிப்புக்களை கவனிக்கவும் |
08:59 | அதிகபட்ச மதிப்பு 6000 க்கு அருகில் உள்ளது. |
09:02 | குறைந்தபட்ச மதிப்பு -2000 க்கு மேல். |
09:06 | Style tabக்கு செல்லவும். Band Rendering, ன் கீழ், Render typeஆக Singleband pseudocolorஐ தேர்ந்தெடுக்கவும் |
09:14 | Interpolationஐ Discreteக்கு set செய்யவும் |
09:19 | கீழே scroll செய்யவும். Add Values Manually பட்டனை கண்டுபிடிக்கவும் |
09:25 | இது, Classify பட்டனுக்கு அடுத்ததாக இருக்கும் பச்சை plus சின்ன பட்டன் ஆகும் |
09:31 | நான்கு தனித்துவமான classகளை உருவாக்க, Add Values Manually பட்டனை 4 முறை க்ளிக் செய்யவும் |
09:39 | இந்த மதிப்புகள் நடு panelலில் தெரிகிறது |
09:43 | இங்கே நாம் ஒவ்வொரு row இலும் மதிப்புகளை மாற்ற வேண்டும். |
09:47 | enter செய்யப்பட்ட மதிப்பை விட குறைவான மக்கள்தொகை மதிப்புகளுக்கு, அந்த entryன் நிறம் வழங்கப்படும். |
09:54 | மதிப்பை மாற்ற, Values column ல் உள்ள முதல் entryஐ டபுள்-க்ளிக் செய்யவும் |
10:00 | நம் metadata பகுப்பாய்வில் குறைந்தபட்ச மதிப்பு -2000 க்கு மேல் இருப்பதை நாம் கவனித்தோம். முதல் entry ல் -2000 என டைப் செய்யவும் |
10:12 | color-box ஐ டபுள்-க்ளிக் செய்து, நிறத்தை மாற்றவும் |
10:20 | முதல் rowவில் உள்ள Label column ஐ டபுள்-க்ளிக் செய்யவும். No Data values என டைப் செய்யவும் |
10:28 | இவ்வாறே இங்கு காட்டியுள்ளபடி, எல்லா மதிப்புகள் மற்றும் labelகளை நிரப்பவும் |
10:33 | 2வது வில், Negative மாற்றத்தை குறிக்க -10 |
10:46 | 3வது வில், Neutralஐ குறிக்க 10 |
10:59 | இறுதியாக, Positive மாற்றத்தை குறிக்க 6000 |
11:03 | ஏனெனில் meta data பகுப்பாய்விலிருந்து எங்களுக்கு கிடைத்த அதிகபட்ச மதிப்பு 6000 க்கு அருகில் உள்ளது. |
11:23 | Windowவின் கீழ் வலது மூலையில் உள்ள, Apply பட்டனையும் OK பட்டனையும் க்ளிக் செய்யவும் |
11:30 | இப்போது canvasல் மக்கள் தொகை dataவின் மிகவும் சக்திவாய்ந்த காட்சிப்படுத்துதலை காண்பீர்கள். |
11:37 | நேர்மறை மற்றும் எதிர்மறை மக்கள் அடர்த்தி மாற்றங்களைக் கண்ட பகுதிகளை இங்கே தெளிவாகக் காணலாம். |
11:46 | நீல நிறத்தில் உள்ள பகுதிகள் நேர்மறையான மக்கள் தொகை மாற்றத்தைக் குறிக்கின்றன. |
11:52 | பச்சை நிறத்தில் உள்ள பகுதிகள் எதிர்மறை மாற்றத்தைக் காட்டுகின்றன. |
11:56 | இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள பகுதிகள் அதிக மக்கள் தொகை மாற்றத்தைக் காணவில்லை. |
12:02 | சுருங்கச் சொல்ல, |
12:04 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, ஒரு தொடர்ச்சியான rasterஐ style செய்வது, Raster Calculatorல் ஒரு expressionஐ எழுதுவது, raster பண்புகள் பற்றி. |
12:17 | பயிற்சியாக, Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மக்கள்தொகை dataவைப் பயன்படுத்தி, எதிர்மறையான மக்கள் மாற்றத்தை மட்டுமே காட்டுகின்ற ஒரு புதிய raster file ஐ உருவாக்கவும் |
12:28 | குறிப்பு: Raster Calculatorஐப் பயன்படுத்தவும், மக்கள்தொகை மாற்றத்தை 0 க்கும் குறைவாக தேர்ந்தெடுக்க ஒரு வெளிப்பாட்டை எழுதவும். |
12:36 | உங்கள் முடிவு பெற்ற பயிற்சி, இங்கு காட்டியுள்ளபடி இருக்கவேண்டும் |
12:41 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
12:49 | Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
13:00 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
13:04 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும் |
13:16 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |