QGIS/C2/Raster-Data-Styling/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 QGISல் Raster Data Styling குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- ஒரு தொடர்ச்சியான rasterஐ style செய்வது
00:13 Raster Calculatorல் ஒரு expressionஐ எழுதுவது
00:17 raster பண்புகள் பற்றி.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04,
00:28 QGIS பதிப்பு 2.18
00:32 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:38 முன்நிபந்தனை டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
00:43 playerன் கீழ் உள்ள , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள, folder ஐ தரவிறக்கவும்
00:49 தரவிறக்கப்பட்ட zip file லில் உள்ளவற்றை extract செய்து, அதை ஒரு folderலில் சேமிக்கவும்
00:56 என்னுடைய Code files folder இங்கு உள்ளது
00:59 Folderஐ திறக்க டபுள்-க்ளிக் செய்யவும்
01:02 இந்த folderல் 2000 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் முழு உலகிற்குமான Population Density grid fileகள் இருப்பதைக் காணலாம்.
01:12 .asc file extensionவுடன் கூடிய இரண்டு fileகள் ASCII format ல் இருக்கின்றன
01:20 இந்த fileகளை QGISல் திறப்போம்
01:24 Code files folderஐ மூடவும்
01:27 நான் இங்கு QGIS interface ஐ திறந்துள்ளேன். Layer menuவை க்ளிக் செய்யவும்
01:34 drop-down ல் இருந்து, Add Layerஐ தேர்ந்தெடுக்கவும்
01:38 sub-menu ல் இருந்து, Add Raster Layerஐ தேர்ந்தெடுக்கவும்
01:43 ஒரு dialog-box திறக்கிறது. நான் Desktopல் உள்ள Code file folder க்கு செல்கிறேன்
01:52 .asc file extensionவுடன் கூடிய இரண்டு fileகளை தேர்ந்தெடுக்கவும்
01:58 Ctrl keyஐ அழுத்திக்கொண்டே, இரண்டு fileகளையும் க்ளிக் செய்யவும்
02:04 Open பட்டனை க்ளிக் செய்யவும்
02:07 Coordinate Reference System Selector திறக்கிறது
02:11 சில settingகளில், CRS தானாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும்
02:17 அத்தகைய சூழ்நிலையில், இந்த window திறக்காமல் இருக்கலாம்
02:21 Coordinate Reference System Selector திறக்கவில்லை எனில், இந்த படியை புறக்கணித்து, அடுத்த படியை தொடரவும்
02:30 இங்கு பட்டியலில் இருந்து நான் WGS 84 EPSG 4326 ஐ தேர்ந்தெடுக்கிறேன்
02:39 OK பட்டனை க்ளிக் செய்யவும்
02:42 நாம் ஒரே நேரத்தில் இரண்டு layerகளைச் சேர்ப்பதால், Coordinate Reference System Selector இங்கே மீண்டும் திறக்கிறது.
02:51 மீண்டும் WGS 84 EPSG 4326ஐ தேர்ந்தெடுக்கவும்
02:58 OK பட்டனை க்ளிக் செய்யவும்
03:01 Canvasல் நீங்கள் grayscale.லில் வழங்கப்பட்ட ஒரு உலக வரைபடத்தைக் காண்பீர்கள்.
03:07 மெல்லிய pixelகள் அதிக மக்கள் தொகையையும், இருண்ட pixelகள் குறைந்த மக்கள்தொகையையும் குறிக்கின்றன.
03:15 Layers Panelலில், இரண்டு raster layerகள் load செய்யப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்
03:21 rasterலில் உள்ள ஒரு pixelலும், அந்த கட்டத்திற்கான மக்கள் தொகை அடர்த்தியின் மதிப்பைக் கொண்டுள்ளது.
03:27 pixelன் மதிப்பை காண, toolbarன் மேல் வலது மூலையில் உள்ள Identify Features tool ஐ க்ளிக் செய்யவும்
03:35 வரைபடத்தை பெரிதாக்க mouse சக்கரத்தை பயன்படுத்தவும்.
03:38 raster mapல் எங்கேனும் க்ளிக் செய்யவும்
03:41 Identify Results panelலில், pixelன் மதிப்பு காட்டப்படும்
03:48 மெல்லியதான pixel அதிக மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் இருண்ட pixel குறைந்த மதிப்பைக் கொண்டுள்ளது என்பதைக் கவனிக்கவும்.
03:57 Identify Results panelஐ மூடவும்
04:00 வரைபடத்தை பெரிதாக்கவும். Pan Map tool ஐ க்ளிக் செய்து, canvasல் வரைபடத்தை சரிசெய்யவும்.
04:09 மக்கள்தொகை அடர்த்தி முறையை பொருத்தமான வகை styling மூலம் சிறப்பாகக் காணலாம்.
04:16 Layers Panelலில் உள்ள முதல் layerஐ ரைட்-க்ளிக் செய்யவும்
04:21 context menu வில் இருந்து, Properties ஐ தேர்வை தேர்ந்தெடுக்கவும்
04:26 Layer Properties dialog-box திறக்கிறது
04:30 dialog-box ல், Style tab ஐ தேர்ந்தெடுக்கவும்
04:35 Band Rendering பிரிவின் கீழ், Render typeSingleband pseudocolorக்கு மாற்றவும்
04:42 Interpolation, Linear ஆக இருக்கட்டும்
04:46 Color drop-downல், Spectralஐ தேர்ந்தெடுக்கவும்
04:51 கீழே scroll செய்யவும்
04:54 Modeக்கு Continuousஐ தேர்ந்தெடுக்கவும். Classify பட்டனை க்ளிக் செய்யவும்
05:00 5 புதிய வண்ண மதிப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதைக் நீங்கள் காண்பீர்கள்.
05:05 dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள, Apply பட்டன் மற்றும் OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:14 QGIS Canvas ல், ஸ்பெக்ட்ரல் கலர் ரெண்டரிங்கின் 5 வகுப்புகளில் காட்டப்படும் raster வரைபடத்தைக் காண்பீர்கள்.
05:24 1வது layerக்கு, காட்டியுள்ள படிகளை பின்பற்றவும் மற்றும் 2வது layerக்கு raster styleஐ மாற்றவும்
05:45 எங்கள் பகுப்பாய்விற்கு, 1990 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு இடையில் மிகப்பெரிய மக்கள் தொகை மாற்றங்களைக் கொண்ட பகுதிகளைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம்.
05:54 இதற்காக, இரண்டு layerகளிலும், ஒவ்வொரு gridன் pixel மதிப்புகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
06:02 இந்த கணக்கீடுகளுக்கு, நாம் Raster Calculator toolஐ பயன்படுத்துவோம்
06:07 menu bar ல் இருக்கும், Raster menuவை க்ளிக் செய்யவும். drop-down ல் இருந்து Raster calculatorஐ க்ளிக் செய்யவும்
06:16 Raster Calculator dialog-box திறக்கிறது
06:20 Raster bands பிரிவில், bandன் பெயர்கள் காட்டப்படுகின்றன.
06:26 ஒவ்வொரு rasterக்கும் ஒரு band மட்டும் இருப்பதால், ஒரு rasterக்கு 1 entryஐ மட்டுமே காண்பீர்கள்.
06:33 raster calculator, raster pixelகளில் கணித செயல்பாடுகளைப் பயன்படுத்தலாம்.
06:40 இந்த வழக்கில், 1990 ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை அடர்த்தியை 2000 ஆம் ஆண்டிற்கான மக்கள் அடர்த்தியிலிருந்து கழிக்க ஒரு எளிய சூத்திரத்தை enter செய்ய விரும்புகிறோம்.
06:52 Raster bands பிரிவின் கீழ், 2000 வருடத்திற்கான raster layerஐ டபுள்-க்ளிக் செய்து, layerஐ தேர்ந்தெடுக்கவும்
07:00 expression இப்போது Raster calculator expression பிரிவுக்கு சேர்க்கப்படுகிறது
07:06 Operators பிரிவில், subtraction operator பட்டனை க்ளிக் செய்யவும்
07:12 மீண்டும் Raster bandsவில், 1990 வருடத்திற்கான raster layerஐ டபுள்-க்ளிக் செய்யவும்
07:20 கணக்கீட்டிற்கான சூத்திரம், Raster calculator expression பிரிவில் இப்போது காட்டப்படுகிறது
07:27 Result Layer பிரிவின் கீழ், Output layer box ஐ நீங்கள் காண்பீர்கள்
07:33 Boxல், உங்கள் output layerன் பெயரை, pop-change.tif என டைப் செய்யவும்
07:41 Output format drop-downல், Geo TIFF. ஐ தேர்ந்தெடுக்கவும்
07:47 Output CRS தேர்வு தானாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதை அப்படியே விட்டுவிடவும்
07:54 Add result to projectஅடுத்ததாக உள்ள boxஐ check செய்யவும்
08:00 dialog-box ன் கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
08:04 Layers Panelலில், புதிய layer load ஐ நீங்கள் பார்ப்பீர்கள்
08:08 3வது layerக்கான வரைபடத்தை பார்க்க, Layers Panelலில், pop-2000 மற்றும் pop-1990 layer களுக்கான check boxகளை uncheck செய்யவும்
08:21 இந்த layerன் styleஐ மாற்றுவதன் மூலம் நாம் இன்னும் அதிக தகவல் உடைய வரைபடத்தை உருவாக்க முடியும்.
08:27 pop-change layerஐ ரைட்-க்ளிக் செய்யவும். context menu வில் இருந்து Propertiesஐ தேர்வை தேர்ந்தெடுக்கவும்
08:36 Layer Properties dialog-box திறக்கிறது
08:40 சில வரம்புகளில் pixel மதிப்புகள் ஒரே நிறத்தைப் பெற, நாம் layerஐ style செய்ய விரும்புகிறோம்
08:47 Metadata tabஐ க்ளிக் செய்யவும். Propertiesபிரிவுக்கு scroll செய்யவும்
08:55 maximum மற்றும் minimum மதிப்புக்களை கவனிக்கவும்
08:59 அதிகபட்ச மதிப்பு 6000 க்கு அருகில் உள்ளது.
09:02 குறைந்தபட்ச மதிப்பு -2000 க்கு மேல்.
09:06 Style tabக்கு செல்லவும். Band Rendering, ன் கீழ், Render typeஆக Singleband pseudocolorஐ தேர்ந்தெடுக்கவும்
09:14 InterpolationDiscreteக்கு set செய்யவும்
09:19 கீழே scroll செய்யவும். Add Values Manually பட்டனை கண்டுபிடிக்கவும்
09:25 இது, Classify பட்டனுக்கு அடுத்ததாக இருக்கும் பச்சை plus சின்ன பட்டன் ஆகும்
09:31 நான்கு தனித்துவமான classகளை உருவாக்க, Add Values Manually பட்டனை 4 முறை க்ளிக் செய்யவும்
09:39 இந்த மதிப்புகள் நடு panelலில் தெரிகிறது
09:43 இங்கே நாம் ஒவ்வொரு row இலும் மதிப்புகளை மாற்ற வேண்டும்.
09:47 enter செய்யப்பட்ட மதிப்பை விட குறைவான மக்கள்தொகை மதிப்புகளுக்கு, அந்த entryன் நிறம் வழங்கப்படும்.
09:54 மதிப்பை மாற்ற, Values column ல் உள்ள முதல் entryஐ டபுள்-க்ளிக் செய்யவும்
10:00 நம் metadata பகுப்பாய்வில் குறைந்தபட்ச மதிப்பு -2000 க்கு மேல் இருப்பதை நாம் கவனித்தோம். முதல் entry ல் -2000 என டைப் செய்யவும்
10:12 color-box ஐ டபுள்-க்ளிக் செய்து, நிறத்தை மாற்றவும்
10:20 முதல் rowவில் உள்ள Label column ஐ டபுள்-க்ளிக் செய்யவும். No Data values என டைப் செய்யவும்
10:28 இவ்வாறே இங்கு காட்டியுள்ளபடி, எல்லா மதிப்புகள் மற்றும் labelகளை நிரப்பவும்
10:33 2வது வில், Negative மாற்றத்தை குறிக்க -10
10:46 3வது வில், Neutralஐ குறிக்க 10
10:59 இறுதியாக, Positive மாற்றத்தை குறிக்க 6000
11:03 ஏனெனில் meta data பகுப்பாய்விலிருந்து எங்களுக்கு கிடைத்த அதிகபட்ச மதிப்பு 6000 க்கு அருகில் உள்ளது.
11:23 Windowவின் கீழ் வலது மூலையில் உள்ள, Apply பட்டனையும் OK பட்டனையும் க்ளிக் செய்யவும்
11:30 இப்போது canvasல் மக்கள் தொகை dataவின் மிகவும் சக்திவாய்ந்த காட்சிப்படுத்துதலை காண்பீர்கள்.
11:37 நேர்மறை மற்றும் எதிர்மறை மக்கள் அடர்த்தி மாற்றங்களைக் கண்ட பகுதிகளை இங்கே தெளிவாகக் காணலாம்.
11:46 நீல நிறத்தில் உள்ள பகுதிகள் நேர்மறையான மக்கள் தொகை மாற்றத்தைக் குறிக்கின்றன.
11:52 பச்சை நிறத்தில் உள்ள பகுதிகள் எதிர்மறை மாற்றத்தைக் காட்டுகின்றன.
11:56 இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள பகுதிகள் அதிக மக்கள் தொகை மாற்றத்தைக் காணவில்லை.
12:02 சுருங்கச் சொல்ல,
12:04 இந்த டுடோரியலில் நாம் கற்றது, ஒரு தொடர்ச்சியான rasterஐ style செய்வது, Raster Calculatorல் ஒரு expressionஐ எழுதுவது, raster பண்புகள் பற்றி.
12:17 பயிற்சியாக, Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மக்கள்தொகை dataவைப் பயன்படுத்தி, எதிர்மறையான மக்கள் மாற்றத்தை மட்டுமே காட்டுகின்ற ஒரு புதிய raster file ஐ உருவாக்கவும்
12:28 குறிப்பு: Raster Calculatorஐப் பயன்படுத்தவும், மக்கள்தொகை மாற்றத்தை 0 க்கும் குறைவாக தேர்ந்தெடுக்க ஒரு வெளிப்பாட்டை எழுதவும்.
12:36 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி, இங்கு காட்டியுள்ளபடி இருக்கவேண்டும்
12:41 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
12:49 Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
13:00 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
13:04 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
13:16 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree