Synfig/C2/Bouncing-ball-animation/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Synfig.ஐ பயன்படுத்தி “Bouncing Ball animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் Synfig.ன் interface பற்றி கற்போம் |
00:12 | மேலும் பின்வருவனவற்றை கற்போம்: அடிப்படை வடிவங்களை வரைந்து வண்ணத்தை நிரப்புவது |
00:16 | keyframeகள் மற்றும் waypointகளை சேர்ப்பது, |
00:19 | squash effectஉடன் கூடிய ball animationஐ செய்வது, |
00:22 | outputஐ gif format ல் கொடுப்பது. |
00:26 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான்: Ubuntu Linux 14.04 Operating system, Synfig பதிப்பு 1.0.2 ஐ பயன்படுத்துகிறேன் |
00:37 | Dash homeக்கு சென்று, டைப் செய்க: Synfig |
00:40 | logo.வை க்ளிக் செய்து நீங்கள், Synfigஐ திறக்கலாம் |
00:44 | இது Synfigன் interface ஆகும் |
00:46 | Menu bar மேலே உள்ளது |
00:50 | standard toolbar , Menu bar.க்கு கீழே உள்ளது. இங்கு நாம் சில shortcut மற்றும் handles தேர்வுகளை பார்ப்போம் |
00:58 | இதைத் தொடர்ந்து கிடைமட்ட மற்றும் செங்குத்து rulerகள் இருக்கின்றன |
01:02 | Tool box, interfaceன் இடது பக்கம் உள்ளது |
01:06 | Tool box, ற்கு கீழ், இரண்டு boxகள் இருப்பதை பார்க்கவும் |
01:10 | மேலுள்ள box கருப்பு நிறத்தில் உள்ளது. மற்றும் tool-tip அதை Outline color. எனக் கூறுகிறது |
01:16 | கீழுள்ள box வெள்ளை நிறத்தில் உள்ளது. tool-tip அதை Fill color. எனக் கூறுகிறது |
01:21 | நடுவில், canvas இருக்கிறது. இங்கு தான் நாம் நமது animationஐ செய்யப்போகிறோம் |
01:27 | canvas,ன் கீழ் Animation panel. உள்ளது |
01:30 | இங்கு, animationக்கு தொடர்புடைய buttonகளை நாம் காணலாம் |
01:35 | Interfaceன் கீழ் இடது பக்கத்தில், Parameters panel. உள்ளது |
01:39 | நாம் canvas.ல் ஒரு objectஐ உருவாக்கியவுடன், Parameterகள் தெரியும் |
01:43 | இதற்கு அடுத்து இருப்பது, Keyframes panel. இங்கு நாம் keyframeகளை சேர்ப்போம் |
01:49 | இந்த panelன் வலது பக்கத்தில், நாம் Time track panel.ஐ காணலாம் |
01:54 | இங்கு, animationனின் waypointகள் மற்றும் key frame குறிப்பிடுதல்களை நாம் காணலாம் |
02:01 | canvas.ல் animationஐ உருவாக்கியவுடன் Waypointகள் தெரியும் |
02:05 | Interfaceன் கீழ் வலது பக்கத்தில், Layers panel உள்ளது |
02:10 | Layers panel,க்கு மேல், நாம் Tool options panel.ஐ காணலாம் |
02:14 | இந்த panelக்கு மேல், நாம் பின்வருவனவற்றை காணலாம்- Canvas browser, |
02:19 | Palette editor, |
02:21 | Navigator மற்றும் Info panelகள். |
02:24 | நாம் மேலும் முன்னேறுகையில், இவை அனைத்தையும் பயன்படுத்த பழக்கிக்கொள்ளலாம் |
02:28 | இப்போது நமது முதல் animationனுடன் தொடங்குவோம் |
02:31 | ஒரு பின்னணியை உருவாக்குவோம் |
02:34 | Tool box. க்கு செல்லவும். Rectangle tool.ஐ க்ளிக் செய்யவும் |
02:37 | Tool options panel.லில் ஏற்படும் மாற்றத்தை கவனிக்கவும் |
02:41 | Layer Type, ன் கீழ் நாம் நிறைய iconகளை காணலாம் |
02:44 | Create a region layer iconஐ தேர்ந்தெடுக்கவும். இந்த செயல்விளக்கத்திற்கு, மற்ற settingகுகளை அப்படியே விட்டுவிடுவோம் |
02:51 | இப்போது செயல்விளக்கியபடி canvas,ன் 3/4 பங்கை உள்ளடக்கிய ஒரு செவ்வகத்தை வரையவும். |
02:57 | முன்னிருப்பான நிரப்பு வண்ணம் வெண்மை என்பதால், இது நாம் canvasக்கு வெளியே வரைந்தால், objectஐ கண்டறிவது கடினம் என்பதை நினைவில் கொள்க |
03:07 | Layers Panel.லில் ஒரு layer உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும் |
03:11 | Synfig முன்னிருப்பாக அதற்கு ஒரு பெயரை கொடுக்கிறது. இங்கு அது “Rectangle060Region”. என்ற ஆகும் |
03:18 | layerகளுக்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுப்பது எப்போதும் ஒரு நல்ல பழக்கமாகும் . |
03:21 | layerகளின் நீண்ட பட்டியலிலிருந்து ஒரு குறிப்பிட்ட objectஐ கண்டுபிடிக்க உதவுகிறது. |
03:28 | சிக்கலான animationகளை உருவாக்கும்போது இதை நீங்கள் பாராட்டுவீர்கள். |
03:32 | Synfig interfaceக்கு திரும்பவும் |
03:35 | இந்த முன்னிருப்பான layer பெயரை நான் என Sky. மாற்றுகிறேன் |
03:39 | பெயரின் மீது க்ளிக் செய்து, டைப் செய்க Sky. Enterஐ அழுத்தவும் |
03:43 | layerன் பெயர் இப்போது sky ஆகும் |
03:46 | Cursor மிகவும் உணர்திறன் கொண்டது என்பதை நினைவில் கொள்க. எனவே, முந்தைய செயலின் நகலைத் தடுக்க தோராயமாக கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். |
03:55 | செவ்வகத்திற்கான அளவுருக்கள் Parameters panelலில் உருவாக்கப்படுகின்றன. |
04:00 | Color parameter ஐ கண்டுபிடித்து, Value column ஐ டபுள்-க்ளிக் செய்யவும். உடனே, ஒரு dialog box தோன்றுகிறது |
04:08 | RGB scrollerகளை இழுத்து, நிறத்தை நீலத்திற்கு மாற்றவும் |
04:13 | இப்போது, இந்த dialog box ஐ மூடவும் |
04:15 | அடுத்து, Transform tool.ஐ க்ளிக் செய்யவும் |
04:19 | பின், Sky layer.ஐ தேர்வுநீக்க canvasக்கு வெளியே க்ளிக் செய்யவும் |
04:24 | இப்போது மீண்டும் Rectangle tool.ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:26 | canvas.ன் கீழ் பகுதியில் மற்றொரு செவ்வகத்தை உருவாக்கவும் |
04:31 | முன்பு காட்டியபடி layerன் பெயரை Ground என்றும், நிறத்தை பச்சையாகவும் மாற்றவும். |
04:40 | Transform toolஐ தேர்ந்தெடுத்து, layer.ஐ தேர்வுநீக்க canvasக்கு வெளியே க்ளிக் செய்யவும் |
04:46 | அடுத்து, நாம் ஒரு பந்தை வரைவோம். Toolbox,ல் Circle tool.ஐ க்ளிக் செய்யவும் |
04:52 | Layer Typeன் கீழ், Create a region layer தேர்வு செய்யப்படவேண்டும் |
04:57 | canvas ன் மேல் பகுதியில் க்ளிக் செய்து ஒரு வட்டத்தை வரையவும். |
05:01 | முன்பு காட்டியபடி, Layers panelலில், layerன் பெயரை Ball, என மாற்றவும் |
05:07 | நிறத்தை சிவப்பு வண்ணத்திற்கு மாற்றவும் |
05:11 | இப்போது பந்தை animate செய்யத் தொடங்குவோம். Transform tool.ஐ தேர்ந்தெடுக்கவும் |
05:16 | Animation panel,லில், Turn on animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும் |
05:22 | திரையில் தோன்றும் சிவப்பு செவ்வக எல்லை, நாம் Animation modeல் இருப்பதைக் குறிக்கிறது. |
05:29 | current frame boxல் 9 என enter செய்யவும். Enter.ஐ அழுத்தவும் |
05:34 | Keyframes panel.ஐ க்ளிக் செய்யவும் |
05:36 | ஒரு புதிய keyframe.ஐ சேர்க்க, பச்சை பிளஸ் அடையாள iconஐ க்ளிக் செய்யவும் |
05:41 | canvas.ல் உள்ள பந்தை தேர்ந்தெடுக்கவும் |
05:44 | பந்தின் மையத்தில் ஒரு பச்சை புள்ளி இருப்பதை கவனிக்கவும் |
05:47 | பந்தை canvas.ன் அடிப்பகுதிக்கு நகர்த்த இந்த பச்சை புள்ளியை இழுக்கவும். |
05:52 | பந்தை தரைக்கு சிறிது மேலே நகர்த்தவும். |
05:55 | நேரான பாதையில் செல்ல shift keyஐப் பயன்படுத்தவும். |
05:59 | Time track panel.லில் waypointகள் உருவாக்கப்படுவதை கவனிக்கவும் |
06:04 | இப்போது 11ஆவது frameக்கு செல்வோம். முன்பு காட்டியபடி, மீண்டும் ஒரு புதிய keyframe ஐ சேர்க்கவும் |
06:12 | பந்து தரையைத் தொடுவது போன்று சிறிது கீழே நகர்த்தவும். |
06:16 | பந்தைச் சுற்றி ஆரஞ்சு மற்றும் மஞ்சள் புள்ளிகளைக் கவனியுங்கள். இவை handleகள் என அழைக்கப்படுகின்றன. |
06:22 | செயல்விளக்கியபடி, ஒரு ஸ்குவாஷ் விளைவைக் கொடுக்க, handleகளில் உள்ள ஆரஞ்சு புள்ளிகளைப் பயன்படுத்தி, பந்தை resize செய்யவும் |
06:31 | Time cursorஐ 13ஆவது frameக்கு நகர்த்தவும் |
06:36 | Keyframes panelலில் 9ஆவது frameஐ தேர்ந்தெடுக்கவும் |
06:39 | கீழே உள்ள Duplicate icon ஐ க்ளிக் செய்யவும் |
06:43 | Time cursorஐ 24ஆவது frameக்கு நகர்த்தவும் |
06:46 | Keyframes panelலில் பூஜ்யமாவது frameஐ தேர்ந்தெடுக்கவும் |
06:50 | மீண்டும், Duplicate icon ஐ க்ளிக் செய்யவும் |
06:53 | பூஜ்யமாவது frameக்கு செல்லவும். பந்தை தேர்வுநீக்க, canvas க்கு வெளியே க்ளிக் செய்யவும் |
06:59 | நாம் உருவாக்கிய animationஐ பார்க்க, Play பட்டனை க்ளிக் செய்யவும் |
07:04 | இப்போது, Pause பட்டனை க்ளிக் செய்யவும் |
07:07 | இறுதியாக, fileஐ save செய்வோம் |
07:09 | Fileக்கு சென்று, Save. ஐ க்ளிக் செய்யவும். நான் Desktop.ல் சேமிக்கிறேன் |
07:14 | Synfig fileக்கு ஒரு முன்னிருப்பான பெயரை கொடுக்கிறது |
07:18 | நான் இந்த பெயரை Bouncing-ball. என மாற்றுகிறேன் |
07:22 | dot sifz, dot sif, dot sfg ஆகியவை கிடைக்கின்ற Synfig file extensionகள் என்பதை கவனிக்கவும் |
07:31 | dot sifz ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
07:34 | Save.ஐ க்ளிக் செய்யவும். இப்போது animation ஐ கொடுப்போம் |
07:39 | Fileக்கு சென்று Render.ஐ க்ளிக் செய்யவும் |
07:42 | Render settings dialog box திறக்கிறது |
07:45 | .gif நீட்டிப்புடன் கூடிய ஒரு தகுந்த file பெயரை கொடுக்கவும் |
07:50 | saveசெய்யவேண்டிய இடத்தை தேர்ந்தெடுப்பதற்கு, Choose பட்டனை க்ளிக் செய்யவும் |
07:54 | Desktop ஐ தேர்வு செய்து, OK.வை க்ளிக் செய்கிறேன் |
07:57 | Target drop down menuவை க்ளிக் செய்து, Magick++.ஐ தேர்ந்தெடுக்கவும் |
08:03 | ப்ளஸ் குறியை க்ளிக் செய்து, Qualityஐ அதிகபட்சமான, 9 ற்கு உயர்த்தவும். இந்த மதிப்பு ஒருபோதும் 3 க்கு கீழே இருக்கக்கூடாது. |
08:11 | Image settingகுகளை அப்படியே விட்டுவிடவும் |
08:14 | Time tabஐ க்ளிக் செய்யவும். இங்கு frame rate, 24 fps ஆக இருக்கவேண்டும் |
08:20 | இது சீரான animationஐ வழங்கும். |
08:24 | நமது animation, 24ஆவது வினாடியில் முடிவதால், End Timeஐ 24க்கு மாற்றவும். Enter.ஐ அழுத்தவும் |
08:31 | கீழயுள்ள Render பட்டனை க்ளிக் செய்யவும். Outputஐ கொடுக்க இது சில வினாடிகள் எடுத்துக்கொள்ளலாம் |
08:38 | இப்போது, நான் எனது .gif file ஐ சேமித்து வைத்துள்ள Desktopக்கு செல்கிறேன் |
08:44 | Firefox அல்லது எந்த web browserஐயும் பயன்படுத்தி, நாம் animation ஐ play செய்யலாம் |
08:48 | இந்த animationஐ play செய்ய, உங்களுக்கு internet connection தேவையில்லை |
08:54 | இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
08:57 | சுருங்கச் சொல்ல, |
08:59 | இந்த டுடோரியலில் Synfigன் interface பற்றி கற்றோம் |
09:03 | மேலும் பின்வருவனவற்றை கற்றோம்: அடிப்படை வடிவங்களை வரைந்து வண்ணத்தை நிரப்புவது |
09:07 | keyframeகள் மற்றும் waypointகளை சேர்ப்பது, |
09:10 | squash effectஉடன் கூடிய ball animationஐ செய்வது, |
09:13 | outputஐ gif format ல் கொடுப்பது. |
09:16 | உங்களுக்கான பயிற்சி. ஒரு சாய்ந்த பாதையில் ball animationஐ உருவாக்கவும். |
09:23 | உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும் |
09:27 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
09:33 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, |
09:38 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
09:44 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும். |
09:49 | உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் வினாடியை தேர்வு செய்யவும். |
09:52 | உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவில் இருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார் |
09:58 | ஸ்போகன் டுடோரியல் மன்றம், இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டுமே ஆகும் |
10:02 | தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம். இது குழப்பத்தை குறைக்க உதவும். |
10:08 | குழப்பம் குறைந்தால், இந்த விவாதங்களை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம் |
10:13 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
10:23 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |