Synfig/C2/Bouncing-ball-animation/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Synfig.ஐ பயன்படுத்தி “Bouncing Ball animation” குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் Synfig.ன் interface பற்றி கற்போம்
00:12 மேலும் பின்வருவனவற்றை கற்போம்: அடிப்படை வடிவங்களை வரைந்து வண்ணத்தை நிரப்புவது
00:16 keyframeகள் மற்றும் waypointகளை சேர்ப்பது,
00:19 squash effectஉடன் கூடிய ball animationஐ செய்வது,
00:22 outputஐ gif format ல் கொடுப்பது.
00:26 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான்: Ubuntu Linux 14.04 Operating system, Synfig பதிப்பு 1.0.2 ஐ பயன்படுத்துகிறேன்
00:37 Dash homeக்கு சென்று, டைப் செய்க: Synfig
00:40 logo.வை க்ளிக் செய்து நீங்கள், Synfigஐ திறக்கலாம்
00:44 இது Synfigன் interface ஆகும்
00:46 Menu bar மேலே உள்ளது
00:50 standard toolbar , Menu bar.க்கு கீழே உள்ளது. இங்கு நாம் சில shortcut மற்றும் handles தேர்வுகளை பார்ப்போம்
00:58 இதைத் தொடர்ந்து கிடைமட்ட மற்றும் செங்குத்து rulerகள் இருக்கின்றன
01:02 Tool box, interfaceன் இடது பக்கம் உள்ளது
01:06 Tool box, ற்கு கீழ், இரண்டு boxகள் இருப்பதை பார்க்கவும்
01:10 மேலுள்ள box கருப்பு நிறத்தில் உள்ளது. மற்றும் tool-tip அதை Outline color. எனக் கூறுகிறது
01:16 கீழுள்ள box வெள்ளை நிறத்தில் உள்ளது. tool-tip அதை Fill color. எனக் கூறுகிறது
01:21 நடுவில், canvas இருக்கிறது. இங்கு தான் நாம் நமது animationஐ செய்யப்போகிறோம்
01:27 canvas,ன் கீழ் Animation panel. உள்ளது
01:30 இங்கு, animationக்கு தொடர்புடைய buttonகளை நாம் காணலாம்
01:35 Interfaceன் கீழ் இடது பக்கத்தில், Parameters panel. உள்ளது
01:39 நாம் canvas.ல் ஒரு objectஐ உருவாக்கியவுடன், Parameterகள் தெரியும்
01:43 இதற்கு அடுத்து இருப்பது, Keyframes panel. இங்கு நாம் keyframeகளை சேர்ப்போம்
01:49 இந்த panelன் வலது பக்கத்தில், நாம் Time track panel.ஐ காணலாம்
01:54 இங்கு, animationனின் waypointகள் மற்றும் key frame குறிப்பிடுதல்களை நாம் காணலாம்
02:01 canvas.ல் animationஐ உருவாக்கியவுடன் Waypointகள் தெரியும்
02:05 Interfaceன் கீழ் வலது பக்கத்தில், Layers panel உள்ளது
02:10 Layers panel,க்கு மேல், நாம் Tool options panel.ஐ காணலாம்
02:14 இந்த panelக்கு மேல், நாம் பின்வருவனவற்றை காணலாம்- Canvas browser,
02:19 Palette editor,
02:21 Navigator மற்றும் Info panelகள்.
02:24 நாம் மேலும் முன்னேறுகையில், இவை அனைத்தையும் பயன்படுத்த பழக்கிக்கொள்ளலாம்
02:28 இப்போது நமது முதல் animationனுடன் தொடங்குவோம்
02:31 ஒரு பின்னணியை உருவாக்குவோம்
02:34 Tool box. க்கு செல்லவும். Rectangle tool.ஐ க்ளிக் செய்யவும்
02:37 Tool options panel.லில் ஏற்படும் மாற்றத்தை கவனிக்கவும்
02:41 Layer Type, ன் கீழ் நாம் நிறைய iconகளை காணலாம்
02:44 Create a region layer iconஐ தேர்ந்தெடுக்கவும். இந்த செயல்விளக்கத்திற்கு, மற்ற settingகுகளை அப்படியே விட்டுவிடுவோம்
02:51 இப்போது செயல்விளக்கியபடி canvas,ன் 3/4 பங்கை உள்ளடக்கிய ஒரு செவ்வகத்தை வரையவும்.
02:57 முன்னிருப்பான நிரப்பு வண்ணம் வெண்மை என்பதால், இது நாம் canvasக்கு வெளியே வரைந்தால், objectஐ கண்டறிவது கடினம் என்பதை நினைவில் கொள்க
03:07 Layers Panel.லில் ஒரு layer உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்
03:11 Synfig முன்னிருப்பாக அதற்கு ஒரு பெயரை கொடுக்கிறது. இங்கு அது “Rectangle060Region”. என்ற ஆகும்
03:18 layerகளுக்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுப்பது எப்போதும் ஒரு நல்ல பழக்கமாகும் .
03:21 layerகளின் நீண்ட பட்டியலிலிருந்து ஒரு குறிப்பிட்ட objectஐ கண்டுபிடிக்க உதவுகிறது.
03:28 சிக்கலான animationகளை உருவாக்கும்போது இதை நீங்கள் பாராட்டுவீர்கள்.
03:32 Synfig interfaceக்கு திரும்பவும்
03:35 இந்த முன்னிருப்பான layer பெயரை நான் என Sky. மாற்றுகிறேன்
03:39 பெயரின் மீது க்ளிக் செய்து, டைப் செய்க Sky. Enterஐ அழுத்தவும்
03:43 layerன் பெயர் இப்போது sky ஆகும்
03:46 Cursor மிகவும் உணர்திறன் கொண்டது என்பதை நினைவில் கொள்க. எனவே, முந்தைய செயலின் நகலைத் தடுக்க தோராயமாக கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
03:55 செவ்வகத்திற்கான அளவுருக்கள் Parameters panelலில் உருவாக்கப்படுகின்றன.
04:00 Color parameter ஐ கண்டுபிடித்து, Value column ஐ டபுள்-க்ளிக் செய்யவும். உடனே, ஒரு dialog box தோன்றுகிறது
04:08 RGB scrollerகளை இழுத்து, நிறத்தை நீலத்திற்கு மாற்றவும்
04:13 இப்போது, இந்த dialog box ஐ மூடவும்
04:15 அடுத்து, Transform tool.ஐ க்ளிக் செய்யவும்
04:19 பின், Sky layer.ஐ தேர்வுநீக்க canvasக்கு வெளியே க்ளிக் செய்யவும்
04:24 இப்போது மீண்டும் Rectangle tool.ஐ தேர்ந்தெடுக்கவும்
04:26 canvas.ன் கீழ் பகுதியில் மற்றொரு செவ்வகத்தை உருவாக்கவும்
04:31 முன்பு காட்டியபடி layerன் பெயரை Ground என்றும், நிறத்தை பச்சையாகவும் மாற்றவும்.
04:40 Transform toolஐ தேர்ந்தெடுத்து, layer.ஐ தேர்வுநீக்க canvasக்கு வெளியே க்ளிக் செய்யவும்
04:46 அடுத்து, நாம் ஒரு பந்தை வரைவோம். Toolbox,ல் Circle tool.ஐ க்ளிக் செய்யவும்
04:52 Layer Typeன் கீழ், Create a region layer தேர்வு செய்யப்படவேண்டும்
04:57 canvas ன் மேல் பகுதியில் க்ளிக் செய்து ஒரு வட்டத்தை வரையவும்.
05:01 முன்பு காட்டியபடி, Layers panelலில், layerன் பெயரை Ball, என மாற்றவும்
05:07 நிறத்தை சிவப்பு வண்ணத்திற்கு மாற்றவும்
05:11 இப்போது பந்தை animate செய்யத் தொடங்குவோம். Transform tool.ஐ தேர்ந்தெடுக்கவும்
05:16 Animation panel,லில், Turn on animate editing mode icon ஐ க்ளிக் செய்யவும்
05:22 திரையில் தோன்றும் சிவப்பு செவ்வக எல்லை, நாம் Animation modeல் இருப்பதைக் குறிக்கிறது.
05:29 current frame boxல் 9 என enter செய்யவும். Enter.ஐ அழுத்தவும்
05:34 Keyframes panel.ஐ க்ளிக் செய்யவும்
05:36 ஒரு புதிய keyframe.ஐ சேர்க்க, பச்சை பிளஸ் அடையாள iconஐ க்ளிக் செய்யவும்
05:41 canvas.ல் உள்ள பந்தை தேர்ந்தெடுக்கவும்
05:44 பந்தின் மையத்தில் ஒரு பச்சை புள்ளி இருப்பதை கவனிக்கவும்
05:47 பந்தை canvas.ன் அடிப்பகுதிக்கு நகர்த்த இந்த பச்சை புள்ளியை இழுக்கவும்.
05:52 பந்தை தரைக்கு சிறிது மேலே நகர்த்தவும்.
05:55 நேரான பாதையில் செல்ல shift keyஐப் பயன்படுத்தவும்.
05:59 Time track panel.லில் waypointகள் உருவாக்கப்படுவதை கவனிக்கவும்
06:04 இப்போது 11ஆவது frameக்கு செல்வோம். முன்பு காட்டியபடி, மீண்டும் ஒரு புதிய keyframe ஐ சேர்க்கவும்
06:12 பந்து தரையைத் தொடுவது போன்று சிறிது கீழே நகர்த்தவும்.
06:16 பந்தைச் சுற்றி ஆரஞ்சு மற்றும் மஞ்சள் புள்ளிகளைக் கவனியுங்கள். இவை handleகள் என அழைக்கப்படுகின்றன.
06:22 செயல்விளக்கியபடி, ஒரு ஸ்குவாஷ் விளைவைக் கொடுக்க, handleகளில் உள்ள ஆரஞ்சு புள்ளிகளைப் பயன்படுத்தி, பந்தை resize செய்யவும்
06:31 Time cursorஐ 13ஆவது frameக்கு நகர்த்தவும்
06:36 Keyframes panelலில் 9ஆவது frameஐ தேர்ந்தெடுக்கவும்
06:39 கீழே உள்ள Duplicate icon ஐ க்ளிக் செய்யவும்
06:43 Time cursorஐ 24ஆவது frameக்கு நகர்த்தவும்
06:46 Keyframes panelலில் பூஜ்யமாவது frameஐ தேர்ந்தெடுக்கவும்
06:50 மீண்டும், Duplicate icon ஐ க்ளிக் செய்யவும்
06:53 பூஜ்யமாவது frameக்கு செல்லவும். பந்தை தேர்வுநீக்க, canvas க்கு வெளியே க்ளிக் செய்யவும்
06:59 நாம் உருவாக்கிய animationஐ பார்க்க, Play பட்டனை க்ளிக் செய்யவும்
07:04 இப்போது, Pause பட்டனை க்ளிக் செய்யவும்
07:07 இறுதியாக, fileஐ save செய்வோம்
07:09 Fileக்கு சென்று, Save. ஐ க்ளிக் செய்யவும். நான் Desktop.ல் சேமிக்கிறேன்
07:14 Synfig fileக்கு ஒரு முன்னிருப்பான பெயரை கொடுக்கிறது
07:18 நான் இந்த பெயரை Bouncing-ball. என மாற்றுகிறேன்
07:22 dot sifz, dot sif, dot sfg ஆகியவை கிடைக்கின்ற Synfig file extensionகள் என்பதை கவனிக்கவும்
07:31 dot sifz ஐ தேர்ந்தெடுக்கிறேன்
07:34 Save.ஐ க்ளிக் செய்யவும். இப்போது animation ஐ கொடுப்போம்
07:39 Fileக்கு சென்று Render.ஐ க்ளிக் செய்யவும்
07:42 Render settings dialog box திறக்கிறது
07:45 .gif நீட்டிப்புடன் கூடிய ஒரு தகுந்த file பெயரை கொடுக்கவும்
07:50 saveசெய்யவேண்டிய இடத்தை தேர்ந்தெடுப்பதற்கு, Choose பட்டனை க்ளிக் செய்யவும்
07:54 Desktop ஐ தேர்வு செய்து, OK.வை க்ளிக் செய்கிறேன்
07:57 Target drop down menuவை க்ளிக் செய்து, Magick++.ஐ தேர்ந்தெடுக்கவும்
08:03 ப்ளஸ் குறியை க்ளிக் செய்து, Qualityஐ அதிகபட்சமான, 9 ற்கு உயர்த்தவும். இந்த மதிப்பு ஒருபோதும் 3 க்கு கீழே இருக்கக்கூடாது.
08:11 Image settingகுகளை அப்படியே விட்டுவிடவும்
08:14 Time tabஐ க்ளிக் செய்யவும். இங்கு frame rate, 24 fps ஆக இருக்கவேண்டும்
08:20 இது சீரான animationஐ வழங்கும்.
08:24 நமது animation, 24ஆவது வினாடியில் முடிவதால், End Timeஐ 24க்கு மாற்றவும். Enter.ஐ அழுத்தவும்
08:31 கீழயுள்ள Render பட்டனை க்ளிக் செய்யவும். Outputஐ கொடுக்க இது சில வினாடிகள் எடுத்துக்கொள்ளலாம்
08:38 இப்போது, நான் எனது .gif file ஐ சேமித்து வைத்துள்ள Desktopக்கு செல்கிறேன்
08:44 Firefox அல்லது எந்த web browserஐயும் பயன்படுத்தி, நாம் animation ஐ play செய்யலாம்
08:48 இந்த animationஐ play செய்ய, உங்களுக்கு internet connection தேவையில்லை
08:54 இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
08:57 சுருங்கச் சொல்ல,
08:59 இந்த டுடோரியலில் Synfigன் interface பற்றி கற்றோம்
09:03 மேலும் பின்வருவனவற்றை கற்றோம்: அடிப்படை வடிவங்களை வரைந்து வண்ணத்தை நிரப்புவது
09:07 keyframeகள் மற்றும் waypointகளை சேர்ப்பது,
09:10 squash effectஉடன் கூடிய ball animationஐ செய்வது,
09:13 outputஐ gif format ல் கொடுப்பது.
09:16 உங்களுக்கான பயிற்சி. ஒரு சாய்ந்த பாதையில் ball animationஐ உருவாக்கவும்.
09:23 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி பார்ப்பதற்கு இப்படி இருக்க வேண்டும்
09:27 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
09:33 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி,
09:38 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
09:44 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும்.
09:49 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் வினாடியை தேர்வு செய்யவும்.
09:52 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவில் இருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்
09:58 ஸ்போகன் டுடோரியல் மன்றம், இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டுமே ஆகும்
10:02 தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம். இது குழப்பத்தை குறைக்க உதவும்.
10:08 குழப்பம் குறைந்தால், இந்த விவாதங்களை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம்
10:13 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
10:23 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree