Health-and-Nutrition/C2/Protein-rich-vegetarian-recipes/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:00 | protein நிறைந்த சைவ உணவுகள் குறித்த spoken tutorialக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: |
00:07 | proteinனின் பயன்கள் |
00:09 | protein நிறைந்த சில சைவ உணவுகள் |
00:13 | தசை, திசுக்களின் வளர்ச்சி, பழுது மற்றும் பராமரிப்புக்கு Protein உதவுகிறது. |
00:19 | இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் இது பொறுப்பாகும். |
00:24 | proteinனின் முக்கியத்துவம் மற்றொரு டுடோரியலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. |
00:30 | இந்த டுடோரியலுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். |
00:33 | proteinனின் சைவ பொருட்களை பற்றி பார்ப்போம் |
00:37 | பால் மற்றும் பால் பொருட்கள், |
00:39 | பருப்பு வகைகள், |
00:41 | கொட்டைகள் மற்றும் விதைகள் protein கள் நிறைந்தவை ஆகும். |
00:44 | இப்போது, protein நிறைந்த சில சைவ உணவு வகைகளைப் பார்ப்போம். |
00:49 | நமது முதல் உணவு பனீர் மசாலா ( காட்டேஜ் சீஸ் கறி) |
00:52 | இந்த உணவைச் செய்ய, உங்களுக்கு தேவையானவை: |
00:55 | 70 கிராம் அல்லது ½ கப் பனீர், |
00:58 | 70 கிராம் அல்லது ½ தயிர் கப், |
01:02 | 1 தேக்கரண்டி வறுத்த கடலை மாவு, |
01:06 | மேலும் உங்களுக்கு தேவையானவை: 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் |
01:11 | ½ தேக்கரண்டி மஞ்சள் தூள் |
01:15 | ½ தேக்கரண்டி கறிவேப்பிலை பொடி |
01:19 | ½ தேக்கரண்டி கரம் மசாலா தூள் |
01:22 | 1 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய் |
01:25 | மற்றும் தேவைக்கேற்ப உப்பு |
01:28 | செயல்முறை: மென்மையாகும் வரை ஒரு பாத்திரத்தில் தயிரை கலக்கவும். |
01:32 | மசாலா, உப்பு, கறிவேப்பிலை தூள் மற்றும் கடலை மாவை சேர்க்கவும். |
01:38 | எல்லாவற்றையும் மீண்டும் கலக்கவும். |
01:40 | இதனுடன் பனீர் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும். |
01:45 | கிண்ணத்தை ஒரு மூடியால் மூடி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். |
01:51 | ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கவும். |
01:54 | தயிர் கலவையுடன் பனீரை சேர்க்கவும். |
01:58 | இதில் ½ கிளாஸ் தண்ணீரை சேர்க்கவும். |
02:01 | கலவை கெட்டியாகும் வரை , இதை 2 முதல் 5 நிமிடங்கள் சமைக்கவும். |
02:07 | பனீர் மசாலா தயார். |
02:09 | ½ கிண்ணம் பனீர் மசாலாவில் 22 கிராம் protein உள்ளது. |
02:14 | அடுத்த உணவு பச்சை பயறு கூட்டு |
02:18 | இந்த உணவை செய்ய உங்களுக்கு தேவையானவை: |
02:21 | 100 கிராம் அல்லது 3/4 கப் தயிர் |
02:25 | 30 கிராம் அல்லது 1/4 கப் முளைகட்டிய பச்சை பயறு |
02:30 | ¼ கப் கழுவி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் |
02:35 | 4 தேக்கரண்டி கடலை மாவு |
02:38 | ½ தேக்கரண்டி மஞ்சள் தூள் |
02:41 | 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள். |
02:44 | மேலும் உங்களுக்கு தேவையானவை: ½ தேக்கரண்டி கடுகு, |
02:49 | ½ தேக்கரண்டி சீரகம், |
02:52 | 1 பச்சை மிளகாய், |
02:54 | 1 தேக்கரண்டி எண்ணெய், |
02:56 | 4 முதல் 5 கறிவேப்பிலை, |
02:59 | மற்றும் தேவைக்கேற்ப உப்பு |
03:02 | நான் இப்போது செயல்முறையை விளக்குகிறேன். |
03:04 | நாம் முதலில் முளைக்க வைப்பதில் இருந்து தொடங்குவோம். |
03:07 | பச்சை பயறை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும் |
03:11 | காலையில் அதை வடிகட்டி, |
03:13 | அவற்றை ஒரு சுத்தமான மஸ்லின் துணியில் கட்டவும். |
03:16 | முளைக்கட்டும் வரை 1 நாளைக்கு, அவற்றை ஒரு கதகதப்பான இடத்தில் வைக்கவும் |
03:23 | மிக்சியைப் பயன்படுத்தி முளைத்த பயறுகளையும், பச்சை மிளகாயையையும் ஒரு கெட்டியான விழுதாக அரைக்கவும் |
03:28 | மிக்சி கிடைக்கவில்லையெனில் ஒரு அம்மிக்கல்லை(uralai) பயன்படுத்தலாம் |
03:33 | இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும் |
03:36 | கொத்தமல்லி இலைகள், 2 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். |
03:43 | பேஸ்டை சிறு உருண்டைகளாக பிடித்து |
03:45 | அவற்றை ஒரு இட்லித்தட்டில் வைக்கவும் |
03:48 | 6 முதல் 8 நிமிடங்கள் வரை இட்லி பானையில் இவற்றை வேக வைக்கவும். |
03:53 | அவற்றை ஆற விடவும் |
03:56 | தயிர் குழம்பை தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் தயிரை நன்கு கலக்கவும். |
03:59 | 2 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் மசாலாவை சேர்க்கவும் |
04:04 | எல்லாவற்றையும் சேர்க்க நன்றாக கலக்கவும். |
04:08 | 1 கப் தண்ணீர் சேர்த்து, மீண்டும் கலந்து இந்த கலவையை ஒரு ஓரமாக வைக்கவும். |
04:13 | ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி கடுகு மற்றும் சீரகத்தை சேர்க்கவும். |
04:18 | அவை வெடிக்க ஆரம்பித்ததும், கறிவேப்பிலை மற்றும் தயிர் கலவையைச் சேர்க்கவும். |
04:23 | இதை ஒரு நடுத்தர தீயில் சமைக்கவும். |
04:26 | கலவை கெட்டியாகத் தொடங்கும் வரை இடையிடையே கிளறிக்கொண்டே இருக்கவும் |
04:30 | கலவை கெட்டியானதும் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து 1 நிமிடம் சமைக்கவும். |
04:36 | பச்சை பயறு கூட்டு தயார் |
04:39 | இந்த கூட்டின் அரை கிண்ணத்தில் சுமார் 17 கிராம் protein உள்ளது. |
04:44 | மூன்றாவது உணவு எள் கலந்த சோளம் மற்றும் சோயா தோசை ஆகும். |
04:50 | இந்த உணவை செய்ய உங்களுக்கு தேவையானவை: |
04:53 | சோயா பீன் ஒன்றரை மேசைக்கரண்டி, |
04:57 | சோளம் 2 தேக்கரண்டி, |
04:59 | உடைத்த உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி, |
05:02 | மற்றும் 1 தேக்கரண்டி வெந்தயம். |
05:06 | எள் கலவையை தயாரிக்க உங்களுக்கு தேவையானவை: |
05:09 | 2 தேக்கரண்டி பொட்டுக்கடலை |
05:12 | 2 டீஸ்பூன் உடைத்த உளுத்தம் பருப்பு, |
05:15 | 2 தேக்கரண்டி எள், |
05:18 | 2 காய்ந்த சிவப்பு மிளகாய், |
05:21 | 1 குச்சி கறிவேப்பிலை, |
05:23 | மற்றும் தேவைக்கேற்ப உப்பு |
05:25 | உங்களுக்கு 1 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய் தேவைப்படும். |
05:30 | செய்முறை: சோளம், |
05:32 | உடைத்த உளுத்தம் பருப்பு |
05:34 | மற்றும் சோயா பீன்ஸை கழுவி, அவற்றை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். |
05:39 | வெந்தயத்தையும் அதே பாத்திரத்தில் ஊற வைக்கவும். |
05:43 | 8 மணி நேரம் கழித்து, அவற்றை மென்மையான பேஸ்டாக அரைக்கவும். |
05:47 | இதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். |
05:50 | இந்த கிண்ணத்தை 7 முதல் 8 மணி நேரம் நொதிப்பதற்கு ஒரு கதகதப்பான இடத்தில் வைக்கவும். |
05:57 | இதற்கிடையில், ஒரு வாணலியை சூடாக்கி, உலர்ந்த வறுத்த சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை மொறு மொறுப்பாகும் வரை வதக்கவும் . |
06:04 | அதை ஆற விடவும் |
06:06 | அதே வாணலியில், பொட்டுக்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும் எள் ஆகியவற்றை வறுக்கவும். |
06:12 | வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை அவற்றை வறுக்கவும். |
06:17 | அவற்றை ஆற விடவும் |
06:20 | ஆறியதும், அவற்றை நன்கு பொடியாக அரைக்கவும் |
06:23 | இதை பின்னர் நாம் பயன்படுத்துவோம். |
06:25 | மாவு பொங்கியவுடன், அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். |
06:30 | ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கி, மாவை ஊற்றி தோசையாக இடவும் . |
06:36 | தோசை ஓரளவு வெந்ததும், தயாரிக்கப்பட்ட பொடியை 2 தேக்கரண்டி சேர்க்கவும். |
06:42 | தோசை வேகும் வரை ஒரு மூடியால் மூடி வைக்கவும். |
06:45 | சோளம் மற்றும் சோயா தோசை தயார். |
06:48 | 2 தோசைகளில் சுமார் 17 கிராம் protein உள்ளது |
06:53 | அடுத்த உணவு, கொண்டக்கடலை கட்லெட்டுகள் |
06:57 | இந்த உணவு செய்ய உங்களுக்கு தேவையானவை: |
07:00 | 50 கிராம் முளைகட்டிய கொண்டைக்கடலை, |
07:03 | 40 கிராம் அல்லது ஒன்றரை மேசைக்கரண்டி தயிர், |
07:08 | 1 சிறிய துருவிய கேரட், |
07:10 | பொடியாக நறுக்கிய 1 சிறிய வெங்காயம் |
07:14 | 15 கிராம் அல்லது 1 தேக்கரண்டி வறுத்த கடலை மாவு, |
07:18 | மற்றும் 20 கிராம் எள். |
07:22 | மேலும் உங்களுக்கு தேவையானவை: |
07:24 | ½ டீஸ்பூன் (thekarandi) மஞ்சள் தூள், |
07:27 | 1 தேக்கரண்டி மிளகாய் தூள், |
07:31 | 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, |
07:34 | 2 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய், |
07:37 | மற்றும் தேவைக்கேற்ப உப்பு |
07:40 | செயல்முறை: முளைத்த கொண்டைக்கடலைகளை 3 விசில் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும் |
07:45 | அழுத்தம் வெளிப்படும் வரை அதை ஓரமாக வைக்கவும். |
07:49 | ஆறிய முளைகட்டிய கொண்டைக்கடலைகளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, அதை நன்கு மசிக்கவும் |
07:54 | இதில் வெங்காயம், கேரட் மற்றும் வறுத்த கடலை மாவு சேர்த்து நன்கு கலக்கவும். |
08:01 | இப்போது, மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிரை சேர்க்கவும். |
08:07 | அனைத்து பொருட்களையும் கலந்து அதை 4 உருண்டைகளாக பிடிக்கவும் |
08:12 | அந்த உருண்டைகளை கட்லட்டுகளாக தட்டவும். |
08:14 | இந்த கட்லெட்களை எள்ளில் புரட்டி எடுத்து, ஒரு ஓரமாக வைக்கவும். |
08:19 | ஒரு தவாவில் எண்ணெய் அல்லது நெய் சூடாக்கவும். |
08:22 | கட்லெட்டுகளை இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். |
08:28 | கொண்டைக்கடலை கட்லெட்டுகள் தயாராகி விட்டன |
08:31 | 4 கட்லெட்டுகளில் 17 கிராம் protein உள்ளது. |
08:35 | தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் முழுமையற்ற proteinகளை கொண்டுள்ளன. |
08:39 | பருப்பு வகைகளில் methionine குறைவாக உள்ளன |
08:42 | மற்றும் தானியங்களில் lysine குறைவாக உள்ளன. |
08:45 | எனவே, இந்த உணவு வகைகளைத் தயாரிக்க வெவ்வேறு உணவுக் குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. |
08:51 | அவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உணவில் குறைவாக உள்ள amino acid களை ஈடுசெய்யும். |
08:57 | இது protein.னின் கூடுதல் செய்கை என்று அழைக்கப்படுகிறது. |
09:01 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி |