Moodle-Learning-Management-System/C2/Quiz-in-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:01, 27 May 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle.லில், Quiz குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Moodle.லில் ஒரு Quizஐ எப்படி உருவாக்குவது மற்றும் Question bankலிருந்து கேள்விகளை Quizல் எப்படி பயன்படுத்துவது.
00:16 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04, XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, Moodle 3.3 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:40 எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
00:48 உங்கள் site administrator, உங்களை ஒரு teacher.ஆக பதிவு செய்துள்ளதாகவும், குறைந்தபட்சம் ஒரு course ஐ உங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது.
00:59 மேலும், உங்கள் க்கு, லிருந்து சில கேள்விகளை நீங்கள் சேர்த்துள்ளதாகவும் அது அனுமானித்து கொள்கிறது. இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கானMoodle டுடோரியல்களை பார்க்கவும்.
01:12 Browserக்கு மாறி, உங்கள் moodle site.இனுள் login செய்யவும்.
01:18 இடது navigation menu.வில் உள்ள, Calculus course ஐ க்ளிக் செய்யவும்.
01:22 மேல் வலது பக்கத்தில் உள்ள gear icon ஐ முதலில் க்ளிக் செய்து, பின் Turn Editing Onஐ க்ளிக் செய்யவும்.
01:29 Basic Calculus பிரிவின் கீழ் வலது பக்கத்தில் உள்ள Add an activity or resource இணைப்பை க்ளிக் செய்யவும்.
01:37 கீழே scroll செய்து, activity chooserல், Quizஐ தேர்ந்தெடுக்கவும்.
01:42 activity chooserன் கீழ் உள்ள Add button ஐ க்ளிக் செய்யவும்.
01:47 Name fieldல் நான், Quiz 1 - Evolutes and involutes. என டைப் செய்கிறேன்.
01:54 பின், Description fieldல் காட்டப்பட்டுள்ளபடி textஐ நான் டைப் செய்கிறேன்.
02:00 Display description on course page checkboxஐ check செய்யவும். இதற்குப் பின், நாம் Timing பிரிவை விரிவாக்குவோம்.
02:09 பின், Open the quiz, Close the quiz மற்றும் Time limitக்கான check-boxகளை enable செய்வோம்.
02:17 கொடுக்கப்பட்ட தேதிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட கால நேரத்திற்கு, இது quizஐ திறந்து மற்றும் மூடி வைக்கும்.
02:25 உங்கள் தேவைகளுக்கேற்றவாறு, தேதிகள் மற்றும் நேரத்தை set செய்யவும். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, அவைகளை நான் set செய்துள்ளேன்.
02:32 பின், நான் கால வரம்பை 10 நிமிடங்களுக்கு set செய்கிறேன்.
02:37 When time expires field, 3 தேர்வுகளை கொண்டிருக்கிறது. உங்கள் quizக்கு தகுந்த ஒன்றை தேர்வு செய்யவும்.
02:47 நான் Open attempts are submitted automaticallyஐ தேர்வு செய்கிறேன். அதனால், மாணவர் சமர்ப்பிக்க தவறினாலும், quiz தானாகவே 10 நிமிடங்களுக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும்.
03:01 இப்போது, Grade பிரிவை விரிவாக்குவோம்.
03:05 Grade to pass fieldல், passing gradeக்கு 2 என நான் டைப் செய்கிறேன். இதன் பொருள், quizல் வெற்றிபெற, மாணவர் குறைந்தபட்சம்2 மதிப்பெண்களை பெற வேண்டும்.
03:18 Attempts allowed fieldல் நான் 1ஐ தேர்ந்தெடுக்கிறேன். நாம் ஒரு பெரிய எண்ணை தேர்வு செய்தால், மாணவர் அதே quizஐ , அதே எண்ணிக்கை அளவு முயற்சிக்கலாம்.
03:32 Grading method dropdown, disableஆகியிருப்பதை கவனிக்கவும்.
03:37 ஒன்றுக்கும் மேற்பட்ட முயற்சிகள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, இது enable செய்யப்படுகிறது. எந்த முயற்சியை கிரேடு செய்யவேண்டும் என்பதை பின்னர், ஆசிரியர் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
03:47 இப்போது, Layout பிரிவை விரிவாக்கவும். இங்கு, quizன் layoutஐ குறிப்பிட தேர்வுகள் உள்ளன.
03:56 முன்னிருப்பாக, New page field dropdownல், Every question தேர்வு தேர்ந்தெடுக்கப்படுகிறது.
04:04 எல்லா தேர்வுகளையும் காண, New page field dropdownஐ க்ளிக் செய்யவும்.
04:09 நான் Every 2 questions தேர்வை தேர்ந்தெடுக்கிறேன். உங்களுக்கு விருப்பமான எந்த தேர்வையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
04:17 அடுத்து நாம், Question behaviour பிரிவை விரிவாக்குவோம்.
04:22 Shuffle within questions dropdownக்கு, Yesஐ தேர்வு செய்யவும்.
04:27 அப்படிச் செய்தால், ஒவ்வொரு கேள்வியினுள்ளும் உள்ள எல்லா தேர்வுகளும் மாற்றியமைக்கப்படும்.
04:33 அதனால், ஒவ்வொரு மாணவரும், தங்கள் quizல், கேள்விகள் மற்றும் தேர்வுகளின் ஒரு வேறுபட்ட அமைப்பை பார்ப்பார்கள்.
04:40 How questions behave dropdownக்கான help icon ஐ க்ளிக் செய்து, விவரங்களை படிக்கவும்.
04:47 இங்கு, Deferred feedbackஐ நான் தேர்வாக வைக்கிறேன். அதனால், அவர்களின் முயற்சி சமர்ப்பிக்கப்பட்ட பிறகு மட்டுமே, எனது மாணவர்கள் feedbackஐ பார்ப்பார்கள்.
04:57 அடுத்து, Overall feedback பிரிவை விரிவாக்க, அதை க்ளிக் செய்யவும்.
05:02 Quiz சமர்ப்பிக்கப்பட்டு, தானாகவே கிரேடு செய்யப்பட்ட பிறகு, மாணவர்களுக்கு காட்டப்படுகின்ற text, Overall feedback ஆகும்.
05:10 மாணவர் பெற்றுள்ள gradeன் அடிப்படையில், ஆசிரியர்கள் வெவ்வேறு feedbackஐ கொடுக்கலாம்.
05:17 grade boundary 100%.க்கு, feedbackகாக, நான் Excellent performance என டைப் செய்கிறேன்.
05:25 50% மற்றும் 100%க்கு இடையே மதிப்பெண் பெரும் மாணவர்கள், "Excellent performance" செய்தியை பார்ப்பார்கள்.
05:33 மற்றும் grade boundary 50%.க்கு, feedbackகாக, You need to work harder என டைப் செய்கிறேன்.
05:40 0% மற்றும் 49.99%க்கு இடையே மதிப்பெண் பெரும் மாணவர்கள், "You need to work harder" செய்தியை பார்ப்பார்கள்.
05:49 இப்போது, கீழே scroll செய்து, Activity completion பிரிவை க்ளிக் செய்யவும்.
05:54 Completion Tracking fieldக்கு, dropdown ஐ க்ளிக் செய்யவும். Show activity as complete when conditions are met. தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
06:05 Require grade மற்றும்Require passing gradeக்கான checkboxகளை check செய்யவும்.
06:13 இறுதியாக, பக்கத்தின் கீழுள்ள Save and display பட்டனை க்ளிக் செய்யவும்.
06:20 நாம் கொடுத்த quiz தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கத்திற்கு நாம் கொண்டுவரப்படுகிறோம். முன்பு கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும், இங்கு காட்டப்பட்டுள்ளனவா என்று படித்து சரிபார்த்துக்கொள்ளவும்.
06:31 இங்கு ஒரு செய்தி, முக்கியமாக காட்டப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்- No questions have been added yet.
06:38 quizக்கு கேள்விகளை சேர்க்க, Edit quiz பட்டனை க்ளிக் செய்யவும்.
06:44 மேல் வலது பக்கத்தில் உள்ள Maximum grade ல், 4 என டைப் செய்யவும்.
06:50 quiz பிரிவின் இடது பக்கத்தில் உள்ள pencil icon, இந்த quizன் தலைப்பை edit செய்ய அனுமதிக்கிறது. quiz பல பிரிவுகளை கொண்டிருக்கும் போது, இது பயன்படுகிறது.
07:03 நான் Section 1 என எழுதி, பின் Enterஐ அழுத்துகிறேன்.
07:08 பின், வலது பக்கத்தில் உள்ள Shuffle checkboxஐ check செய்யவும். ஒவ்வொரு முறை quiz முயற்சிக்கப்படும் போது, கேள்விகளை மாற்றியமைக்க, இது உறுதிப்படுத்துகிறது.
07:20 Shuffle checkboxக்கு கீழே உள்ள Add இணைப்பை க்ளிக் செய்யவும்.
07:25 இங்கு 3 தேர்வுகள் உள்ளன: a new question, from question bank, a random question
07:34 பெயருக்கேற்றார் போல், a new question இணைப்பு, ஒரு புதிய கேள்வியை சேர்க்க enable செய்கிறது. அதனால் நான் இந்த தேர்வை, தேர்ந்தெடுக்கப்போவதில்லை.
07:44 from question bank இணைப்பை க்ளிக் செய்யவும்.
07:48 ஒரு pop-up window திறக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு குறிப்பிட்ட கேள்விகளின் தொகுப்பு வேண்டுமெனில், இந்த தேர்வு பயன்படுத்தப்படுகிறது.
07:58 தேர்ந்தெடுக்கப்பட்ட category, அந்த courseக்கான முன்னிருப்பான categoryயாக இருக்கும்.
08:04 Also show questions from subcategories தேர்வு, முன்னிருப்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
08:12 Also show old questions, முந்தைய quizகளில் பயன்படுத்தப்பட்ட கேள்விகளை காட்டுகிறது.
08:19 நான் இப்போது செய்து கொண்டிருப்பது போல், நீங்கள் சேர்க்க விரும்புகின்ற கேள்விகளை தேர்ந்தெடுக்கலாம். பின் கீழுள்ள, Add selected questions to the quiz பட்டனை க்ளிக் செய்யவும்.
08:32 எனினும், அதை நான் செய்யப்போவதில்லை. மேல் வலது பக்கத்தில் உள்ள, X iconஐ க்ளிக் செய்து நான் இந்த windowவை மூடுகிறேன்.
08:40 Shuffleக்கு கீழே உள்ள, Add இணைப்பை மீண்டும் க்ளிக் செய்யவும். a random question இணைப்பை க்ளிக் செய்யவும். மற்றொரு pop-up window திறக்கிறது.
08:51 இந்த தேர்வினால், ஒவ்வொரு மாணவருக்கும், கேள்விகளின் வெவ்வேறு தொகுப்பு தெரியும். மேலும், quizஐ எடுத்துக்கொள்ளும் போது, பதில்களை பற்றி விவாதிக்க கடினமாக இருக்கும்.
09:03 Random question from an existing categoryன் கீழ், நான் categoryக்கு, Evolutesஐ தேர்ந்தெடுக்கிறேன்.
09:11 Number of random questionsல், நான் 2ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
09:16 பின், இந்த dropdown னின் கீழ் உள்ள, Add random question பட்டனை க்ளிக் செய்யவும்.
09:23 Evolutes categoryயிலிருந்து, 2 தொடர்பின்றி எடுக்கப்பட்ட கேள்விகள், இந்த quizக்கு சேர்க்கப்பட்டுள்ளன.
09:29 மீண்டும், கீழ் வலது பக்கத்தில் உள்ள Add இணைப்பை க்ளிக் செய்யவும்.
09:34 a random question இணைப்பை க்ளிக் செய்யவும். categoryக்கு, Involutesஐயும் , Number of random questionsக்கு, 2ஐயும் தேர்ந்தெடுக்கவும்.
09:44 பின், Add random question பட்டனை க்ளிக் செய்யவும்.
09:48 Involutesயிலிருந்து, மேலும் 2 கேள்விகள் இந்த quizக்கு சேர்க்கப்பட்டுள்ளன.
09:55 quiz தானாகவே, 2 பக்கங்களாக பிரிக்கப்படுவதை கவனிக்கவும். இது ஏனெனில், நாம் Quiz Settingsல், இந்த தேர்வை முன்பே கொடுத்துள்ளோம்.
10:07 வலது முனைக்கோடியில், இரண்டாவது கேள்விக்கு கீழுள்ள, add இணைப்பை க்ளிக் செய்யவும்.
10:13 a new section heading இணைப்பை க்ளிக் செய்யவும்.
10:18 headingன் பெயரை edit செய்ய, pencil icon ஐ க்ளிக் செய்யவும்.
10:23 நான் Section 2 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்துகிறேன்.
10:27 quizஐ சேமிக்க, மேல் வலது பக்கத்தில் உள்ள Save buttonஐ க்ளிக் செய்யவும்.
10:32 ஒவ்வொருquiz கேள்வியின் வலது பக்கத்திலும், 2 iconகள் உள்ளன: Preview question மற்றும்Delete. இவை, சுய விளக்கம் கொண்டவையாகும்.
10:43 Delete question என்பது, quizல் இருந்து இந்த கேள்வியை நீக்கும். ஆனால், question bankல் கேள்வி இருக்கும்.
10:51 breadcrumbsல், quizன் பெயரை க்ளிக் செய்யவும்.
10:56 வலது பக்கத்தில், gear menuவில் உள்ள, Preview quiz பட்டனை க்ளிக் செய்யவும்.
11:02 இது ஒரு confirmation window வை திறக்கிறது. quiz, கால வரம்புடையது எனவும், அவர்களுக்குStart அல்லதுCancel செய்வதற்கான தேர்வு இருப்பதையும், இது மாணவர்களுக்கு தெரிவிக்கிறது.
11:14 நான் Start attempt பட்டனை க்ளிக் செய்கிறேன்.
11:18 திரையின் வலது பக்கத்தில், Quiz navigation block உள்ளது.
11:23 பிரிவு வாரியாக, மற்றும் நேரங்கணிப்பியுடன் இது கேள்விகளை காட்டுகிறது.
11:29 இந்த fieldல் இருந்து, நேரடியாக கேள்வியை edit செய்வதற்கான தேர்வும் உள்ளது.
11:35 navigation blockல் உள்ள, Finish attempt இணைப்பை நான் க்ளிக் செய்கிறேன்.
11:40 ஒவ்வொரு கேள்வியின் நிலையும், அதன் பெயருக்கு பக்கத்தில் காட்டப்படுகிறது.
11:45 பக்கத்தின் கீழுள்ள, Submit all and finish பட்டனை க்ளிக் செய்யவும்.
11:51 confirmation pop-upல், மீண்டும் Submit all and finish பட்டனை க்ளிக் செய்யவும்.
11:58 grade, overall feedback மற்றும் கேள்விக்குரிய feedback அனைத்தும், இங்கு காட்டப்படுகின்றன என்பதை கவனிக்கவும்.
12:06 கீழே scroll செய்து, Finish review இணைப்பை க்ளிக் செய்யவும்.
12:11 நாம் Quiz summary பக்கத்திற்கு திரும்புகிறோம்.
12:15 மேல் வலது பக்கத்தில் உள்ள gear iconஐ க்ளிக் செய்யவும். Edit quiz இணைப்பை க்ளிக் செய்யவும். quizல் இருந்து, நீங்கள் கேள்விகளை சேர்க்க அல்லது நீக்க முடியும்.
12:28 எனினும், எந்த மாணவரும் quizஐ முயற்சிக்கும் முன்பு மட்டுமே இதைச் செய்ய முடியும்.
12:35 ஏதேனும் ஒரு மாணவர் quizஐ எடுத்துக்கொண்டாலும், quiz பூட்டப்பட்டுவிடும். எனினும், தேவைக்கேற்றவாறு கேள்விகளை, edit செய்யலாம் அல்லது சேர்க்கலாம்.
12:47 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
12:53 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Moodle.லில் ஒரு Quizஐ எப்படி உருவாக்குவது மற்றும் Question bankலிருந்து கேள்விகளை Quizல் எப்படி பயன்படுத்துவது.
13:03 உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி: Evolutesக்கு, ஒரு புதிய quizஐ சேர்க்கவும். விவரங்களுக்கு, இந்த டுடோரியலின்Assignment இணைப்பை பார்க்கவும்.
13:16 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
13:25 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
13:34 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
13:38 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
13:52 இந்த ஸ்கிரிப்ட், ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே.
14:03 கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree