Moodle-Learning-Management-System/C2/Quiz-in-Moodle/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Moodle.லில், Quiz குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Moodle.லில் ஒரு Quizஐ எப்படி உருவாக்குவது மற்றும் Question bankலிருந்து கேள்விகளை Quizல் எப்படி பயன்படுத்துவது. |
00:16 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04, XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, Moodle 3.3 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:40 | எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும். |
00:48 | உங்கள் site administrator, உங்களை ஒரு teacher.ஆக பதிவு செய்துள்ளதாகவும், குறைந்தபட்சம் ஒரு course ஐ உங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது. |
00:59 | மேலும், உங்கள் courseக்கு, question bankலிருந்து சில கேள்விகளை நீங்கள் சேர்த்துள்ளதாகவும் அது அனுமானித்து கொள்கிறது. இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கானMoodle டுடோரியல்களை பார்க்கவும். |
01:12 | Browserக்கு மாறி, உங்கள் moodle site.இனுள் login செய்யவும். |
01:18 | இடது navigation menu.வில் உள்ள, Calculus course ஐ க்ளிக் செய்யவும். |
01:22 | மேல் வலது பக்கத்தில் உள்ள gear icon ஐ முதலில் க்ளிக் செய்து, பின் Turn Editing Onஐ க்ளிக் செய்யவும். |
01:29 | Basic Calculus பிரிவின் கீழ் வலது பக்கத்தில் உள்ள Add an activity or resource இணைப்பை க்ளிக் செய்யவும். |
01:37 | கீழே scroll செய்து, activity chooserல், Quizஐ தேர்ந்தெடுக்கவும். |
01:42 | activity chooserன் கீழ் உள்ள Add button ஐ க்ளிக் செய்யவும். |
01:47 | Name fieldல் நான், Quiz 1 - Evolutes and involutes. என டைப் செய்கிறேன். |
01:54 | பின், Description fieldல் காட்டப்பட்டுள்ளபடி textஐ நான் டைப் செய்கிறேன். |
02:00 | Display description on course page checkboxஐ check செய்யவும். இதற்குப் பின், நாம் Timing பிரிவை விரிவாக்குவோம். |
02:09 | பின், Open the quiz, Close the quiz மற்றும் Time limitக்கான check-boxகளை enable செய்வோம். |
02:17 | கொடுக்கப்பட்ட தேதிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட கால நேரத்திற்கு, இது quizஐ திறந்து மற்றும் மூடி வைக்கும். |
02:25 | உங்கள் தேவைகளுக்கேற்றவாறு, தேதிகள் மற்றும் நேரத்தை set செய்யவும். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, அவைகளை நான் set செய்துள்ளேன். |
02:32 | பின், நான் கால வரம்பை 10 நிமிடங்களுக்கு set செய்கிறேன். |
02:37 | When time expires field, 3 தேர்வுகளை கொண்டிருக்கிறது. உங்கள் quizக்கு தகுந்த ஒன்றை தேர்வு செய்யவும். |
02:47 | நான் Open attempts are submitted automaticallyஐ தேர்வு செய்கிறேன். அதனால், மாணவர் சமர்ப்பிக்க தவறினாலும், quiz தானாகவே 10 நிமிடங்களுக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும். |
03:01 | இப்போது, Grade பிரிவை விரிவாக்குவோம். |
03:05 | Grade to pass fieldல், passing gradeக்கு 2 என நான் டைப் செய்கிறேன். இதன் பொருள், quizல் வெற்றிபெற, மாணவர் குறைந்தபட்சம்2 மதிப்பெண்களை பெற வேண்டும். |
03:18 | Attempts allowed fieldல் நான் 1ஐ தேர்ந்தெடுக்கிறேன். நாம் ஒரு பெரிய எண்ணை தேர்வு செய்தால், மாணவர் அதே quizஐ , அதே எண்ணிக்கை அளவு முயற்சிக்கலாம். |
03:32 | Grading method dropdown, disableஆகியிருப்பதை கவனிக்கவும். |
03:37 | ஒன்றுக்கும் மேற்பட்ட முயற்சிகள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, இது enable செய்யப்படுகிறது. எந்த முயற்சியை கிரேடு செய்யவேண்டும் என்பதை பின்னர், ஆசிரியர் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். |
03:47 | இப்போது, Layout பிரிவை விரிவாக்கவும். இங்கு, quizன் layoutஐ குறிப்பிட தேர்வுகள் உள்ளன. |
03:56 | முன்னிருப்பாக, New page field dropdownல், Every question தேர்வு தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
04:04 | எல்லா தேர்வுகளையும் காண, New page field dropdownஐ க்ளிக் செய்யவும். |
04:09 | நான் Every 2 questions தேர்வை தேர்ந்தெடுக்கிறேன். உங்களுக்கு விருப்பமான எந்த தேர்வையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
04:17 | அடுத்து நாம், Question behaviour பிரிவை விரிவாக்குவோம். |
04:22 | Shuffle within questions dropdownக்கு, Yesஐ தேர்வு செய்யவும். |
04:27 | அப்படிச் செய்தால், ஒவ்வொரு கேள்வியினுள்ளும் உள்ள எல்லா தேர்வுகளும் மாற்றியமைக்கப்படும். |
04:33 | அதனால், ஒவ்வொரு மாணவரும், தங்கள் quizல், கேள்விகள் மற்றும் தேர்வுகளின் ஒரு வேறுபட்ட அமைப்பை பார்ப்பார்கள். |
04:40 | How questions behave dropdownக்கான help icon ஐ க்ளிக் செய்து, விவரங்களை படிக்கவும். |
04:47 | இங்கு, Deferred feedbackஐ நான் தேர்வாக வைக்கிறேன். அதனால், அவர்களின் முயற்சி சமர்ப்பிக்கப்பட்ட பிறகு மட்டுமே, எனது மாணவர்கள் feedbackஐ பார்ப்பார்கள். |
04:57 | அடுத்து, Overall feedback பிரிவை விரிவாக்க, அதை க்ளிக் செய்யவும். |
05:02 | Quiz சமர்ப்பிக்கப்பட்டு, தானாகவே கிரேடு செய்யப்பட்ட பிறகு, மாணவர்களுக்கு காட்டப்படுகின்ற text, Overall feedback ஆகும். |
05:10 | மாணவர் பெற்றுள்ள gradeன் அடிப்படையில், ஆசிரியர்கள் வெவ்வேறு feedbackஐ கொடுக்கலாம். |
05:17 | grade boundary 100%.க்கு, feedbackகாக, நான் Excellent performance என டைப் செய்கிறேன். |
05:25 | 50% மற்றும் 100%க்கு இடையே மதிப்பெண் பெரும் மாணவர்கள், "Excellent performance" செய்தியை பார்ப்பார்கள். |
05:33 | மற்றும் grade boundary 50%.க்கு, feedbackகாக, You need to work harder என டைப் செய்கிறேன். |
05:40 | 0% மற்றும் 49.99%க்கு இடையே மதிப்பெண் பெரும் மாணவர்கள், "You need to work harder" செய்தியை பார்ப்பார்கள். |
05:49 | இப்போது, கீழே scroll செய்து, Activity completion பிரிவை க்ளிக் செய்யவும். |
05:54 | Completion Tracking fieldக்கு, dropdown ஐ க்ளிக் செய்யவும். Show activity as complete when conditions are met. தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
06:05 | Require grade மற்றும்Require passing gradeக்கான checkboxகளை check செய்யவும். |
06:13 | இறுதியாக, பக்கத்தின் கீழுள்ள Save and display பட்டனை க்ளிக் செய்யவும். |
06:20 | நாம் கொடுத்த quiz தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கத்திற்கு நாம் கொண்டுவரப்படுகிறோம். முன்பு கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும், இங்கு காட்டப்பட்டுள்ளனவா என்று படித்து சரிபார்த்துக்கொள்ளவும். |
06:31 | இங்கு ஒரு செய்தி, முக்கியமாக காட்டப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்- No questions have been added yet. |
06:38 | quizக்கு கேள்விகளை சேர்க்க, Edit quiz பட்டனை க்ளிக் செய்யவும். |
06:44 | மேல் வலது பக்கத்தில் உள்ள Maximum grade ல், 4 என டைப் செய்யவும். |
06:50 | quiz பிரிவின் இடது பக்கத்தில் உள்ள pencil icon, இந்த quizன் தலைப்பை edit செய்ய அனுமதிக்கிறது. quiz பல பிரிவுகளை கொண்டிருக்கும் போது, இது பயன்படுகிறது. |
07:03 | நான் Section 1 என எழுதி, பின் Enterஐ அழுத்துகிறேன். |
07:08 | பின், வலது பக்கத்தில் உள்ள Shuffle checkboxஐ check செய்யவும். ஒவ்வொரு முறை quiz முயற்சிக்கப்படும் போது, கேள்விகளை மாற்றியமைக்க, இது உறுதிப்படுத்துகிறது. |
07:20 | Shuffle checkboxக்கு கீழே உள்ள Add இணைப்பை க்ளிக் செய்யவும். |
07:25 | இங்கு 3 தேர்வுகள் உள்ளன: a new question, from question bank, a random question |
07:34 | பெயருக்கேற்றார் போல், a new question இணைப்பு, ஒரு புதிய கேள்வியை சேர்க்க enable செய்கிறது. அதனால் நான் இந்த தேர்வை, தேர்ந்தெடுக்கப்போவதில்லை. |
07:44 | from question bank இணைப்பை க்ளிக் செய்யவும். |
07:48 | ஒரு pop-up window திறக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு குறிப்பிட்ட கேள்விகளின் தொகுப்பு வேண்டுமெனில், இந்த தேர்வு பயன்படுத்தப்படுகிறது. |
07:58 | தேர்ந்தெடுக்கப்பட்ட category, அந்த courseக்கான முன்னிருப்பான categoryயாக இருக்கும். |
08:04 | Also show questions from subcategories தேர்வு, முன்னிருப்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
08:12 | Also show old questions, முந்தைய quizகளில் பயன்படுத்தப்பட்ட கேள்விகளை காட்டுகிறது. |
08:19 | நான் இப்போது செய்து கொண்டிருப்பது போல், நீங்கள் சேர்க்க விரும்புகின்ற கேள்விகளை தேர்ந்தெடுக்கலாம். பின் கீழுள்ள, Add selected questions to the quiz பட்டனை க்ளிக் செய்யவும். |
08:32 | எனினும், அதை நான் செய்யப்போவதில்லை. மேல் வலது பக்கத்தில் உள்ள, X iconஐ க்ளிக் செய்து நான் இந்த windowவை மூடுகிறேன். |
08:40 | Shuffleக்கு கீழே உள்ள, Add இணைப்பை மீண்டும் க்ளிக் செய்யவும். a random question இணைப்பை க்ளிக் செய்யவும். மற்றொரு pop-up window திறக்கிறது. |
08:51 | இந்த தேர்வினால், ஒவ்வொரு மாணவருக்கும், கேள்விகளின் வெவ்வேறு தொகுப்பு தெரியும். மேலும், quizஐ எடுத்துக்கொள்ளும் போது, பதில்களை பற்றி விவாதிக்க கடினமாக இருக்கும். |
09:03 | Random question from an existing categoryன் கீழ், நான் categoryக்கு, Evolutesஐ தேர்ந்தெடுக்கிறேன். |
09:11 | Number of random questionsல், நான் 2ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
09:16 | பின், இந்த dropdown னின் கீழ் உள்ள, Add random question பட்டனை க்ளிக் செய்யவும். |
09:23 | Evolutes categoryயிலிருந்து, 2 தொடர்பின்றி எடுக்கப்பட்ட கேள்விகள், இந்த quizக்கு சேர்க்கப்பட்டுள்ளன. |
09:29 | மீண்டும், கீழ் வலது பக்கத்தில் உள்ள Add இணைப்பை க்ளிக் செய்யவும். |
09:34 | a random question இணைப்பை க்ளிக் செய்யவும். categoryக்கு, Involutesஐயும் , Number of random questionsக்கு, 2ஐயும் தேர்ந்தெடுக்கவும். |
09:44 | பின், Add random question பட்டனை க்ளிக் செய்யவும். |
09:48 | Involutesயிலிருந்து, மேலும் 2 கேள்விகள் இந்த quizக்கு சேர்க்கப்பட்டுள்ளன. |
09:55 | quiz தானாகவே, 2 பக்கங்களாக பிரிக்கப்படுவதை கவனிக்கவும். இது ஏனெனில், நாம் Quiz Settingsல், இந்த தேர்வை முன்பே கொடுத்துள்ளோம். |
10:07 | வலது முனைக்கோடியில், இரண்டாவது கேள்விக்கு கீழுள்ள, add இணைப்பை க்ளிக் செய்யவும். |
10:13 | a new section heading இணைப்பை க்ளிக் செய்யவும். |
10:18 | headingன் பெயரை edit செய்ய, pencil icon ஐ க்ளிக் செய்யவும். |
10:23 | நான் Section 2 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்துகிறேன். |
10:27 | quizஐ சேமிக்க, மேல் வலது பக்கத்தில் உள்ள Save buttonஐ க்ளிக் செய்யவும். |
10:32 | ஒவ்வொருquiz கேள்வியின் வலது பக்கத்திலும், 2 iconகள் உள்ளன: Preview question மற்றும்Delete. இவை, சுய விளக்கம் கொண்டவையாகும். |
10:43 | Delete question என்பது, quizல் இருந்து இந்த கேள்வியை நீக்கும். ஆனால், question bankல் கேள்வி இருக்கும். |
10:51 | breadcrumbsல், quizன் பெயரை க்ளிக் செய்யவும். |
10:56 | வலது பக்கத்தில், gear menuவில் உள்ள, Preview quiz பட்டனை க்ளிக் செய்யவும். |
11:02 | இது ஒரு confirmation window வை திறக்கிறது. quiz, கால வரம்புடையது எனவும், அவர்களுக்குStart அல்லதுCancel செய்வதற்கான தேர்வு இருப்பதையும், இது மாணவர்களுக்கு தெரிவிக்கிறது. |
11:14 | நான் Start attempt பட்டனை க்ளிக் செய்கிறேன். |
11:18 | திரையின் வலது பக்கத்தில், Quiz navigation block உள்ளது. |
11:23 | பிரிவு வாரியாக, மற்றும் நேரங்கணிப்பியுடன் இது கேள்விகளை காட்டுகிறது. |
11:29 | இந்த fieldல் இருந்து, நேரடியாக கேள்வியை edit செய்வதற்கான தேர்வும் உள்ளது. |
11:35 | navigation blockல் உள்ள, Finish attempt இணைப்பை நான் க்ளிக் செய்கிறேன். |
11:40 | ஒவ்வொரு கேள்வியின் நிலையும், அதன் பெயருக்கு பக்கத்தில் காட்டப்படுகிறது. |
11:45 | பக்கத்தின் கீழுள்ள, Submit all and finish பட்டனை க்ளிக் செய்யவும். |
11:51 | confirmation pop-upல், மீண்டும் Submit all and finish பட்டனை க்ளிக் செய்யவும். |
11:58 | grade, overall feedback மற்றும் கேள்விக்குரிய feedback அனைத்தும், இங்கு காட்டப்படுகின்றன என்பதை கவனிக்கவும். |
12:06 | கீழே scroll செய்து, Finish review இணைப்பை க்ளிக் செய்யவும். |
12:11 | நாம் Quiz summary பக்கத்திற்கு திரும்புகிறோம். |
12:15 | மேல் வலது பக்கத்தில் உள்ள gear iconஐ க்ளிக் செய்யவும். Edit quiz இணைப்பை க்ளிக் செய்யவும். quizல் இருந்து, நீங்கள் கேள்விகளை சேர்க்க அல்லது நீக்க முடியும். |
12:28 | எனினும், எந்த மாணவரும் quizஐ முயற்சிக்கும் முன்பு மட்டுமே இதைச் செய்ய முடியும். |
12:35 | ஏதேனும் ஒரு மாணவர் quizஐ எடுத்துக்கொண்டாலும், quiz பூட்டப்பட்டுவிடும். எனினும், தேவைக்கேற்றவாறு கேள்விகளை, edit செய்யலாம் அல்லது சேர்க்கலாம். |
12:47 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
12:53 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Moodle.லில் ஒரு Quizஐ எப்படி உருவாக்குவது மற்றும் Question bankலிருந்து கேள்விகளை Quizல் எப்படி பயன்படுத்துவது. |
13:03 | உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி: Evolutesக்கு, ஒரு புதிய quizஐ சேர்க்கவும். விவரங்களுக்கு, இந்த டுடோரியலின்Assignment இணைப்பை பார்க்கவும். |
13:16 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
13:25 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
13:34 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
13:38 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
13:52 | இந்த ஸ்கிரிப்ட், ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. |
14:03 | கலந்துகொண்டமைக்கு நன்றி. |