Moodle-Learning-Management-System/C2/Getting-Ready-for-Moodle-Installation/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Moodleஐ நிறுவுவதற்கு தயாராகுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், Moodle.ஐ நிறுவுவதற்கு தேவையான முன்நிபந்தனைகள் பற்றி கற்கப்போகிறோம். |
00:14 | மேலும் localhostல், packageகளை சரிபார்ப்பதற்கும், databaseஐ அமைப்பதற்கும் கற்போம். |
00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04 |
00:30 | XAMPP 5.6.30 மற்றும் Firefox web browser மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP. |
00:42 | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:46 | உங்கள் கணினியில் Moodle 3.3ஐ நிறுவ, பின்வருவனவற்றை ஏற்றுக்கொள்கின்ற ஒரு கருவியை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்: |
00:52 | Apache 2.x (அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு), MariaDB 5.5.30 (அல்லது அதற்கு மேற்பட்ட எந்த ஒரு பதிப்பு) மற்றும் PHP 5.4.4 +(அல்லது அதற்கு மேற்பட்ட எந்த ஒரு பதிப்பு) |
01:08 | மேலுள்ளவற்றின் பழைய பதிப்புகள் ஏதேனும் உங்களிடம் இருந்தால், மேலும் தொடர்வதற்கு முன் அவற்றை நீக்கவும். |
01:16 | MariaDB வேகமாக வளர்ந்து வரும் open source database ஆகும். |
01:21 | அது, MySQL databaseக்கான ஒரு மாற்றீடு ஆகும். |
01:26 | Web server distributionகள், Apache, MariaDB மற்றும் PHPஐ ஒன்றாக தொகுத்து கொடுக்கின்றன. |
01:34 | நீங்கள் இவைகளை தனித்தனியாகவோ அல்லது, XAMPP, WAMPP அல்லது LAMPP போன்ற web server distributionஐ பயன்படுத்தியோ நிறுவலாம். |
01:44 | நான் எனது கணினியில் ஏற்கனவே XAMPPஐ நிறுவிவிட்டேன். |
01:49 | முதலில், நமது கணினியில்XAMPP செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா என்று நாம் சரி பார்க்க வேண்டும். |
01:54 | Web browserல் டைப் செய்க: http colon double slash 127 dot 0 dot 0 dot 1 . பின், Enterஐ அழுத்தவும். |
02:08 | அது, Unable to connect என்ற செய்தியை காட்டுகிறது. |
02:12 | இதன் பொருள், XAMPP சேவை செயல்பாட்டில் இல்லை என்பதாகும். |
02:16 | அதனால் நாம், XAMPP service.ஐ தொடங்க வேண்டும். |
02:20 | Ctrl + Alt + T keyகளை ஒன்றாக அழுத்தி, terminalஐ திறப்போம். |
02:26 | sudo space slash opt slash lampp slash lampp space start என டைப் செய்து XAMPPஐ தொடங்கவும். |
02:38 | தூண்டப்படும் போது administrative passwordஐ enter செய்து, பின் Enterஐ அழுத்தவும். |
02:44 | Starting XAMPP for Linux …., XAMPP: Starting Apache...ok., XAMPP: Starting MySQL...ok., XAMPP: Starting ProFTPD...ok., எனக் கூறுகின்ற ஒரு செய்தியை நீங்கள் பெற்றால் |
02:59 | உங்கள் கணினியில் நீங்கள் XAMPPஐ நிறுவிவிட்டீர்கள் மற்றும் அதன் சேவை தொடங்கிவிட்டது என்று பொருள். |
03:05 | XAMPP 5.6.30, MySQLக்கு பதிலாக MariaDBஐ பயன்படுத்துகிறது என்பதை கவனிக்கவும். |
03:13 | இரண்டிற்கும், commandகள் மற்றும் toolகள் ஒன்றேயாகும். |
03:17 | Browserக்கு திரும்பச் சென்று பக்கத்தை refresh செய்வோம். |
03:21 | இப்போது நாம் XAMPP திரையை காணலாம். |
03:25 | Terminalலில், Command not found எனக் கூறுகின்ற ஒரு செய்தியை நீங்கள் பெறலாம். |
03:30 | இதன் பொருள், உங்கள் கணினியில்XAMPP நிறுவப்படவில்லை என்பதாகும். |
03:34 | அப்படியானால், இந்த வலைத்தளத்தில், PHP and MySQL Seriesல் உள்ள XAMPP Installation டுடோரியலை பார்க்கவும். |
03:42 | மேலுள்ள டுடோரியலில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, XAMPPன் தற்போதைய பதிப்பை நிறுவவும். |
03:49 | Terminalக்கு திரும்புவோம். |
03:52 | இப்போது, XAMPP serviceஐ தொடங்க மேலே காட்டப்பட்டுள்ள படிகளை பின்பற்றவும். |
03:57 | நமது கணினியில் உள்ள PHPன் பதிப்பை இப்போது சரிபார்ப்போம். |
04:02 | Terminalலில் டைப் செய்க: sudo space slash opt slash lampp slash bin slash php space hyphen v . பின் Enterஐ அழுத்தவும். |
04:17 | தூண்டப்பட்டால், administrative passwordஐ enter செய்து, பின் Enterஐ அழுத்தவும். |
04:23 | எனது PHP ன் பதிப்பு, 5.6.30 ஆகும். |
04:29 | PHP வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டது என்பதை இந்த செய்தி குறிக்கிறது. |
04:34 | 5.4.4ஐ விட குறைந்த பதிப்பு ஒன்றை நீங்கள் பெற்றால், XAMPPன் தற்போதைய பதிப்பை நீங்கள் நிறுவ வேண்டும். |
04:42 | அடுத்து, நமது கணினியில் உள்ள MariaDBன் பதிப்பை சரிபார்ப்போம். |
04:48 | Terminalலில் டைப் செய்க: sudo space slash opt slash lampp slash bin slash mysql space hyphen v . பின் Enterஐ அழுத்தவும். |
05:03 | தூண்டப்பட்டால், administrative passwordஐ enter செய்து, பின் Enterஐ அழுத்தவும். |
05:08 | எனது MariaDB ன் பதிப்பு 10.1.21 ஆகும் . |
05:14 | 5.5.30ஐ விட குறைந்த பதிப்பு ஒன்றை நீங்கள் பெற்றால், XAMPPன் தற்போதைய பதிப்பை நீங்கள் நிறுவ வேண்டும். |
05:23 | Database மற்றும் PHPன் பதிப்புகளை சரிபார்க்க, XAMPP செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதை கவனிக்கவும். |
05:29 | மேலும், command prompt இப்போது மாறியிருப்பதையும் கவனிக்கவும். |
05:34 | MariaDBயிலிருந்து வெளியேற, டைப் செய்க: backslash q. பின் Enterஐ அழுத்தவும். |
05:40 | இங்கு காட்டப்பட்டுள்ளபடி, வேறு errorகளையும் நீங்கள் பெறலாம். |
05:44 | “An apache daemon is already running”. எனக் கூறுகின்ற ஒரு செய்தியை நீங்கள் பெறலாம். |
05:50 | அதன் பொருள், startup script XAMPP-Apache.ஐ தொடக்கவில்லை என்பதாகும். |
05:55 | ஏற்கனவே வேறொரு Apache instance செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை இது குறிக்கிறது. |
06:01 | XAMPP ஐ ஒழுங்காக தொடக்க, முதலில் இந்த daemonஐ நீங்கள் நிறுத்த வேண்டும். |
06:06 | Apacheஐ நிறுத்துவதற்கான command, sudo /etc/init.d/apache2 space stop |
06:19 | MySQL daemon failed to start. எனக் கூறுகின்ற ஒரு செய்தியை நீங்கள் பெறலாம். |
06:25 | இதன் பொருள், startup script MySQLஐ தொடக்கவில்லை என்பதாகும். |
06:30 | ஏற்கனவே வேறொரு database instance செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை இது குறிக்கிறது. |
06:36 | XAMPP ஐ ஒழுங்காக தொடக்க, முதலில் இந்த daemonஐ நீங்கள் நிறுத்த வேண்டும். |
06:41 | இந்த command, MySQLஐ நிறுத்தும்: sudo space /etc/init.d/mysql space stop |
06:54 | எல்லா errorகளையும் தீர்த்து, XAMPPஐ வெற்றிகரமாக செயல்படுத்தவும். |
06:59 | பின், web browserக்கு மாறி, பக்கத்தை refresh செய்யவும். |
07:03 | மொழி தேர்வுக்கு தூண்டப்பட்டால், Englishஐ தேர்ந்தெடுக்கவும். |
07:08 | இப்போது, ஒரு userஐ சேர்த்து Moodleக்கு ஒரு databaseஐ நாம் உருவாக்க வேண்டும். |
07:14 | இதை, MariaDBக்கான graphical user interface ஆன phpmyadminல் நாம் செய்வோம். |
07:21 | இது, XAMPPன் நிறுவுதலுடன் வருகிறது. |
07:25 | Browserக்கு திரும்பச் செல்வோம். |
07:28 | XAMPP பக்கத்தில், மேலுள்ள menuவில் phpMyadminஐ க்ளிக் செய்யவும். |
07:34 | மேல் menuவில் உள்ள User Accountsஐ க்ளிக் செய்து, பின் Add User Accountஐ க்ளிக் செய்யவும். |
07:42 | திறக்கின்ற புதிய windowவில், உங்களுக்கு விருப்பமான ஒரு username ஐ enter செய்யவும். |
07:48 | நான் எனது username.ஐ, moodle hyphen st என டைப் செய்கிறேன். |
07:53 | Host drop-down பட்டியலிலிருந்து, Localஐ தேர்ந்தெடுக்கவும். |
07:57 | Password text-boxல் உங்களுக்கு விருப்பமான ஒரு password ஐ enter செய்யவும். |
08:02 | நான் எனது passwordஐ, moodle hyphen st என டைப் செய்கிறேன். |
08:07 | Re-type textboxல், அதே passwordஐ டைப் செய்யவும். |
08:12 | Authentication Plugin தேர்வை அப்படியே வைக்கவும். |
08:17 | இப்போதைக்கு, Generate Password promptஐ க்ளிக் செய்ய வேண்டாம். |
08:22 | Database for user accountன் கீழ், பின்வரும் தேர்வை நாம் காணலாம்- |
08:26 | Create database with same name and grant all privileges. |
08:31 | அந்த தேர்வை check செய்து, இந்த பக்கத்தின் கீழ் வலது பக்கத்தில் உள்ள Go பட்டனை க்ளிக் செய்யவும். |
08:38 | “You have added a new user” என்ற செய்தியை, windowவின் மேல் நாம் காணலாம். |
08:44 | அதன் பொருள், moodle-st என்ற பெயருடனும், moodle-st என்ற user உடனும் ஒரு புதிய database உருவாக்கப்பட்டுவிட்டது என்பதாகும். |
08:54 | username, password மற்றும்databaseன் பெயர்களை குறித்து வைத்துக்கொள்ளவும். |
08:59 | Moodleன் நிறுவுதலை நிறைவு செய்வதற்கு, இவை பின்னர் தேவைப்படும். |
09:04 | Databaseன் பெயர் மற்றும் username, இரண்டும் ஒரே பெயராக இருக்கவேண்டிய அவசியமில்லை. |
09:10 | வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருக்க, databaseஐ முதலில் உருவாக்கி, பின்னர் அந்த userக்கு ஒரு databaseஐ உருவாக்கவும். |
09:18 | மேலும், பெயரிடும் மரபிற்கு ஏற்றார் போல், usernameல் எழுத்துக்களுக்கிடையே எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது. |
09:25 | இப்போது, XAMPP செயல்பட்டுக்கொண்டிருக்கிறது மற்றும் நமது database தயாராக உள்ளது. |
09:29 | இப்போது, Moodleஐ நிறுவ நாம் தயாராக உள்ளோம். |
09:32 | Moodleன் நிறுவுதலை, அடுத்த டுடோரியலில் நாம் தொடருவோம். |
09:37 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். |
09:41 | சுருங்கச் சொல்ல |
09:43 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
09:45 | Moodleஐ நிறுவுவதற்கு தேவையான முன்நிபந்தனைகள் பற்றி. |
09:49 | முன்நிபந்தனைகளை எப்படி சரிபார்ப்பது, ஒரு databaseஐ எப்படி அமைப்பது மற்றும் ஒரு userஐ எப்படி சேர்ப்பது. |
09:57 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. |
10:03 | அதை தரவிறக்கி காணவும். |
10:06 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. |
10:11 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
10:15 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? |
10:18 | http://forums.spoken-tutorial.orgஐ பார்க்கவும். |
10:27 | உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். |
10:30 | உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
10:36 | ஸ்போகன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்காகும். |
10:41 | இதில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம். |
10:46 | இது குழப்பத்தை குறைக்க உதவும். |
10:48 | குழப்பம் குறைந்தால், இந்த விவாதத்தை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம். |
10:54 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
11:01 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
11:06 | இந்த ஸ்கிரிப்ட், ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. |
11:10 | விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி. |