Moodle-Learning-Management-System/C2/Getting-Ready-for-Moodle-Installation/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodleஐ நிறுவுவதற்கு தயாராகுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், Moodle.ஐ நிறுவுவதற்கு தேவையான முன்நிபந்தனைகள் பற்றி கற்கப்போகிறோம்.
00:14 மேலும் localhostல், packageகளை சரிபார்ப்பதற்கும், databaseஐ அமைப்பதற்கும் கற்போம்.
00:22 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04
00:30 XAMPP 5.6.30 மற்றும் Firefox web browser மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP.
00:42 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:46 உங்கள் கணினியில் Moodle 3.3ஐ நிறுவ, பின்வருவனவற்றை ஏற்றுக்கொள்கின்ற ஒரு கருவியை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்:
00:52 Apache 2.x (அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு), MariaDB 5.5.30 (அல்லது அதற்கு மேற்பட்ட எந்த ஒரு பதிப்பு) மற்றும் PHP 5.4.4 +(அல்லது அதற்கு மேற்பட்ட எந்த ஒரு பதிப்பு)
01:08 மேலுள்ளவற்றின் பழைய பதிப்புகள் ஏதேனும் உங்களிடம் இருந்தால், மேலும் தொடர்வதற்கு முன் அவற்றை நீக்கவும்.
01:16 MariaDB வேகமாக வளர்ந்து வரும் open source database ஆகும்.
01:21 அது, MySQL databaseக்கான ஒரு மாற்றீடு ஆகும்.
01:26 Web server distributionகள், Apache, MariaDB மற்றும் PHPஐ ஒன்றாக தொகுத்து கொடுக்கின்றன.
01:34 நீங்கள் இவைகளை தனித்தனியாகவோ அல்லது, XAMPP, WAMPP அல்லது LAMPP போன்ற web server distributionஐ பயன்படுத்தியோ நிறுவலாம்.
01:44 நான் எனது கணினியில் ஏற்கனவே XAMPPஐ நிறுவிவிட்டேன்.
01:49 முதலில், நமது கணினியில்XAMPP செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா என்று நாம் சரி பார்க்க வேண்டும்.
01:54 Web browserல் டைப் செய்க: http colon double slash 127 dot 0 dot 0 dot 1 . பின், Enterஐ அழுத்தவும்.
02:08 அது, Unable to connect என்ற செய்தியை காட்டுகிறது.
02:12 இதன் பொருள், XAMPP சேவை செயல்பாட்டில் இல்லை என்பதாகும்.
02:16 அதனால் நாம், XAMPP service.ஐ தொடங்க வேண்டும்.
02:20 Ctrl + Alt + T keyகளை ஒன்றாக அழுத்தி, terminalஐ திறப்போம்.
02:26 sudo space slash opt slash lampp slash lampp space start என டைப் செய்து XAMPPஐ தொடங்கவும்.
02:38 தூண்டப்படும் போது administrative passwordஐ enter செய்து, பின் Enterஐ அழுத்தவும்.
02:44 Starting XAMPP for Linux …., XAMPP: Starting Apache...ok., XAMPP: Starting MySQL...ok., XAMPP: Starting ProFTPD...ok., எனக் கூறுகின்ற ஒரு செய்தியை நீங்கள் பெற்றால்
02:59 உங்கள் கணினியில் நீங்கள் XAMPPஐ நிறுவிவிட்டீர்கள் மற்றும் அதன் சேவை தொடங்கிவிட்டது என்று பொருள்.
03:05 XAMPP 5.6.30, MySQLக்கு பதிலாக MariaDBஐ பயன்படுத்துகிறது என்பதை கவனிக்கவும்.
03:13 இரண்டிற்கும், commandகள் மற்றும் toolகள் ஒன்றேயாகும்.
03:17 Browserக்கு திரும்பச் சென்று பக்கத்தை refresh செய்வோம்.
03:21 இப்போது நாம் XAMPP திரையை காணலாம்.
03:25 Terminalலில், Command not found எனக் கூறுகின்ற ஒரு செய்தியை நீங்கள் பெறலாம்.
03:30 இதன் பொருள், உங்கள் கணினியில்XAMPP நிறுவப்படவில்லை என்பதாகும்.
03:34 அப்படியானால், இந்த வலைத்தளத்தில், PHP and MySQL Seriesல் உள்ள XAMPP Installation டுடோரியலை பார்க்கவும்.
03:42 மேலுள்ள டுடோரியலில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, XAMPPன் தற்போதைய பதிப்பை நிறுவவும்.
03:49 Terminalக்கு திரும்புவோம்.
03:52 இப்போது, XAMPP serviceஐ தொடங்க மேலே காட்டப்பட்டுள்ள படிகளை பின்பற்றவும்.
03:57 நமது கணினியில் உள்ள PHPன் பதிப்பை இப்போது சரிபார்ப்போம்.
04:02 Terminalலில் டைப் செய்க: sudo space slash opt slash lampp slash bin slash php space hyphen v . பின் Enterஐ அழுத்தவும்.
04:17 தூண்டப்பட்டால், administrative passwordஐ enter செய்து, பின் Enterஐ அழுத்தவும்.
04:23 எனது PHP ன் பதிப்பு, 5.6.30 ஆகும்.
04:29 PHP வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டது என்பதை இந்த செய்தி குறிக்கிறது.
04:34 5.4.4ஐ விட குறைந்த பதிப்பு ஒன்றை நீங்கள் பெற்றால், XAMPPன் தற்போதைய பதிப்பை நீங்கள் நிறுவ வேண்டும்.
04:42 அடுத்து, நமது கணினியில் உள்ள MariaDBன் பதிப்பை சரிபார்ப்போம்.
04:48 Terminalலில் டைப் செய்க: sudo space slash opt slash lampp slash bin slash mysql space hyphen v . பின் Enterஐ அழுத்தவும்.
05:03 தூண்டப்பட்டால், administrative passwordஐ enter செய்து, பின் Enterஐ அழுத்தவும்.
05:08 எனது MariaDB ன் பதிப்பு 10.1.21 ஆகும் .
05:14 5.5.30ஐ விட குறைந்த பதிப்பு ஒன்றை நீங்கள் பெற்றால், XAMPPன் தற்போதைய பதிப்பை நீங்கள் நிறுவ வேண்டும்.
05:23 Database மற்றும் PHPன் பதிப்புகளை சரிபார்க்க, XAMPP செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதை கவனிக்கவும்.
05:29 மேலும், command prompt இப்போது மாறியிருப்பதையும் கவனிக்கவும்.
05:34 MariaDBயிலிருந்து வெளியேற, டைப் செய்க: backslash q. பின் Enterஐ அழுத்தவும்.
05:40 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, வேறு errorகளையும் நீங்கள் பெறலாம்.
05:44 An apache daemon is already running”. எனக் கூறுகின்ற ஒரு செய்தியை நீங்கள் பெறலாம்.
05:50 அதன் பொருள், startup script XAMPP-Apache.ஐ தொடக்கவில்லை என்பதாகும்.
05:55 ஏற்கனவே வேறொரு Apache instance செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை இது குறிக்கிறது.
06:01 XAMPP ஐ ஒழுங்காக தொடக்க, முதலில் இந்த daemonஐ நீங்கள் நிறுத்த வேண்டும்.
06:06 Apacheஐ நிறுத்துவதற்கான command, sudo /etc/init.d/apache2 space stop
06:19 MySQL daemon failed to start. எனக் கூறுகின்ற ஒரு செய்தியை நீங்கள் பெறலாம்.
06:25 இதன் பொருள், startup script MySQLஐ தொடக்கவில்லை என்பதாகும்.
06:30 ஏற்கனவே வேறொரு database instance செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை இது குறிக்கிறது.
06:36 XAMPP ஐ ஒழுங்காக தொடக்க, முதலில் இந்த daemonஐ நீங்கள் நிறுத்த வேண்டும்.
06:41 இந்த command, MySQLஐ நிறுத்தும்: sudo space /etc/init.d/mysql space stop
06:54 எல்லா errorகளையும் தீர்த்து, XAMPPஐ வெற்றிகரமாக செயல்படுத்தவும்.
06:59 பின், web browserக்கு மாறி, பக்கத்தை refresh செய்யவும்.
07:03 மொழி தேர்வுக்கு தூண்டப்பட்டால், Englishஐ தேர்ந்தெடுக்கவும்.
07:08 இப்போது, ஒரு userஐ சேர்த்து Moodleக்கு ஒரு databaseஐ நாம் உருவாக்க வேண்டும்.
07:14 இதை, MariaDBக்கான graphical user interface ஆன phpmyadminல் நாம் செய்வோம்.
07:21 இது, XAMPPன் நிறுவுதலுடன் வருகிறது.
07:25 Browserக்கு திரும்பச் செல்வோம்.
07:28 XAMPP பக்கத்தில், மேலுள்ள menuவில் phpMyadminஐ க்ளிக் செய்யவும்.
07:34 மேல் menuவில் உள்ள User Accountsஐ க்ளிக் செய்து, பின் Add User Accountஐ க்ளிக் செய்யவும்.
07:42 திறக்கின்ற புதிய windowவில், உங்களுக்கு விருப்பமான ஒரு username ஐ enter செய்யவும்.
07:48 நான் எனது username.ஐ, moodle hyphen st என டைப் செய்கிறேன்.
07:53 Host drop-down பட்டியலிலிருந்து, Localஐ தேர்ந்தெடுக்கவும்.
07:57 Password text-boxல் உங்களுக்கு விருப்பமான ஒரு password ஐ enter செய்யவும்.
08:02 நான் எனது passwordஐ, moodle hyphen st என டைப் செய்கிறேன்.
08:07 Re-type textboxல், அதே passwordஐ டைப் செய்யவும்.
08:12 Authentication Plugin தேர்வை அப்படியே வைக்கவும்.
08:17 இப்போதைக்கு, Generate Password promptஐ க்ளிக் செய்ய வேண்டாம்.
08:22 Database for user accountன் கீழ், பின்வரும் தேர்வை நாம் காணலாம்-
08:26 Create database with same name and grant all privileges.
08:31 அந்த தேர்வை check செய்து, இந்த பக்கத்தின் கீழ் வலது பக்கத்தில் உள்ள Go பட்டனை க்ளிக் செய்யவும்.
08:38 “You have added a new user” என்ற செய்தியை, windowவின் மேல் நாம் காணலாம்.
08:44 அதன் பொருள், moodle-st என்ற பெயருடனும், moodle-st என்ற user உடனும் ஒரு புதிய database உருவாக்கப்பட்டுவிட்டது என்பதாகும்.
08:54 username, password மற்றும்databaseன் பெயர்களை குறித்து வைத்துக்கொள்ளவும்.
08:59 Moodleன் நிறுவுதலை நிறைவு செய்வதற்கு, இவை பின்னர் தேவைப்படும்.
09:04 Databaseன் பெயர் மற்றும் username, இரண்டும் ஒரே பெயராக இருக்கவேண்டிய அவசியமில்லை.
09:10 வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருக்க, databaseஐ முதலில் உருவாக்கி, பின்னர் அந்த userக்கு ஒரு databaseஐ உருவாக்கவும்.
09:18 மேலும், பெயரிடும் மரபிற்கு ஏற்றார் போல், usernameல் எழுத்துக்களுக்கிடையே எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது.
09:25 இப்போது, XAMPP செயல்பட்டுக்கொண்டிருக்கிறது மற்றும் நமது database தயாராக உள்ளது.
09:29 இப்போது, Moodleஐ நிறுவ நாம் தயாராக உள்ளோம்.
09:32 Moodleன் நிறுவுதலை, அடுத்த டுடோரியலில் நாம் தொடருவோம்.
09:37 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.
09:41 சுருங்கச் சொல்ல
09:43 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
09:45 Moodleஐ நிறுவுவதற்கு தேவையான முன்நிபந்தனைகள் பற்றி.
09:49 முன்நிபந்தனைகளை எப்படி சரிபார்ப்பது, ஒரு databaseஐ எப்படி அமைப்பது மற்றும் ஒரு userஐ எப்படி சேர்ப்பது.
09:57 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது.
10:03 அதை தரவிறக்கி காணவும்.
10:06 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது.
10:11 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
10:15 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா?
10:18 http://forums.spoken-tutorial.orgஐ பார்க்கவும்.
10:27 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும்.
10:30 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
10:36 ஸ்போகன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்காகும்.
10:41 இதில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம்.
10:46 இது குழப்பத்தை குறைக்க உதவும்.
10:48 குழப்பம் குறைந்தால், இந்த விவாதத்தை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம்.
10:54 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
11:01 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
11:06 இந்த ஸ்கிரிப்ட், ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது.
11:10 விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree