Health-and-Nutrition/C2/Kangaroo-Mother-Care/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:21, 3 May 2019 by Jayashree (Talk | contribs)

Jump to: navigation, search
Time
Narration
00:00 Kangaroo mother care குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது-
00:08 Kangaroo mother care என்றால் என்ன?
00:10 Kangaroo mother careன் பகுதிகள், முக்கியத்துவம்
00:13 மற்றும் செயல்முறை.
00:17 Kangaroo mother careன் அறிமுகத்துடன் முதலில் தொடங்குவோம்.
00:22 பெயர் குறிப்பிடுவது போல –
00:24 இது, தாயை குழந்தையுடன் தோலுடன் தோல் தொடர்பில் வைத்திருப்பதை உணர்த்துகிறது.
00:29 மேலும், இது KMC என்று பிரபலமாக அறியப்படுகிறது.
00:32 குழந்தை பிறந்தவுடன் KMC, விரைவில் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
00:39 இது குறிப்பாக, குறைவான பிறப்பு எடை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது-
00:44 அதாவது, பிறப்பு எடை 2.5 கிலோகிராம் குறைவாக இருந்தும்
00:48 தொடர்ச்சியான கண்காணிப்பு தேவையில்லாத குழந்தைகள்.
00:52 இருப்பினும், எல்லா சாதாரண, ஆரோக்கியமான நிறைமாத குழந்தைகளுக்கும் இதை பயன்படுத்தலாம்.
00:59 KMC இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டிருக்கிறது:
01:03 தாய்க்கும், அவளது குழந்தைக்கும் இடையே தொடர்ச்சியான மற்றும் நீடித்த தோலுடன் தோல் தொடர்பு
01:09 மற்றும் பிரத்தியேக தாய்ப்பாலூட்டல்.
01:13 இந்த கூறுகளை பற்றி விவரமாக பார்ப்போம்.
01:17 முதல் பாகம், தோலுடன் தோல் தொடர்பு.
01:21 அது லெட் டவுன் ரிஃப்ளெக்ஸ்ஐ மேம்படுத்துகிறது.
01:24 மற்றும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது.
01:28 இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், லெட் டவுன் ரிஃப்ளெக்ஸ் விளக்கப்பட்டுள்ளது.
01:34 இரண்டாவது பாகம், பிரத்தியேக தாய்ப்பாலூட்டல்.
01:38 நினைவில் கொள்க-
01:40 முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேக தாய்ப்பாலூட்டல் பரிந்துரைக்கப்படுகிறது.
01:45 அடுத்து, Kangaroo careன் முக்கியத்துவத்தை பற்றிப்பார்ப்போம்.
01:50 KMC ன் போது ஏற்படுகின்ற நீடித்த தோலுடன் தோல் தொடர்பினால், குழந்தையின் உடல் வெப்பநிலை பராமரிக்கப்படுவதோடு
01:57 குழந்தை மேலும் பாதுகாப்பாக உணர்கிறது.
02:01 KMC, பின்வருவனவற்றை குறைக்கிறது-
02:03 தொற்று அடிக்கடி ஏற்படாமல்
02:05 குழந்தைகளில் அப்னியா விகிதம்.
02:09 அப்னியா என்பது சுவாசத்தில் ஏற்படுகின்ற நீண்ட இடைநிறுத்தம் ஆகும்.
02:13 இவைகளைத்தவிர-
02:15 KMC தாய்ப்பாலூட்டலின் இடைவெளியின் எண்ணிக்கை மற்றும் கால அளவை அதிகரிக்கிறது.
02:20 மேலும் அது, தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உணர்ச்சி பிணைப்பை வலுவாக்குகிறது.
02:26 KMC பின்வருவனவற்றிக்கும் உதவி புரிகிறது-
02:28 மற்ற வழக்கமான முறைகளை விட குழந்தை அதிக எடை பெறுவதற்கு.
02:33 அதாவது, குழந்தையை கதிரியக்க வெப்பநிலையில் வைப்பது போன்ற முறை.
02:36 இது குழந்தைக்கும் தாய்க்கும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது.
02:40 இது தாயின் மனதில் திருப்தியையும் நம்பிக்கையையும் மேம்படுத்துகிறது.
02:45 ஏனெனில், அவர் தன் குழந்தைக்காக கூடுதல் முயற்சி எடுக்கிறார்.
02:49 தாய்மார்களைத் தவிர, KMC பின்வரும் யாராலும் வழங்கப்படலாம்-
02:54 தந்தை அல்லது
02:56 ஏதேனும் முதிர்ந்த குடும்ப உறுப்பினரும் கூட.
02:58 KMC கொடுக்கப்படுபவரால் பின்பற்றப்படவேண்டிய விஷயங்களை இப்போது பார்ப்போம்:
03:04 KMC ஐ கொடுப்பவர் ஆரோக்கியமானவராகவும், வியாதி இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
03:09 அவர் பின்வரும் அடிப்படை சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்-
03:14 கை கழுவுதல்,
03:16 தினசரி குளியல், வெட்டப்பட்ட விரல் நகங்கள்,
03:18 முடிந்த தலைமுடி
03:20 மற்றும் சுத்தமான உடைகள்.
03:22 அவர, நகை, கடிகாரங்கள் மற்றும் கயிறு எதையும் அணிய கூடாது.
03:26 ஏனெனில், சுகாதாரத்தை பராமரிப்பதற்கு இவை தடைகளாக இருக்கலாம்.
03:31 மற்றும் இது குழந்தைக்கு காயத்தை ஏற்படுத்தலாம்.
03:35 இப்போது, KMCன் போது, கொடுப்பவர், எவ்வகை ஆடைகளை அணியவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்-
03:42 ஆடைகள் முன்பக்கம் திறப்பவையாகவும், மெல்லியதாகவும் இருக்க வேண்டும்.
03:46 உதாரணத்திற்கு, புடவை-ரவிக்கை அல்லது முன்பக்கம் திறந்த மகளிர் நெடுஜ்சட்டை.
03:51 KMCஐ வழங்குபவர், இந்த முன்பக்கம் திறந்த நெடுஜ்சட்டை அல்லது ரவிக்கையை, KMCன் உறைக்கு மேல் அணிந்து கொள்ளவேண்டும்.
03:58 Kangaroo பைகள் அல்லது பிணைக்காரணிகளை சந்தையிலிருந்து வாங்கி உபயோகிக்கலாம்.
04:04 KMC நீண்ட காலத்திற்குச் செய்யப்பட வேண்டும் என்றால் இவை பயனுள்ளதாக இருக்கும்.
04:09 மாறாக, KMC வழங்குநர் மென்மையான சுத்தமான பருத்தி துணியை பயன்படுத்தலாம்.
04:16 ஆனால், KMCன் போது குழந்தை ஒரு தொப்பி மற்றும் அணையாடையை அணிந்துகொண்டிருக்க வேண்டும்.
04:22 KMCன் போது குழந்தை மலம் அல்லது சிறுநீர் கழித்தால் பின் –
04:27 அவளை சுத்தம் செய்து, முழுமையாக உலர விடவேண்டும்.
04:30 அடுத்து, Kangaroo careன் செயல்முறையை விவரமாக பார்க்க மேலும் தொடருவோம்.
04:36 முதலில், தாய் நேர் நிலையில் நிற்க வேண்டும்.
04:40 பின்னர், ஒரு சுகாதார ஊழியர் அல்லது எவரேனும் ஒரு குடும்ப உறுப்பினர் பின்வரும் காரியங்களை படிப்படியாக செய்ய வேண்டும்-
04:48 குழந்தையின் அடிப்புறம் மற்றும் தலையை தாங்கிக்கொண்டு-
04:51 குழந்தையை நேர் நிலையில், தாயின் உடையற்ற மார்பகங்களுக்கிடையே வைக்கவும்.
04:56 பின், குழந்தையின் தலையை ஒரு பக்கமாக திருப்பவும்.
05:00 குழந்தையின் தலை சற்று பின்தங்கிய நிலையில் இருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும்.
05:04 இந்த நிலைமை -குழந்தையின் மூக்கு காற்றோட்டங்களைத் திறந்து வைக்கும்
05:08 மற்றும் குழந்தை தாயை கண்ணோடு கண் பார்க்க உதவும்.
05:14 பின் குழந்தையின் இடுப்புகளை சற்று வெளிப்புறமாக வளைத்து விடவும்.
05:18 குழந்தையின் கைகளை தாயின் மார்பகத்திற்கு மேலே வைத்திருக்கவும்,
05:23 கால்களை தாயின் மார்பகத்திற்கு கீழே வைத்திருக்கவும் மற்றும்,
05:27 குழந்தையின் வயிற்றை தாயின் மார்பின் மீது வைத்திருக்க நினைவில் கொள்ளவும்.
05:29 துணியை வைத்து சுற்றுவதற்கு முன்பு-
05:32 சுற்றுச்சூழல் குளிராக இருந்தால் , குழந்தையை ஒரு போர்வையினால் மூடவும்.
05:36 இது குழந்தையையும் தாயையும் இதமாக வைத்திருக்கும்.
05:39 குழந்தை மற்றும் தாயின் மார்பு மற்றும் வயிற்றை சுற்றி ஒரு துணியை சுற்றவும்.
05:45 சுற்றுகையில், பின்வருவனற்றை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
05:47 துணியின் மையம் குழந்தையின் மீது இருக்க வேண்டும்.
05:50 மேலும், துணியின் இரு முனைகளும் தாயின் அக்குள்களின் வழியே சென்று
05:56 முதுகில் ஒன்றை ஒன்று கடக்க வேண்டும்.
05:59 பின், துணியின் இரு முனைகளையும் முன்னுக்கு கொண்டு வரவும்.
06:03 துணியின் இந்த இரு முனைகளையும் குழந்தையின் அடிப்பகுதியில் பாதுகாப்பாக முடிச்சிடவும்.
06:09 இது சௌகர்யமாக இருப்பதோடு குழந்தையை தாங்கிக்கொள்ளவும் உதவி புரிகிறது.
06:14 மேலும் குழந்தை நழுவுவதையும் இது தவிர்க்கிறது.
06:17 தாய் தன்னால் இயலும் சூழ்நிலையில் , துணியை தானே சுற்ற கற்றுக்கொள்ள வேண்டும்.
06:24 KMCன் போது சுயமாக சுற்றி போர்த்துதல், இந்த தொடரின் மற்றொரு டுடோரியலில் விளக்கப்படும்.
06:32 இது தாயின் நம்பிக்கையை அதிகரித்து, தன்னிச்சையாக செயல்பட உதவும்.
06:37 துணியைப் பயன்படுத்துகையில் தாய் அசௌகரியமாக உணர்ந்தால், பின் அவள் ஒரு நீட்டத்தக்க பட்டையை பயன்படுத்தலாம்.
06:43 இது பயன்படுத்துவதற்கு, எளிதானதும் மற்றும் வசதியானதும் ஆகும்.
06:46 ஒரு நீட்டத்தக்க பட்டையை பயன்படுத்துகையில்-
06:49 குழந்தையின் தலையை தாங்க, துணியின் விளிம்பை குழந்தையின் காதுக்கு மேல் சரி செய்யவும்.
06:54 பின்னர், பின்வருவனவற்றிற்காக குழந்தையின் தலையை சற்று சாய்க்கவும்-
06:57 எளிதாக சுவாசிக்க மற்றும்
06:59 முன்பு விளக்கியது போல், தாயுடன் கண்ணோடு கண் தொடர்பு கொள்ள.
07:04 சுற்றப்பட்ட துணி அல்லது நீட்டத்தக்க பட்டை, மிக இருக்கமாகவோ அல்லது மிக தளர்வாகவோ இருக்கக்கூடாது.
07:11 குழந்தை எளிதாக சுவாசிக்கும் அளவிற்கு அது வசதியாக இருக்க வேண்டும்.
07:15 KMC நிலையில், ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டிருக்கும் போது, தாயால் பின்வருவனவற்றை செய்ய முடிய வேண்டும்-
07:20 நடக்க, நிற்க, உட்கார அல்லது
07:23 பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட.
07:26 தாய்க்கு சௌகர்யமாக இருந்தால்
07:29 Kangaroo care ன் போது, சாய்ந்த அல்லது அரை சாய்ந்த நிலையில், அவள் தூங்கவும் செய்யலாம்.
07:35 இப்போது, KMCன் போது குழந்தைக்கு எப்படி தாய்ப்பாலூட்டுவது என்று பார்ப்போம்-
07:40 தாய் பின்வருமாறு குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலாம்-
07:43 சுற்றப்பட்ட துணியை தளர்த்தி,
07:46 குழந்தையை தாய்ப்பாலூட்டுதற்கான நிலையில் வைக்கலாம்.
07:50 அல்லது அவள் கைமுறையாக தாய்ப்பாலை வெளிக்கொணர்ந்து
07:54 ஒரு கிண்ணம் அல்லது கரண்டியை பயன்படுத்தி குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலாம்.
07:57 ஒவ்வொரு நாளும் குழந்தை 25 முதல் 30 கிராம் கூடுதல் எடையை பெற வேண்டும்.
08:03 ஒரு மாதத்தில் ஒரு குழந்தையின் எடை அதிகரிப்பு 900 முதல் 1,000 கிராம் வரை இருக்க எதிப்பார்க்கப்படுகிறது.
08:10 எனவே, தாய் அல்லது சுகாதார ஊழியர்-
08:13 வழக்கமான பரிசோதனைகளின் போது குழந்தையின் எடையை கண்காணிக்க வேண்டும்.
08:17 குழந்தை போதுமான எடையை பெறவில்லையெனில்-
08:21 சுகாதார ஊழியர் தாயின் தாய்ப்பாலூட்டுகின்ற நுட்பத்தை கண்காணிக்க வேண்டும் அல்லது
08:25 குழந்தை எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறது என்பதை சரிப்பார்க்க வேண்டும்.
08:28 மேலும், சரியான பற்றிக்கொள்ளுதல் பற்றி தாய்க்கு வழிகாட்டவேண்டும்.
08:32 இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் சரியான பற்றிக்கொள்ளுதல் விளக்கப்பட்டுள்ளது.
08:39 அடுத்து, குழந்தையை எவ்வாறு சுற்றியிருக்கின்ற துணியிலிருந்து வெளிக்கொணர்வது என்று கற்போம்-
08:44 முதலில், தாய் நேர் நிலையில் உட்கார வேண்டும்.
08:48 பின், ஒரு கையினால் முடிச்சை அவிழ்க்க தொடங்கி மற்றும்
08:53 சுற்றப்பட்ட துணியின் மேல்புறத்தை மற்றொரு கையினால் பற்றி குழந்தையின் அடிப்பகுதியை தாங்க வேண்டும்.
08:58 அதற்குப் பின்-முன்பு முடிச்சை அவிழ்க்க பயன்படுத்திய அதே கையினால் சுற்றப்பட்ட துணியை தளர்க்கவும்.
09:04 பின்-குழந்தையின் அடிப்பகுதியை தாங்கிக்கொண்டிருந்த கையை துணிக்கு அடியில் கொண்டு வந்து
09:11 குழந்தையின் அடிப்பகுதியை துணியின் மேல்புறமாக தாங்க மற்றொரு கையை பயன்படுத்தவும்.
09:16 பின், குழந்தையை தூக்கி, சுற்றப்பட்ட துணியிலிருந்து விடுவிக்கவும்.
09:21 அதற்குப் பிறகு, பின்வரும் பாங்கில் குழந்தையின் தலையை பிடித்துக்கொள்ள நினைவில்கொள்ளவும்-
09:26 கட்டைவிரல் ஒரு காதின் பின்புறம் இருக்கவேண்டும் மற்றும்
09:28 மற்ற விரல்கள் மற்றொரு காதை சுற்றி இருக்க வேண்டும்.
09:30 KMCன் போது-
09:32 பின்வரும் சூழ்நிலைகளில், தாய், மருத்துவர் அல்லது சுகாதார ஊழியரை கலந்தாலோசிக்க வேண்டும்-
09:37 குழந்தை சுறுசுறுப்பாக மற்றும் விழிப்பாக இல்லாமல் இருந்தால்.
09:41 குழந்தை மிக வேகமாக சுவாசித்தால் அல்லது நீண்ட கால இடைநிறுத்தங்களை கொண்டிருந்தால்
09:46 குழந்தையின் உதடுகள் அல்லது நாக்கு நீலமாக மாறினால்
09:50 மற்றும் குழந்தையின் கால்கள் குளிராக இருந்தால்.
09:53 இத்துடன் நாம், Kangaroo mother care பற்றிய இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
09:58 இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி

Contributors and Content Editors

Arthi, Jayashree