Scilab/C4/File-handling/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Scilabஐ பயன்படுத்தி, Fileஐ கையாள்வது குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, |
00:08 | பின்வரும் funtionகளுடன் Fileஐ கையாள்வது |
00:11 | write() function, read() function |
00:14 | mopen(), mclose(). |
00:16 | செயல் விளக்கத்திற்கு, நிறுவப்பட்ட Scilab பதிப்பு 5.3.3உடன் கூடிய, Ubuntu Linux 12.04 operating systemஐ நான் பயன்படுத்துகிறேன். |
00:26 | உங்களுக்கு அடிப்படை Scilab பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:29 | இல்லையெனில், அதற்கான ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken hyphen tutorial dot orgஐ பார்க்கவும். |
00:36 | இப்போது, fileஐ கையாள்வதற்கு பயன்படும், Scilabல் இருக்கும், சில functionகளைக் காண்போம். |
00:41 | Fileஐ கையாள்வதில், பின்வருவனவை உள்ளடங்கும்- |
00:44 | write() functionஐ பயன்படுத்தி, ஒரு fileலில் எழுதுவது |
00:47 | read() functionஐ பயன்படுத்தி, ஒரு fileலில் இருந்து read செய்வது |
00:51 | mopen() functionஐ பயன்படுத்தி, ஒரு existing fileஐ திறப்பது, மற்றும் |
00:55 | mclose() functionஐ பயன்படுத்தி, ஏற்கனவே திறந்துள்ள ஒரு fileஐ மூடுவது. |
01:00 | ஒரு fileக்கு dataஐ எழுதுவதில் இருந்து தொடங்குவோம். |
01:03 | இதற்கு, write() command பயன்படுத்தப்படுகிறது. |
01:07 | Scilab console windowக்கு மாறவும். |
01:10 | தொடங்குவதற்கு, random எண்களின் ஒரு matrixஐ உருவாக்குவோம். |
01:15 | டைப் செய்க: random underscore matrix is equal to rand into bracket 20 comma 1 close the bracket semicolon, பின் Enterஐ அழுத்தவும். |
01:29 | இப்போது, present working directoryஐ சரி பார்க்கவும். |
01:32 | டைப் செய்க: pwd . |
01:34 | எனக்கு present working directory, slash home slash fossee ஆகும். |
01:39 | இந்த commandகளை செயல்படுத்துவதற்கு முன்பு, read & write அனுமதியை கொண்டுள்ள directoryல் இருக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
01:47 | இப்போது, random underscore matrix variableன் contentஐ, write commandஐ பயன்படுத்தி, ஒரு text fileன் உள் எழுதுவோம். |
01:55 | டைப் செய்க: --> write into bracket into quotes random dash numbers dot txt close the quotes comma random underscore matrix close the bracket, பின் Enterஐ அழுத்தவும். |
02:18 | இந்த file உருவாக்கப்பட்டுவிட்டதா என்று பார்ப்போம். |
02:21 | நான் Scilab console windowஐ சிறிதாக்குகிறேன். |
02:23 | உருவாக்கப்பட்டு, எனது கணிணியின், fossee directoryல் சேமிக்கப்படும், fileஐ திறக்கிறேன். |
02:33 | Random underscore matrix variableலில் இருந்து, data, random dash numbers dot txt என்ற text fileலில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
02:42 | நான் இந்த fileஐ மூடுகிறேன். |
02:45 | Scilab consoleக்கு திரும்பவும். |
02:47 | இப்போது, ஒரு fileலில் இருந்து, dataஐ, எப்படி read செய்வது என்று பார்ப்போம். |
02:50 | இதற்கு, read commandஐ பின்வருமாறு பயன்படுத்துவோம். |
02:55 | டைப் செய்க: new underscore vector is equal to read into bracket into quote random dash numbers dot txt close the quotes comma 20 comma 1 close the bracket, பின் Enterஐ அழுத்தவும். |
03:18 | Read command, argumentல் குறிபிடப்பட்டுள்ள fileலில் இருந்து, எல்லா dataவையும் read செய்து, |
03:23 | இங்கு, random dash numbers dot txt, |
03:27 | அதை, new underscore vector என்ற variableலில் சேமிக்கிறது. |
03:31 | Displayஐ தொடர்வதற்கு, Enterஐ அழுத்தவும். |
03:35 | மேலுள்ள commandஐ இவ்வாறு modify செய்தால்: |
03:39 | new underscore vector is equal to read into bracket into quotes random dash numbers dot txt comma 19 comma 1 |
03:49 | இந்த argumentல் குறிபிடப்பட்டுள்ள fileலில் இருந்து, 19 data மதிப்புகளை மட்டுமே, read command read செய்து, |
03:56 | இங்கு, random dash numbers dot txt, |
03:59 | new underscore vector என்ற variableலில் சேமிக்கிறது. |
04:03 | இந்த commandஐ, Scilab consoleலில் வெளியிட்டு, outputஐ சரி பார்க்கவும். |
04:08 | இப்போது, mopen() functionஐ பற்றி காண்போம்: |
04:12 | fd = mopen into bracket file-name comma mode |
04:17 | C fopen செயல்முறைக்கு இணக்கமான வழியில் ஒரு existing fileஐ திறக்க, mopen command, பயன்படுத்தப்படுகிறது. |
04:25 | Mode என்பது, பின்வருவனவற்றிற்காக, file திறக்கப்படுவதை கட்டுப்படுத்தும் ஒரு character string ஆகும். |
04:30 | r = fileஐ read செய்வதற்கு திறக்கிறது. |
04:34 | rb = ஒரு binary fileஐ read செய்வதற்கு திறக்கிறது. |
04:39 | rt = ஒரு text fileஐ read செய்வதற்கு திறக்கிறது. |
04:43 | w = எழுதுவதற்கு ஒரு புது fileஐ உருவாக்குகிறது அல்லது ஒரு fileஐ திறந்து, அதை பூஜ்ஜிய நீளத்திற்கு வெட்டுகிறது. |
04:50 | wb = எழுதுவதற்கு ஒரு புது binary fileஐ உருவாக்குகிறது அல்லது ஒரு fileஐ திறந்து, அதை பூஜ்ஜிய நீளத்திற்கு வெட்டுகிறது. |
04:58 | wt = எழுதுவதற்கு ஒரு text binary fileஐ உருவாக்குகிறது அல்லது ஒரு fileஐ திறந்து, அதை பூஜ்ஜிய நீளத்திற்கு வெட்டுகிறது. |
05:06 | a or ab = append செய்கிறது( Fileன் இறுதியில், ஒரு புது fileஐ எழுதுவதற்கு திறக்கிறது, அல்லது, எழுதுவதற்கு ஒரு fileஐ உருவாக்குகிறது) |
05:14 | r+ or r+b = update செய்வதற்கு ஒரு fileஐ திறக்கிறது( read செய்வது மற்றும் எழுதுவது) |
05:20 | உதாரணத்திற்கு, fd underscore r is equal to mopen('random-numbers,'rt') |
05:30 | மேலுள்ள command, 'random-numbers'ஐ, 'text and read-only' modeஆக திறக்கிறது. |
05:37 | mclose, அடைப்புக்குறிகளினுள் fd: |
05:40 | mopenஐ பயன்படுத்தி, திறந்துள்ள fileஐ மூடுகிறது |
05:43 | இதில், fd என்பது திறந்துள்ள fileன் file descriptor ஆகும். |
05:48 | fd தவிர்க்கப்பட்டால், mclose(), கடைசியாக திறக்கப்பட்ட fileஐ மூடுகிறது. |
05:53 | இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். |
05:55 | நாம் கற்றது- பின்வரும் funtionகளுடன் Fileஐ கையாள்வது: |
05:59 | write() function, read() function, |
06:02 | mopen(), mclose(). |
06:05 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
06:08 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
06:11 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
06:14 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
06:17 | ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:20 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
06:23 | மேலும் விவரங்களுக்கு conatct@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
06:30 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
06:34 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
06:41 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
06:50 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |