OpenModelica/C2/Arrays-in-Modelica/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Arrayக்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: array' variableகளை எப்படி declare செய்வது, arrayக்களை எப்படி உருவாக்குவது, for மற்றும்while loopகளை எப்படி பயன்படுத்துவது, மற்றும் OMShellஐ எப்படி பயன்படுத்துவது. |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2ஐ பயன்படுத்துகிறேன். |
00:26 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, நீங்கள் பின்வரும் operating systemகளில் எதையும் பயன்படுத்தலாம். |
00:32 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய: ஏதேனும் programming languageல், arrayக்கள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:40 | Modelicaவில், ஒரு classஐ வரையறுக்க உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கவும். |
00:50 | Vector, ஒரு dimension ஐ கொண்ட ஒரு array ஆகும். |
00:53 | அது ஒற்றை indexஐ கொண்டிருக்கிறது. |
00:55 | Vector declarationக்கான, syntax இங்கு காட்டப்பட்டுள்ளது. |
00:50 | காட்டப்பட்டுள்ள உதாரணம், 2 அளவை கொண்ட ஒரு vector variable aஐ , declare செய்கிறது. |
01:05 | Curly அடைப்புக்குறிகளினுள் இருக்கின்ற elementகளை சேர்த்து, ஒரு vectorஐ உருவாக்கலாம். |
01:11 | இந்த உதாரணம், 2 மற்றும்3ஐ , அதன் elementகளாக கொண்ட, ஒரு vector parameter aஐ வரையறுக்கிறது. |
01:19 | ஒரு vectorன் elementகளை அணுக, indexingஐ புரிந்து கொள்வது அவசியமாகும். |
01:25 | Vector indexingக்கான syntax இங்கு காட்டப்பட்டுள்ளது. |
01:29 | Vector indexing, 1ல் இருந்து தொடங்குகிறது,மேலும், Indices, integerகளாக இருக்க வேண்டும். |
01:35 | polynomialEvaluatorUsingVectors என்று பெயரிடப்பட்ட ஒரு functionஐ உருவாக்குவோம். |
01:41 | இந்தfunction, முந்தைய டுடோரியல்களில் விவாதிக்கப்பட்ட polynomialEvaluator functionனின் ஒரு நீட்டிப்பு ஆகும். |
01:49 | polynomialEvaluatorனின் parameterகள் a,b மற்றும் cக்கு பதிலாக, ஒரு vector aஐ வைப்போம். |
01:58 | எங்களதுCode Files இணைப்பில் இருக்கின்ற எல்லா fileகளையும் download செய்து, சேமிக்கவும். |
02:05 | உங்கள் வசதிக்காக, polynomialEvaluator functionஉம் கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளது. |
02:12 | இந்த functionஐ விளக்க, OMEditக்கு மாறுகிறேன். |
02:17 | OMEdit, Welcome perspectiveல், இப்போது திறந்துவிட்டது. |
02:21 | நான் தேவையான எல்லா fileகளையும் திறந்துவிட்டேன். |
02:25 | பின்வரும் classகள் அல்லதுfolderகள், இப்போது, OMEditல் திறந்திருப்பதை கவனிக்கவும்:functionTester, matrixAdder, polynomialEvaluator மற்றும் polynomialEvaluatorUsingVectors. |
02:42 | இப்போது, அவற்றை பார்க்க, ஒவ்வொருicon மீதும் நான் டபுள்-க்ளிக் செய்கிறேன். |
02:49 | சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ இடது பக்கம் நகர்த்துகிறேன். |
02:56 | PolynomialEvaluator tabக்கு செல்லவும். |
03:00 | அதை Text Viewல் திறக்கவும். |
03:03 | இந்தfunction பற்றிய மேலும் தகவல்களுக்கு, முந்தைய டுடோரியல்களை பார்க்கவும். |
03:09 | polynomialEvaluatorUsingVectorsக்கு செல்கிறேன். அதை Text Viewல் திறக்கவும். |
03:16 | Input மற்றும்output variableகள், polynomialEvaluator functionகளில் இருக்கின்றவையே ஆகும். |
03:23 | polynomialEvaluatorனின் parameterகள் a,b மற்றும் cக்கு பதிலாக, ஒரு vector a வைக்கப்படுகிறது. |
03:32 | இந்த vecotrன் அளவு 3 ஆகும். |
03:36 | காட்டப்பட்டுள்ளபடி, இந்த vectorன் elementகள், curly அடைப்புக்குறிகளினுள் சேர்க்கப்படுகின்றன. |
03:42 | Elementகள், ஒரு commaஆல் பிரிக்கப்படுகின்றன. |
03:46 | Assignment statementல், vector aன் elementகள், அவற்றின் indexகளை பயன்படுத்தி அணுகப்படுகின்றன. |
03:54 | a[1], vector aன் முதல் element ஆகும். |
03:59 | இவ்வாறே, vector aன், இரண்டாவது மற்றும் மூன்றாவது elementகளும் அணுகப்பட்டுவிட்டன. |
04:08 | இப்போது, functionTester tabக்கு மாறுகிறேன். |
04:13 | அதை Text Viewல் திறக்கவும். |
04:16 | இந்த class, முந்தைய டுடோரியல்களில் விவாதிக்கப்பட்ட, functionTester classக்கு ஒத்ததாகும். |
04:24 | z ஒரு Real variable ஆகும். |
04:27 | 10 unitகளுடன் கூடிய input argumentஉடன், polynomialEvaluatorUsingVectors function call செய்யப்படுகிறது. |
04:35 | இந்த functionஆல் return செய்யப்படுகின்ற மதிப்பு, zக்கு சமமாக வைக்கப்படுகிறது. |
04:40 | இப்போது, இந்தclassஐ simulate செய்கிறேன். |
04:43 | Simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
04:46 | Pop up windowஐ மூடவும். |
04:49 | variables browserல், zஐ தேர்ந்தெடுக்கவும். |
04:53 | x = 10ல், zன் மதிப்பு, f(x)க்கு சமமாக இருப்பதை கவனிக்கவும். |
05:00 | இந்த plot, polynomialEvaluator function caseல் நான் கவனித்ததே ஆகும். |
05:07 | இப்போது, zஐ de-select செய்து, முடிவை நீக்குகிறேன். |
05:13 | Modeling Perspectiveக்கு திரும்பச் செல்லவும். |
05:16 | இப்போது, Slideகளுக்கு மாறுகிறேன். |
05:19 | கொடுக்கப்பட்டுள்ள முறைகளுக்கு, stateementகளை iterate செய்ய, for loop பயன்படுத்தப்படுகிறது. |
05:24 | அதை, algorithm மற்றும் equation பிரிவுகளில் பயன்படுத்தலாம். |
05:29 | for loopக்கான syntax, ஒரு உதாரணத்துடன் காட்டப்பட்டுள்ளது. |
05:34 | for loopஐ எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்க, OMEditக்கு திரும்பச் செல்கிறேன். |
05:40 | polynomialEvaluatorUsingVectors tabஐ க்ளிக் செய்யவும். |
05:45 | fxக்கான, assignment statementல், vector aன் vectorகளை நாம் அணுகுகிறோம். |
05:52 | இதை, for loopஐ பயன்படுத்தியும் செய்யலாம். |
05:55 | இப்போது, algorithm பிரிவில், for loopஐ எப்படி சேர்ப்பது என பார்ப்போம். |
06:01 | முதலில், தொடக்கம் மற்றும் முடிவில், இரட்டை slashஐ சேர்த்து, fxக்கான assignment statementஐ comment செய்யவும். |
06:10 | Ctrl+Sஐ அழுத்தி, இந்த functionஐ சேமிக்கவும். |
06:15 | சேர்க்கப்படவேண்டியfor loop, for-loop.txt என்று பெயரிடப்பட்ட ஒரு text fileலில் கொடுக்கப்பட்டுள்ளது. |
06:23 | அது எங்கள் வலைதளத்தில் உள்ளது. நான் இந்த fileஐ , geditஐ பயன்படுத்தி திறந்துள்ளேன். |
06:29 | Windowsஐ பயன்படுத்துபவர்கள், அதை திறக்க, notepad அல்லது வேறு எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
06:35 | geditக்கு செல்கிறேன். |
06:38 | Ctrl+Cஐ அழுத்தி, எல்லா statementகளையும் copy செய்யவும். |
06:44 | OMEditக்கு திரும்பச் செல்லவும். |
06:46 | Enterஐ அழுத்தவும். Ctrl+Vஐ அழுத்தி, எல்லா statementகளையும் paste செய்யவும். |
06:53 | Ctrl+Sஐ அழுத்தி, இந்த functionஐ சேமிக்கவும். |
06:57 | இப்போது, இந்த loopன் ஒவ்வொரு statementஐயும் நான் விளக்குகிறேன். |
07:02 | இந்த statement, loop தொடங்குவதற்கு முன்பு, fx க்கு, பூஜ்ய initial மதிப்பை ஒதுக்குகிறது. |
07:09 | இங்கு, i, ஒரு loop counterஆக வேலை செய்கிறது. |
07:12 | iன் மதிப்பு, 3க்கு வரும் வரை, loop run செய்கிறது. |
07:16 | iஐ பயன்படுத்துவதற்கு முன்பு, அதை declare செய்ய தேவையில்லை. |
07:21 | சிறிது, கீழே scroll செய்கிறேன். |
07:24 | Polynomial f(x)ன் termகளை, இந்த statement, iterativeஆக கூட்டுகிறது. |
07:30 | PolynomialEvaluator function விவாதிக்கப்பட்ட போதே, Polynomial f(x)உம் விவாதிக்கப்பட்டுவிட்டது. |
07:37 | இந்த statement, for loopன் முடிவை சுட்டிக்காட்டுகிறது. |
07:41 | இப்போது, இந்த function, முடிவடைந்துவிட்டது. |
07:44 | இந்த functionஐ சோதிக்க, functionTester classஐ நான் பயன்படுத்துவோம். |
07:49 | இந்த classக்கு, அதாவது, இந்த functionக்கு நான் எந்த மாற்றமும் செய்யவில்லை. |
07:54 | Toolbarல் இருக்கின்ற, Simulate பட்டனை அழுத்தி, இந்த classஐ simulate செய்கிறேன். |
07:49 | Variables browserல், zஐ தேர்ந்தெடுக்கவும். |
08:03 | Functionக்கு, மாற்றங்கள் செய்த பின்பும், zன் மதிப்பு மாறாதிருப்பதை கவனிக்கவும். |
08:10 | zஐ de-select செய்து, முடிவை நீக்குகிறேன். |
08:14 | Modeling Perspectiveக்கு திரும்பச் செல்லவும். |
08:17 | மீண்டும், slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
08:21 | கொடுக்கப்பட்டுள்ளcondition, திருப்தி ஆகும் வரை, statementகளை iterate செய்ய, while loop பயன்படுத்தப்படுகிறது. |
08:27 | while loopஐ equation பிரிவில் பயன்படுத்த முடியாது. |
08:31 | Modelicaவில், whileக்கு ஒப்பிடுகையில், for loop, மிக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. |
08:37 | இப்போது, arrayக்களை பற்றி விவாதிப்போம். |
08:40 | Arrayக்கள், multi-dimensional dataஐ வர்ணிக்க பயன்படுத்தப்படுகின்றன. |
08:44 | Vector notationஐ பயன்படுத்தி, அவற்றை உருவாக்கலாம். |
08:48 | Array declaration மற்றும்indexingக்கான syntax காட்டப்பட்டுள்ளது. |
08:55 | Array construction மற்றும்indexingஐ பற்றி மேலும் புரிந்துகொள்ள, |
09:00 | matrixAdder என்று பெயரிடப்பட்ட ஒரு classஐ எழுதுவோம். இது, myMatrix மற்றும் adder matricesஐ கூட்டி, mySumஐ கொடுக்கிறது. myMatrix மற்றும்adder matrices காட்டப்பட்டுள்ளன. |
09:14 | இப்போது, matrixAdder classஐ விளக்க, OMEditக்கு மாறுகிறேன். |
09:19 | அது, ஏற்கனவே OMEditல் திறந்து உள்ளது. |
09:23 | matrixAdder tabஐ க்ளிக் செய்யவும். |
09:26 | அதை Text viewல் திறக்கவும். |
09:29 | myMatrix, ஒரு Real parameter array ஆகும். |
09:33 | சதுர அடைப்புகுறியினுள் இருக்கின்ற எண்கள், இந்த arrayன் அளவை குறியீட்டுக்காட்டுகின்றன. |
09:39 | முதல் dimensionனின் அளவு 3 ஆகும். |
09:42 | அதே போல், இரண்டாவதுdimensionனின் அளவு 2 ஆகும். |
09:46 | ஒவ்வொன்றிலும் இரண்டு elementகளைக் கொண்ட, மூன்று vectorகளை பயன்படுத்தி, , myMatrix array உருவாக்கப்பட்டுள்ளது. |
09:53 | {1,2}, முதல் vectorஐ குறியீட்டுக்காட்டுகிறது. |
09:57 | {3,4}, இரண்டாவது, மற்றும், |
10:00 | {5,6}}, மூன்றாவதுvectorஐ குறியீட்டுக்காட்டுகிறது. |
10:04 | இந்த ஒவ்வொரு vectorன் அளவும், இந்த arrayன் இரண்டாவது dimensionனின் அளவிற்கு சமமாக இருக்கிறது. |
10:11 | அதனால், myMatrix ன், இரண்டாவது dimensionனின் அளவு, 2 ஆகும். |
10:16 | Vectorகளின் எண்ணிக்கை, முதல் dimensionனின் அளவிற்கு சமமாக இருக்கிறது. அதனால், முதல் dimensionனின் அளவு, 3க்கு சமமாக இருக்கிறது. |
10:25 | இதே முறையில், adder matrix உருவாக்கப்படுகிறது. |
10:29 | இந்த இரண்டு arrayக்கள் அல்லது matrixகளை சேர்க்க, இரண்டு dimensionகளில் இருந்து elementகளை நாம் அணுக வேண்டும். |
10:35 | அதனால், a nested for loop தேவைப்படுகிறது. |
10:40 | இந்த for loop, முதல் dimension வழியாகrun செய்கிறது. |
10:44 | இவ்வாறே, இந்த for loop, இரண்டாவதுdimension வழியாகrun செய்கிறது. |
10:49 | சிறிது கீழே scroll செய்கிறேன். |
10:52 | mySumஐ கொடுப்பதற்கு, அதற்குரிய, myMatrix மற்றும் adder matricesன் elementகள் சேர்க்கப்படுகின்றன. |
11:00 | இந்த statement, ஒவ்வொரு for loopன் முடிவையும் குறியீட்டுக்காட்டுகிறது. Class இப்போது நிறைவு பெற்றுவிட்டது. |
11:07 | Simulate பட்டனை க்ளிக் செய்து, அதை simulate செய்கிறேன். |
11:11 | Pop up window தோன்றினால், அதை மூடவும். |
11:15 | Variables columnஐ விரிவாக்குகிறேன். |
11:18 | adder[1,1], myMatrix[1,1], மற்றும்mySum[1,1]ஐ தேர்ந்தெடுக்கவும். |
11:25 | adder[1,1] plus myMatrix[1,1], mySum[1,1]ஐ கொடுப்பதை கவனிக்கவும். இதன் பொருள், முடிவு துல்லியமாக உள்ளது. |
11:35 | அவற்றை de-select செய்து, முடிவை நீக்குகிறேன். |
11:40 | Slideகளுக்கு திரும்புகிறேன். |
11:43 | பயிற்சியாக: ஒரு vectorல், elementகளின் வரிசை முறையை தலைகீழாக்க, vectorReversal என்று பெயரிடப்பட்ட ஒரு functionஐ எழுதவும். |
11:51 | இவ்வாறே, ஒரு matrixன் ஒவ்வொரு rowவிலும், elementகளின் வரிசை முறையை தலைகீழாக்க, matrixReversal என்று பெயரிடப்பட்ட ஒரு functionஐ எழுதவும். |
12:00 | இந்த இரண்டு functionகளையும் சோதிக்க, functionTester classஐ எழுதவும். |
12:05 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
12:09 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். http://spoken-tutorial.org/ http://spoken-tutorial.org] /What\_is\_a\_Spoken\_Tutorial. அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
12:15 | நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்; சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:21 | இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு தொடர்புடைய கேள்விகள் உங்களுக்கு ஏதேனும் இருந்தால், பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும். |
12:28 | பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். |
12:33 | இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும். |
12:39 | commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு, பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும். |
12:48 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
12:55 | ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். |
13:00 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |