Ubuntu-Linux-on-Virtual-Box/C2/Installing-VirtualBox-on-Ubuntu-Linux-OS/English-timed/C2/Installing-VirtualBox-in-Windows-OS/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 18:30, 25 July 2019 by Nancyvarkey (Talk | contribs)
|
|
00:01 | Windows Operating System.ல், VirtualBoxஐ நிறுவுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில், VirtualBoxஐ தரவிறக்கி, அதை Windows OSல் எப்படி நிறுவுவது என்று நாம் கற்கப்போகிறோம். |
00:18 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, Windows OS பதிப்பு 10, |
00:24 | VirtualBox பதிப்பு 5.2.18, |
00:29 | Firefox web browser பயன்படுத்தப்பட்டுள்ளது. |
00:32 | எனினும், உங்களுக்கு விருப்பமுள்ள எந்த உலாவியையும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:38 | தொடங்குவதற்கு முன், நீங்கள் Internetஉடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும். |
00:44 | VirtualBox என்றால் என்ன? VirtualBox, Virtualizationக்கான, ஒரு இலவச மற்றும் open source software ஆகும். |
00:52 | Base machine அதாவது (host)ல், பல OSகளை நிறுவ மற்றும் பயன்படுத்த, இது அனுமதிக்கிறது. |
01:00 | base machine , Windows, Linux அல்லது MacOS ஐ கொண்டிருக்கலாம். |
01:07 | ஒரு VirtualBoxன் உள், ஒரு OSஐ நிறுவ, base machine , பின்வரும் கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும். |
01:15 | i3 processor, அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்று, |
01:19 | RAM 4GB, அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்று, |
01:23 | Hard diskல், காலியான இடம், 50GB அல்லது அதற்கு மேல், மற்றும், BIOSல், Virtualization , செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். |
01:34 | இது, VirtualBox சீராக வேலை செய்ய உறுதிப்படுத்தும். |
01:40 | ஒரு வேளை, base machine, Windows OSஐ கொண்டிருந்தால், அது, பின்வரும் பதிப்புகளில் ஒன்றாக இருக்க வேண்டும்: |
01:47 | Windows 7, |
01:49 | Windows 8 அல்லது Windows 10. |
01:53 | இப்போது நிறுவதலை தொடங்குவோம். |
01:56 | VirtualBoxன் சமீபத்திய பதிப்பை தரவிறக்க, ஒரு web browserல், பின்வரும் இணைப்பிற்கு செல்லவும். www dot virtualbox dot org slash wiki slash Downloads |
02:14 | இந்த கணிணியில், இந்த urlஐ, ஒரு Firefox web browserல், ஏற்கனவே நான் திறந்துள்ளேன். |
02:21 | பல hostகளுக்கான, VirtualBoxன், சமீபத்திய பதிப்பை தரவிறக்குவதற்கான இணைப்பை, இந்த பக்கம் காட்டுகிறது. |
02:30 | இந்த பதிவின் போது, VirtualBoxன் சமீபத்திய பதிப்பு, 5.2.18 ஆகும். |
02:39 | எதிர்காலத்தில், இந்த டுடோரியலை நீங்கள் பார்க்கும் போது, இது வேறாக இருக்கலாம். |
02:44 | இப்போது, Windows hosts. இணைப்பை க்ளிக் செய்யவும். |
02:48 | இது, Windows OSக்கு, VirtualBoxஐ தரவிறக்கும். |
02:53 | உங்கள் Internetன் வேகத்தை பொறுத்து, தரவிறக்கத்திற்கு சிறிது நேரம் எடுக்கலாம். |
02:58 | முக்கிய குறிப்பு: VirtualBoxஐ தரவிறக்குவதற்கு முன், நமது கணிணியில், Virtualization, செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். |
03:08 | Windows 8 அல்லது 10 machine.ல், Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் சரி பார்ப்போம். |
03:16 | Windowவின் கீழ் இடது பக்கத்தில் உள்ள Taskbarக்கு செல்லவும். ரைட்-க்ளிக் செய்து, Task Manager.ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:25 | Task Manager window திறக்கிறது. |
03:29 | நீங்கள், முதல் முறை, இதை திறக்கிறீர்களானால், இந்த windowவின் கீழே உள்ள More detailsஐ க்ளிக் செய்யவும். பின், Performance. tab ஐ க்ளிக் செய்யவும். |
03:40 | Performance. tabல், கீழ் வலது பக்கத்தில், Virtualization.ஐ கண்டறியவும். |
03:46 | நமது கணிணியில், Virtualization, செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று இது கூறிவிடும். |
03:53 | அது செயல்படுத்தப்படவில்லை எனில், BIOS settings.களில், அதை enable செய்யவும். |
03:59 | ஒவ்வொரு கணிணிக்கும், BIOS settingகள் மாறுவதால், அதைப் பற்றிய ஒரு செயல்விளக்கத்தை எங்களால் காட்ட இயலாது. |
04:06 | நீங்கள் ஒரு தொழில்நுட்ப நபர் இல்லையெனில், ஒரு System Administratorன் உதவியுடன், இதை செய்யவும். |
04:13 | BIOSல், Virtualization என்ற தேர்வு இல்லையெனில், அந்த கணிணியில், நாம் VirtualBoxஐ நிறுவ முடியாது. |
04:22 | எனக்கு, அது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. |
04:26 | இப்போது, மேல் வலது ஓரத்தில் உள்ள, xஐ க்ளிக் செய்து, Taskbarஐ மூடவும். |
04:33 | இப்போது VirtualBox.ஐ நிறுவுவோம். |
04:37 | நாம் VirtualBox.exe file ஐ தரவிறக்கிய folderக்கு செல்லவும். |
04:43 | இப்போது fileஐ ரைட்-க்ளிக் செய்து, Run as Administrator.ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:49 | தோன்றுகின்ற User Account Control dialog box ல், Yes.ஐ க்ளிக் செய்யவும். |
04:56 | ஒரு வரவேற்பு செய்தியை கொண்ட Oracle VM VirtualBox 5.2.18 Setup window தோன்றுகிறது. |
05:06 | மேலும் தொடர, windowவின் கீழ் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
05:12 | அடுத்த, screen, Custom Setup.ஆகும். |
05:16 | நிறுவுதலின் இடத்தை மாற்றவேண்டுமானால், நாம் மாற்றிக்கொள்ளலாம். |
05:22 | Browse பட்டனை க்ளிக் செய்து, பின் நிறுவுதலுக்கான விருப்பமான இடத்தை தேர்வு செய்யவும். |
05:29 | இதை நான் default இடத்தில் நிறுவ விரும்புவதால், இதை தவிர்க்கிறேன். |
05:35 | தொடர்வதற்கு, windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
05:40 | அடுத்த Custom Setup திரையில், நமது தேவைக்கேற்ப சில அம்சங்களை நாம் தேர்ந்தெடுக்கலாம். முன்னிருப்பாக, எல்லா தேர்வுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். |
05:52 | Windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும். |
05:56 | அடுத்த window, Network தொடர்பான சில எச்சரிக்கை செய்தியை காட்டுகிறது. |
06:01 | நிறுவுதலின் போது, Internet தற்காலிகமாக துண்டிக்கப்படும் என்று இந்த செய்தி கூறுகிறது. |
06:09 | Windowவின் கீழுள்ள Yes பட்டனை க்ளிக் செய்யவும். |
06:13 | நாம் Ready to Install திரைக்கு திருப்பிவிடப்படுகிறோம். |
06:18 | நிறுவுதலைத் தொடங்க, Install பட்டனை க்ளிக் செய்யவும். |
06:22 | இந்த நிறுவுதல் சிறிது நேரம் எடுக்கலாம். |
06:25 | Windows Security. என்ற பெயருடைய ஒரு pop-up window தோன்றலாம். |
06:30 | நாம் softwareஐ நிறுவ விரும்புகிறோமா அன்று அது கேட்கும். Install பட்டனை க்ளிக் செய்யவும். |
06:39 | முடிந்தவுடன், “Oracle VM VirtualBox installation is complete” என்ற செய்தியை நாம் காண முடியும். |
06:47 | இந்த திரையில், “Start Oracle VM VirtualBox after installation” என்ற தேர்வு இருக்கிறது. முன்னிருப்பாக அது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். |
06:58 | உடனடியாக, VM ஐ வெளியிட நான் விரும்பவில்லை. அதனால், நான் அதை தேர்வுநீக்குகிறேன். |
07:03 | இறுதியாக, Finish பட்டனை க்ளிக் செய்யவும். |
07:08 | இப்போது, Desktopல், VirtualBox.க்கான shortcut iconஐ நாம் காணலாம். |
07:16 | applicationஐ வெளியிட, VirtualBox iconஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
07:21 | VirtualBox application திறக்கிறது. இது நிறுவுதல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று குறிக்கிறது. |
07:28 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச்சொல்ல, |
07:34 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று சரி பார்ப்பது, மற்றும் |
07:41 | ஒரு Windows 10 கணிணியில், VirtualBoxஐ தரவிறக்கி நிறுவுவது. |
07:46 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
07:54 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. |
08:02 | மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
08:06 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும். |
08:12 | உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் பதிலளிப்பார். |
08:23 | Spoken Tutorial forum, இந்த டுடோரியல் பற்றிய குறிப்பிட்ட கேள்விகளுக்கே ஆகும். |
08:29 | இதில், பொதுவான மற்றும் தொடர்பற்ற கேள்விகளை கேட்க வேண்டாம். |
08:34 | இது குழப்பத்தை குறைக்க உதவும். இதனால், இந்த விவாதத்தை, வழிகாட்டுரையாக நாம் பயன்படுத்தலாம். |
08:43 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
08:55 | இந்த டுடோரியலுக்கான, script மற்றும் காணொளி, NVLI மற்றும் ஸ்போகன் டுடோரியல் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயியிலிருந்து, நான்சி வர்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி. |