Ubuntu-Linux-on-Virtual-Box/C2/Installing-VirtualBox-on-Ubuntu-Linux-OS/English-timed/C2/Installing-VirtualBox-in-Windows-OS/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search


Time
Narration
00:01 Windows Operating System.ல், VirtualBoxஐ நிறுவுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், VirtualBoxஐ தரவிறக்கி, அதை Windows OSல் எப்படி நிறுவுவது என்று நாம் கற்கப்போகிறோம்.
00:18 இந்த டுடோரியலை பதிவு செய்ய, Windows OS பதிப்பு 10,
00:24 VirtualBox பதிப்பு 5.2.18,
00:29 Firefox web browser பயன்படுத்தப்பட்டுள்ளது.
00:32 எனினும், உங்களுக்கு விருப்பமுள்ள எந்த உலாவியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:38 தொடங்குவதற்கு முன், நீங்கள் Internetஉடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.
00:44 VirtualBox என்றால் என்ன? VirtualBox, Virtualizationக்கான, ஒரு இலவச மற்றும் open source software ஆகும்.
00:52 Base machine அதாவது (host)ல், பல OSகளை நிறுவ மற்றும் பயன்படுத்த, இது அனுமதிக்கிறது.
01:00 base machine , Windows, Linux அல்லது MacOS ஐ கொண்டிருக்கலாம்.
01:07 ஒரு VirtualBoxன் உள், ஒரு OSஐ நிறுவ, base machine , பின்வரும் கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும்.
01:15 i3 processor, அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்று,
01:19 RAM 4GB, அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்று,
01:23 Hard diskல், காலியான இடம், 50GB அல்லது அதற்கு மேல், மற்றும், BIOSல், Virtualization , செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
01:34 இது, VirtualBox சீராக வேலை செய்ய உறுதிப்படுத்தும்.
01:40 ஒரு வேளை, base machine, Windows OSஐ கொண்டிருந்தால், அது, பின்வரும் பதிப்புகளில் ஒன்றாக இருக்க வேண்டும்:
01:47 Windows 7,
01:49 Windows 8 அல்லது Windows 10.
01:53 இப்போது நிறுவதலை தொடங்குவோம்.
01:56 VirtualBoxன் சமீபத்திய பதிப்பை தரவிறக்க, ஒரு web browserல், பின்வரும் இணைப்பிற்கு செல்லவும். www dot virtualbox dot org slash wiki slash Downloads
02:14 இந்த கணிணியில், இந்த urlஐ, ஒரு Firefox web browserல், ஏற்கனவே நான் திறந்துள்ளேன்.
02:21 பல hostகளுக்கான, VirtualBoxன், சமீபத்திய பதிப்பை தரவிறக்குவதற்கான இணைப்பை, இந்த பக்கம் காட்டுகிறது.
02:30 இந்த பதிவின் போது, VirtualBoxன் சமீபத்திய பதிப்பு, 5.2.18 ஆகும்.
02:39 எதிர்காலத்தில், இந்த டுடோரியலை நீங்கள் பார்க்கும் போது, இது வேறாக இருக்கலாம்.
02:44 இப்போது, Windows hosts. இணைப்பை க்ளிக் செய்யவும்.
02:48 இது, Windows OSக்கு, VirtualBoxஐ தரவிறக்கும்.
02:53 உங்கள் Internetன் வேகத்தை பொறுத்து, தரவிறக்கத்திற்கு சிறிது நேரம் எடுக்கலாம்.
02:58 முக்கிய குறிப்பு: VirtualBoxஐ தரவிறக்குவதற்கு முன், நமது கணிணியில், Virtualization, செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
03:08 Windows 8 அல்லது 10 machine.ல், Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் சரி பார்ப்போம்.
03:16 Windowவின் கீழ் இடது பக்கத்தில் உள்ள Taskbarக்கு செல்லவும். ரைட்-க்ளிக் செய்து, Task Manager.ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:25 Task Manager window திறக்கிறது.
03:29 நீங்கள், முதல் முறை, இதை திறக்கிறீர்களானால், இந்த windowவின் கீழே உள்ள More detailsஐ க்ளிக் செய்யவும். பின், Performance. tab ஐ க்ளிக் செய்யவும்.
03:40 Performance. tabல், கீழ் வலது பக்கத்தில், Virtualization.ஐ கண்டறியவும்.
03:46 நமது கணிணியில், Virtualization, செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று இது கூறிவிடும்.
03:53 அது செயல்படுத்தப்படவில்லை எனில், BIOS settings.களில், அதை enable செய்யவும்.
03:59 ஒவ்வொரு கணிணிக்கும், BIOS settingகள் மாறுவதால், அதைப் பற்றிய ஒரு செயல்விளக்கத்தை எங்களால் காட்ட இயலாது.
04:06 நீங்கள் ஒரு தொழில்நுட்ப நபர் இல்லையெனில், ஒரு System Administratorன் உதவியுடன், இதை செய்யவும்.
04:13 BIOSல், Virtualization என்ற தேர்வு இல்லையெனில், அந்த கணிணியில், நாம் VirtualBoxஐ நிறுவ முடியாது.
04:22 எனக்கு, அது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.
04:26 இப்போது, மேல் வலது ஓரத்தில் உள்ள, xஐ க்ளிக் செய்து, Taskbarஐ மூடவும்.
04:33 இப்போது VirtualBox.ஐ நிறுவுவோம்.
04:37 நாம் VirtualBox.exe file ஐ தரவிறக்கிய folderக்கு செல்லவும்.
04:43 இப்போது fileஐ ரைட்-க்ளிக் செய்து, Run as Administrator.ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:49 தோன்றுகின்ற User Account Control dialog box ல், Yes.ஐ க்ளிக் செய்யவும்.
04:56 ஒரு வரவேற்பு செய்தியை கொண்ட Oracle VM VirtualBox 5.2.18 Setup window தோன்றுகிறது.
05:06 மேலும் தொடர, windowவின் கீழ் உள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
05:12 அடுத்த, screen, Custom Setup.ஆகும்.
05:16 நிறுவுதலின் இடத்தை மாற்றவேண்டுமானால், நாம் மாற்றிக்கொள்ளலாம்.
05:22 Browse பட்டனை க்ளிக் செய்து, பின் நிறுவுதலுக்கான விருப்பமான இடத்தை தேர்வு செய்யவும்.
05:29 இதை நான் default இடத்தில் நிறுவ விரும்புவதால், இதை தவிர்க்கிறேன்.
05:35 தொடர்வதற்கு, windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
05:40 அடுத்த Custom Setup திரையில், நமது தேவைக்கேற்ப சில அம்சங்களை நாம் தேர்ந்தெடுக்கலாம். முன்னிருப்பாக, எல்லா தேர்வுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
05:52 Windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
05:56 அடுத்த window, Network தொடர்பான சில எச்சரிக்கை செய்தியை காட்டுகிறது.
06:01 நிறுவுதலின் போது, Internet தற்காலிகமாக துண்டிக்கப்படும் என்று இந்த செய்தி கூறுகிறது.
06:09 Windowவின் கீழுள்ள Yes பட்டனை க்ளிக் செய்யவும்.
06:13 நாம் Ready to Install திரைக்கு திருப்பிவிடப்படுகிறோம்.
06:18 நிறுவுதலைத் தொடங்க, Install பட்டனை க்ளிக் செய்யவும்.
06:22 இந்த நிறுவுதல் சிறிது நேரம் எடுக்கலாம்.
06:25 Windows Security. என்ற பெயருடைய ஒரு pop-up window தோன்றலாம்.
06:30 நாம் softwareஐ நிறுவ விரும்புகிறோமா அன்று அது கேட்கும். Install பட்டனை க்ளிக் செய்யவும்.
06:39 முடிந்தவுடன், “Oracle VM VirtualBox installation is complete” என்ற செய்தியை நாம் காண முடியும்.
06:47 இந்த திரையில், “Start Oracle VM VirtualBox after installation” என்ற தேர்வு இருக்கிறது. முன்னிருப்பாக அது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
06:58 உடனடியாக, VM ஐ வெளியிட நான் விரும்பவில்லை. அதனால், நான் அதை தேர்வுநீக்குகிறேன்.
07:03 இறுதியாக, Finish பட்டனை க்ளிக் செய்யவும்.
07:08 இப்போது, Desktopல், VirtualBox.க்கான shortcut iconஐ நாம் காணலாம்.
07:16 applicationஐ வெளியிட, VirtualBox iconஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
07:21 VirtualBox application திறக்கிறது. இது நிறுவுதல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று குறிக்கிறது.
07:28 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச்சொல்ல,
07:34 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று சரி பார்ப்பது, மற்றும்
07:41 ஒரு Windows 10 கணிணியில், VirtualBoxஐ தரவிறக்கி நிறுவுவது.
07:46 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
07:54 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது.
08:02 மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
08:06 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும்.
08:12 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் பதிலளிப்பார்.
08:23 Spoken Tutorial forum, இந்த டுடோரியல் பற்றிய குறிப்பிட்ட கேள்விகளுக்கே ஆகும்.
08:29 இதில், பொதுவான மற்றும் தொடர்பற்ற கேள்விகளை கேட்க வேண்டாம்.
08:34 இது குழப்பத்தை குறைக்க உதவும். இதனால், இந்த விவாதத்தை, வழிகாட்டுரையாக நாம் பயன்படுத்தலாம்.
08:43 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
08:55 இந்த டுடோரியலுக்கான, script மற்றும் காணொளி, NVLI மற்றும் ஸ்போகன் டுடோரியல் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயியிலிருந்து, நான்சி வர்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree, Nancyvarkey