Koha-Library-Management-System/C2/Receive-Serials/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Serialகளை எப்படி பெறுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Serialகளை எப்படி பெறுவது, தாமதமான Serialகளுக்கு உரிமை கோருவது, Serials expiration ஐ சரிபார்ப்பது, Serialகளை புதுப்பிப்பது மற்றும் Serialகளை தேடுவது. |
00:23 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும் Koha பதிப்பு 16.05. |
00:36 | இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள உங்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:41 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும். |
00:47 | மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். |
00:51 | மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
00:58 | Serialகளை பெற, Superlibrarian Username Bella மற்றும் அவளின் password.ஐ வைத்து Koha வினுள் login செய்வோம். |
01:06 | Homepageல், Serials.ஐ க்ளிக் செய்யவும். |
01:11 | புதிய பக்கத்தின் மேல், Title.க்கான fieldஐ கண்டறியவும். |
01:17 | journal.ன் தலைப்பிலிருந்து முதல் அல்லது ஏதேனும் ஒரு சொல்லை enter செய்யவும். உதாரணத்திற்கு, நான் Indian. என டைப் செய்கிறேன். |
01:25 | fieldன் வலது பக்கத்தில் உள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும். |
01:30 | Serials subscriptions என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
01:34 | இந்த பக்கம், பின்வருனவற்றிக்கான விவரங்களை காட்டுகிறது: ISSN ,Title,Notes, Library, Location, Call number, Expiration date, Actions. |
01:55 | Tableன் வலது முனைக்கோடியில் உள்ள Actions tabஐ க்ளிக் செய்யவும். |
02:00 | Drop-downனிலிருந்து Serial receive.ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:05 | Tableஉடன், Serial edition Indian Journal of Microbiology என்ற மற்றொரு பக்கம் திறக்கிறது. |
02:12 | இந்த tableலில், Status, பிரிவின் கீழ், drop-downஐ க்ளிக் செய்து Arrived.ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:20 | அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும். |
02:25 | Serial collection information for Indian Journal of Microbiology. என்ற தலைப்பை கொண்ட மற்றொரு பக்கம் திறக்கிறது. இங்கு, Subscription summary.ஐ நாம் காணலாம். |
02:37 | இவ்வழியில், நாம் Serialகளை பெறலாம். |
02:41 | இப்போது, தாமதமான Serialகளுக்கு எப்படி உரிமை கோருவது என கற்போம். |
02:46 | தாமதமான வெளியீடுகள் ஏதேனும் இருந்தால், Koha Serials vendorகளுக்கு மின்னஞ்சல் மூலம் செய்திகளை அனுப்பலாம். |
02:53 | உதாரணத்திற்கு: 4 Serials வெளியீடுகளில், வெளியீடு எண்கள் 1,2, மற்றும் 4ஐ மட்டுமே library பெற்றுள்ளது. மற்றும் வெளியீடு எண் 3 பெறப்படவில்லை. |
03:08 | அச்சூழ்நிலைகளில், பெறப்படவேண்டிய வெளியீடு எண் 3க்கு உரிமைகோரிக்கை அனுப்பப்படலாம். |
03:15 | முக்கிய Serials பக்கத்தின் இடது பக்கமாக, 'Claims’. என்ற பெயருடைய ஒரு தேர்வு உள்ளது. |
03:21 | Claims.ஐ க்ளிக் செய்யவும். |
03:24 | Dialog boxஐ கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது: No claims notice defined. Please define one.. Please define one. ஐ க்ளிக் செய்யவும். |
03:35 | Notices and Slips என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
03:39 | Notices and Slipsன் கீழ், Select a library: tabஐ கண்டறியவும். Drop-downனிலிருந்து உங்கள் libraryன் பெயரை தேர்ந்தெடுக்கவும். |
03:49 | நான் Spoken Tutorial Library.ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:53 | Select a library:, tabன் கீழ், New notice. tabஐ க்ளிக் செய்யவும். |
04:00 | Add notice. என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
04:05 | அதே பக்கத்தில் உள்ள Library பிரிவுக்கு, Koha முன்னிருப்பாக libraryன் பெயரை தேர்வு செய்கிறது. |
04:12 | எனக்கு, Spoken Tutorial Library.ஐ நான் தேர்வு செய்கிறேன். |
04:17 | Koha moduleக்கு, drop-downனிலிருந்து Claim Serial issue.ஐ தேந்தெடுக்கவும். |
04:24 | Drop-downனிலிருந்து Claim Serial issue. தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் Library க்கான fieldக்கு, All librariesஐ Koha தானாகவே தேர்ந்தெடுப்பதை கவனிக்கவும். |
04:38 | அதனால், மீண்டும் Library tabக்கு சென்று, drop-downனிலிருந்து Spoken Tutorial Libraryஐ தேந்தெடுக்கவும். |
04:47 | மேலும் தொடருவோம். |
04:49 | Code,க்கான fieldல், டைப் செய்க: Claim. |
04:53 | Name, க்கான fieldல், டைப் செய்க: Unsupplied Issues. |
04:59 | அடுத்து, Email. பிரிவை க்ளிக் செய்யவும். |
05:04 | Message subject:, fieldல், டைப் செய்க: Unsupplied Issues. |
05:11 | Message body: பிரிவின் கீழ், vendorக்கான மின்னஞ்சலை டைப் செய்யவும். |
05:17 | எனக்கு, vendor Mumbai Journal Supplier. |
05:22 | நான் எனது vendorக்கு ஒரு குறுகிய மின்னஞ்சலை எழுதியுள்ளேன். நீங்கள் காணொளியை இடைநிறுத்தி, உங்கள் libraryன் vendorக்கு ஒரு மின்னஞ்சலை எழுதலாம். |
05:31 | அடுத்து, தேவைப்பட்டால் Phone, Print மற்றும் SMS.க்கான விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்யலாம். நான் அவற்றை காலியாக விடுகிறேன். |
05:43 | அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும். |
05:48 | Notices and Slips என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
05:52 | Notices and Slips ன் கீழ், Select a library. tabஐ கண்டறியவும். |
05:58 | Koha , Spoken Tutorial Library.ஐ தானாகவே தேர்ந்தெடுத்துள்ளது. |
06:03 | தேவைக்கேற்றவாறு, drop-downனிலிருந்து உங்கள் libraryஐ நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். |
06:08 | அதே பக்கத்தில், பின்வரும் tabகளின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களுடன் கூடிய ஒரு table இருக்கும்: Library, Module, Code, Name,Copy notice and Actions. |
06:28 | அடுத்து, Koha homepage க்கு திரும்பச் செல்லவும். அதைச் செய்ய, இடது முனைக்கோடிக்கு சென்று Home. ஐ க்ளிக் செய்யவும். |
06:39 | Koha homepageல், Serials.ஐ க்ளிக் செய்யவும். |
06:44 | திறக்கின்ற புதிய பக்கத்தில், இடது பக்கம் சென்று, Claimsஐ க்ளிக் செய்யவும். |
06:51 | புதிய பக்கத்தில், Vendor,க்கான fieldல், drop-downனிலிருந்து தேவையான vendorஐ தேர்ந்தெடுக்கவும். |
06:58 | Journalsக்கு ஒரு vendor மட்டுமே இருப்பதால், அதையே நான் ஏற்கிறேன்- Mumbai Journal Supplier. |
07:06 | அடுத்து, fieldன் வலது பக்கத்தில் உள்ள OK ஐ க்ளிக் செய்யவும். |
07:12 | Missing issues என்ற தலைப்புடன் ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
07:17 | புதிய பக்கத்தில், Mumbai Journal Supplier.க்கு இடது பக்கத்தில் உள்ள check-boxஐ க்ளிக் செய்யவும். |
07:25 | உங்கள் vendorன் படி நீங்கள் check-boxஐ க்ளிக் செய்யலாம். |
07:29 | அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Send notification பட்டனை க்ளிக் செய்யவும். |
07:36 | அதே பக்கம் மீண்டும் திறக்கிறது மற்றும் அதனுடன் vendorக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. |
07:42 | மின்னஞ்சல், Koha serverலிருந்து உரிய vendorக்கு அனுப்பப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
07:48 | இப்போது, Check expiration. பற்றி கற்போம். |
07:52 | subscriptionsகள் எப்போது காலாவதியாகப் போகின்றன என்பதை சரி பார்க்க, Check expiration பயன்படுத்தப்படுகிறது. |
07:59 | அதே பக்கத்தில், இடது பக்கம் சென்று, Check expiration.ஐ க்ளிக் செய்யவும். |
08:06 | Check expiration பக்கம் திறக்கிறது. |
08:10 | Filter results,க்கான பிரிவின் கீழ், Library:க்கு சென்று, drop-downனிலிருந்து Spoken Tutorial Library.ஐ தேர்ந்தெடுக்கவும். உங்கள் libraryஐ இங்கு நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். |
08:26 | அடுத்து, Expiring before. ஐ கூறவும். |
08:30 | இது, அந்த குறிப்பிட்ட தேதிக்கு முன் காலாவதியாகப் போகின்ற எல்லா Journalகளின் ஒரு முழு பட்டியலை கொடுக்கும். |
08:38 | Expiring before:, க்கு, நான் 01/01/2019 என enter செய்கிறேன். |
08:47 | இப்போது, பக்கத்தின் கீழுள்ள Search பட்டனை க்ளிக் செய்யவும். |
08:52 | அதே பக்கத்தில், 01/01/2019க்குள் காலாவதியாகப் போகின்ற journalகளின் ஒரு பட்டியல் ஒரு tabular படிவத்தில் தோன்றுகிறது. |
09:04 | பின்வரும் விவரங்களையும் நாம் காணலாம்- ISSN, ,Title, ,Library, , OPAC note, , Nonpublic note, , Expiration date and Actions. |
09:23 | இப்போது, Actions, tabன் கீழுள்ள Renew. பட்டனை க்ளிக் செய்யவும். |
09:29 | Subscription renewal for Indian Journal of Microbiology என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய window திறக்கிறது. |
09:37 | இந்த பக்கத்தில், பின்வருவனவற்றை enter செய்யவும்: Start Date க்கு, உங்கள் தேவைக்கேற்றவாறு தேதியை enter செய்யவும். நான் 01/01/2018 என enter செய்கிறேன். |
09:51 | அடுத்தது, Subscription length. |
09:54 | பின்வரும் மூன்று fieldகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறது- Number of num அதாவது வெளியீடுகள்,Number of weeks மற்றும் Number of months. |
10:09 | எனது journal ஒரு quarterly வெளியீடு ஆதலால், Number of num.க்கு, Koha முன்னிருப்பாக 4 ஐ தேர்ந்தெடுத்துள்ளது. |
10:18 | உங்கள் தேவைக்கேற்றவாறு நீங்கள் enter செய்து கொள்ளலாம். |
10:22 | Note for the librarian that will manage your renewal request fieldஐ காலியாக விடவும். |
10:30 | அடுத்து, பக்கத்தின் கீழுள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும். |
10:35 | Subscription renewed என்ற செய்தியுடன் கூடிய window ஒன்று தோன்றுகிறது. |
10:40 | இந்த windowஐ மூட, மேல் இடது மூலைக்கு சென்று குறுக்கு குறியீடை க்ளிக் செய்யவும். |
10:47 | மீண்டும், மற்றொரு pop-up message தோன்றுகிறது: |
10:51 | To display this page, Firefox must send information that will repeat any action (such as a search or order confirmation) that was performed earlier. |
11:03 | இந்த messageன் கீழுள்ள இரண்டு தேர்வுகள் Cancel மற்றும் Resendல் இருந்து Resendஐ தேர்ந்தெடுக்கவும். |
11:11 | Check expiration. பக்கத்திற்கு நாம் கொண்டுவரப்படுகிறோம். |
11:15 | Filter results, பிரிவின் கீழ், Expiring before க்கு 01/12/2019ஐ தேர்ந்தெடுக்கவும். Expiring date.ஐ மட்டுமே கூற நினைவில் கொள்ளவும். |
11:32 | இது, அந்த குறிப்பிட்ட தேதிக்கு முன் காலாவதியாகப் போகின்ற எல்லா Journalகளின் ஒரு முழு பட்டியலை கொடுக்கும். |
11:39 | இப்போது, Filter results பிரிவின் கீழுள்ள Search பட்டனை க்ளிக் செய்யவும். |
11:45 | அதே பக்கத்தில், 01/12/2019க்குள் காலாவதியாகப் போகின்ற journalகளின் ஒரு பட்டியல் ஒரு tabular படிவத்தில் தோன்றுகிறது. |
11:56 | பின்வரும் விவரங்களையும் நாம் காணலாம்- ISSN, , Title, ,Library, ,OPAC note, ,Nonpublic note, ,Expiration date and Actions. |
12:15 | இவ்வாறு, Serialகளுக்கான அட்டவணையை உருவாக்கி, Volume and issueக்களின் வருகை நேரத்திக்கேற்றவாறு அவற்றை பெறலாம். |
12:25 | இப்போது, Koha Superlibrarian account லிருந்து நீங்கள் logout செய்யலாம். |
12:30 | Koha interface.ன் மேல் வலது மூலைக்கு செல்லவும். Spoken Tutorial Library ஐ க்ளிக் செய்து, drop-downனிலிருந்து Log out.ஐ தேர்ந்தெடுக்கவும். |
12:42 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
12:46 | சுருங்கச் சொல்ல: இந்த டுடோரியலில் நாம் கற்றது: Serialகளை எப்படி பெறுவது, தாமதமான Serialகளுக்கு உரிமை கோருவது, Serials expiration ஐ சரிபார்ப்பது, Serialகளை புதுப்பிப்பது மற்றும் Serialகளை தேடுவது. |
13:04 | ஒரு முந்தைய டுடோரியலில், Journal of Molecular Biology க்கு ஒரு புதிய subscription சேர்க்கப்பட்டது. |
13:11 | பயிற்சியாக: அதே subscriptionஐ renew செய்யவும். |
13:15 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. |
13:19 | அதை தரவிறக்கி காணவும். |
13:22 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
13:31 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
13:35 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
13:46 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |