Difference between revisions of "OpenModelica/C2/OpenModelica-Connectors/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 18: Line 18:
 
|-
 
|-
 
| | 00:34
 
| | 00:34
| ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, '''Windows''' ,  '''Mac OS X''' அல்லது '''ARM''' மீதான '''FOSSEE OS''' , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது.  
+
| ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, '''Windows''' ,  '''Mac OS X''' அல்லது '''ARM மீதான FOSSEE OS''' , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது.  
  
 
|-
 
|-

Revision as of 10:50, 22 December 2017

Time Narration
00:01 OpenModelica Connectorகள் குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு புது classஐ உருவாக்குவது, ஒரு existing classஐ திறப்பது, வெவ்வேறு classகளை இணைப்பது, ஒரு modelஐ உருவாக்கி, பின், அந்த modelஐ simulate செய்வது.
00:22 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica பதிப்பு 1.11.0 மற்றும் Ubuntu Linux OS 14.04ஐ பயன்படுத்துகிறேன்.
00:34 ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, WindowsMac OS X அல்லது ARM மீதான FOSSEE OS , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது.
00:47 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, OMEdit பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். அதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள் , எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன.
00:57 இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள RLC_Circuit file, எங்கள் வலைதளத்தில் ஒரு code fileஆக கொடுக்கப்பட்டுள்ளது.
01:04 Code Files இணைப்பிலிருந்து, fileகளை download செய்யவும்.
01:09 நான் OMEdit windowஐ ஏற்கனவே திறந்துவிட்டேன்.
01:13 இப்போது, ஒரு புது modelஐ எப்படி உருவாக்குவதென நாம் விவாதிப்போம்.
01:18 முதலில், ஒரு புது classஐ உருவாக்குவோம். அதனால், File menuக்கு சென்று, New Modelica Classஐ தேர்ந்தெடுக்கவும்.
01:27 Create New Modelica Class window திறக்கிறது.
01:31 Name fieldல், நாம் உருவாக்க விரும்புகின்ற classன் பெயரை enter செய்யவும்.
01:37 நான் பெயரை, Sample. என enter செய்கிறேன்.
01:41 Specialization fieldல், நீங்கள் உருவாக்க விரும்புகின்றclassன் வகையை தேர்ந்தெடுக்கவும். நான் Classஐ தேர்வு செய்கிறேன்.
01:50 பின், OK.ஐ க்ளிக் செய்யவும்.
01:53 கொடுக்கப்பட்ட பெயருடன், ஒரு புதிய class உருவாக்கப்படும்.
01:57 பின்வரும் டுடோரியல்களில், classகளைப் பற்றி மேலும் கற்போம்.
02:02 இப்போது, இந்த classஐ சேமிப்போம்.
02:05 இதற்கு, Sample classஐ ரைட்-க்ளிக் செய்து, பின், Saveஐ க்ளிக் செய்யவும்.
02:11 இந்த fileஐ சேமிக்க, ஒரு தகுந்த இடத்தை தேர்வு செய்யவும்.
02:15 Sample fileஐ மூடுவோம். Sample ஐ ரைட்-க்ளிக் செய்து, பின், Unloadஐ தேர்ந்தெடுக்கவும்.
02:22 தோன்றுகின்ற confirmation dialog box ல், Yes ஐ க்ளிக் செய்யவும்.
02:27 இப்போது, ஒரு existing classஐ எப்படி திறப்பது என்று கற்போம்.
02:32 ஒரு classஐ திறக்க, File menuக்கு செல்லவும். பின், Open Model/Library File.ஐ க்ளிக் செய்யவும்.
02:40 நீங்கள் திறக்க விரும்புகின்ற fileஐ தேர்ந்தெடுக்கவும்.
02:44 முன்பு, Code filesல் இருந்து download செய்யப்பட்ட, RLC_Circuit.mo fileஐ நான் தேர்வு செய்கிறேன்.
02:52 Open பட்டனை க்ளிக் செய்யவும்.
02:55 இப்போது, Connectorகள் பற்றி கற்போம்.
02:59 ஒரு model, மற்றொரு modelஉடன், தகவலை பரிமாறிக்கொள்வதற்கான வழியே, connector ஆகும்.
03:07 Connectorகளின் பயன்:
03:09 Connectorகள் பின்வருவனவற்றில் பயன்படுத்தப்படுகின்றன: இணைப்புகள் , தகவல் தொடர்பு, component மற்றும் வெளி உலகத்துக்கும் இடையே உள்ள பிணைப்பு.
03:17 அடுத்து, classகளை இணைக்கக் கற்போம்.
03:20 இதற்கு, நாம் முன்னர் திறந்த, RLC_Circuit fileஐ நான் பயன்படுத்துகிறேன்.
03:28 RLC_Circuit, வெவ்வேறு classகளை கொண்ட, ஒரு Modelica package ஆகும்.
03:34 Packageஐ விரிவாக்குவோம்.
03:37 இங்கு, Ground, VoltageSource' , Resistor , Capacitor மற்றும்Inductor
போன்ற பல்வேறு classகள், மேலும்,
03:49 Pin என்ற பெயருடைய ஒரு connectorஐயும் நாம் காணலாம்.
04:00 இந்த package, ஒரு circuit class.ஐயும் கொண்டிருக்கிறது.
04:05 Circuit fileஐ டபுள்-க்ளிக் செய்து,Text view க்கு செல்லவும்.
04:11 இங்கு, class, எந்த codeஐயும் கொண்டிருக்காமல் இருப்பதை நாம் காணலாம்.
04:17 இப்போது, Diagram Viewக்கு செல்லவும்.
04:20 எல்லா block/componentகளையும், grid பகுதியினுள் வைப்போம். பின், அவற்றை இணைப்போம்.
04:29 Resistorஐ க்ளிக் செய்து, அதை, இழுத்து, grid இடைவெளியினுள் வைக்கவும்.
04:35 Enter Component Name.என்ற messageஐ நாம் பெறுகிறோம்.
04:38 Name fieldல், componentனின் பெயரை, R என enter செய்து, OKஐ க்ளிக் செய்யவும்.
04:47 Inductorஐ க்ளிக் செய்து, அதை, இழுத்து, grid இடைவெளியினுள், Resistorக்கு பிறகு வைக்கவும்.
04:56 Componentனின் பெயரை, L என enter செய்து, OKஐ க்ளிக் செய்யவும்.
05:02 Capacitorஐ க்ளிக் செய்து, அதை, இழுத்து, grid இடைவெளியினுள், Inductorக்கு பிறகு வைக்கவும்.
05:10 Componentனின் பெயரை, C என enter செய்து, OKஐ க்ளிக் செய்யவும்.
05:15 அடுத்து, VoltageSourceஐ க்ளிக் செய்து, அதை, இழுத்து, grid இடைவெளியினுள் வைக்கவும்.
05:22 Seriesல் வைக்கப்பட்டுள்ளR, L மற்றும்Cன் மேல், இதை வைக்கவும்.
05:28 Componentனின் பெயரை, ACVoltage என enter செய்யவும்.
05:32 Component பெயரின் fieldல், எந்த இடைவெளியும் கொடுக்காமல் இருக்க, நினைவில் வைத்துக் கொள்ளவும்.
05:38 Simulation நேரத்தில், அது translation errorஐ கொடுக்கும். இப்போது, OKஐ க்ளிக் செய்யவும்.
05:45 அடுத்து, Groundஐ க்ளிக் செய்து, அதை, இழுத்து, grid இடைவெளியினுள் வைக்கவும்.
05:52 Seriesல் வைக்கப்பட்டுள்ளR, L மற்றும்Cன் கீழ், இதை வைக்கவும்.
05:57 Componentனின் பெயரை, G என enter செய்து, OKஐ க்ளிக் செய்யவும்.
06:02 Seriesல், RLC Circuitஐ உருவாக்க தேவையான எல்லா componentகளும் இப்போது நம்மிடம் உள்ளது.
06:09 இந்த componentகளை இணைப்போம்.
06:12 Componentன் இடது பக்கத்தின் மீது, mouseஐ வட்டமிடவும்.
06:16 ஒரு pop up RLC underscore Circuit dot pin p தோன்றுகிறது.
06:22 இது, positive pinஐ குறியீட்டுக் காட்டுகிறது.
06:25 இது போன்றே, componentனின் வலது பக்கம், pop upஐ , RLC underscore Circuit dot pin n என காட்டுகிறது.
06:34 இது, negative pinஐ குறியீட்டுக் காட்டுகிறது.
06:37 Cursorஐ , Resistorன், negative pin மீது வைக்கவும்.
06:42 n pin மீது, cursor வைக்கப்பட்ட இடத்தில், ஒரு '+' குறியை நாம் காணலாம்.
06:48 Pinஐ க்ளிக் செய்யவும்.
06:49 அழுத்திக் கொண்டே, அதை, Inductorன், p pin க்கு இழுக்கவும்.
06:54 Inductor's p pin ஐ க்ளிக் செய்து, பின், cursorஐ விடவும்.
07:01 அடுத்து, Inductorன், n pinஐ , Capacitor.ன், p pin உடன், இணைப்போம்.
07:08 Inductorன், n pinஐ க்ளிக் செய்யவும்.
07:11 அழுத்திக் கொண்டே, அதை, Capacitor.ன், p pin க்கு இழுக்கவும்.
07:15 Capacitor.ன், p pin ஐ க்ளிக் செய்யவும்.
07:20 இப்போது, Resistor, Inductor மற்றும் Capacitorஐ , seriesல் நாம் இணைத்துவிட்டோம்.
07:28 அடுத்த படி, VoltageSource.ஐ கொடுப்பது.
07:32 Resistorன், p pin ஐ க்ளிக் செய்யவும்.
07:36 அழுத்திக் கொண்டே, அதை, VoltageSourceன், p pin க்கு இழுக்கவும்.
07:42 இவ்வாறே, Capacitorன், p pinஐ , VoltageSourceன், n pin உடன், இணைப்போம்.
07:50 Capacitor.ன், n pin ஐ க்ளிக் செய்யவும்.
07:53 அழுத்திக் கொண்டே, அதை, VoltageSourceன், n pin க்கு இழுக்கவும்.
07:58 n pin ஐ க்ளிக் செய்து, பின், cursorஐ விடவும்.
08:03 அடுத்த படி, circuitஐ ground செய்வது.
08:07 VoltageSourceன், n pin ஐ க்ளிக் செய்யவும்.
08:11 அழுத்திக் கொண்டே, அதை, Groundக்கு இழுக்கவும்.
08:14 p pin. என்ற, ஒரே ஒரு pinஐ மட்டுமே, Ground கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கவும்.
08:20 அதை க்ளிக் செய்து, பின், cursorஐ விடவும். இப்போது, circuit நிறைவு பெற்றுவிட்டது.
08:25 டுடோரியலை இடைநிறுத்தி, உங்கள் circuit, என்னுடையது போல் காட்சியளிக்கிறதா என்று சரி பார்க்கவும்.
08:33 Classஐ சேமிக்க, CTRL Sஐ அழுத்தவும்.
08:37 இப்போது, classன் சரிநிலையை சரி பார்ப்போம்.
08:41 Check All Models பட்டனை க்ளிக் செய்யவும்.
08:45 Messages Browserஐ உற்று நோக்கவும்.
08:49 அது, equationகளின் எண்ணிக்கையையும், variableகளின் எண்ணிக்கையையும் காட்டுகிறது.
08:53 அவை இரண்டும் சமமாக இருந்தால், model, simulate செய்வதற்கு தயாராகிவிடும்.
08:58 Simulate பட்டனை க்ளிக் செய்யவும். ஒரு புது window தோன்றுகிறது.
09:03 Output window, success messgeஐ காட்டுகிறது.
09:09 Ir மற்றும்time.க்கும் இடையே உள்ள plotஐ பெற, Rஐ விரிவாக்கி, Irஐ க்ளிக் செய்யவும்.
09:18 பின்வரும் டுடடோரியல்களில், Equationகள் மற்றும் Variableகளைப் பற்றிக் கற்போம்.
09:24 இத்துடன், இந்த டுடோரியல் முடிவடைகிறது. சுருங்கச் சொல்ல.
09:28 இந்த டுடோரியலில் நாம் கற்றது, ஒரு புது classஐ உருவாக்குவது, ஒரு existing classஐ திறப்பது, வெவ்வேறு classகளை இணைப்பது, ஒரு modelஐ உருவாக்கி, பின், அந்த modelஐ simulate செய்வது.
09:43 பயிற்சியாக: Resistor, Inductor மற்றும்Capacitor , parallel இணைப்பில் இருக்கின்ற ஒரு RLC Circuitஐ உருவாக்கவும்.
09:53 RLC_Circuit packageல் இருக்கின்ற, அதே classகள் மற்றும் conductorஐ பயன்படுத்தவும்.
10:01 உருவாக்கவப்பட வேண்டிய, circuitன் வரைபடம் இதுவே.
10:01 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். http://spoken-tutorial.org/. அது, spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
10:15 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:31 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில்post செய்யவும்.
10:34 FOSSEE குழு, பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை ஒருங்கிணைக்கிறது. இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
10:49 FOSSEE குழு, commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க உதவுகிறது. இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
11:06 Spoken Tutorial மற்றும்FOSSEE திட்டங்களுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
11:15 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, PoojaMoolya, Venuspriya