Difference between revisions of "Health-and-Nutrition/C2/Kangaroo-Mother-Care/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 |<center>Time</center> |<center>Narration</center> |- |00:00 | '''Kangaroo mother care''' குறித்த '''Spoken Tutorial'''க்கு நல்வர...") |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{|border=1 | {|border=1 | ||
− | |||
|<center>Time</center> | |<center>Time</center> | ||
|<center>Narration</center> | |<center>Narration</center> | ||
− | |||
|- | |- | ||
Line 563: | Line 561: | ||
|- | |- | ||
|09:58 | |09:58 | ||
− | | | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி |
|} | |} |
Latest revision as of 11:14, 14 May 2019
00:00 | Kangaroo mother care குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- |
00:08 | Kangaroo mother care என்றால் என்ன? |
00:10 | Kangaroo mother careன் பகுதிகள், முக்கியத்துவம் |
00:13 | மற்றும் செயல்முறை. |
00:17 | Kangaroo mother careன் அறிமுகத்துடன் முதலில் தொடங்குவோம். |
00:22 | பெயர் குறிப்பிடுவது போல – |
00:24 | இது, தாயை குழந்தையுடன் தோலுடன் தோல் தொடர்பில் வைத்திருப்பதை உணர்த்துகிறது. |
00:29 | மேலும், இது KMC என்று பிரபலமாக அறியப்படுகிறது. |
00:32 | குழந்தை பிறந்தவுடன் KMC, விரைவில் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். |
00:39 | இது குறிப்பாக, குறைவான பிறப்பு எடை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது- |
00:44 | அதாவது, பிறப்பு எடை 2.5 கிலோகிராம் குறைவாக இருந்தும் |
00:48 | தொடர்ச்சியான கண்காணிப்பு தேவையில்லாத குழந்தைகள். |
00:52 | இருப்பினும், எல்லா சாதாரண, ஆரோக்கியமான நிறைமாத குழந்தைகளுக்கும் இதை பயன்படுத்தலாம். |
00:59 | KMC இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டிருக்கிறது: |
01:03 | தாய்க்கும், அவளது குழந்தைக்கும் இடையே தொடர்ச்சியான மற்றும் நீடித்த தோலுடன் தோல் தொடர்பு |
01:09 | மற்றும் பிரத்தியேக தாய்ப்பாலூட்டல். |
01:13 | இந்த கூறுகளை பற்றி விவரமாக பார்ப்போம். |
01:17 | முதல் பாகம், தோலுடன் தோல் தொடர்பு. |
01:21 | அது லெட் டவுன் ரிஃப்ளெக்ஸ்ஐ மேம்படுத்துகிறது. |
01:24 | மற்றும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. |
01:28 | இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், லெட் டவுன் ரிஃப்ளெக்ஸ் விளக்கப்பட்டுள்ளது. |
01:34 | இரண்டாவது பாகம், பிரத்தியேக தாய்ப்பாலூட்டல். |
01:38 | நினைவில் கொள்க- |
01:40 | முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேக தாய்ப்பாலூட்டல் பரிந்துரைக்கப்படுகிறது. |
01:45 | அடுத்து, Kangaroo careன் முக்கியத்துவத்தை பற்றிப்பார்ப்போம். |
01:50 | KMC ன் போது ஏற்படுகின்ற நீடித்த தோலுடன் தோல் தொடர்பினால், குழந்தையின் உடல் வெப்பநிலை பராமரிக்கப்படுவதோடு |
01:57 | குழந்தை மேலும் பாதுகாப்பாக உணர்கிறது. |
02:01 | KMC, பின்வருவனவற்றை குறைக்கிறது- |
02:03 | தொற்று அடிக்கடி ஏற்படாமல் |
02:05 | குழந்தைகளில் அப்னியா விகிதம். |
02:09 | அப்னியா என்பது சுவாசத்தில் ஏற்படுகின்ற நீண்ட இடைநிறுத்தம் ஆகும். |
02:13 | இவைகளைத்தவிர- |
02:15 | KMC தாய்ப்பாலூட்டலின் இடைவெளியின் எண்ணிக்கை மற்றும் கால அளவை அதிகரிக்கிறது. |
02:20 | மேலும் அது, தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உணர்ச்சி பிணைப்பை வலுவாக்குகிறது. |
02:26 | KMC பின்வருவனவற்றிக்கும் உதவி புரிகிறது- |
02:28 | மற்ற வழக்கமான முறைகளை விட குழந்தை அதிக எடை பெறுவதற்கு. |
02:33 | அதாவது, குழந்தையை கதிரியக்க வெப்பநிலையில் வைப்பது போன்ற முறை. |
02:36 | இது குழந்தைக்கும் தாய்க்கும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. |
02:40 | இது தாயின் மனதில் திருப்தியையும் நம்பிக்கையையும் மேம்படுத்துகிறது. |
02:45 | ஏனெனில், அவர் தன் குழந்தைக்காக கூடுதல் முயற்சி எடுக்கிறார். |
02:49 | தாய்மார்களைத் தவிர, KMC பின்வரும் யாராலும் வழங்கப்படலாம்- |
02:54 | தந்தை அல்லது |
02:56 | ஏதேனும் முதிர்ந்த குடும்ப உறுப்பினரும் கூட. |
02:58 | KMC கொடுக்கப்படுபவரால் பின்பற்றப்படவேண்டிய விஷயங்களை இப்போது பார்ப்போம்: |
03:04 | KMC ஐ கொடுப்பவர் ஆரோக்கியமானவராகவும், வியாதி இல்லாதவராகவும் இருக்க வேண்டும். |
03:09 | அவர் பின்வரும் அடிப்படை சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்- |
03:14 | கை கழுவுதல், |
03:16 | தினசரி குளியல், வெட்டப்பட்ட விரல் நகங்கள், |
03:18 | முடிந்த தலைமுடி |
03:20 | மற்றும் சுத்தமான உடைகள். |
03:22 | அவர, நகை, கடிகாரங்கள் மற்றும் கயிறு எதையும் அணிய கூடாது. |
03:26 | ஏனெனில், சுகாதாரத்தை பராமரிப்பதற்கு இவை தடைகளாக இருக்கலாம். |
03:31 | மற்றும் இது குழந்தைக்கு காயத்தை ஏற்படுத்தலாம். |
03:35 | இப்போது, KMCன் போது, கொடுப்பவர், எவ்வகை ஆடைகளை அணியவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்- |
03:42 | ஆடைகள் முன்பக்கம் திறப்பவையாகவும், மெல்லியதாகவும் இருக்க வேண்டும். |
03:46 | உதாரணத்திற்கு, புடவை-ரவிக்கை அல்லது முன்பக்கம் திறந்த மகளிர் நெடுஜ்சட்டை. |
03:51 | KMCஐ வழங்குபவர், இந்த முன்பக்கம் திறந்த நெடுஜ்சட்டை அல்லது ரவிக்கையை, KMCன் உறைக்கு மேல் அணிந்து கொள்ளவேண்டும். |
03:58 | Kangaroo பைகள் அல்லது பிணைக்காரணிகளை சந்தையிலிருந்து வாங்கி உபயோகிக்கலாம். |
04:04 | KMC நீண்ட காலத்திற்குச் செய்யப்பட வேண்டும் என்றால் இவை பயனுள்ளதாக இருக்கும். |
04:09 | மாறாக, KMC வழங்குநர் மென்மையான சுத்தமான பருத்தி துணியை பயன்படுத்தலாம். |
04:16 | ஆனால், KMCன் போது குழந்தை ஒரு தொப்பி மற்றும் அணையாடையை அணிந்துகொண்டிருக்க வேண்டும். |
04:22 | KMCன் போது குழந்தை மலம் அல்லது சிறுநீர் கழித்தால் பின் – |
04:27 | அவளை சுத்தம் செய்து, முழுமையாக உலர விடவேண்டும். |
04:30 | அடுத்து, Kangaroo careன் செயல்முறையை விவரமாக பார்க்க மேலும் தொடருவோம். |
04:36 | முதலில், தாய் நேர் நிலையில் நிற்க வேண்டும். |
04:40 | பின்னர், ஒரு சுகாதார ஊழியர் அல்லது எவரேனும் ஒரு குடும்ப உறுப்பினர் பின்வரும் காரியங்களை படிப்படியாக செய்ய வேண்டும்- |
04:48 | குழந்தையின் அடிப்புறம் மற்றும் தலையை தாங்கிக்கொண்டு- |
04:51 | குழந்தையை நேர் நிலையில், தாயின் உடையற்ற மார்பகங்களுக்கிடையே வைக்கவும். |
04:56 | பின், குழந்தையின் தலையை ஒரு பக்கமாக திருப்பவும். |
05:00 | குழந்தையின் தலை சற்று பின்தங்கிய நிலையில் இருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும். |
05:04 | இந்த நிலைமை -குழந்தையின் மூக்கு காற்றோட்டங்களைத் திறந்து வைக்கும் |
05:08 | மற்றும் குழந்தை தாயை கண்ணோடு கண் பார்க்க உதவும். |
05:14 | பின் குழந்தையின் இடுப்புகளை சற்று வெளிப்புறமாக வளைத்து விடவும். |
05:18 | குழந்தையின் கைகளை தாயின் மார்பகத்திற்கு மேலே வைத்திருக்கவும், |
05:23 | கால்களை தாயின் மார்பகத்திற்கு கீழே வைத்திருக்கவும் மற்றும், |
05:27 | குழந்தையின் வயிற்றை தாயின் மார்பின் மீது வைத்திருக்க நினைவில் கொள்ளவும். |
05:29 | துணியை வைத்து சுற்றுவதற்கு முன்பு- |
05:32 | சுற்றுச்சூழல் குளிராக இருந்தால் , குழந்தையை ஒரு போர்வையினால் மூடவும். |
05:36 | இது குழந்தையையும் தாயையும் இதமாக வைத்திருக்கும். |
05:39 | குழந்தை மற்றும் தாயின் மார்பு மற்றும் வயிற்றை சுற்றி ஒரு துணியை சுற்றவும். |
05:45 | சுற்றுகையில், பின்வருவனற்றை உறுதிபடுத்திக்கொள்ளவும். |
05:47 | துணியின் மையம் குழந்தையின் மீது இருக்க வேண்டும். |
05:50 | மேலும், துணியின் இரு முனைகளும் தாயின் அக்குள்களின் வழியே சென்று |
05:56 | முதுகில் ஒன்றை ஒன்று கடக்க வேண்டும். |
05:59 | பின், துணியின் இரு முனைகளையும் முன்னுக்கு கொண்டு வரவும். |
06:03 | துணியின் இந்த இரு முனைகளையும் குழந்தையின் அடிப்பகுதியில் பாதுகாப்பாக முடிச்சிடவும். |
06:09 | இது சௌகர்யமாக இருப்பதோடு குழந்தையை தாங்கிக்கொள்ளவும் உதவி புரிகிறது. |
06:14 | மேலும் குழந்தை நழுவுவதையும் இது தவிர்க்கிறது. |
06:17 | தாய் தன்னால் இயலும் சூழ்நிலையில் , துணியை தானே சுற்ற கற்றுக்கொள்ள வேண்டும். |
06:24 | KMCன் போது சுயமாக சுற்றி போர்த்துதல், இந்த தொடரின் மற்றொரு டுடோரியலில் விளக்கப்படும். |
06:32 | இது தாயின் நம்பிக்கையை அதிகரித்து, தன்னிச்சையாக செயல்பட உதவும். |
06:37 | துணியைப் பயன்படுத்துகையில் தாய் அசௌகரியமாக உணர்ந்தால், பின் அவள் ஒரு நீட்டத்தக்க பட்டையை பயன்படுத்தலாம். |
06:43 | இது பயன்படுத்துவதற்கு, எளிதானதும் மற்றும் வசதியானதும் ஆகும். |
06:46 | ஒரு நீட்டத்தக்க பட்டையை பயன்படுத்துகையில்- |
06:49 | குழந்தையின் தலையை தாங்க, துணியின் விளிம்பை குழந்தையின் காதுக்கு மேல் சரி செய்யவும். |
06:54 | பின்னர், பின்வருவனவற்றிற்காக குழந்தையின் தலையை சற்று சாய்க்கவும்- |
06:57 | எளிதாக சுவாசிக்க மற்றும் |
06:59 | முன்பு விளக்கியது போல், தாயுடன் கண்ணோடு கண் தொடர்பு கொள்ள. |
07:04 | சுற்றப்பட்ட துணி அல்லது நீட்டத்தக்க பட்டை, மிக இருக்கமாகவோ அல்லது மிக தளர்வாகவோ இருக்கக்கூடாது. |
07:11 | குழந்தை எளிதாக சுவாசிக்கும் அளவிற்கு அது வசதியாக இருக்க வேண்டும். |
07:15 | KMC நிலையில், ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டிருக்கும் போது, தாயால் பின்வருவனவற்றை செய்ய முடிய வேண்டும்- |
07:20 | நடக்க, நிற்க, உட்கார அல்லது |
07:23 | பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட. |
07:26 | தாய்க்கு சௌகர்யமாக இருந்தால் |
07:29 | Kangaroo care ன் போது, சாய்ந்த அல்லது அரை சாய்ந்த நிலையில், அவள் தூங்கவும் செய்யலாம். |
07:35 | இப்போது, KMCன் போது குழந்தைக்கு எப்படி தாய்ப்பாலூட்டுவது என்று பார்ப்போம்- |
07:40 | தாய் பின்வருமாறு குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலாம்- |
07:43 | சுற்றப்பட்ட துணியை தளர்த்தி, |
07:46 | குழந்தையை தாய்ப்பாலூட்டுதற்கான நிலையில் வைக்கலாம். |
07:50 | அல்லது அவள் கைமுறையாக தாய்ப்பாலை வெளிக்கொணர்ந்து |
07:54 | ஒரு கிண்ணம் அல்லது கரண்டியை பயன்படுத்தி குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலாம். |
07:57 | ஒவ்வொரு நாளும் குழந்தை 25 முதல் 30 கிராம் கூடுதல் எடையை பெற வேண்டும். |
08:03 | ஒரு மாதத்தில் ஒரு குழந்தையின் எடை அதிகரிப்பு 900 முதல் 1,000 கிராம் வரை இருக்க எதிப்பார்க்கப்படுகிறது. |
08:10 | எனவே, தாய் அல்லது சுகாதார ஊழியர்- |
08:13 | வழக்கமான பரிசோதனைகளின் போது குழந்தையின் எடையை கண்காணிக்க வேண்டும். |
08:17 | குழந்தை போதுமான எடையை பெறவில்லையெனில்- |
08:21 | சுகாதார ஊழியர் தாயின் தாய்ப்பாலூட்டுகின்ற நுட்பத்தை கண்காணிக்க வேண்டும் அல்லது |
08:25 | குழந்தை எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறது என்பதை சரிப்பார்க்க வேண்டும். |
08:28 | மேலும், சரியான பற்றிக்கொள்ளுதல் பற்றி தாய்க்கு வழிகாட்டவேண்டும். |
08:32 | இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் சரியான பற்றிக்கொள்ளுதல் விளக்கப்பட்டுள்ளது. |
08:39 | அடுத்து, குழந்தையை எவ்வாறு சுற்றியிருக்கின்ற துணியிலிருந்து வெளிக்கொணர்வது என்று கற்போம்- |
08:44 | முதலில், தாய் நேர் நிலையில் உட்கார வேண்டும். |
08:48 | பின், ஒரு கையினால் முடிச்சை அவிழ்க்க தொடங்கி மற்றும் |
08:53 | சுற்றப்பட்ட துணியின் மேல்புறத்தை மற்றொரு கையினால் பற்றி குழந்தையின் அடிப்பகுதியை தாங்க வேண்டும். |
08:58 | அதற்குப் பின்-முன்பு முடிச்சை அவிழ்க்க பயன்படுத்திய அதே கையினால் சுற்றப்பட்ட துணியை தளர்க்கவும். |
09:04 | பின்-குழந்தையின் அடிப்பகுதியை தாங்கிக்கொண்டிருந்த கையை துணிக்கு அடியில் கொண்டு வந்து |
09:11 | குழந்தையின் அடிப்பகுதியை துணியின் மேல்புறமாக தாங்க மற்றொரு கையை பயன்படுத்தவும். |
09:16 | பின், குழந்தையை தூக்கி, சுற்றப்பட்ட துணியிலிருந்து விடுவிக்கவும். |
09:21 | அதற்குப் பிறகு, பின்வரும் பாங்கில் குழந்தையின் தலையை பிடித்துக்கொள்ள நினைவில்கொள்ளவும்- |
09:26 | கட்டைவிரல் ஒரு காதின் பின்புறம் இருக்கவேண்டும் மற்றும் |
09:28 | மற்ற விரல்கள் மற்றொரு காதை சுற்றி இருக்க வேண்டும். |
09:30 | KMCன் போது- |
09:32 | பின்வரும் சூழ்நிலைகளில், தாய், மருத்துவர் அல்லது சுகாதார ஊழியரை கலந்தாலோசிக்க வேண்டும்- |
09:37 | குழந்தை சுறுசுறுப்பாக மற்றும் விழிப்பாக இல்லாமல் இருந்தால். |
09:41 | குழந்தை மிக வேகமாக சுவாசித்தால் அல்லது நீண்ட கால இடைநிறுத்தங்களை கொண்டிருந்தால் |
09:46 | குழந்தையின் உதடுகள் அல்லது நாக்கு நீலமாக மாறினால் |
09:50 | மற்றும் குழந்தையின் கால்கள் குளிராக இருந்தால். |
09:53 | இத்துடன் நாம், Kangaroo mother care பற்றிய இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
09:58 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி |