UCSF-Chimera/C4/Axes-and-Planes/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
---|---|
00:01 | Chimera ஐ பயன்படுத்தி, Axisகள், மற்றும், Planeகள், குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Axesகள், Planeகள் மற்றும்Centroidகளை காட்டுவது. |
00:12 | 2D Labelகள், மற்றும்Per-Model clipping. |
00:17 | இந்த டுடோரியலை பின்பற்ற, உங்களுக்கு, Chimera interface பரீட்சயமாக இருக்க வேண்டும். |
00:23 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:28 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு நான்: Ubuntu OS பதிப்பு14.04 , |
00:34 | Chimera பதிப்பு 1.10.1 , |
00:38 | Mozilla firefox browser 42.0, மற்றும், ஒரு இணைய இணைப்பை பயன்படுத்துகிறேன். |
00:45 | இங்கு, ஒரு Chimera windowஐ நான் திறந்துள்ளேன். |
00:48 | Command text boxல், டைப் செய்க: Open 1EMA. Enterஐ அழுத்தவும். |
00:55 | Panelலில், green fluorescent proteinனின் structure, திறக்கிறது. |
01:00 | Tools menuஐ க்ளிக் செய்யவும். |
01:02 | Structure Analysis optionக்கு scroll செய்யவும். Sub-menuவில் இருந்து, Axes, Planes, Centroidsஐ க்ளிக் செய்யவும். |
01:11 | Structure Measurements dialog box திறக்கிறது. |
01:15 | இங்கு, Define axes, Define plane, Define centroid tabகள் இருக்கின்றன. |
01:24 | Define axes tabஐ க்ளிக் செய்யவும். இது, Define axes dialog boxஐ திறக்கிறது. |
01:31 | இங்கு, atom setகள், மற்றும், மற்ற axis parameterகளை நாம், குறிப்பிடலாம். |
01:37 | Panelலில், structureனின் நடுவில் இருந்து, உங்களுக்கு விருப்பமான சில residueக்களை தேர்ந்தெடுக்கவும். |
01:43 | residueக்களை தேர்ந்தெடுக்க; CTRL மற்றும்shift keyகளை ஒன்றாக அழுத்திக் கொண்டே, residueக்களை க்ளிக் செய்யவும். |
01:55 | Define Axes dialog boxல், “Selected atoms” radio பட்டனை க்ளிக் செய்யவும். |
02:02 | Axisன் பெயரை, axis1. என டைப் செய்யவும். |
02:06 | color wellஐ க்ளிக் செய்யவும். color editorல் இருந்து, ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும்.color editorஐ மூடவும். |
02:14 | Axisன் தடிப்பை மாற்ற; angstroms radio பட்டனை க்ளிக் செய்யவும். |
02:19 | Text boxல் உள்ள எண்ணை, 0.25க்கு மாற்றவும். OK பட்டனை க்ளிக் செய்யவும். |
02:27 | Panelஐ கவனிக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட atomகளுக்கு, Axis, வரையப்படுகிறது. |
02:33 | Select menuஐ பயன்படுத்தி, தேர்ந்தெடுப்பைclear செய்யவும். |
02:37 | இந்த axisக்கான, ஒரு object, Structure Measurement dialog boxல் உருவாக்கப்படுகிறது. |
02:43 | Axisஐ நீக்க, அந்தrowஐ க்ளிக் செய்யவும். Dialog-boxன் கடைசியில் உள்ள, Delete பட்டனை க்ளிக் செய்யவும். |
02:51 | இப்போது, structureக்கு planeஐ சேர்க்க, Define plane tab.ஐ க்ளிக் செய்யவும். |
02:57 | Define Plane dialog-boxல், planeனின் பெயரை, plane1க்கு மாற்றவும். |
03:03 | இங்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட atomகளுக்கு மட்டுமே, ஒரு plane, உருவாக்கப்படுகிறது. |
03:08 | Panelலில், structureனின் நடுவில் இருந்து, உங்களுக்கு விருப்பமான சில residueக்களை தேர்ந்தெடுக்கவும். |
03:14 | CTRL மற்றும்shift keyகளை ஒன்றாக அழுத்திக் கொண்டே, residueக்களை க்ளிக் செய்யவும். |
03:23 | Define Plane dialog-boxல், color well.ஐ க்ளிக் செய்யவும். |
03:28 | color editorல் இருந்து, ஒரு நிறத்தை தேர்வு செய்யவும். color editorஐ மூடவும். |
03:34 | OK பட்டனை க்ளிக் செய்யவும். Panelஐ கவனிக்கவும். |
03:39 | தேர்ந்தெடுக்கப்பட்ட atomகளின் அடிப்படையில், ஒரு plane உருவாக்கப்படுகிறது. |
03:44 | Select menuஐ பயன்படுத்தி, தேர்ந்தெடுப்பைclear செய்யவும். |
03:48 | Planeஐ நீக்கவும், Structure Measurements dialog boxல் உள்ள, plane IDஐ க்ளிக் செய்யவும். |
03:55 | Delete பட்டனை க்ளிக் செய்யவும். |
03:58 | centroidஐ காட்ட, Define centroid tab.ஐ க்ளிக் செய்யவும். |
04:03 | Define centroid dialog box திறக்கிறது. |
04:07 | ஒரு centriodஐ உருவாக்க, structureல், 64 மற்றும்68, residueக்களை தேர்ந்தெடுக்கவும். |
04:14 | Define Centroid dialog boxல்; centriodன் பெயரை, centroid1 என டைப் செய்யவும். |
04:21 | முன்பு காட்டியபடி, color wellல் இருந்து, ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். |
04:26 | color editorஐ மூடவும். OK பட்டனை க்ளிக் செய்யவும். |
04:31 | தேர்ந்தெடுக்கப்பட்ட atomகளுக்கான centriod, panelலில் காட்டப்படுகிறது. |
04:36 | தேர்ந்தெடுப்பைclear செய்து, centroidஐ நீக்கவும். |
04:42 | Structure Measurements dialog boxஐ மூடவும். |
04:45 | Text மற்றும், arrowக்கள், போன்ற 2D-Labelகளையும், structureல் சேர்க்கலாம். |
04:52 | Tools menuல் இருந்து, Utilities optionஐ பயன்படுத்தி, 2D labels toolஐ தொடங்கவும். |
04:59 | Labelகள், Arrowக்கள் மற்றும், color keyக்கான tabகளுடன், 2D-Labels dialog-box திறக்கிறது. |
05:07 | Labelகளை சேர்க்க, Labels tabஐ க்ளிக் செய்யவும். |
05:11 | முன்னிருப்பாக, dialog box கடைசியின் அருகில் உள்ள, use mouse for label placement option தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
05:20 | color wellஐ க்ளிக் செய்யவும். Labelக்கு, ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். color editorஐ மூடவும். |
05:28 | Panelலில், labelஐ நீங்கள் வைக்க விரும்புகின்ற இடத்தை க்ளிக் செய்யவும். |
05:32 | X மற்றும்Y coordinateகளுடன் கூடிய, Label id, dialog-boxல் தோன்றுகிறது. |
05:38 | இப்போது, Text பகுதியில், label textஐ டைப் செய்யவும். |
05:42 | டைப் செய்க: Green Fluorescent Protein. Enterஐ அழுத்தவும். |
05:49 | உருவாக்கப்படுகின்றlabelஐ , இடது mouse பட்டனை இழுத்து, இடம் மாற்றலாம். |
05:56 | Labelஐ நீக்க, dialog-box ல், label idஐ தேர்ந்தெடுக்கவும். Delete பட்டனை க்ளிக் செய்யவும். |
06:05 | Arrowக்களை சேர்க்க, dialog-box ல், Arrows tabஐ க்ளிக் செய்யவும். |
06:10 | Dialog-boxகடைசியில், Arrow weight fieldல்; |
06:15 | arrowன் தடிப்பை மாற்ற, எண்ணை மாற்றவும். |
06:19 | மெல்லிய arrowஐ உருவாக்க, நான், 0.5 என டைப் செய்கிறேன். |
06:24 | Arrow head style பட்டனை க்ளிக் செய்யவும். Drop-down menuவில் இருந்து, ஒரு optionஐ தேர்வு செய்யவும். |
06:30 | நான் Pointyஐ தேர்வு செய்கிறேன். |
06:33 | Panelலில் cursorஐ வைக்கவும், mouse பட்டனை அழுத்திக் கொண்டே இருக்கவும். |
06:39 | Arrowஐ நீட்டிக்க, இழுக்கவும். Mouse பட்டனை விடவும். |
06:46 | அதன் நீளத்தை தகவமைப்படுத்த, அல்லது, மாற்ற, arrowன் இறுதி முனையை இழுக்கவும். |
06:54 | அதை நடுவில் இருந்து இழுத்து, arrowஐ நகர்த்தவும். |
06:58 | Arrow id க்கு பக்கத்தில் இருக்கின்ற, color well ஐ க்ளிக் செய்து, arrowன் நிறத்தை மாற்றவும். |
07:04 | ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். color editorஐ மூடவும். |
07:08 | 2D-Labels dialog-boxஐ மூடவும். File menuஐ பயன்படுத்தி, sessionஐ மூடவும். |
07:15 | ஒரு புது sessionஐ திறக்கவும். |
07:18 | per-model clipping;ஐ விளக்க, myoglobinனின் structureஐ நான் உதாரணமாக பயன்படுத்துகிறேன். |
07:25 | Command text boxல், டைப் செய்க: open 1mbo. Enterஐ அழுத்தவும். |
07:32 | Tools menuவில், கீழ் scroll செய்து, Depictionஐ தேர்ந்தெடுக்கவும். |
07:37 | Sub-menuவில் இருந்து, Per-Model clippingஐ க்ளிக் செய்யவும். |
07:42 | Per-Model clipping dialog-box திறக்கிறது. |
07:46 | Per-Model Clipping, வெவ்வேறு modelகளை, வெவ்வேறு வழிகளில் clip செய்ய அனுமதிக்கிறது. |
07:52 | அது, modelன், கண்ணுக்கு புலப்படுகின்ற, மற்றும் புலப்படாத, பாகங்களை பிரிக்கின்ற, ஒரு, ஒற்றை plane ஆகும். |
07:59 | ஒவ்வொரு modelஉம், ஒரே ஒரு, Per-Model Clipping planeஐ மட்டுமே கொண்டிருக்க முடியும். |
08:04 | ஒரு model, மற்றும், அதன் surface உம், தனித்தனி modelகளாக கருதப்படுகின்றன. |
08:09 | Panelக்கு திரும்பச் செல்லவும். Per-Model Clipping dialog-boxல் இருக்கின்ற, Model drop-down menu, தற்போதைய modelஐ காட்டுகிறது. |
08:18 | Enable clippingஐ தேர்ந்தெடுக்கவும். இது, clipping planeகளை செயல்படுத்துகிறது. |
08:25 | Modelன், கண்ணுக்கு புலப்படுகின்ற பாகம், planeக்கு பின்புறம் இருக்கிறது. Enable clipping.ஐ uncheck செய்யவும். |
08:33 | Modelக்கு, ஒரு surfaceஐ உருவாக்கவும். Actions menuஐ க்ளிக் செய்யவும். Surfaceக்கு scroll செய்யவும். Showஐ க்ளிக் செய்யவும். |
08:43 | இப்போது, Heme group, இறுக்கமாக கட்டுண்ட, ஒரு pocketஐ , structure, காட்டுகிறது. |
08:50 | Dialog-boxல், Model drop-down menu, இரண்டு modelகளை காட்டுகிறது. Model (1mbo), மற்றும், surface உடன் கூடிய model. |
09:00 | Surface உடன் கூடிய modelஐ தேர்ந்தெடுக்கவும். Enable clippingஐ க்ளிக் செய்யவும். |
09:06 | Panelஐ கவனிக்கவும். |
09:10 | Modelன், surface மட்டும், clip செய்யப்படுகிறது. |
09:14 | Use slab mode with thicknessஐ க்ளிக் செய்யவும். |
09:18 | Slabன் தடிப்பிற்கு ஏற்ப, modelன் பாகத்தை பார்க்க, இது அனுமதிக்கிறது. |
09:24 | Slabன் தடிப்பை, 0.5 க்கு மாற்றவும். |
09:28 | Text boxல், 0.5 என டைப் செய்து, enterஐ அழுத்தவும். Panelஐ கவனிக்கவும். |
09:37 | Dialog-boxல், Adjust clipping with mouseஐ க்ளிக் செய்யவும். |
09:43 | Translationக்கு, பட்டன் 2ஐயும், rotationக்கு, பட்டன் 3ஐயும், ஒதுக்கவும். |
09:51 | Surface capping பட்டனை க்ளிக் செய்யவும். |
09:55 | Surface capping dialog-box, Cap surfaces at clip planesஐ தேர்ந்தெடுக்கவும். |
10:02 | Use cap colorஐ க்ளிக் செய்யவும். |
10:05 | color wellல் இருந்து, ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கவும். |
10:09 | color editorஐ மூடவும். Cap styleஆக, solidஐ தேர்ந்தெடுக்கவும். Dialog-boxஐ மூடவும். |
10:18 | Chimera windowவில், Actions menuஐ பயன்படுத்தி, surfaceஐ , 20%வரை transparentஆக வைக்கவும். |
10:26 | Panelஐ கவனிக்கவும். Slab இப்போது, வண்ணம் பூசப்பட்டு, வெளிப்படையாக தெரிகிறது. |
10:33 | நடு mouse பட்டனை, அழுத்திக் கொண்டே இருக்கவும். Clipping planeஐ , ஒரே திசையில் நகர்த்த, mouseஐ இழுக்கவும். |
10:42 | Clipping planeஐ இடம் பெயர்க்க, வலது mouse பட்டனை, அழுத்திக் கொண்டே, mouseஐ இழுக்கவும். |
10:50 | Panelஐ கவனிக்கவும். Heme groupஐ கொண்டிருக்கின்றpocket, இப்போது மிகத் தெளிவாக தெரிகிறது. |
10:57 | சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது, Axisகள், Planeகள் மற்றும்Centroidகளை காட்டுவது. |
11:05 | 2D Labelகளை காட்டுவது. Arrowக்களை வரைவது. |
11:09 | Per-Model clipping toolஐ பயன்படுத்தி, modelஐ clip செய்வது. |
11:13 | பயிற்சியாக, Chymotrypsinனின், ஒரு modelஐ திறக்கவும். |
11:18 | Planeகளை வரையவும். Per-Model clipping toolஐ பயன்படுத்தி, structureஐ clip செய்யவும். |
11:24 | இந்த வீடியோ, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கிக் காணவும். |
11:32 | நாங்கள், ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:39 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
11:45 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி |