Scilab/C4/User-Defined-Input-and-Output/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Scilabல் , User defined input மற்றும் output குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
00:08 Input Function
00:10 Formatting the Output
00:12 save function
00:14 load function .
00:16 செயல் விளக்கத்திற்கு, நிறுவப்பட்ட Scilab பதிப்பு 5.3.3உடன் கூடிய, Ubuntu Linux 12.04 operating systemஐ நான் பயன்படுத்துகிறேன்.
00:26 உங்களுக்கு அடிப்படை Scilab பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:29 இல்லையெனில், அதற்கான Scilab மீதான ஸ்போகன் டுடோரியல்களுக்கு, spoken hyphen tutorial dot orgஐ பார்க்கவும்.
00:37 Userஇடம் இருந்து inputஐ எடுத்துக் கொள்ள, input() function பயன்படுத்தப்படுகிறது.
00:42 User inputக்கு, text stringல், ஒரு promptஐ இது கொடுக்கிறது.
00:47 அது keyboardல் இருந்து வரும் inputக்காக காத்திருக்கிறது.
00:51 Promptல், வெறும் carriage return enter செய்யப்பட்டால், input() function, ஒரு காலியான matrixஐ return செய்கிறது.
00:59 Input functionஐ இரண்டு வழிகளில் எழுதலாம்:
01:03 முதலாவது, x= input அடைப்புக்குறிகளினுள்"message to display"
01:09 இரண்டாவது, input அடைப்புக்குறிகளினுள்("message to display", "strings").
01:17 இரண்டாவது உதாரணத்தில், இரண்டாவது argument, “string” ஆகும்.
01:22 அதனால், keyboardஐ பயன்படுத்தி, enter செய்யப்பட்ட expression, character stringஆக outputல் இருக்கும்.
01:29 Scilab console windowக்கு மாறி, டைப் செய்க:
01:33 x is equal to input, இரட்டை மேற்கோள்களுக்குள் அடைப்புக்குறிகளுக்குள், Enter your age, பின் Enterஐ அழுத்தவும்.
01:49 டைப் செய்க: 25, பின் Enterஐ அழுத்தவும்.
01:53 இப்போது, டைப் செய்க: -->y is equal to input அடைப்புக்குறிக்குள், இரட்டை மேற்கோள்களினுள், Enter your age, இரட்டை மேற்கோள்களை மூடவும், comma, மீண்டும் இரட்டை மேற்கோள்களினுள் எழுதுக, string, அடைப்புக்குறியை மூடவும், பின் Enterஐ அழுத்தவும்.
02:14 டைப் செய்க: 25, பின் Enterஐ அழுத்தவும்.
02:18 இரண்டு வகையிலும், keyboard வழியாக நாம் செய்த input , எண் 25 ஆகும்.
02:25 இப்போது, x மற்றும் y, என்ன வகையான variable என்பதை சரி பார்ப்போம்.
02:30 clc commandஐ பயன்படுத்தி, consoleஐ clear செய்வோம்.
02:34 இரண்டாவது உதாரணத்தில் கொடுக்கப்பட்டுள்ள, argument “string”ன், முக்கியத்துவத்தையும், பயன்பாட்டையும் பரிசோதிக்க, இதை நாம் செய்கிறோம்.
02:42 Variableன் வகையை சரி பார்க்க, டைப் செய்க:
02:45 -->typeof அடைப்புக்குறிகளினுள் x, பின் Enterஐ அழுத்தவும்.
02:51 இவ்வாறே, typeof(y), பின் Enterஐ அழுத்தவும்.
02:57 xல் சேமிக்கப்படுகின்ற, முதல் பதில், constant வகையை சேர்ந்தது, மற்றும்
03:04 yல் சேமிக்கப்படுகின்ற, command ல் சேர்க்கப்பட்ட, argument “string”உடன் கூடிய, இரண்டாவது பதில், type stringஐ சேர்ந்தது என்பதை நீங்கள் காணலாம்.
03:12 Consoleலில் காட்டப்படும் outputஐ எப்படி format செய்வது என்பதை இப்போது காண்போம்.
03:17 இதை, mprintf() functionஐ பயன்படுத்தி, செய்யலாம்.
03:22 mprintf() function, Scilab consoleலில், dataஐ convert செய்து, format செய்து, எழுதுகிறது.
03:28 printf() functionனின், C-coded பதிப்பிற்கு, இது ஒரு interface ஆகும்.
03:34 இதற்கு, ஒரு உதாரணத்தை காண்போம். Consoleக்கு மாறவும்.
03:38 டைப் செய்க: -->mprintf அடைப்புக்குறிக்குள்,மேற்கோள்களினுள், டைப் செய்க: At iteration percent i comma Result is colon slash n alpha is equal to percentf comma 33 comma 0.535, அடைப்புக்குறியை மூடவும்.
04:12 இங்கு, percent i (%i)ன் இடத்தில் 33உம், percent f (%f)ன் இடத்தில், flowஆக, point 535 (0.535)உம் காட்டப்படும்.
04:26 இது, outputஆக, At iteration 33, Result is alpha is equal to 0.535000ஐ காட்டும்.
04:39 Consoleஐ clear செய்யவும். இப்போது, மற்றொரு உதாரணத்தை காண்போம்.
04:44 mprintf அடைப்புக்குறியை திறக்கவும், மேற்கோள்களை திறக்கவும், Value of x is equal to percentage d is taken as a CONSTANT comma while value of y is equal to percent s is taken as a STRING மேற்கோள்களை மூடவும், comma x comma y, அடைப்புக்குறியை மூடவும்.
05:19 மேற்கூறிய உதாரணத்தில், percentage d (%d), variable xல் சேமிக்கப்படும், ஒரு constant dataஐ சேர்க்க பயன்படுகிறது, மற்றும்
05:28 percentage s (%s), variable yல் சேமிக்கப்படும், ஒரு string dataஐ சேர்க்க பயன்படுகிறது. Outputஐ காண, Enterஐ அழுத்தவும்.
05:38 இப்போது, save மற்றும் load commandகளின் பயன்பாட்டை பற்றி விவாதிப்போம்.
05:43 ஒரு கணக்கீட்டின் பாதி வழியில், Scilabஐ விட்டு வெளியேற, மற்றும்,
05:47 பின்னர் ஒரு நிலையிலிருந்து தொடர, டைப் செய்க: save thissession.
05:52 இது, எல்லா variableகளின் தற்போதைய மதிப்புகளை, thissession, என்ற fileலில் சேமிக்கும்.
05:58 இந்த fileஐ edit செய்ய முடியாது.
06:01 இது, binary formatல் இருக்கிறது.
06:04 அடுத்த முறை, நீங்கள் Scilabஐ தொடங்கும் போது, load thissession என்று டைப் செய்தால்,
06:08 கணக்கீட்டை, விட்ட இடத்தில் இருந்து, மீண்டும் தொடங்கலாம்.
06:13 Save மற்றும் load functionகளின் நோக்கம் யாதெனில்,
06:16 Save() command, Scilabன் தற்போதைய variableகள் அனைத்தையும், ஒரு binary fileலில் சேமிக்கிறது.
06:22 Variable, ஒரு graphic handleஆக இருந்தால், save function, அதற்கு தொடர்புடைய எல்லா graphics_entityகளின் வரையறையை சேமிக்கிறது.
06:31 Fileஐ, அதன் path மூலமாகவோ, அல்லது, முன்னர் கொடுக்கப்பட்ட அதன் descriptor மூலமாகவோ கொடுக்கலாம்.
06:37 Filenameஆல் வரையறுக்கப்பட்ட ஒரு fileலில், save(filename), எல்லா தற்போதைய variableகளையும் சேமிக்கிறது.
06:45 descriptor fdஆல் வரையறுக்கப்பட்ட ஒரு fileலில், save into bracket fd, எல்லா தற்போதைய variableகளையும் சேமிக்கிறது.
06:53 save(filename,x,y) அல்லது save(fd,x,y), பெயரிடப்பட்ட variableகளான, x மற்றும் yஐ மட்டுமே சேமிக்கிறது.
07:02 Save மற்றும் load commandகளின் பயன்பாட்டை விளக்க, ஒரு உதாரணத்தை காண்போம்.
07:07 Consoleக்கு திரும்பவும். a, b என்ற இரண்டு matrixகளை வரையறுப்போம்.
07:14 -->a = eye of (2,2), பின் Enterஐ அழுத்தவும்.
07:22 டைப் செய்க: b=ones(a), பின் Enterஐ அழுத்தவும்.
07:28 clc commandஐ பயன்படுத்தி, consoleஐ clear செய்யவும். இப்போது, டைப் செய்க
07:34 save space matrix dash a dash b
07:42 அல்லது, இப்படியும், இதை எழுதலாம்.
07:46 save அடைப்புக்குறிக்குள்,மேற்கோள்களினுள், matrix dash a dash b dot dat மேற்கோள்களை மூடவும், comma a comma b அடைப்புக்குறியை மூடவும், பின் Enterஐ அழுத்தவும்.
08:03 இது, variableகளின் மதிப்புகளை, present working directoryல், 'matrix dash a dash b dot dat' (matrix-a-b.dat) என்ற binary fileலில் சேமிக்கிறது.
08:12 இந்த binary file இருக்கிறதா என்று, present working directoryஐ browse செய்து, நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
08:17 அதை இங்கு நீங்கள் காணலாம். நான் file browserஐ மூடுகிறேன்.
08:22 இப்போது, fileஐ, திரும்பி, variableகளுக்குள் load செய்வோம்.
08:26 அதற்கு முன்பு, a and b variableகளை clear செய்வோம்.
08:29 டைப் செய்க: clear a space b, பின் Enterஐ அழுத்தவும்.
08:34 இந்த variableகள் clear செய்யப்பட்டுவிட்டதா என்று குறுக்கே சரி பார்ப்போம்.
08:39 ->a , b
08:41 இப்போது, load commandஐ பயன்படுத்தி, binary fileகளில் இருந்து, மதிப்புகளை, a மற்றும் b variableகளில் load செய்வோம்.
08:49 டைப் செய்க: load அடைப்புக்குறிக்குள்,மேற்கோள்களினுள், matrix dash a dash b dot dat, மேற்கோள்களை மூடவும், comma, மேற்கோள்களினுள், a, comma, மேற்கோள்களினுள், b, அடைப்புக்குறியை மூடவும், பின் Enterஐ அழுத்தவும்.
09:08 a மற்றும் b variableகளின் மதிப்புகளை சரி பார்ப்போம். Consoleஐ clear செய்யவும்.
09:14 டைப் செய்க: -->a மற்றும்-->b
09:18 மதிப்புகள், variableகளினுள் திரும்பி load செய்யப்படுவதை நீங்கள் காணலாம்.
09:23 இந்த டுடோரியலில், நாம் கற்றது- input command ஐ பயன்படுத்தி Input function
09:28 mprintf command ஐ பயன்படுத்தி, output ஐ format செய்வது
09:31 save function
09:33 load function
09:35 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
09:38 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
09:41 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
09:46 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
09:48 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09:51 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
09:54 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:01 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
10:05 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
10:12 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
10:23 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது சண்முகபிரியா.

Contributors and Content Editors

Jayashree, Priyacst