Python-3.4.3/C2/Plotting-Charts/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 எல்லோருக்கும் வணக்கம். plotting charts குறித்த spoken tutorial நல்வரவு
00:06 இந்த டுடோரியலின் முடிவில், உங்களால் பின்வருவனவற்றை செய்ய இயலும்: pie chartகளை உருவாக்குவது, bar chart களை உருவாக்குவது மற்றும் matplotlib பற்றி அதிக தகவலை கண்டுபிடிப்பது
00:18 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system,
00:24 Python 3.4.3 மற்றும் IPython 5.1.0
00:31 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு பின்வருவனவற்றை செய்ய தெரிந்து இருக்கவேண்டும்: ipython consoleலில், அடிப்படை Python commandகளை run செய்வது,
00:39 Plot data மற்றும் fileகளில் இருந்து data வை load செய்வது
00:42 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள, அதற்கான Python டுடோரியல்களை பார்க்கவும்
00:47 முதலில் Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி, Terminal ஐ திறப்போம். இப்போது, ipython3 என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
00:58 'pylab' packageஐ initialise செய்வோம். %pylab என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
01:06 ஒரு pie chart என்பது எண் விகிதத்தை விளக்குவதற்கு, பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட வட்ட விளக்கப்படமாகும்.
01:12 pie() function னுக்கான syntax பின்வருமாறு: pie அடைப்புக்குறிக்குள் values comma labels equal to labels
01:22 இங்கு 'valueக்கள் plot செய்யப்பட வேண்டிய data ஆகும் மற்றும் labelகள் - pie chartல் உள்ள ஒவ்வொரு wedgeற்கான label ஆகும்
01:30 A நிறுவனத்தின் லாப சதவீதத்தைக் குறிக்கும் ஒரு pie chartஐ plot செய்யவும்
01:35 இந்த டுடோரியலின் code file இணைப்பில் உள்ள company-a-data.txt fileலில் இருந்து dataவை பயன்படுத்திக்கொள்ளவும்
01:43 data file ஒவ்வொரு columnயிலும் மதிப்புகளின் set உடன் இரண்டு columnகள் உள்ளன.
01:48 முதல் column ஆண்டுகளைக் குறிக்கிறது. இரண்டாவது column லாப சதவீதத்தைக் குறிக்கிறது.
01:55 ஒரு scatter plot ஐ உருவாக்க, முதலில் loadtxt command ஐ பயன்படுத்தி fileலில் இருந்து dataவை load செய்யவேண்டும்
02:03 terminalஐ clear செய்யவும். டைப் செய்க: year comma profit equal to loadtxt அடைப்புக்குறிக்குள் ஒற்றை மேற்கோள்களினுள் add the path of the file company-a-data.txt comma unpack equal to True, பின் Enter.ஐ அழுத்தவும்
02:28 unpack equal to True --> dataவின் transposed array ஐ return செய்கிறது
02:33 ஏதேனும் plotகள் முன்பு செயல்படுத்தப்பட்டிருந்தால், plot windowவை clear செய்ய, டைப் செய்க: 'clf அடைப்புக்குறியை திறக்கவும் மூடவும்
02:41 டைப் செய்க: pie(profit comma labels equal to year) பின் Enter.ஐ அழுத்தவும்
02:50 function pie() க்கு நாம் இரண்டு argumentகளை pass செய்தோம் என்பதை கவனிக்கவும்
02:55 முதலாவது values, அது நமது வழக்கில் profit ஆகும்
02:59 அடுத்தது, pie chartல் பயன்படுத்தப்படும் labelsகளின் set. இது நமது வழக்கில், year ஆகும்
03:05 வீடியோவை இங்கே இடைநிறுத்தவும்.பின்வரும் பயிற்சியை முயற்சிக்கவும் மற்றும் வீடியோவை மீண்டும் தொடங்கவும்.
03:11 ஒவ்வொரு wedgeக்கும் பின்வரும் வண்ணங்களைக் கொண்ட அதே dataவைக் கொண்ட pie chartஐ plot செய்யவும் . white, red, black, magenta,
03:19 yellow, blue, green, cyan,
03:21 yellow, magenta மற்றும் blue.
03:24 உங்களுடைய ipython interpreter, ல், pie question markஐ டைப் செய்ய முயற்சிக்கவும்
03:29 பயிற்சி 2க்கான தீர்வு. clf open and close parenthesesஐ டைப் செய்து, பின் Enterஐ அழுத்தி, plot window வை clear செய்யவும்
03:39 டைப் செய்க: pie inside parentheses profit comma labels equal to year comma colors equal to inside parentheses the color codes , பின் Enter.ஐ அழுத்தவும்
03:57 இது parameterகளில் குறிப்பிடப்பட்டுள்ள வண்ணம் கொண்ட ஒவ்வொரு wedgeஐயும் கொண்ட pie chartஐ காண்பிக்கும்.
04:04 bar chart என்பது செவ்வக barகளை கொண்ட ஒரு chart ஆகும். அவற்றின் நீளம் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகளுக்கு விகிதாசாரமாகும்.
04:12 bar chartக்கான syntax: bar inside parentheses x comma y. இங்கு x என்பது dataகளின் வரிசை, என்பது y dataகளின் வரிசை, இது xனுடைய அதே நீளத்தை கொண்டிருக்கிறது
04:28 A நிறுவனத்தின் லாப சதவீதத்தைக் குறிக்கும் bar chartஐ plot செய்யவும் .
04:33 company-a-data.txt fileலில் இருந்து dataவை பயன்படுத்திக்கொள்ளவும்
04:38 பயிற்சி 3க்கான தீர்வு. clf open and close parenthesesஐ டைப் செய்து, plot window வை clear செய்யவும்
04:47 டைப் செய்க: bar open and close parentheses year comma profit, பின் Enter.ஐ அழுத்தவும்
04:56 இது நிறுவனத்தின் A இன் லாப சதவீதத்தைக் குறிக்கும் bar chartஐ காண்பிக்கும்
05:02 படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு bar chart ஐ plot செய்யவும்: Hint: Bar chart நிரப்பப்படவில்லை மற்றும் அது 45o slanting line களால் hatch செய்யப்பட்டிருக்கிறது
05:13 company-a-data.txt fileலில் இருந்து chartக்கான data பெறப்படலாம்
05:19 Hint: உங்களுடைய ipython interpreter, ல், bar question markஐ டைப் செய்ய முயற்சிக்கவும்
05:25 பயிற்சி 4க்கான தீர்வு. clf open and close parenthesesவை டைப் செய்து, plot window வை clear செய்யவும்
05:33 டைப் செய்க: bar open and close parentheses year comma profit comma fill equal to False comma hatch equal to ஒற்றை மேற்கோள்களினுள் slanting line, பின் Enter.ஐ அழுத்தவும்
05:54 இது 45o சாய்ந்த கோடுகளுடன் நிரப்பப்படாத bar chartஐ காண்பிக்கும்.
06:02 matplotlib பற்றிய உதவியை matplotlib.sourceforge.net/contents.html இலிருந்து பெறலாம். மேலும் plotகளை பின்வரும் இணைப்புகளில் காணலாம்
06:18 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது: pie() functionஐ பயன்படுத்தி, pie chartஐ plot செய்வது,
06:28 bar() function ஐ பயன்படுத்தி, bar chart ஐ plot செய்வது,
06:31 மற்றும் matplotlib online உதவியை அணுகுவது
06:34 நீங்கள் தீர்க்க சில சுய மதிப்பீட்டு கேள்விகள் உள்ளன.
06:38 செங்குத்து கோடு hatching bar chartஐ உருவாக்க என்ன statementஐ வெளியிடலாம்?
06:45 விடை- bar x comma y comma fill is equal to False comma hatch is equal to a vertical line, செங்குத்து கோட்டுடன் கூடிய line hatchingஐ கொண்ட ஒரு bar chartஐ உருவாக்குவதற்கான சரியான தேர்வு ஆகும்.
07:00 இந்த மன்றத்தில் உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை முன்வைக்கவும்.
07:04 இந்த மன்றத்தில் Python பற்றிய பொதுவான கேள்விகளை முன்வைக்கவும்
07:09 FOSSEEகுழு TBC projectஐ ஒருங்கிணைக்கிறது
07:13 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
07:23 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree