OpenModelica/C2/Developing-an-equation-based-model/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:01 | Equationஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு modelஐ உருவாக்குவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
| 00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: OMEditல், ஒரு textual model ஐ எப்படி உருவாக்கி, simulate செய்வது. |
| 00:14 | Variableகள் மற்றும் equationகளை எப்படி declare செய்வது. |
| 00:17 | Simulation Setup toolboxஐ எப்படி பயன்படுத்துவது. |
| 00:21 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica பதிப்பு 1.9.2 மற்றும் Ubuntu Linux Operating System 14.04ஐ பயன்படுத்துகிறேன். |
| 00:32 | ஆனால், இந்த செயல்முறை, Windows , Mac OS X அல்லது ARM மீதான FOSSEE OS , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது. |
| 00:40 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, physical systemகளின், equationஐ அடிப்படையாகக் கொண்டmodeling தெரிந்து இருக்க வேண்டும். |
| 00:48 | Free fall due to gravityன் கீழ் இருக்கின்ற, mass 'm'ஐ கொண்ட, ஒரு பந்தின் இயக்கத்தை நாம் simulate செய்வோம். |
| 00:54 | பூமியின் மேற்பரப்பிலிருந்து, பந்து இருக்கின்ற உயரம், variable hஆல் குறித்துக் காட்டப்படுகிறது. |
| 00:59 | பந்தின் velocity, variable vஆல் குறித்துக் காட்டப்படுகிறது. |
| 01:04 | Acceleration due to gravity, gஆல் குறித்துக் காட்டப்படுகிறது, மேலும், அது ஒரு constantஆக கருதப்படுகிறது. |
| 01:10 | பூமியின் மேற்பரப்பிலிருந்து தள்ளி இயக்கப்படுகின்ற variableகள், positiveஆக கருதப்படுகின்றன. |
| 01:16 | தடையின்ற வீழ்கின்ற ஒரு bodyக்கான, equations of motion பின்வருமாறு: dh/dt = v , dv/dt = g |
| 01:27 | Time t = 0ல் hன் மதிப்பு, 30 m, மற்றும், Time t = 0ல் vன் மதிப்பு, 0 ஆகும். |
| 01:37 | இப்போது, OMEditக்கு செல்கிறேன். எனது கணிணியில், அதை நான் ஏற்கனவே நிறுவிவிட்டேன். |
| 01:43 | Ubuntu Linux Operating Systemல், OMEdit ஐ திறக்க, launcherல், மேல் இடது பக்கத்தில் தோன்றுகின்ற, Dash Home iconஐ க்ளிக் செய்யவும். |
| 01:53 | Search barல், டைப் செய்க: OMEdit |
| 01:56 | OMEdit iconஐ க்ளிக் செய்யவும். |
| 01:59 | OMEdit iconஐ க்ளிக் செய்த பின், இது போன்ற ஒரு windowஐ நீங்கள் காண்கிறீர்கள். |
| 02:06 | இந்த window, "Welcome perspective" எனப்படுகிறது. |
| 02:09 | முன்னிருப்பாக, OMEdit, "Welcome perspective"ல் திறக்கிறது. |
| 02:14 | கீழ் வலது மூலையில், ‘Welcome’, ‘Modeling’ மற்றும் ‘Plotting’ perspectivesக்கான பட்டன்களை நீங்கள் பார்க்கலாம். |
| 02:23 | ‘Modeling perspective’ஐ க்ளிக் செய்யவும். |
| 02:26 | ‘Modeling perspective’ இப்போது திறந்துவிட்டது. |
| 02:29 | இடப்பக்கத்தில் இருக்கும், Libraries Browser, கீழே இருக்கும், Messages Browser, மேலிருக்கும் Toolbarக்கு இடையே உள்ள பகுதியை, நான், modeling area என குறிப்பிடுவேன். |
| 02:41 | File operations, graphical view மற்றும்simulationக்கு தொடர்புடைய பட்டன்களை, toolbar கொண்டிருக்கிறது. |
| 02:51 | மேலும் செல்லச் செல்ல, இந்த பட்டன்களைப் பற்றி மேலும் கற்போம். |
| 02:55 | இப்போது, Spoken Tutorial webpageல், Code Files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ‘freeFall’ class fileஐ நாம் பயன்படுத்துவோம். |
| 03:02 | இந்த fileஐ download செய்து, உங்கள் கணிணியில் சேமித்துக் கொள்ளவும். |
| 03:07 | இந்த classஐ திறக்க, Menu barல் இருக்கின்ற File menuக்கு செல்லவும். |
| 03:13 | Open Model/Library Fileஐ க்ளிக் செய்யவும். |
| 03:17 | நீங்கள் download செய்து, உங்கள் கணிணியில் சேமித்த, freeFall fileஐ கண்டுபிடுத்து, அதை திறக்கவும். |
| 03:24 | ஒரு fileஐ திறக்க, என் cursor குறிக்கின்ற, Open Model/Library File என்று பெயரிடப்பட்ட toolஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
| 03:34 | FreeFall icon, Libraries Browserல் தெரிவதை கவனிக்கவும். |
| 03:39 | OMEditன் ஒரு அமர்வில், load செய்யப்பட்ட எல்லா classகளையும், Libraries Browser காட்டுகிறது. |
| 03:45 | FreeFall iconஐ ரைட்-க்ளிக் செய்து, View Classஐ தேர்ந்தெடுக்கவும். |
| 03:52 | Class, இப்போது, Diagram viewல் திறந்துவிட்டது. |
| 03:56 | Class, Diagram viewல் திறக்கவில்லையெனில் கவலைப்பட வேண்டாம். |
| 04:00 | வெவ்வேறு viewகளுக்கிடையே எப்படி மாறுவது என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன். |
| 04:04 | Modeling areaவின் மேலுக்கு செல்லவும். |
| 04:07 | இரண்டாவது பட்டன், Diagram viewக்கானது என்பதை கவனிக்கவும். |
| 04:10 | மூன்றாவது பட்டன், Text View ஆகும். |
| 04:13 | Text Viewக்கு மாற, அதை க்ளிக் செய்யவும். |
| 04:17 | Class, இப்போது, Text viewல் திறந்துவிட்டது. |
| 04:20 | முதல் பட்டன், Icon Viewக்கானது என்பதை கவனிக்கவும். |
| 04:24 | Icon view மற்றும்Diagram view ஐ பற்றி, அதிகமாக, பின்னர் கற்போம். |
| 04:29 | FreeFall என்று பெயரிடப்பட்ட ஒரு புது classஐயும் உருவாக்கி, அதற்கு தேவையான தகவலையும் நீங்கள் டைப் செய்யலாம். |
| 04:36 | ஒரு புது classஐ உருவாக்க, File menuக்கு செல்லவும். |
| 04:40 | New Modelica Classஐ தேர்ந்தெடுக்கவும். |
| 04:43 | காட்டப்பட்டுள்ளபடி, ஒரு dialog box தோன்றுகிறது. |
| 04:46 | இந்த dialog boxன் Name fieldல், டைப் செய்க: freeFall. |
| 04:51 | FreeFall class ஏற்கனவே OMEditல் திறந்துள்ளதால், freeFall1 என்ற ஒரு வேறுபட்ட பெயரை நான் பயன்படுத்துகிறேன். |
| 04:58 | இரண்டு classகள் ஒரே பெயரை கொண்டிருக்க முடியாது என்பதை கவனிக்கவும். |
| 05:03 | Specialization drop-down menuஐ க்ளிக் செய்யவும். Classஐ தேர்ந்தெடுக்கவும். Okஐ க்ளிக் செய்யவும். |
| 05:10 | ஒரு புது class உருவாக்கப்பட்டுள்ளது. |
| 05:13 | ஒரு புது classஐ திறக்க, New Modelica class என்று பெயரிடப்பட்ட toolஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
| 05:20 | Annotation sectionஐ நீக்குகிறேன். |
| 05:23 | இப்போது, தேவையான தகவலை இங்கு டைப் செய்து, இந்த classஐ நீங்கள் சேமிக்கலாம். |
| 05:29 | இந்த classஐ சேமிக்க, Menu barல் இருக்கின்ற File menuக்கு சென்று Saveஐ க்ளிக் செய்யவும். |
| 05:36 | இந்த fileக்கு தகுந்த ஒரு இடத்தை தேர்வு செய்து, சேமிக்கவும். |
| 05:41 | இப்போது, freeFall classஐ பயன்படுத்தி, Modelicaன், syntaxஐ புரிந்துகொள்வோம். |
| 05:47 | அதனால், freeFall classக்கு மாறவும். |
| 05:49 | Modelling areaவின் மேலுக்கு செல்லவும். FreeFall tabஐ க்ளிக் செய்யவும். |
| 05:54 | Modelicaவில் இருக்கின்ற programகள், classகளின் வடிவில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன. |
| 05:58 | Classன் முதல் வரி, அதன் பெயரை வரையறுக்கிறது. |
| 06:02 | இந்த class ன் பெயர், freeFall ஆகும். |
| 06:05 | Class எங்கு முடிவடைகிறது என்பதை குறிக்க, ஒவ்வொரு classஉம், ஒரு end statementஐ கொண்டிருக்கவேண்டும். |
| 06:11 | இந்த class, variable declarationகள் மற்றும் equationகளைக் கொண்டிருக்கிறது. |
| 06:15 | Variableகளை எப்படி declare செய்வது என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன். |
| 06:18 | Real, data-typeஐ வர்ணிக்கிறது. |
| 06:21 | h, பூமியின் மேற்பரப்பிலிருந்து, பந்து இருக்கும் உயரத்தை குறியீட்டுக்காட்டுகிறது. |
| 06:25 | Start, Real variableன் ஒரு பண்பாகும். |
| 06:29 | ஒவ்வொரு data-typeஉம், குறிப்பிட்ட சில பண்புகளை கொண்டிருக்கிறது. அவை, variableகளுக்கு தொடர்புடைய பயனுள்ள தகவலை குறிப்பிடுகின்றன. |
| 06:36 | Start பண்பு, variableன் initial மதிப்பை குறிப்பிடுகிறது. |
| 06:41 | hன் initial மதிப்பு, 30 unitகள் ஆகும். |
| 06:45 | Unit attribute, ஒரு variableன் unitஐ குறிப்பிடுகிறது. |
| 06:49 | hன் unit, metre ஆகும். |
| 06:52 | ஒவ்வொரு variable declarationஉம், ஒரு semi-colon.உடன் முடிய வேண்டும். |
| 06:57 | v, பந்தின் velocityஐ குறியீட்டுக்காட்டுகிறது. அது Real data-type. ஆகும். |
| 07:02 | vன் initial மதிப்பு, பூஜ்யம் ஆகும். அதன் unit, meter per second. ஆகும். |
| 07:09 | g, acceleration due to gravityஐ வர்ணிக்கிறது. அது Real data-type. ஆகும். அதன் unit, meter per second square ஆகும். |
| 07:18 | Parameter, simulation run ஆகும் போது, நிலையாக இருக்கின்ற ஒரு quantity ஆகும். |
| 07:24 | Simulation run ஆகும் வரையில், 9.81 மதிப்புடன், gன் மதிப்பு, நிலையாக இருக்கிறது. |
| 07:32 | குறியீடும் பழக்கத்தின் பயன்பாட்டால், negative குறி உள்ளது. |
| 07:36 | இரட்டை அடைப்புக்குறிகளினுள் இருக்கின்ற text, gன் declarationஉடன் எழுதப்பட்ட ஒரு comment ஆகும். |
| 07:42 | Commentகள், programஐ பற்றிய பயனுள்ள தகவலை கொடுக்கின்றன. ஆவணப்படுத்துவதற்கும், அவை பயன்படுகின்றன. |
| 07:49 | இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன். |
| 07:52 | Parameter, simulation run ஆகும் போது, நிலையாக இருக்கின்ற ஒரு quantity ஆகும். |
| 07:57 | Modelica, Real, Integer, Boolean மற்றும் String data-typeகளுக்கு ஆதரவு கொடுக்கிறது. |
| 08:03 | Start மற்றும்unit attributeகள், ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டன. |
| 08:07 | Min attribute, ஒரு variableன், குறைந்தபட்ச மதிப்பை குறிப்பிடுகிறது. |
| 08:10 | இவ்வாறே, Max attribute, ஒரு variableன், அதிகபட்ச மதிப்பை குறிப்பிடுகிறது. |
| 08:16 | OMEdit.க்கு திரும்பச் செல்கிறேன். |
| 08:19 | Equation, ஒரு classன், equation sectionனின் தொடக்கத்தை குறியிடுகிறது. |
| 08:25 | இது commentகளை சேர்ப்பதற்கான மாற்று வழியாகும். |
| 08:30 | ஒரு தடையின்றி விழுகின்ற bodyக்கான, நாம் முன்னரே விவாதித்த இரண்டு equations of motion, இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. |
| 08:38 | der(), time derivativeக்கான, Modelica function ஆகும். |
| 08:43 | அதனால், der(h), dh/dt.ஐ வர்ணிக்கிறது. |
| 08:48 | மற்றும், der(v), dv/dt.ஐ வர்ணிக்கிறது. |
| 08:52 | ஒவ்வொரு equationனும், ஒரு semi-colonஉடன் முடிய வேண்டும். |
| 08:57 | இந்த classஐ எப்படி simulate செய்வதென நான் உங்களுக்கு காட்டுகிறேன். |
| 09:00 | Toolbarல் இருக்கின்ற, simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
| 09:04 | Pop-up windowஐ மூடவும். |
| 09:07 | இந்த window, Plotting perspective எனப்படுகிறது. |
| 09:11 | ஒரு classஐ வெற்றிகரமாகsimulate செய்த பிறகு, Plotting perspective தானாகவே திறக்கிறது. |
| 09:17 | Variables browser, ஒரு classன், variableகள் மற்றும் parameterகளுக்கு தொடர்புடைய தகவலை காட்டுகிறது. |
| 09:24 | Unit மற்றும்Descriptionஎன்ற பெயருடைய columnகள் இருப்பதை கவனிக்கவும். |
| 09:29 | Unit பண்பை பயன்படுத்தி வரையறுத்த அதே unitகளை, variableகளுக்கு, unit column குறிப்பிடுகிறது. |
| 09:37 | Description column, இரட்டை அடைப்புக்குறிகளினுள், variable declarationகளுடன் கூடிய commentகளை காட்டுகிறது. |
| 09:45 | ஒரு plotஐ எப்படி உருவாக்குவதென காட்டுகிறேன். hஐ தேர்ந்தெடுக்கவும். |
| 09:51 | இது, y-axisல் hஐயும், x-axisல் timeஐயும் கூடிய, h with respect to timeன் plotஐ உருவாக்குகிறது. |
| 10:01 | முன்னிருப்பாக, simulation, நேரத்தின், 0ல் இருந்து 1 unit வரை செய்யப்படுகிறது. |
| 10:07 | Timeன் unit, மற்ற variableகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள, unitகளின் systemஐ பொருத்து இருக்கிறது. |
| 10:13 | h.ஐ de-select செய்கிறேன். |
| 10:17 | தேவையான plotகள் உருவாக்கப்பட்ட பிறகு, முடிவுகளை நீக்குதல், ஒரு நல்ல பழக்கமாகும். |
| 10:25 | இந்த முடிவை நீக்க, freeFallஐ ரைட்-க்ளிக் செய்து, Delete resultஐ தேர்ந்தெடுக்கவும். |
| 10:33 | முடிவு இப்போது நீக்கப்பட்டுவிட்டது. |
| 10:36 | Modeling perspectiveக்கு திரும்பச் செல்கிறேன். |
| 10:39 | கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Modeling பட்டனை க்ளிக் செய்யவும். |
| 10:43 | Modelicaவில், class, modelக்கு ஒத்ததாக பயன்படுத்தப்படுகிறது. |
| 10:48 | ஒரே விளைவை கொடுக்க, classக்கு பதிலாக, ஒருவர், modelஐ பயன்படுத்தலாம். |
| 10:54 | இப்போது, simulationக்கான, time intervalஐ எப்படி மாற்றுவது என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன். |
| 11:01 | Toolbarல் இருக்கின்ற, Simulation Setup பட்டனை க்ளிக் செய்யவும். |
| 11:06 | General tabன் கீழ், Stop time fieldஐ கண்டுபிடிக்கவும். அதை, 5 unitகளுக்கு மாற்றவும். |
| 11:14 | Simulateஐ க்ளிக் செய்யவும். தோன்றுகின்ற pop-up windowஐ மூடவும். |
| 11:21 | Variables browserல், மீண்டும், hஐ தேர்ந்தெடுக்கிறேன். |
| 11:26 | இது, h v/s time plotஐ உருவாக்குகிறது. |
| 11:29 | நேர இடைவெளி, 5 unitகளுக்கு அதிகமாகியிருப்பதை கவனிக்கவும். |
| 11:33 | ஆனால், hன் மதிப்பு, பூஜ்யத்திற்கும் கீழே சென்றிருப்பது, ஏற்றுக்கொள்ள முடியாததாகும். |
| 11:40 | பின்வரும் டுடோரியல்களில், இந்த பிரச்சனையை எப்படி திருத்துவது என்று கற்போம். |
| 11:45 | freeFallஐ ரைட்-க்ளிக் செய்து, Delete resultஐ தேர்ந்தெடுத்து, இந்த முடிவை நீக்குகிறேன். |
| 11:53 | கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Modeling perspectiveஐ க்ளிக் செய்து, Modeling perspectiveக்கு திரும்பச் செல்லவும். |
| 11:59 | Equationகளின் எண்ணிக்கையும், variableகளின் எண்ணிக்கையும், சமமாக இருக்க உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். |
| 12:07 | இந்த class, இரண்டு variableகளையும், இரண்டு equationகளையும், கொண்டிருக்கிறது. |
| 12:11 | இப்போது, என்ன நடக்கிறது என்று பார்க்க, முதல் equationஐ நீக்கி, இந்த classஐ simulate செய்கிறேன். |
| 12:18 | நான் முதல் equationஐ நீக்கிவிட்டேன். |
| 12:21 | FreeFall tabல், class பெயரின் அருகில், ஒரு நட்சத்திரம் தோன்றுவதை கவனிக்கவும். |
| 12:28 | இது, classன், சேமிக்கப்படாத மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது. |
| 12:31 | அதனால், மாற்றம் செய்த பிறகு, ஒரு classஐ சேமிப்பது நல்ல பழக்கமாகும். |
| 12:38 | இந்த classஐ சேமிக்க, File menuக்கு சென்று, Saveஐ க்ளிக் செய்யவும். |
| 12:44 | ஒரு fileஐ சேமிக்க, எனது cursor சுட்டிக்காட்டுகின்ற, toolbarல் இருக்கின்ற Save பட்டனையும் நீங்கள் பயன்படுத்தலாம். |
| 12:53 | இப்போது, Simulate பட்டனை க்ளிக் செய்து, இந்த classஐ simulate செய்கிறேன். |
| 12:59 | Messages browserல், ஒரு error message, தோன்றுவதை கவனிக்கவும். |
| 13:04 | மிகக் குறைவான equationகள் இருக்கின்றன, மேலும், model, 1 equation ஐயும், 2 variableகளையும் கொண்டிருக்கிறது. அதனால், இதை simulate செய்ய முடியாது என்று அது கூறுகிறது. |
| 13:14 | Equationஐ திரும்பி, அதன் இடத்தில் புகுத்தி, toolbarல் இருக்கின்ற Save பட்டனை க்ளிக் செய்கிறேன். |
| 13:24 | இந்த classஐ simulate செய்ய, மீண்டும் Simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
| 13:29 | Equationகளின் எண்ணிக்கையும், variableகளின் எண்ணிக்கையும், சமமாக இருப்பதால், class, வெற்றிகரமாகsimulate செய்கிறது என்பதை கவனிக்கவும். |
| 13:37 | Pop-up windowஐ மூடவும். |
| 13:40 | Slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
| 13:43 | “der()”, time derivativeக்கான, Modelica function ஆகும். |
| 13:48 | Equationகளுக்கு, எந்த data flow திசையும் இல்லை. |
| 13:52 | உதாரணத்திற்கு, der(h) = vஐ , v = der(h) எனவும் எழுதலாம். |
| 14:00 | Initial equations section, initial conditionகளை enter செய்ய, பயன்படுத்தப்படுகிறது. |
| 14:05 | Initial equationஐ பற்றி, பின்னர், அதிகமாகக் கற்போம். |
| 14:10 | பயிற்சியாக, differential equation dx/dt = -a into x ஐ simulate செய்ய, ஒரு modelஐ எழுதவும். இங்கு, a = 1, x, Rஐ சேர்ந்தது, மற்றும், time t=0ல், xன் மதிப்பு, 5 ஆகும். |
| 14:28 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
| 14:31 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
| 14:37 | நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்; சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
| 14:43 | Spoken Tutorial Projectக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
| 14:49 | OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவின் ஆதரவிற்கு, நாங்கள் நன்றி செலுத்துகிறோம். |
| 14:53 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி |