OpenFOAM/C3/Introduction-to-SnappyHexMesh/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 Introduction to snappyHexMesh in OpenFOAM குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் OpenFOAMல், Meshஐ உருவாக்க, snappyHexMeshல் இருக்கும் parameterகளைப் பற்றி கற்கப்போகிறோம்.
00:14 முன்நிபந்தனையாக userக்கு பின்வருவனவை தேவை: case directoryன், constant/trisurface sub-directoryயினுள் இருக்கின்ற, STL formatல் இருக்கும் surface data fileகள். Hex meshஐ கொண்ட ஒரு domain. Caseன், system sub-directoryயினுள் இருக்கின்ற, snappyHexMeshDict dictionary.
00:35 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.04, OpenFOAM பதிப்பு, 2.1.1, ParaView பதிப்பு 3.12.0, Salome பதிப்பு 6.6.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:50 snappyHexMesh utilityஐ வைத்து, ஒரு meshஐ உருவாக்கக் கற்போம்.
00:55 அதற்கான படிகள் பின்வருகின்றன: படி1: blockMesh utilityஐ பயன்படுத்தி ஒரு base meshஐ உருவாக்குவது, படி2: base mesh refine செய்வது, படி3: பயன்படுத்தப்படாத cellகளை நீக்குவது, படி4: Surfaceக்கு Snap mesh செய்வது, படி5: Layerகளை சேர்ப்பது
01:18 Terminalஐ திறந்து, கட்டப்பட்டுள்ளபடி, flange க்கான pathஐ enter செய்வோம். டைப் செய்க, cd space OpenFOAM-2.2.2/tutorials/mesh/snappyHexMesh/flange. பின், Enterஐ அழுத்தவும்.
01:40 இப்போது, டைப் செய்க, ls. பின், Enterஐ அழுத்தவும். Constant மற்றும்systemஎன்று இரண்டு folderகள் இருக்கின்றன.
01:50 டைப் செய்க, cd space system. பின், Enterஐ அழுத்தவும்.
01:55 இப்போது, டைப் செய்க, ls. பின், Enterஐ அழுத்தவும். நீங்கள் snappyHexMeshDict fileஐ காணலாம்.
02:04 Fileன் contentஐ பார்க்க, டைப் செய்க:- gedit space snappyHexMeshDict , பின், Enterஐ அழுத்தவும். ( H, M மற்றும்D, capital எழுத்துக்களாக இருப்பதை கவனிக்கவும்).
02:19 இது snappyHexMeshDict fileஐ திறக்கும்.
02:23 SnappyHexMeshDict file, எல்லா வழிமுறைகளையும் கொண்டிருக்கிறது, மற்றும், இந்த fileஐ சுற்றியே முழு செயல்முறையும் அமைந்துள்ளது.
02:32 SnappyHexMeshDictன் முதல் rowக்களை வைத்து, செயல்முறையின் பிரிவுகளை நீங்கள் செயல்படுத்த அல்லது தவிர்க்கலாம்.
02:40 Geometry பிரிவில், செயல்முறையில் பங்கெடுத்துக்கொள்ளும் எல்லா active பகுதிகளையும் வரையறுக்கலாம்.
02:50 Cellஐ split செய்யும் செயல்முறையை ஆளுகின்ற parameterகள், castellatedMeshControls பிரிவில் விளக்கப்பட்டுள்ளன.
02:58 கீழே பட்டியலிடப்பட்டுள்ள parameterகள், snappyHexMeshDict fileலில் நன்றாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருrefinement நிலைக்கும் nCellsBetweenLevels, cellகளின் எண்ணிக்கையை வரையறுக்கிறது.
03:12 அது அதிகமாக இருக்க, meshஉம் அதிக படிப்படியாக இருக்கும்.
03:17 Explicit feature edge refinement பிரிவில், geometryன் feature edgeகளுக்கு, குறிப்பிட்டrefinement நிலைகளை நீங்கள் set செய்யலாம். surfaceFeatureExtract utilityஐ வைத்து, ".eMesh" fileஐ பெறலாம்.
03:34 Surface-based refinement பிரிவில், geometry fileலில் வரையறுக்கப்பட்டிருக்கும் எல்லாsurface களுக்கும் நீங்கள் refinement நிலைகளை set செய்யலாம்.
03:45 Mesh selection ஒரு முக்கியமானparameter ஆகும். Geometry fileலில் விளக்கப்பட்டுள்ள surfaceன் உள் தேர்வு செய்யப்பட்டpoint இருந்தால், பின், snappyHexMesh, உட்புற meshஐ உருவாக்கும்.
03:59 இல்லையெனில், வெளிப்புற பகுதி (அதாவது, blockMesh ன் உள்ளே) mesh செய்யப்படுகிறது.
04:04 அடுத்த படி, cell vertex pointகளை surface geometry க்கு நகர்த்துவதாகும்.
04:12 Snapping செயல்முறை, நான்கு parameterகளினால் செய்யப்படுகிறது: nSmoothPatch, tolerance, nSolveIter, nRelaxIter.
04:23 இந்த parameterகள், mesh மற்றும் STL surfaceக்கு இடையே உள்ள tolerance மற்றும் iterationகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.
04:32 வெளிப்புறம்(அதாவது, boundary wall) எத்தனை முறை iterate செய்யப்பட வேண்டும் என்பதை nSmoothPatch option குறிப்பிடுகிறது. Iterationகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், mesh, அதிக மென்மையாகிவிடும் .
04:46 Program பார்க்க வேண்டிய, snap செய்வதற்கான pointஐ , tolerance option குறிப்பிடுகிறது. தூரம், toleranceல் ஒரு எண்ணாக இருக்கும்.
04:58 SnappyHexMesh ன், snapping பகுதி, எத்தனை முறை run செய்யப்பட வேண்டும் என்பதை, nSolveIter option குறிப்பிடுகிறது.
05:07 கெட்ட mesh pointகளை நீக்குகின்ற ஒரு relaxing script ஐ , mesh, எத்தனை முறை run செய்யவேண்டும் என்பதை, nRelaxIter option குறிப்பிடுகிறது.
05:19 Mesh layerஐ சேர்க்கின்ற செயல்முறையில், boundaryல் இருந்து இருக்கின்ற meshஐ சுருக்குவது, மற்றும், cellகளின் layerகளை புகுத்துவதும் உள்ளடங்கும்.
05:27 முதல் group parameterகள், தாங்கள் இணைக்கப்படப்போகும்surface மற்றும் layerகளின் dimensionகளை வரையறுக்கின்றன.
05:36 RelativeSizes option ( அதாவது, true அல்லதுfalse), அடுத்து கொடுக்கப்பட்டுள்ள parameterகளை படிப்பதற்கான வழியை மாற்றுகிறது. true: அடுத்த parameterகள், layerன் dimensionகளை parameterகளாக வரையறுக்கிறது. false: அடுத்த parameterகள், layerன் dimensionகளை நேரடியாக வரையறுக்கிறது.
05:55 Layers optionல், layerகளின் எண்ணிக்கையையும், layerகளை இணைக்கவேண்டிய patchகளின் எண்ணிக்கையையும் நீங்கள் வரையறுக்கலாம். geomery sub-menuல், அது ஒரு STL (Bold text) patchஆக இருக்க வேண்டும், ஒரு user defined பகுதியாக அல்ல.
06:10 ExpansionRatio, layerகளின் growth factorஐ set செய்கிறது(அதாவது, இரண்டு அடுத்தடுத்து உள்ள layerகளுக்கு இடையே உள்ள ratio) .
06:19 FinalLayerThickness parameter, கடைசி layerன் தடிப்பைset செய்கிறது. MinThickness parameter, குறைதபட்சமாக அனுமதிக்கக்கூடிய layerன் தடிப்பைset செய்கிறது.
06:34 Advanced settings, parameterகளின் இரண்டாவதுgroup ஆகும். Layerஐ உருவாக்குவதில் உதவக்கூடிய குறிப்பிட்ட controlகளை அதிகமாக இது கொண்டிருக்கிறது.
06:45 எந்த angleக்கு மேல் surfaceஐ நீட்டிக்க முடியாதோ, அதுவே FeatureAngle எனப்படுகிறது.
06:52 ஒரு relaxing script ஐ , mesh, எத்தனை முறை run செய்யும் என்பதை nRelaxIter option குறிப்பிடுகிறது.
07:00 அதிகபட்சமாக அனுமதிக்கக்கூடிய aspect ratioன் மதிப்பை, maxFaceThicknessRatio option குறிப்பிடுகிறது.
07:10 Snap மற்றும்add-layers பகுதிகளில், meshஐ உருவாக்க, குறைந்தபட்ச தொடக்க நிலைகளைmeshQualityControls parameter set செய்கிறது.
07:18 99% caseகளில், default மதிப்புகளை அப்படியே விடுவது சிறந்தது. ஆனால், சில நேரங்களில், meshஐ கட்டாயமாக உருவாக்க, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட controlகளை நீங்கள் deactivate செய்யலாம்.
07:30 இவையே, snappyHexMeshDictல் இருக்கின்ற வேறுபட்ட parameterகள் ஆகும். snappyHexMesh utilityஐ பயன்படுத்தி, meshஐ உருவாக்க, இந்த parameterகள் முக்கியமாகும்.
07:40 சுருங்கச் சொல்ல.
07:42 இந்த டுடோரியலில், OpenFoamல், meshஐ உருவாக்க, snappyHexMeshல் இருக்கின்ற வேறுபட்ட parameterகளை கற்றோம்.
07:50 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
08:03 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
08:21 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
08:37 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது பத்மலோச்சினி.

Contributors and Content Editors

Jayashree, Priyacst