OpenFOAM/C3/Importing-mesh-file-in-OpenFOAM/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | OpenFOAMல் mesh fileகளை import செய்வது குறித்தspoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், OpenFOAMல், meshing softwareல் இருந்து, Mesh fileகளை import செய்ய கற்பீர்கள். |
00:14 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.04, OpenFOAM பதிப்பு, 2.1.1, ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன். |
00:26 | முன்நிபந்தனையாக, userக்கு, Gambit, Ansys ICEM , CFX, Salome போன்ற softwareகளில் ஒரு Meshஐ எபப்டி உருவாக்குவது என்று தெரிந்து இருக்க வேண்டும். |
00:40 | BlockMeshஐ பயன்படுத்தி, நாம் எளிய geometryகளை சுலபமாக செய்யலாம். உதாரணத்திற்கு- box, pipe போன்றவை. BlockMeshஐ பயன்படுத்தி, சிக்கலான களை உருவாக்குவது கடினமானது. |
00:53 | மூன்றாம் தரப்பு meshing softwareல் இருந்து, meshஐ import செய்வதற்கு, OpenFOAM ஆதரவு அளிக்கிறது. இந்த mesh fileகளை import செய்வதற்கு, OpenFOAM ல் commandகள் உள்ளன. |
01:05 | இப்போது, இந்த fileகளை import செய்யக் கற்போம். |
01:08 | நமது caseன் geometry இதோ. நம்மிடம் ஒரு சதுர cylinder உள்ளது: நீளம் 1m, மற்றும் உயரம் 1m. Inlet velocity, 1 m/s ஆகும். |
01:22 | இதை, Reynolds Number (Re) = 100க்கு நாம் தீர்க்கிறோம். தேர்வு செய்யப்பட்ட domain, 40m by 60m ஆகும். Boundary conditionகள், வரைபடத்தில் காட்டாப்பட்டுள்ளபடி இருக்கின்றன. |
01:36 | இது, ஒரு meshing softwareல் உருவாக்கப்பட்ட, mesh file ஆகும். |
01:40 | உங்கள் OpenFOAM working directory ல், icoFoam solverக்கு சென்று, அதை க்ளிக் செய்யவும். |
01:47 | இப்போது, cylinder என்ற பெயருடைய folderஐ உருவாக்கவும். |
01:52 | இப்போது, cavity caseக்கு செல்லவும். Cavity caseல் இருந்து, '0' (zero) மற்றும் systemகளை copy செய்யவும். |
01:59 | இதை, cylinder folderயினுள் paste செய்யவும். Constant folder, உங்களுக்கு தேவை இல்லாமல் இருப்பதை கவனிக்கவும். |
02:10 | எனது desktopல், .(dot) msh நீட்டிப்புடன் கூடிய ஒரு Fluent mesh fileஐ நான் கொண்டுள்ளேன். அது, cylmesh.msh என பெயரிடப்பட்டுள்ளது. |
02:23 | இந்த fileஐ , icoFoamல், cylinder folderயினுள் copy மற்றும் paste செய்யவும். நமது set up, இப்போது தயாராக உள்ளது. |
02:32 | Command terminalஐ திறக்கவும். டைப் செய்க, run, பின், Enterஐ அழுத்தவும். |
02:37 | டைப் செய்க: cd space tutorials, பின், Enterஐ அழுத்தவும். |
02:42 | டைப் செய்க: cd space incompressible, பின், Enterஐ அழுத்தவும். டைப் செய்க: cd space icoFoam, பின், Enterஐ அழுத்தவும். டைப் செய்க: cd space cylinder, பின், Enterஐ அழுத்தவும். |
02:58 | Fluent mesh fileக்கு, command terminalலில் டைப் செய்க: "fluentMeshToFoam" ( இங்குM,T மற்றும்F, capital ஆக இருப்பதை கவனிக்கவும்) (space) "cylmesh.msh", பின், Enterஐ அழுத்தவும். |
03:20 | Terminalலில், mesh file, இப்போது, openFoam data fileஆக மாறியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். |
03:28 | இப்போது, cylinder folderக்கு செல்லவும். |
03:31 | Constant folder உருவாக்கப்பட்டுவிட்டது. அதை திறக்க constant folderஐ க்ளிக் செய்யவும். |
03:38 | Transport Property file, constant folderல் இல்லை. |
03:42 | இரண்டு நிலைகள் பின்னால் சென்று, cavity caseன் , constant folderல் இருந்து, transport propertyஐ copy செய்யவும். |
03:53 | நாம் தற்போது உருவாக்கிய cylinderன் constant folderயினுள், இதை paste செய்யவும். நாம் முன்னிருப்பு viscosityஐ அப்படியே வைப்போம். |
04:05 | Terminalக்கு திரும்பவும். |
04:08 | இங்கு blockMesh commandஐ நாம் run செய்வதில்லை என்பதை கவனிக்கவும். Mesh fileலில் உள்ள boundary conditionகளை பார்க்க, |
04:15 | Constant > polyMeshக்கு செல்லவும். டைப் செய்க: ls. நீங்கள் boundary fileஐ காண்பீர்கள். |
04:25 | உங்களுக்கு விருப்பமான editorல் அதை திறக்கவும். |
04:30 | Geometry slideல் காட்டப்பட்டுள்ளபடி, boundary condition பெயர்கள் இருக்கின்றன. |
04:36 | Boundary name களில் ஏதேனும் பிழை இருந்தால், boundary fileஐ நீங்கள் பார்க்கலாம். இதை மூடவும். |
04:45 | Terminalலில், இரண்டு நிலைகள் பின்னால் சென்று, '0' (zero) folderக்கு செல்லவும். |
04:52 | '0' (zero) folderலில் இருக்கின்ற, pressure fileஐ திறக்கவும். |
04:57 | Boundary fileகளுடன், boundary பெயர்கள் துல்லியமாக ஒத்துப்போக வேண்டும் என்பதை கவனிக்கவும். இந்த fileஐ மூடவும். |
05:08 | ஒரு நிலை பின்னால் சென்று, system folderக்கு செல்லவும். |
05:15 | ControlDict fileஐ திறக்கவும். |
05:18 | ControlDict fileன் end timeஐ நாம் மாற்றுவோம். இதை மூடவும். |
05:25 | ஒரு நிலை பின்னால் செல்லவும். Iterationகளை தொடங்க, டைப் செய்க: "icoFoam", பின், Enterஐ அழுத்தவும். ஓடிக்கொண்டிருக்கின்றiterationகள், terminalலில் தெரியும். |
05:39 | Geometryஐ பார்க்க, டைப் செய்க: paraFoam, பின், Enterஐ அழுத்தவும். ParaView windowவில், object inspector menuவில் இருக்கும், Apply பட்டனை க்ளிக் செய்யவும். |
05:53 | நீங்கள் Geometryஐ காணலாம். Active variable control menuல், solid colorல் இருந்து, 'U' velocityக்கு மாற்றவும். |
06:03 | Initial velocity condition இங்கு தெரிகிறது. |
06:08 | மேல் வலது பக்கத்தில், VCR menuல் இருக்கும், play பட்டனை க்ளிக் செய்யவும். |
06:15 | நேரம் கடந்து செல்லச் செல்ல, velocity contourகளை நாம் காணலாம். |
06:20 | Paraview windowஐ மூடவும். |
06:23 | வேறு meshing software'ல் இருந்து, geometryஐ import செய்ய, தேவையான commandகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ANSYS : ansysToFoam space <filename>,IDEAS : ideasTofoam space <filename>, CFX : cfxToFoam space <filename>, SALOME : ideasUnvToFoam space <filename>. இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
06:54 | பயிற்சியாக- ஒரு வட்ட cylinderன் mesh fileஐ import செய்ய முயற்சிக்கவும். இந்த டுடோரியலில், circcyl.msh என்ற பெயருள்ளMesh file, கொடுக்கப்பட்டுள்ளது. IcoFoam' solverஐ பயன்படுத்தி, அதை தீர்க்கவும். |
07:12 | இந்த டுடோரியலில் வேறு meshing softwareகளில் இருந்து, geometryஐ import செய்யக் கற்றோம். |
07:18 | இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
07:30 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
07:46 | Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
08:03 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி |