OpenFOAM/C2/Installing-Running/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 OpenFOAM மற்றும் paraView ஐ , நிறுவி, run செய்வது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், நான் உங்களுக்கு காட்டப்போவது:
00:11 OpenFOAM , Paraviewஐ , எப்படி நிறுவி, run செய்வது, மற்றும்
00:15 ஒரு Lid driven cavity caseஐ எப்படி தீர்ப்பது.
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு 10.04,
00:26 OpenFOAM பதிப்பு 2.1.0, ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:33 OpenFOAM, 'Windows' platform ல், run செய்யாது என்பதை கவனிக்கவும்.
00:37 மேலும், OpenFOAM v 2.1.0, Ubuntu பதிப்பு 10.04, மற்றும், அதற்கு மேலானவற்றிற்கும் ஆக இருக்கிறது என்பதை கவனிக்கவும்.
00:45 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Computational Fluid Dynamics, மற்றும், Linux commandகள் பற்றிய அடிப்படை,
00:52 தெரிந்து இருக்க வேண்டும்.
00:55 OpenFOAMஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
00:57 அது ஒரு, Open Source Computational Fluid Dynamics Software ஆகும்.
01:02 2 dimensionகள், மேலும், 3 dimensionகளைக் கொண்ட, CFD சிக்கல்களை தீர்ப்பதற்கு, அதிக வகை solverகளை,
01:08 இது கொண்டிருக்கிறது.
01:11 இப்போது, Paraviewஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
01:14 OpenFOAM ல், பெற்ற முடிவுகளை, காட்சிப்படுத்த, இது பயன்படுத்தப்படுகிறது.
01:19 Synaptic package managerன் மூலம், OpenFOAM மற்றும் paraView ஐ நிறுவலாம்.
01:24 Synaptic Package Managerக்கு, System > Administration > Synaptic Package Managerக்கு செல்லவும்.
01:33 உங்கள் passwordஐ டைப் செய்யவும்.
01:41 Search Boxல், டைப் செய்க: "OpenFOAM".
01:49 நீங்கள், openfoam மற்றும் paraViewவையும் காணலாம்.
01:54 நிறுவுதலுக்கு, அவை இரண்டையும்mark செய்யவும்.
02:06 பின், நிறுவ, Applyஐ க்ளிக் செய்யவும்.
02:12 நிறுவுதலுக்கு, அது சிறிது நேரம் எடுக்கலாம்.
02:15 OpenFOAM மற்றும்Paraview, நிறுவப்பட்டுவிட்டது.
02:21 Synaptic Package Managerபற்றிய மேலும் விவரங்களுக்கு,
02:25 இந்த URLலில் இருக்கின்ற, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்
02:29 மாறாக, இந்த URLலில் இருக்கின்ற, openfoam வலைத்தளத்தில் இருந்தும், நீங்கள் OpenFOAM மற்றும்Paraviewஐ நிறுவலாம்
02:38 நான் browserஐ திறக்கிறேன்.
02:45 Browser URLலில்,டைப் செய்க: http://www.openfoam.com/download. பின், Enter.ஐ அழுத்தவும்.
03:10 Scroll-down செய்து, Ubuntu Deb packக்கு செல்லவும். இதை பெரிதாக்குகிறேன்.
03:23 "Ubuntu Deb Pack Installation"க்கு சென்று, அதை க்ளிக் செய்யவும்.
03:33 சிறிதாக்குகிறேன். Scroll-down செய்து, Installationக்கு செல்லவும்.
03:40 நிறுவுதலின் முதல் pointல் இருந்து,
03:43 இந்த command lineஐ copy செய்து,
03:46 அதை, terminal windowவில் paste செய்யவும்.
03:49 ஒரு terminal windowஐ திறக்க,
03:52 உங்கள், keyboardல், Ctrl, Alt மற்றும் t keyகளை ஒன்றாக அழுத்தவும், அல்லது,
03:59 Applications > Accessories > Terminalக்கு செல்லவும்.
04:06 ஒரு terminal windowஐ திறக்கவும்.
04:10 இப்போது, இந்தcommand lineஐ copy செய்து, அதை, terminal windowவில் paste செய்யவும்.
04:20 "lsb_release -cs"க்கு பதிலாக,
04:26 நீங்கள் பயன்படுத்துகின்ற, Linux பதிப்பின் பெயரை வைக்கவும்.
04:30 Browserக்கு திரும்பவும். Installationக்கு மேல், வெவ்வேறுUbuntu பதிப்புகள், மற்றும், code பெயர்களை நீங்கள் காணலாம்.
04:40 நான் Linux 10.04 ஐ பயன்படுத்துவதால்,
04:45 நான், "lsb_release -cs"க்கு பதிலாக, "lucid"ஐ வைக்கிறேன்.
04:53 Terminal windowஐ திறக்கவும்.
04:55 இதற்குப் பதிலாக, "lucid"ஐ வைக்கிறேன். பின், Enter.ஐ அழுத்தவும்.
05:04 இங்கு, நிறுவுதல் முழுமை பெறவில்லை என்பதை கவனிக்கவும்.
05:08 1-2-3 மற்றும் 4, என்ற
05:10 வரிசைமுறையை நீங்கள் பின்பற்றினால், OpenFOAM மற்றும்Paraviewன் நிறுவுதல் முடிந்துவிடும்.
05:19 சிறிது நேரத்திற்கு முன்பு, Synaptic Package Managerன் மூலம், OpenFOAM மற்றும் Paraviewஐ நான் ஏற்கனவே நிறுவிவிட்டேன்.
05:27 இப்போது, நிறுவப்பட்ட softwareஐ நாம் configure செய்ய வேண்டும்.
05:31 இதைச் செய்ய, bash fileஐ நாம் edit செய்ய வேண்டும்.
05:35 ஒரு புது, command terminalஐ திறக்கவும்.
05:39 Command terminalலில் டைப் செய்க: "gedit ~/.bashrc". பின், Enterஐ அழுத்தவும்.
05:50 இது bash fileஐ திறக்கும்.
05:54 இதை, capture areaக்கு இழுக்கிறேன். Bash fileன் கீழ் வரை, scroll-down செய்யவும்.
06:05 இப்போது, browserக்கு திரும்பவும்.
06:09 Scroll-down செய்து, User Configrationக்கு திரும்பவும்.
06:13 இரண்டாவது pointஐ பார்க்கவும்.
06:15 இந்த வரியை copy செய்து, அதை bash fileன் கடைசியில்paste செய்யவும்.
06:25 அதை சேமித்து, bash fileஐ மூடவும்.
06:31 இப்போது, நிறுவப்பட்ட applicationஐ நாம் சோதிக்க வேண்டும்.
06:35 இதைச் செய்ய, ஒரு புது, command terminalஐ திறக்கவும்.
06:40 இதை, capture areaக்கு இழுக்கிறேன்.
06:49 Command terminalலில் டைப் செய்க: "icoFoam"( இங்கு, 'F' capitalஆக இருப்பதை கவனிக்கவும்) space -(dash) help
06:59 பின், Enterஐ அழுத்தவும்.
07:03 Usage message ஒன்று தோன்றும்.
07:06 OpenFoamஐ தொடங்க, இப்போது நீங்கள் தயாராக உள்ளீர்கள்.
07:10 இப்போது, ஒரு working directoryஐ எப்படி set செய்வது என காட்டுகிறேன்.
07:14 Run என்ற பெயர் கொண்ட, ஒரு project அல்லது, ஒரு user directoryஐ உருவாக்கவும்.
07:21 ஒரு புது, command terminalஐ திறக்கவும். இதை, மீண்டும், capture areaக்கு இழுக்கிறேன்.
07:36 Command terminalலில் டைப் செய்க: mkdir (space) -p (space) $FOAM_RUN( இங்கு, 'FOAM' மற்றும், 'RUN' capitalஆக இருப்பதை கவனிக்கவும்). பின், Enterஐ அழுத்தவும்.
07:55 Openfoam distributionல் இருந்து, tutorial directory ஐ , run directoryக்கு copy செய்யவும்.
08:01 அதற்கு, terminalலில், டைப் செய்க: cp (space) -r (space) $FOAM_TUTORIALS (space) $FOAM_RUN
08:18 ( இங்கு, 'FOAM', 'TUTORIALS' மற்றும், 'RUN', capitalஆக இருப்பதை கவனிக்கவும்). பின், Enterஐ அழுத்தவும்.
08:28 இரண்டு directoryகளும், இப்போது உருவாக்கப்பட்டுவிட்டன.
08:31 Directoryகளைக் காண, Places > 'Home' folder > 'OpenFOAM' folder.க்கு செல்லவும்.
08:40 'ttt-2.1.0'ஐ நீங்கள் காணலாம். அதை க்ளிக் செய்யவும்.
08:44 Run மற்றும்tutorials.
08:48 இதை மூடவும்.
08:51 நான் slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
08:56 Synaptic Package Manager அல்லதுUbuntu Debian pack வலைத்தளத்தில்
09:00 இருந்து, OpenFOAM மற்றும் Paraviewஐ தரவிறக்கும் போது, ஏதேனும்error நிகழ்ந்தால்,
09:05 பின், source pack installationல் இருந்து, OpenFoam மற்றும் paraViewஐ நீங்கள் தரவிறக்கி, நிறுவிக் கொள்ளலாம்.
09:11 Source pack நிறுவுதலுக்கு, openfoam வலைத்தளத்தின், Download பக்கத்திற்கு செல்லவும்.
09:18 இப்போது, இதை பெரிதாக்குகிறேன்.
09:21 Scroll-down செய்து, Source Pack Installation க்கு செல்லவும். இப்போது, இதை க்ளிக் செய்யவும்.
09:32 இப்போது, Scroll-down செய்து, Packs க்கு செல்லவும்.
09:38 இந்த 2 'tar' fileகளையும் download செய்து, சேமிக்கவும். இந்த 2 'tar' fileகளை, நான் ஏற்கனவே, download செய்து, சேமித்துவிட்டேன்.
09:48 இதற்குப் பிறகு, உங்கள் home directoryக்கு செல்லவும்.
09:51 இதைச் செய்ய, Places > home folderக்கு செல்லவும்.
09:56 இதை, capture areaக்கு இழுக்கிறேன்.
10:00 உங்கள் home directoryல், உங்களுக்கு விருப்பமான பெயரை வைத்து, ஒரு folderஐ உருவாக்கவும்.
10:09 இதை, 'abc' என நான் வைக்கிறேன்.
10:15 நீங்கள் தற்போது உருவாக்கிய folderல், தரவிறக்கிய 2 fileகளை copy செய்யவும்.
10:20 இதைச் செய்ய, இந்த இரண்டு 'tar' fileகளை copy செய்து,நீங்கள் தற்போது உருவாக்கிய folderல், அவற்றைpaste செய்யவும்.
10:37 அதே folderலில், இந்த இரண்டு fileகளையும், Unzip அல்லது Untar செய்யவும். இங்கு, extract செய்யவும். இது, சில நிமிடங்கள் எடுக்கலாம்.
10:47 இதற்குப் பிறகு, ஒரு புது command terminalஐ திறக்கவும்.
10:51 இதில், உங்கள் home folderக்கு செல்லவும்.
10:54 டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும்.
11:00 இப்போது, நீங்கள் untar செய்த, tar fileகளை கொண்டிருக்கின்ற, அதே folderக்கு செல்லவும்.
11:06 இப்போது, டைப் செய்க: cd (space) abc, பின், Enterஐ அழுத்தவும்.
11:13 இப்போது, 'abc'யினுள், இருக்கின்ற contentகளை பார்க்க, டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும்.
11:24 இப்போது, source pack installationக்கு, OpenFOAM வலைதளத்தின், Download பக்கத்திற்கு, திரும்பச் செல்லவும்.
11:32 OpenFOAM மற்றும்Paraview வின், ubuntu distributionக்கு, கீழ்காணும் படிகளை பின்பற்றவும்.
11:39 OpenFOAM மற்றும் Paraviewஐ , நாம் இங்கு compile செய்ய வேண்டும்.
11:43 இது, 4ல் இருந்து, 5மணி நேரங்கள் எடுக்கலாம். ஆனால், இவ்வழிமுறை, எப்போதும் வேலை செய்கிறது.
11:50 ஒரு உதாரணத்தின் மூலம், OpenFOAMல் ஒரு சிக்கலை எப்படி தீர்ப்பது என்று காண்போம்.
11:56 உதாரணமாக, ஒரு Lid Driven Cavityஐ நான் எடுத்துக் கொள்கிறேன்.
11:59 இது ஒரு 2D சிக்கல். இங்கு, மேலுள்ள plate, ஒரு குறிப்பிட்ட velocityஉடன் நகர்கிறது, மற்றும், plateன் மற்ற மூன்று பக்கங்கள், நிலையாக வைக்கப்பட்டுள்ளன.
12:09 நான் இங்கு பயன்படுத்துகின்ற solverன் வகை, "icoFoam" எனப்படும், ஒரு incompressible flowவுக்கான ஒன்றாகும்.
12:17 இப்போது, மீண்டும், ஒரு புது command terminalஐ திறக்கவும்.
12:22 நான் இதை capture areaக்கு இழுக்கிறேன்.
12:31 Lid driven cavity சிக்கலுக்கான pathஐ டைப் செய்யவும்.
12:35 இந்த சிக்கல், ஏற்கனவே OpenFOAMல் set செய்யப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
12:41 Command terminalலில் டைப் செய்க: run.
12:45 இது, OpenFOAM ன் run directoryக்கு உங்களை கொண்டு செல்லும். பின், Enterஐ அழுத்தவும்.
12:53 இப்போது டைப் செய்க: cd (space) tutorials . பின், Enterஐ அழுத்தவும்.
12:59 cd (space) incompressible, பின், Enterஐ அழுத்தவும்.
13:07 cd (space) icoFoam( இங்கு, 'F' capitalஆக இருப்பதை கவனிக்கவும்). பின், Enterஐ அழுத்தவும்.
13:15 cd (space) cavity. பின், Enterஐ அழுத்தவும்.
13:20 Cavityயினுள் இருக்கின்ற contentகளைக் காண, டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும்.
13:27 நீங்கள் மூன்று fileகளைக் காணலாம்: '0', 'constant' மற்றும்'system'.
13:33 இப்போது, நாம் geometryஐ mesh செய்ய வேண்டும்.
13:35 இதை, OpenFOAM ன் blockMesh utilityஐ வைத்து செய்யலாம்.
13:40 Terminal windowவில், டைப் செய்க: "blockMesh"( இங்கு, 'M' capitalஆக இருப்பதை கவனிக்கவும்). பின், Enterஐ அழுத்தவும்.
13:52 Meshing முடிந்துவிட்டது.
13:56 இப்போது, solver 'icoFoam'ஐ run செய்ய, terminalலில் டைப் செய்க: "icoFoam", ( இங்கு, 'F' capitalஆக இருப்பதை கவனிக்கவும்), பின், Enterஐ அழுத்தவும்.
14:09 ஓடிக்கொண்டிருக்கின்றiterationகளை, terminal windowவில் காணலாம்.
14:13 இங்கு, solving pointஐ நாம் நிறைவு செய்துவிட்டதை நாம் கவனிக்கிறோம்.
14:16 இந்த முடிவுகளை காட்சிப்படுத்த, paraview windowஐ திறப்போம்.
14:21 Paraviewஐ திறக்க, terminalலில் டைப் செய்க: “paraFoam”, ( இங்கு, 'F' capitalஆக இருப்பதை கவனிக்கவும்), பின், Enterஐ அழுத்தவும்.
14:42 இது paraView windowஐ திறக்கும்.
14:45 இப்போது, இடது பக்கத்தில்,
14:48 object inspector menuவில்,
14:50 geometryஐ காண, Applyஐ க்ளிக் செய்யவும்.
14:54 நீங்கள் Lid Driven Cavityஐ காணலாம்.
14:57 இப்போது, boundary conditionகளைக் காண, Object inspector menuவில், scroll-dow செய்து, Mesh Partsக்கு செல்லவும்.
15:08 Internel Meshஐ uncheck செய்து, Applyஐ க்ளிக் செய்யவும்.
15:13 Geometry மறைந்துவிடுகிறது.
15:15 இப்போது, moving மற்றும் fixedWallகளைக் காண,
15:19 இரண்டு boxகளையும் check செய்து, Applyஐ க்ளிக் செய்யவும்.
15:30 இப்போது, Movingwallஐ uncheck செய்து, Applyஐ க்ளிக் செய்யவும்.
15:35 தற்போது மறைந்த, மூன்றுfixed wallகளையும், moving wallஐயும் நீங்கள் காணலாம்.
15:44 OpenFoam மற்றும் paraViewஐ run செய்து முடித்துவிட்டோம்.
15:49 பிற்காலத்தில், OpenFOAMன் முடிவுகளை, தீர்ப்பது மற்றும் காட்சிப்படுத்துவது மீதான டுட்டோரியல்களை அதிகம் காண்போம்.
15:56 Slideகளுக்கு திரும்புகிறேன்.
16:01 இந்த டுடோரியலில் , Synaptic Package Manager
16:05 மற்றும் வலைதளத்தின் மூலம் OpenFOAM மற்றும் Paraviewஐ எப்படி நிறுவுவது என்று கற்றோம், மற்றும், ஒரு lid driven cavityஐ தீர்த்தோம்.
16:12 பயிற்சியாக, OpenFOAM மற்றும் Paraviewஐ நிறுவவும்.
16:17 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்:
16:21 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
16:24 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
16:29 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
16:31 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
16:34 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
16:38 மேலும் விவரங்களுக்கு sptutemail@gmail.comக்கு மின்னஞ்சல் செய்யவும்.
16:45 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
16:49 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
16:56 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்.
17:01 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது, ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Jayashree, Priyacst, Venuspriya