Moodle-Learning-Management-System/C2/Users-in-Moodle/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Moodleலில் userகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு userஐ சேர்ப்பது, ஒரு user’s profileஐ edit செய்வது, userகளை திரளாக upload செய்வது. |
00:17 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04, XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, Moodle 3.3 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:43 | எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும். |
00:51 | இந்த டுடோரியலை கற்பவர்கள், தங்கள் Moodle வலைத்தளத்தில் சில courseகளை உருவாக்கியிருக்க வேண்டும். இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள முந்தைய Moodle டுடோரியல்களை பார்க்கவும். |
01:05 | Browserக்கு மாறி, உங்கள் admin username மற்றும் passwordஐ பயன்படுத்தி, உங்கள் Moodle வலைத்தளத்தினுள் login செய்யவும். |
01:14 | இப்போது, Moodleலில் ஒரு புதிய userஐ உருவாக்கக் கற்போம். |
01:19 | Navigation blockல், முதலில் Site Administrationஐயும், பின் Users tabஐயும் க்ளிக் செய்யவும். |
01:28 | Add a new user தேர்வை க்ளிக் செய்யவும். |
01:32 | நான் usernameஐ, adminuser2. என enter செய்கிறேன். |
01:37 | New Password fieldக்கு, கீழே scroll செய்யவும். Click to enter text இணைப்பை க்ளிக் செய்யவும். |
01:45 | இங்கு காட்டப்பட்டுள்ள விதிகளை, password பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். |
01:51 | நான் எனது passwordஐ, Spokentutorial1@ என enter செய்கிறேன். |
01:57 | Force password change checkboxஐ க்ளிக் செய்யவும். |
02:02 | புதிய user, அவன்/அவள், முதல் முறையாக login செய்யும் போது, அவன்/அவள் passwordஐ மாற்ற இது கட்டாயப்படுத்துகிறது. |
02:10 | இங்கு காடாப்பட்டுள்ளபடி, மீதமுள்ள விவரங்களை உங்கள் விருப்பத்திக்கேற்றவாறு enter செய்யவும். |
02:16 | Email displayல், Allow everyone to see my email addressஐ நான் தேர்ந்தெடுத்துள்ளேன் என்பதை கவனிக்கவும். இது ஏனெனில், இந்த user ஐ நான் ஒரு admin user ஆக பின்னர் வைக்கப்போகிறேன். |
02:30 | ஆனால், teacherகள் மற்றும் studentகள் போன்ற மற்ற userகளுக்கு, இதை தவிர்ப்பது சிறந்ததாகும். |
02:37 | இப்போதைக்கு, City/Town fieldஐ காலியாக விடுவோம். பின்னர் இந்த user.ஐ edit செய்யும் போது, இதை நாம் update செய்வோம். |
02:47 | பின்பு, இங்கு காட்டப்பட்டுள்ளபடிcountry மற்றும் timezoneஐ தேர்ந்தெடுக்கவும். |
02:52 | மீதமுள்ள fieldகள் அனைத்தையும், முன்னிருப்புக்கு set செய்துவிடுவோம். |
02:56 | பின், கீழே scroll செய்து, Create user பட்டனை க்ளிக் செய்யவும். |
03:01 | இப்போது நாம், 2 userகளை கொண்டுள்ளோம். நாம் தற்போது உருவாக்கிய System Admin2 user ஐ க்ளிக் செய்யவும். |
03:10 | வலது பக்கத்தில் உள்ள, Edit Profile இணைப்பை க்ளிக் செய்து, இந்த user’s profileஐ நாம் edit செய்யலாம். City/Town textboxல், Mumbaiஐ enter செய்வோம். |
03:22 | பின், கீழே scroll செய்து, Update profile பட்டனை க்ளிக் செய்யவும். இவ்வாறே, எந்த userக்கும், எந்த விவரத்தையும் நாம் edit செய்யலாம். |
03:33 | இந்த புதிய userன் வலது பக்கத்தில் உள்ள 3 iconகளை பார்க்கவும். அவை ஒவ்வொன்றும் என்ன செய்யும் என்பதை தெரிந்துகொள்ள, அவற்றின் மீது வட்டமிடவும். |
03:43 | delete icon, userஐ நீக்கும். ஒரு userஐ நீக்கினால், அந்த userன் அனைத்து dataஉம், அவன்/அவளின் courseன் பதிவீடுதல்கள், கிரேடு உட்பட எல்லாம் நீக்கப்பட்டுவிடும். அதனால், இந்த தேர்வை மிக அதிக கவனத்துடன் பயன்படுத்தவேண்டும். |
04:03 | eye icon, userஐ suspend செய்துவிடும். அதன் பொருள், அவன்/அவளின் account , செயலிழக்கப்பட்டுவிடும். |
04:13 | அதனால், userஆல் login செய்யமுடியாது. ஆனால், அவன்/அவளின் பதிவீடுகள், கிரேடு போன்றவைகள் அப்படியே இருக்கும். |
04:24 | userஐ நீக்குவதை விட, இது ஒரு சிறந்த வழியாகும். |
04:29 | பிற்கால பயன்பாட்டிற்கு இது recordகளை சேமிக்கிறது மற்றும் விரும்புகின்ற போது, நீங்கள் மீண்டும் user ஐ செயலூட்டலாம். |
04:37 | அடுத்தது, gear icon ஆகும். இது நம்மை, Edit profile பக்கத்திற்கு எடுத்துச் செல்லும். |
04:43 | delete மற்றும்suspend iconகள், Admin Userக்கு பக்கத்தில் காட்டப்படுவதில்லை என்பதை கவனிக்கவும். |
04:51 | இது ஏனெனில், main system administrator ஐ நீக்கவும் முடியாது, செயலிழக்கச் செய்யவும் முடியாது. |
04:59 | இப்போது, users களை திரளாக, அதாவது ஒரே நேரத்தில் சேர்க்கக் கற்போம். |
05:05 | இதற்கு, குறிப்பிட்ட dataவை ஒரு குறிப்பிட்ட formatல் கொண்ட ஒரு fileஐ நாம் upload செய்யவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படுகின்ற fileன் வகை, CSV ஆகும். |
05:16 | செயல்விளக்கத்திற்காக நான் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள user-details-upoad.csv fileஐ நான் திறக்கிறேன். |
05:25 | நான் LibreOffice Calc- அதாவது LibreOffice Suiteன் spreadsheet பாகத்தை பயன்படுத்துகிறேன். |
05:32 | இந்த file , பின்வரும் columnகளை கொண்டிருக்கிறது: username, password, firstname, lastname, email. இந்த 5 fieldகளும் கட்டாயமான fieldகளாகும். |
05:47 | கட்டாயமற்ற, மேலும் சில fieldகளும் இங்குள்ளன: institution, department, phone1, address, course1, role1. |
05:58 | field titleகள், spreadsheetல் எழுதியதை போலவே இருக்கவேண்டும் என்பதை கவனிக்கவும், அதாவது, lowercaseல். இல்லையெனில், upload ஒரு errorஐ காட்டும். |
06:11 | userஐ ஒரு course ல் மட்டும் பதிவு செய்யவேண்டுமானால், fields titleலில் நாம் 1 ஐ suffix செய்வோம். |
06:19 | userகளை, மேலும் பலcourseகளுக்கு பதிவு செய்யவேண்டுமெனில், course2, role2, போன்றவைகளுடன் கூடுதல் columnகளை சேர்க்கவும். |
06:29 | course1 fieldல், Course short nameஐயும், role1 fieldல், Role short name ஐயும் நீங்கள் input செய்யவேண்டும். |
06:39 | ஒரு மாணவருக்கானRole short name, student ஆகும் மற்றும் ஆசிரியருக்கு, அது editingteacher ஆகும். |
06:47 | CSV fileலில் நாம் 3 userகளை கொண்டிருப்போம்: manualஆக ஏற்கனவே உருவாக்கப்பட்டSystem Admin2 user. மற்ற fieldகள் கட்டாயமற்றவை என்று காட்டுவதற்கான, 5 கட்டாயமான fieldகளை மட்டுமே கொண்ட ஒரு user மற்றும் எல்லா விவரங்களையும் கொண்ட ஒரு user. |
07:08 | இந்த CSV file, இந்த டுடோரியலின்Code files பிரிவில் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி, பயன்படுத்திக்கொள்ளலாம். |
07:17 | CSV fileன் உருவாக்குதல் பற்றிய கூடுதல் தகவலை, இந்த டுடோரியலின் Additional Reading Material கொண்டுள்ளது. |
07:25 | இப்போது, browser windowக்கு திரும்பச் செல்வோம். |
07:29 | Navigation blockல் உள்ள Site Administrationஐ க்ளிக் செய்யவும். |
07:34 | பின், Users tabஐ க்ளிக் செய்யவும். Accounts sectionல், Upload Usersஐ க்ளிக் செய்யவும். |
07:43 | Choose a file பட்டனை க்ளிக் செய்யவும். File pickerஎன்ற தலைப்புடன் கூடிய ஒரு புதிய pop-up windowதிறக்கிறது. |
07:51 | Pop-up window, அந்த இணைப்பில் ஏற்கனவே இல்லையெனில், இடது பக்க menuவில் உள்ள Upload a file இணைப்பை க்ளிக் செய்யவும். |
07:59 | Browse / Choose a file பட்டனில், எது உங்கள் interfaceல் தோன்றுகிறதோ, அதை க்ளிக் செய்யவும். சேமிக்கப்பட்ட folderஐ browse செய்து, CSV fileஐ தேர்ந்தெடுக்கவும். |
08:11 | மற்ற அனைத்து fieldகளையும் முன்னிருப்பாகவே வைத்திருப்போம். |
08:15 | பக்கத்தின் கீழுள்ள, Upload this file பட்டனை க்ளிக் செய்யவும். |
08:21 | அதே திரை refresh செய்யப்படுகிறது மற்றும் அதே fileபெயர், இப்போது text பகுதியில் தெரிகிறது. |
08:27 | கீழுள்ள பட்டன் இப்போது Upload users.க்கு மாறியிருக்கிறது. இந்த Upload users பட்டனை க்ளிக் செய்யவும். |
08:35 | நாம் upload செய்கின்ற userகளின் ஒரு முன்காட்சியை, அடுத்த பக்கம் காட்டுகிறது. மதிப்புகள் சரியாக உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ளவும். இப்போது Settings பிரிவை சரிபார்க்கவும். |
08:48 | Upload type dropdown, 4 தேர்வுகளை கொண்டிருக்கிறது. |
08:53 | இந்த 3 தேர்வுகளை ஏற்கனவே உள்ள userகளின் recordகளை update செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் Add new only, skip existing usersஐ தேர்ந்தெடுப்போம். |
09:05 | இதன் பொருள், ஒரு username ஏற்கனவே இருந்தால், அது சேர்க்கப்படாது. |
09:11 | New user password dropdownல், Field required in fileஐ தேர்ந்தெடுக்கவும். |
09:17 | Force password changeன் கீழ், Allஐ தேர்ந்தெடுக்கவும். இது, எல்லா userகளையும், அவர்கள் முதல் முறை login செய்யும் போது, அவர்களது passwordகளை மாற்ற தூண்டும். |
09:27 | இந்த sectionல் உள்ள மற்ற fieldகளை, முன்னிருப்பாகவே வைத்துவிடுவோம். |
09:32 | இப்போது, Default values sectionஐ பார்ப்போம். |
09:36 | Email displayன் கீழ், Allow only other course members to see my email addressஐ தேர்ந்தெடுக்கவும். |
09:44 | எல்லா userகளுக்கும், முன்னிருப்பான fieldகள் ஒன்றாகவே இருந்தால், அவைகளை நீங்கள் input செய்யலாம். upload செய்யப்பட்ட எல்லா userகளுக்கும், இந்த fieldகள் பயன்படுத்தப்படும். |
09:55 | City/Townல், நான் Mumbai என டைப் செய்கிறேன். |
09:59 | அடுத்து, Show more…ஐ க்ளிக் செய்யவும். நாம் dataவை enter செய்யக்கூடிய மேலும் பல fieldகள் உள்ளன. |
10:07 | ஆனால், எதுவும் கட்டாயமானது அல்ல என்பதை கவனிக்கவும். அதனால், இப்போதைக்கு இவற்றை காலியாக விடுகிறேன். |
10:15 | பக்கத்தின் கீழுள்ள, Upload users பட்டனை க்ளிக் செய்யவும். |
10:20 | இங்கு காட்டப்பட்டுள்ள, Upload users results tableன் status columnஐ பார்க்கவும். |
10:27 | முதல் userக்கு, status message: User not added - already registered. |
10:35 | இந்த user, கணினியில் ஏற்கனவே உள்ளதால், இது தவிர்க்கப்பட்டது. |
10:40 | மீதமுள்ள userகள், New userகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். |
10:45 | இங்கு காட்டப்பட்டுள்ள statusஐ பார்க்கவும். |
10:49 | password விதிகளை பின்பற்றாதவைகள், Weak passwordகளாகும். |
10:54 | இவை கணினியில் upload செய்யப்பட்டாலும், வலுவான passwordகளை வைத்துக்கொள்ள எப்பபோதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். |
11:01 | Continue பட்டனை க்ளிக் செய்யவும். நாம் உருவாக்கியுள்ள எல்லா userகளையும் பார்ப்போம். |
11:08 | Site Administration.ஐ க்ளிக் செய்யவும். பின், Users tabஐ க்ளிக் செய்யவும். Accounts sectionனின் கீழ், Browse list of users.ஐ க்ளிக் செய்யவும். |
11:20 | இப்போது நாம் 4 userகளை கொண்டுள்ளோம். |
11:23 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
11:29 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு userஐ சேர்ப்பது, ஒரு user’s profileஐ edit செய்வது, userகளை திரளாக upload செய்வது. |
11:39 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:47 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
11:55 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
12:00 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
12:11 | இந்த ஸ்கிரிப்ட், ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. |
12:15 | கலந்துகொண்டமைக்கு நன்றி. |