Moodle-Learning-Management-System/C2/User-Roles-in-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodleலில் userன் பணிகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு userக்கு admin roleஐ எவ்வாறு ஒதுக்குவது,
00:13 ஒரு courseக்கு, ஒரு teacherஐ எவ்வாறு ஒதுக்கீடு செய்வது, ஒரு courseல் ஒரு studentஐ எவ்வாறு பதிவு செய்வது
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04,
00:28 XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, Moodle 3.3 மற்றும் Firefox web browser.
00:42 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
00:54 இந்த டுடோரியலை கற்பவர்கள், தங்கள் Moodle வலைத்தளத்தில் சில courseகளை உருவாக்கியிருக்க வேண்டும்.
01:01 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள முந்தைய Moodle டுடோரியல்களை பார்க்கவும்.
01:08 Browserக்கு மாறி, உங்கள் admin username மற்றும் passwordஐ பயன்படுத்தி, உங்கள் Moodle வலைத்தளத்தினுள் login செய்யவும்.
01:16 நாம் இப்போது admin dashboard.ல் உள்ளோம்
01:19 Course and Category Management பக்கத்திற்கு செல்வோம்
01:24 உங்கள் Moodle interfaceல், இந்த courseகள் இருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும். இல்லையெனில், டுடோரியலை இடை நிறுத்தி, அவற்றை உருவாக்கி பின் தொடரவும்
01:34 நாம் உருவாக்கிய அனைத்து userகளையும் பார்ப்போம்
01:38 Site Administration.ஐ க்ளிக் செய்யவும்
01:41 பின், Users tabஐ க்ளிக் செய்யவும்
01:44 Accounts பிரிவின் கீழ் உள்ள Browse list of users.ஐ க்ளிக் செய்யவும்
01:50 நாம் இப்போது 4 userகளை கொண்டுள்ளோம்
01:53 user Priya Sinha ஐ க்ளிக் செய்து, அவரின் profileஐ edit செய்வோம்
01:59 அதற்கு, User details பிரிவில் உள்ள Edit Profile இணைப்பை க்ளிக் செய்யவும்
02:04 கீழே scroll செய்து, Optional பிரிவை கண்டறியவும். பின் அதனை விரிவாக்க, அதை க்ளிக் செய்யவும்
02:11 Institution, Department, Phone மற்றும்Address fieldகள் நிரப்பட்டிருப்பதை கவனிக்கவும். இவை நாம் CSV fileலில் enter செய்தவையாகும்
02:23 Userகளின் பட்டியலுக்கு திரும்பச் செல்வோம். அதைச் செய்ய, Site Administration -> Users -> Browse list of users.ஐ க்ளிக் செய்யவும்
02:33 இந்த user, System Admin2க்கு, administrator roleஐ ஒதுக்குவோம்
02:39 இடது பக்கத்தில் உள்ள menuவில், முதலில் Site Administrationஐயும் பின், Users tabஐயும் க்ளிக் செய்யவும்
02:46 கீழே scroll செய்து, Permissions பிரிவில் Site Administrators.ஐ க்ளிக் செய்யவும்
02:52 இங்கு, userகளின் 2 setகள் உள்ளன. முதல் set , தற்போதைய site administratorகளின் பெயர்களையும் இரண்டாவது set , மற்ற எல்லா userகளின் ஒரு பட்டியலையும் கொண்டிருக்கிறது
03:05 இந்த இரண்டு பட்டியல்களுக்கும் இடையே, பல்வேறு நடவடிக்கைகளை செய்ய பட்டன்கள் உள்ளன
03:11 Users boxல் இருந்து, System Admin2 userஐ க்ளிக் செய்வோம்
03:17 Userகள் அதிக எண்ணிக்கையில் இருந்தால், தேடுதலுக்கு Users boxக்கு கீழே உள்ள Search boxஐ பயன்படுத்தவும். பின், Add பட்டனை க்ளிக் செய்யவும்
03:26 Confirm boxல், Continue பட்டனை க்ளிக் செய்யவும்
03:30 இப்போது, 2 admin userகள் உள்ளனர். நமக்கு தேவையான அளவு admin userகளை நாம் வைத்துக்கொள்ளலாம்
03:38 எனினும், ஒரு Main administrator மட்டுமே இருக்கமுடியும். Main administrator ஐ கணினியிலிருந்து நீக்கவே முடியாது
03:48 இப்போது, Rebecca RaymondCalculus course.க்கு teacherஆக ஒதுக்கீடு செய்வோம்
03:55 அதைச் செய்ய, இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Course and category management பக்கத்திற்கு செல்லவும்
04:02 1st Year Maths உள்வகையினத்தின் கீழ் உள்ள coursesகளை காண, அதை க்ளிக் செய்யவும்
04:09 Calculus courseஐ க்ளிக் செய்யவும். Courseன் விவரங்களை காண கீழே scroll செய்யவும். Enrolled Usersஐ க்ளிக் செய்யவும்.
04:19 user Priya Sinha, இந்த courseக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்
04:25 இதை, upload user CSV. மூலம் நாம் செய்தோம்
04:29 Moodleலில், teacherஐயும் சேர்த்து, எல்லோரும் course. க்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
04:35 அவர்களுக்கு ஒதுக்கப்படவிருக்கும் புதிய role, அவர்களுக்கு courseல் உள்ள தற்போதைய roleஐ பொறுத்து இருக்கிறது
04:41 மேல் வலது பக்கம் அல்லது கீழ் வலது பக்கத்தில் உள்ள Enrol users பட்டனை க்ளிக் செய்யவும்
04:48 ஒரு pop-up window திறக்கிறது
04:51 அது Assign rolesக்கு ஒரு dropdownஐயும், Enrolment optionsக்கு fieldகளையும், ஒரு Search பட்டனையும் கொண்டிருக்கிறது
05:00 இந்த courseக்கு தற்போது ஒதுக்கப்படாத, எல்லா userகளையும் கொண்ட ஒரு பட்டியலை நாம் காணலாம்
05:06 Assign roles dropdownல், Teacherஐ தேர்ந்தெடுக்கவும்
05:11 பின், Rebecca Raymondக்கு அடுத்ததாக இருக்கும்Enrol பட்டனை க்ளிக் செய்யவும்
05:16 இறுதியாக, பக்கத்தின் கீழுள்ள, Finish Enrolling users பட்டனை க்ளிக் செய்யவும்
05:24 Studentகளை இதே முறையில் ஒரு courseக்கு பதிவு செய்யலாம்
05:28 Rebecca Raymondஐ அவர்களது Teacher roleலில் இருந்து நீக்க வேண்டுமெனில், Roles columnலில் உள்ள Trash iconஐ க்ளிக் செய்யவும்
05:36 Confirm Role Change popup boxல், Remove பட்டனை க்ளிக் செய்யவும்
05:42 இங்குள்ள Assign role iconஐ, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட userகளுக்கு ஒரு role ஐ ஒதுக்கீடு செய்யவும் பயன்படுத்தலாம்
05:50 எல்லா role பெயர்களையும் கொண்ட ஒரு சிறிய pop-up windowவை திறக்க, அதை க்ளிக் செய்யவும்
05:56 Rebecca Raymondக்கு teacher roleஐ ஒதுக்கீடு செய்ய, Teacherஐ க்ளிக் செய்யவும். Box தானாகவே மூடிக்கொள்கிறது
06:04 வலது பக்கத்தில் ஓரமாக உள்ள trash iconஐ க்ளிக் செய்வதன் மூலம், userகளை ஒரு courseல் இருந்து நீக்கலாம்
06:11 வலது பக்கமாக உள்ள gear icon, user enrolment விவரங்களை edit செய்வதற்காகும். அதை க்ளிக் செய்யவும்
06:20 userஐ இடை நீக்கம் செய்வதற்கும், enrolment start மற்றும் end தேதிகளை மாற்றுவதற்கும், இது ஒரு தேர்வை கொண்டிருக்கிறது
06:28 பக்கத்திற்கு திரும்பச் செல்ல, Cancel பட்டனை க்ளிக் செய்யவும்
06:33 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
06:39 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு userக்கு admin roleஐ எவ்வாறு ஒதுக்குவது, ஒரு courseக்கு, ஒரு teacherஐ எவ்வாறு ஒதுக்கீடு செய்வது, மற்றும் ஒரு courseல் ஒரு studentஐ எவ்வாறு பதிவு செய்வது
06:52 உங்களுக்கான ஒரு பயிற்சி: Linear Algebra courseக்கு, Rebecca Raymond ஐ ஒரு teacherஆக ஒதுக்கீடு செய்யவும்
07:00 Linear Algebra courseக்கு, Priya Sinha ஐ ஒரு studentஆக ஒதுக்கீடு செய்யவும்
07:06 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
07:14 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
07:22 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
07:26 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
07:38 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree