Moodle-Learning-Management-System/C2/Formatting-Course-material-in-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle.லில், Courser materialஐ format செய்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Moodle.லில்Resourceகள், கூடுதல் course materialஐ சேர்ப்பது, முன்னிருப்பான text editorல் உள்ள Formatting தேர்வுகள்.
00:21 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04, XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, Moodle 3.3 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:48 எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
00:56 உங்கள் site administrator, ஒரு Moodle websiteஐ set செய்துள்ளதாகவும், உங்களை ஒரு teacher.ஆக பதிவு செய்துள்ளதாகவும், இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது.
01:06 இந்த டுடோரியலை கற்பவர்களுக்கு, Moodleலில் ஒரு teacher login இருக்கவேண்டும், அவர்களுக்கு, administratorஆல் குறைந்தபட்சம் ஒரு course ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் தங்களுக்குரிய courseக்கு ஏதேனும்material, upload செய்யப்பட்டிருக்க வேண்டும்.
01:21 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கானMoodle டுடோரியல்களை பார்க்கவும்.
01:27 Browserக்கு மாறி, உங்கள் moodle site.ஐ திறக்கவும்.
01:31 உங்கள் teacher username மற்றும் password விவரங்களை பயன்படுத்தி, login செய்யவும்.
01:36 நாம் teacher’s dashboardல் உள்ளோம்.
01:39 இடது பக்கத்தில் உள்ள navigation menuல், My Coursesன் கீழ் உள்ள Calculusஐ கவனிக்கவும்.
01:45 Calculus course.ஐ க்ளிக் செய்யவும்.
01:48 நாம் announcementகள் மற்றும் சில பொதுவான course விவரங்களை முன்பே சேர்த்துவிட்டோம்.
01:54 இப்போது, சில கூடுதல் course material. ஐ நாம் சேர்ப்போம்.
01:58 Moodle லில் உள்ள எல்லா course material உம், Resourceகள் எனப்படுகின்றன. இவை, கற்பிப்பதற்கு உதவ ஒரு ஆசிரியர் பயன்படுத்தும்material ஆகும்.
02:09 Resourcesகள், விரிவுரை குறிப்புகள், புத்தகங்கள் போன்ற உட்புறவைகளாகவும் அல்லது Wikipedia links -போன்ற வெளிப்புறத்தவையாகவும் இருக்கலாம்.
02:19 தொடங்குவோம். பக்கத்தின் மேல் வலது புறத்தில் உள்ள gear icon ஐ முதலிலும், பின் Turn Editing Onஐ க்ளிக் செய்யவும்.
02:29 courseக்கு எந்த மாற்றங்களையும் செய்ய, editing onஐ நீங்கள் அழுத்தவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
02:36 Basic Calculus section. ன் கீழ் வலது புறத்தில் உள்ள Add an activity or resource இணைப்பை க்ளிக் செய்யவும்.
02:44 Resourcesகளின் ஒரு பட்டியலை கொண்ட ஒரு pop-up திறக்கிறது.
02:48 கீழே scroll செய்து, பட்டியலிலிருந்து Pageஐ தேர்ந்தெடுக்கவும். எந்த resourceஐயும் தேர்ந்தெடுக்கும் போது, வலது பக்கத்தில் உள்ள அந்த resourceஐ பற்றிய விரிவான விளக்கத்தை படிக்கவும்.
03:01 Pop-up திரையின் கீழுள்ள, Add button பட்டனை க்ளிக் செய்யவும்.
03:06 Name fieldல், Lecture 1 Notes என நான் டைப் செய்கிறேன்.
03:12 பின் Description boxல், டைப் செய்க: “Involutes and construction of Involute of circle”.
03:22 Display description on course page தேர்வை check செய்யவும்.
03:27 Page Content boxஐ காண, கீழே scroll செய்யவும். BasicCalculus-Involutes.odt fileலிலிருந்து, textஐ copy மற்றும் paste செய்யவும்.
03:40 Imageஐ , பின்னர் நாம் upload செய்வோம். இந்த file, இந்த டுடோரியலின் Code Files இணைப்பில் உள்ளது.
03:51 இந்த textஐ இப்போது format செய்வோம். menu widgetsஐ விரிவாக்க, editorன் மேல் இடது பக்கத்தில் உள்ள down-arrow ஐ க்ளிக் செய்யவும்.
04:03 காட்டப்பட்டுள்ளபடி, தலைப்புகளை மேலும் முக்கியம் வாய்ந்ததாக நான் காட்டுகிறேன்.
04:07 வேறு எந்த standard text editorல் இருப்பது போலவே, இந்த text editorயிலும் தேர்வுகள் இருக்கின்றன. இங்கு, Bold, Italics, Unordered மற்றும் Ordered lists. போன்ற தேர்வுகளை நாம் காணலாம்.
04:24 ஒரு textஐ hyperlink மற்றும் unlink செய்யவும் நாம் தேர்வுகளை காண்கிறோம்.
04:30 ஒரு imageஐ சேர்க்கவும் அதில் தேர்வு உள்ளது. “Figure 1 shows the involute of a circle”. textக்கு பின் ஒரு imageஐ சேர்ப்போம்.
04:41 Imageக்கு இடத்தை உருவாக்க, Enter ஐ அழுத்தவும். பின், Image iconஐ க்ளிக் செய்யவும்.
04:48 Image properties window திறக்கிறது. ஒரு external imageஐ நீங்கள் புகுத்த விரும்பினால், அந்த image ன் URL ஐ இங்கு enter செய்யலாம்.
04:58 ஒரு imageஐ upload செய்ய, Browse Repositories பட்டனை நான் க்ளிக் செய்கிறேன்.
05:04 File Picker என்ற தலைப்பை கொண்ட ஒரு pop-up window தோன்றுகிறது.
05:09 Upload a fileஐ க்ளிக் செய்யவும். பின், Choose File அல்லதுBrowse பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கணினியிலிருந்து fileஐ தேர்ந்தெடுக்கவும்.
05:19 இந்த image, Code Files இணைப்பிலும் உள்ளது. நீங்கள் அதை தரவிறக்கி, பயன்படுத்திக்கொள்ளலாம்.
05:26 Upload this file பட்டனை க்ளிக் செய்யவும்.
05:29 Descriptionஐ , “This is the involute of a circle” என டைப் செய்வோம்.
05:36 இறுதியாக, imageஐ புகுத்த Save image பட்டனை க்ளிக் செய்யவும்.
05:42 அடுத்த தேர்வு, mediaவை சேர்ப்பதாகும். இது ஒரு URL, video அல்லது audio fileஆக இருக்கலாம். மீண்டும், இது ஒரு external URLஆக இருக்கலாம் அல்லது நமது கணினியிலிருந்து upload செய்யப்படலாம்.
05:58 அடுத்த தேர்வு, Manage Files. ஆகும். அதை க்ளிக் செய்வோம்.
06:04 Manage Files தேர்வு என்பது, நீங்கள் சேமிக்க மற்றும் காட்ட விரும்புகின்ற fileகளின் ஒரு தொகுப்பை வைத்துக்கொள்வதாகும். இதில், assignment submissions, resource files, போன்றவைகள் உள்ளடங்கும்.
06:17 அவைகளை, இந்த courseல் உள்ள எந்த resourceஉம் பயன்படுத்தலாம். நாம் தற்போது upload செய்த imageஉம், இங்கு இருப்பதை கவனிக்கவும்.
06:27 இந்த pop-up box ன் இடது பக்கத்தில் 3 iconsகள் உள்ளன.
06:32 முதலாவது, File picker ஆகும். அதை க்ளிக் செய்வோம்.
06:37 server files, recent files போன்றவைகளை காண, இது தேர்வுகளை கொண்டுள்ளது. Server fileகள் என்பன, courseன் வேறு ஏதேனும் இடத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் மீண்டும் பயன்படுத்தக்க்கூடிய fileகள் ஆகும்.
06:52 நான் X icon.ஐ க்ளிக் செய்து, இப்போதைக்கு இதை மூடுகிறேன்.
06:57 அடுத்து, இரண்டாவது iconஆன, Create Folder iconஐ நாம் க்ளிக் செய்வோம்.
07:04 New folder name fieldல், Assignments என டைப் செய்வோம்.
07:10 பின், அதை திறக்க, Assignments folderஐ க்ளிக் செய்யவும்.
07:15 Assignments folderஇனுள், எனது fileஐ இழுத்து வைக்கிறேன்.
07:20 இப்போது, upload செய்யப்பட்ட fileஐ க்ளிக் செய்யவும்.
07:24 இந்த pop-up, fileன் பெயர் மற்றும் ஆசிரியரை மாற்றக்கூடிய, மற்றும் fileஐ தரவிறக்கக்கூடிய அல்லது நீக்கக்கூடிய தேர்வை கொண்டிருக்கிறது.
07:34 நான் எதையும் மாற்ற விரும்பவில்லை. அதனால், pop-up ன் கீழுள்ள, Cancel பட்டனை நான் க்ளிக் செய்கிறேன்.
07:41 இப்போது, டுடோரியலை இடைநிறுத்தி, இந்த சிறிய பயிற்சியை செய்யவும்: Reference Material என்ற folderஐ உருவாக்கவும். அந்த folder, Assignments subfolderஇனுள் இல்லாமல், ஆனால் Files folderஇனுள் இருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும்.
07:57 3 fileகளையும் upload செய்யவும். அவைகளை, இந்த டுடோரியலின்Code files இணைப்பில் நீங்கள் காண்பீர்கள்.
08:05 இந்த பயிற்சியை முடித்த பிறகு, இந்த டுடோரியலை மீண்டும் தொடரவும்.
08:10 உங்கள் File manager இப்போது, Assignments மற்றும் Reference Material என்று பெயரிடப்பட்ட 2 folderகள் ,
08:18 மற்றும் involutes-img1.png என்று பெயரிடப்பட்ட மற்றொரு fileஐ கொண்டிருக்கவேண்டும்.
08:26 மேல் வலது பக்கத்தில் உள்ள X icon ஐ க்ளிக் செய்து, pop-up window ஐ மூடவும்.
08:33 Formatting தேர்வுகளின் அடுத்த தொகுப்பு, Underline, Strikethrough, Subscript மற்றும் Superscript. ஆகும்.
08:45 இவைகளை பின்தொடர்ந்து, Align மற்றும்indent தேர்வுகள் வருகின்றன. வேறு எந்த text editorயிலும் இயங்குவது போல், இதிலும் இயங்குகின்றன.
08:53 அடுத்த தேர்வானequation editorஐ எப்படி பயன்படுத்துவது என்று கற்போம்.
08:59 ஒரு equationஐ கொண்ட இந்த வாக்கியத்தை நான் சேர்க்க விரும்புகிறேன். அதனால் நான், equation editor iconஐ க்ளிக் செய்கிறேன். பின், equationஐ டைப் செய்ய, equation editorஐ பயன்படுத்தவும்.
09:14 Equationகளை டைப் செய்ய LaTeXஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விவரங்கள், Additional Reading Material இணைப்பில் உள்ளன. நீங்கள் முடித்தவுடன், Save equation பட்டனை க்ளிக் செய்யவும்.
09:29 எந்த text editorயிலும் இயங்குவது போல், Insert character, insert table மற்றும் clear formatting தேர்வுகள் இதிலும் இயங்குகின்றன.
09:40 அடுத்த இரண்டு தேர்வுகள், Undo மற்றும்Redo. சேமிக்கப்படாத text இருக்கின்ற போது மட்டும், இவை enable செய்யப்படுகின்றன.
09:51 இதற்குப் பிறகு, accessibilityக்கான 2 தேர்வுகளை நாம் கொண்டிருக்கிறோம். முதல் icon, Accessibility checker. எனப்படுகிறது. இரண்டாவது, screen reader helper. ஆகும்.
10:05 இந்த தேர்வுகள் மற்றும் accessible websiteகளின் விவரங்கள், Additional Reading Material இணைப்பில் உள்ளன.
10:14 இறுதித் தேர்வு, editor viewலிருந்து, HTML code viewக்கு toggle செய்வதாகும். Imageகள், காணொளிகள், PPT , interactive content போன்றவைகளை உட்பொதிக்க, இதை பயன்படுத்தலாம்.
10:30 Toggle HTMLஐ மீண்டும் க்ளிக் செய்யவும். இது நம்மை, இயல்புநிலை editor view.க்கு திரும்ப கொண்டு சேர்க்கும்.
10:39 இந்த செயல்விளக்கத்திற்கு, நான் bold, italics மற்றும் list தேர்வுகளை பயன்படுத்தி textஐ format செய்துள்ளேன். உங்கள் contentற்கு, நீங்கள் அவ்வாறே செய்யவும்.
10:52 Format செய்து முடித்தவுடன், கீழே scroll செய்து, Save and display பட்டனை க்ளிக் செய்யவும்.
11:01 இப்போது நாம், Moodleலிலிருந்து logout செய்யலாம்.
11:05 மாணவர்Priya Sinha, இவ்வாறு இந்த பக்கத்தை காண்பார்.
11:11 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
11:19 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Moodle.லில்Resourceகள், கூடுதல் course materialஐ சேர்ப்பது, முன்னிருப்பான text editorல் உள்ள Formatting தேர்வுகள்.
11:34 உங்களுக்கான ஒரு பயிற்சி: Basic Calculusல், resource என்ற ஒரு புதிய folderஐ சேர்க்கவும். File Managerல் இருந்து reference fileகளை சேர்க்கவும். விவரங்களுக்கு, இந்த டுடோரியலின்Assignment இணைப்பை பார்க்கவும்.
11:51 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:00 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
12:10 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
12:14 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
12:27 இந்த ஸ்கிரிப்ட், நான்ஸி மற்றும் ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே.
12:38 கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree