Moodle-Learning-Management-System/C2/Enroll-Students-and-Communicate-in-Moodle/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Moodleலில் மாணவர்களை பதிவு செய்வது மற்றும் தொடர்புகொள்ளவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு courseக்கு, csv file மூலம் upload செய்யப்பட்ட மாணவர்களை பதிவுசெய்வது, |
00:18 | courseகளில் groupகளை உருவாக்குவது மற்றும் மாணவர்களுக்கு messageகள் மற்றும் noteகளை அனுப்புவது. |
00:26 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04, |
00:33 | XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, |
00:41 | Moodle 3.3 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:51 | எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும். |
01:00 | உங்கள் site administrator, உங்களை ஒரு teacher.ஆக பதிவு செய்துள்ளதாகவும், குறைந்தபட்சம் ஒரு course ஐ உங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது. |
01:11 | உங்கள் courseக்கு, சில course material, assignmentகள் மற்றும் quizகளை, நீங்கள் சேர்த்துள்ளதாகவும் அது அனுமானித்து கொள்கிறது. |
01:19 | இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கானMoodle டுடோரியல்களை பார்க்கவும். |
01:26 | நாம் தொடங்குவதற்கு முன், உங்கள் Moodle siteக்கு 5 அல்லது 6 userகளை சேர்க்குமாறு உங்கள் Moodle site administratorக்கு சொல்லவும். |
01:36 | உங்கள் course க்கு, இந்த புதிய userகளை நீங்கள் பின்னர் சேர்ப்பீர்கள். அதனால், புதிய usersகளை உங்கள் Moodle siteக்கு சேர்க்க உறுதிபடுத்திக்கொள்ளவும். |
01:47 | Moodleலில் உள்ள ஆசிரியர்கள், கணினிக்கு புதிய usersகளை சேர்க்கமுடியாது. site administratorஆல் ஏற்கனவே சேர்க்கப்பட்ட userகளை மட்டுமே, அவர்கள் பதிவு செய்யமுடியும். |
01:59 | Browserக்கு மாறி, உங்கள் moodle site.இனுள், ஒரு teacherஆக login செய்யவும். |
02:06 | இடது navigation menu.வில் உள்ள, Calculus course ஐ க்ளிக் செய்யவும். |
02:11 | மேல் வலது பக்கத்தில் உள்ள gear icon ஐ முதலில் க்ளிக் செய்து, பின் More...ஐ க்ளிக் செய்யவும். |
02:18 | நாம் Course Administration பக்கத்தில் உள்ளோம். |
02:22 | Users tabஐ க்ளிக் செய்யவும். |
02:25 | Users பிரிவின் கீழ் உள்ள, Enrolled users இணைப்பை க்ளிக் செய்யவும். |
02:30 | இந்த courseக்கு 2 userகள் பதிவு செய்துள்ளனர்- Rebecca Raymond மற்றும்Priya Sinha. |
02:38 | Rebecca Raymond , teacher roleஐயும், Priya Sinha, student role.ஐயும் கொண்டிருக்கின்றனர். |
02:44 | இப்போது, கீழ் வலது பக்கத்தில் உள்ள Enrol users பட்டனை க்ளிக் செய்யவும். |
02:49 | நான் எனது Calculus course.க்கு பதிவு செய்ய விரும்புகின்ற மாணவர்களை, இந்த பட்டியல் கொண்டிருக்கிறது. |
02:55 | Assign Roles dropdownல், Studentஐ தேர்ந்தெடுக்கவும். |
03:00 | பின், நீங்கள் பதிவு செய்ய விரும்புகின்ற, userகளுக்கு பக்கத்தில் உள்ள Enrol பட்டனை க்ளிக் செய்யவும். |
03:06 | நான் இப்போதே, எனது courseக்கு சில மாணவர்களை பதிவு செய்கிறேன். |
03:11 | முடித்தவுடன், கீழ் வலது பக்கத்தில் உள்ள Finish enrolling users பட்டனை க்ளிக் செய்யவும். |
03:18 | Calculus courseக்கு பதிவு செய்யப்பட்ட userகளின் எண்ணிக்கையை, பக்கத்தின் மேல் காணலாம். |
03:25 | அடுத்து, courseல் சில groupகளை செய்யக்கற்போம். |
03:30 | இந்த groupகள், மாணவர்களை group activityகளுக்கு ஒதுக்க உதவி புரியும். |
03:36 | நான் 2 groupகளை செய்கிறேன்- Explorers மற்றும்Creators. |
03:42 | course pageக்கு திரும்பச் செல்ல, breadcrumbல் உள்ள Calculusஐ க்ளிக் செய்யவும். |
03:48 | பின், Course Administrator பக்கத்திற்கு திரும்பச் செல்லவும். |
03:52 | Users tab ல் உள்ள, Groups இணைப்பை க்ளிக் செய்யவும். |
03:56 | கீழே scroll செய்து, Create group பட்டனை க்ளிக் செய்யவும். |
04:01 | Group nameல், Explorers என டைப் செய்யவும். |
04:05 | வேறு எந்த கட்டாயமான fieldகளும் இல்லை. |
04:08 | கீழே scroll செய்து, Save changes பட்டனை க்ளிக் செய்யவும். |
04:12 | groupகளின் பட்டியலில், Explorers இப்போது இடது பக்கத்தில் தெரிவதை கவனிக்கவும். |
04:19 | அதற்குப் பக்கத்தில் உள்ள பூஜ்யம் எண், அந்த group ல் இதுவரை எந்த usersகளும் இல்லை என்பதை குறிக்கிறது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில், Explorersஐ தேர்ந்தெடுக்கவும். |
04:30 | பின், கீழ் வலது பக்கத்தில் உள்ள Add/remove users பட்டனை க்ளிக் செய்யவும். |
04:36 | மாணவர்களின் பட்டியலிலிருந்து, நான் Susmitha மற்றும் Saiஐ தேர்ந்தெடுக்கிறேன். |
04:42 | பின் 2 columnகளுக்கும் இடையே உள்ள, Add பட்டனை க்ளிக் செய்யவும். |
04:48 | இடது பக்கத்தில், group Explorersல் உள்ள userகளின் பட்டியலை கவனிக்கவும். |
04:54 | வலது பக்கத்தில், இந்த courseல் பதிவு செய்துள்ள மற்ற எல்லா மாணவர்களின் பட்டியலை கவனிக்கவும். |
05:00 | தேவைப்படும் போதெல்லாம், ஆசிரியர் இவர்களை groupல் சேர்க்கமுடியும். |
05:06 | பட்டியலிலிருந்து userகளை நாம் தேர்ந்தெடுக்கும் போது, 2 பட்டியல்களுக்கும் இடையே உள்ள Add மற்றும் Remove பட்டன்கள், enable செய்யப்படுகின்றன. |
05:15 | பக்கத்தின் கீழுள்ள, Back to groups பட்டனை க்ளிக் செய்யவும். |
05:21 | டுடோரியலை இடைநிறுத்தி, இந்த சிறிய பயிற்சியை செய்யவும்- Creators என்ற ஒரு புதிய groupஐ சேர்க்கவும். |
05:28 | அந்த groupற்கு, 2 புதிய userகளை ஒதுக்கவும். முடித்தவுடன், டுடோரியலை மீண்டும் தொடரவும். |
05:35 | இப்போது, உங்களால் இது போன்ற ஒரு திரையை காண முடியவேண்டும். |
05:40 | Roles, Groups மற்றும் Enrolment Methods columnகள், iconகளை கொண்டிருப்பதை கவனிக்கவும். |
05:48 | Iconsகளின் செயல்பாட்டை புரிந்துகொள்ள, அவை ஒவ்வொன்றின் மீதும் உங்கள் mouseஐ நகர்த்தவும். |
05:55 | பதிவு செய்யப்பட்ட ஒரு மாணவர், ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரு groupல் சேர்ந்திருக்கலாம் என்பதை கவனிக்கவும். |
06:02 | இப்போது, மாணவர்களுக்கு ஒரு messageஐ எப்படி அனுப்புவது என்று பார்ப்போம். |
06:07 | இடது navigation barல் உள்ள, Participants இணைப்பை க்ளிக் செய்யவும். |
06:12 | இது, எல்லா enrolled userகளையும், அவர்களுக்கு courseல் ஒதுக்கப்பட்ட roleகளுடன் பட்டியலாக காட்டும். |
06:19 | முன்னிருப்பாக, Moodle Participants பக்கம் 20 மாணவர்களை மட்டுமே காட்டுகிறது. |
06:25 | 20 மாணவர்களுக்கு மேல் இருந்தால், எல்லா மாணவர்களையும் காண, நீங்கள் Show allஐ க்ளிக் செய்யவேண்டும். எனக்கு, இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இல்லாததால், இப்போது இணைப்பு தெரியவில்லை. |
06:38 | Usersகளின் பட்டியலுக்கு மேலே, சில filterகள் தெரிகின்றன. usersகளின் சரியான தொகுப்பை தேர்ந்தெடுக்க, அவற்றை பயன்படுத்தவும். |
06:46 | Current role dropdownல், நான் Studentஐ தேர்ந்தெடுக்கிறேன். |
06:51 | student role மட்டுமே ஒதுக்கப்பட்ட userகளை காட்ட, இது பட்டியலை வடிகட்டி கொடுக்கும். |
06:58 | எல்லா மாணவர்களையும் தேர்ந்தெடுக்க, பக்கத்தின் கீழுள்ள, Select all பட்டனை க்ளிக் செய்யவும். |
07:04 | பின், With selected users dropdownல், Send a messageஐ தேர்ந்தெடுக்கவும். |
07:11 | தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா studentகளுக்கும், இது ஒரு பொதுவான messageஐ அனுப்பும். |
07:16 | டுடோரியலை இடைநிறுத்தி, இங்கு Message bodyல் காட்டப்பட்டுள்ளபடி, messageஐ டைப் செய்யவும். |
07:22 | messageஐ அனுப்புவதற்கு முன், அதை மீண்டும் பார்க்க, கீழுள்ள, Preview பட்டனை க்ளிக் செய்யவும். |
07:29 | தேவைப்பட்டால், Update பட்டனை க்ளிக் செய்து, நீங்கள் messageஐ update செய்துகொள்ளலாம். |
07:35 | messageஐ அனுப்ப, Send message பட்டனை க்ளிக் செய்யவும். |
07:40 | ஒரு confirmation messageஐயும், participants listsக்கு திரும்பச் செல்ல, ஒரு இணைப்பையும் நீங்கள் காண்பீர்கள். |
07:46 | Back to participants listஐ க்ளிக் செய்யவும். |
07:50 | With selected users dropdownஐ க்ளிக் செய்யவும். noteகளை அனுப்புவதற்கான தேர்வுகளை கவனிக்கவும்; தனிப்பட்ட மற்றும் பொதுவானவை இரண்டும். |
08:00 | ஏதேனும் 2 userகளை தேர்ந்தெடுப்போம். |
08:03 | With selected users dropdownனிலிருந்து, Add a new note ஐ தேர்ந்தெடுக்கவும். |
08:09 | ஒரு userன் Content text areaவில், காட்டப்பட்டுள்ளபடி நான் noteஐ டைப் செய்கிறேன். |
08:15 | மற்றொரு userன் பக்கத்தில் உள்ள Content text areaவில், இங்கு காட்டப்பட்டுள்ளபடி நான் noteஐ டைப் செய்கிறேன். |
08:22 | வலது பக்கத்தில் உள்ள, Context dropdownஐ பார்க்கவும். |
08:26 | ஒரு noteன் Context , அந்த noteஐ எந்த userகள் பார்க்கலாம் என்பதை தீர்மானிக்கிறது. |
08:31 | ஒரு personal note, ஆசிரியருக்கும், அனுப்பப்படுகின்ற மாணவருக்கும் மட்டுமே தெரியும். |
08:38 | ஒரு course note, இந்த courseன் மற்ற ஆசிரியர்களுக்கு தெரியும். |
08:44 | ஒரு site note, எல்லா courseகளிலும் உள்ள எல்லா ஆசிரியர்களுக்கும் தெரியும். |
08:50 | ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயுள்ள தொடர்பிற்கு, பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சொந்த விதிகளை கொண்டிருக்கும் . |
08:57 | இந்த வழிகாட்டுதல்கள் அடிப்படையில், நீங்கள் Contextஐ தீர்மானிக்கலாம். |
09:02 | Contextஐ நான், courseஆக வைக்கிறேன். |
09:06 | முடித்தவுடன், Save changes பட்டனை க்ளிக் செய்யவும். |
09:10 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
09:16 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு courseல் userகளை பதிவு செய்வது, |
09:22 | courseகளில் groupகளை உருவாக்குவது மற்றும் மாணவர்களுக்கு messageகள் மற்றும் noteகளை அனுப்புவது. |
09:29 | உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி. Moodle site adminஆல் முன்பு உருவாக்கப்பட்ட எல்லா usersகளையும், Calculus courseக்கு பதிவு செய்யவும். |
09:40 | ஏற்கனவே உள்ள groupகளுக்கு, புதிய மாணவர்களை சேர்த்து, அவர்களுக்கு ஒரு welcome messageஐ அனுப்பவும். பின், மாணவர்களுக்கு noteகளை அனுப்பவும். |
09:50 | விவரங்களுக்கு, இந்த டுடோரியலின்Assignment இணைப்பை பார்க்கவும். |
09:55 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:04 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
10:14 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
10:19 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
10:31 | இந்த ஸ்கிரிப்ட், நான்சி மற்றும் ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி. |