Moodle-Learning-Management-System/C2/Courses-in-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodleலில் courseகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் ஒரு course ஐ உருவாக்க, மற்றும் courseகளில் நடவடிக்கைகளை செய்யக்கற்போம்.
00:16 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04,
00:24 XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, Moodle 3.3 மற்றும் Firefox web browser.
00:38 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:42 எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
00:50 இந்த டுடோரியலை கற்பவர்களுக்கு, Moodleலில் categoryக்களை உருவாக்க தெரிந்திருக்கவேண்டும்.
00:56 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கான Moodle டுடோரியல்களை பார்க்கவும்.
01:03 Browserக்கு மாறி, உங்கள் moodle homepageஐ திறக்கவும். XAMPP service செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.
01:11 உங்கள் admin username மற்றும் passwordன் விவரங்களை வைத்து login செய்யவும்.
01:16 இப்போது நாம், Admin’s dashboard.ல் உள்ளோம்.
01:19 இடது பக்கத்தில் உள்ள navigation menuவை திறக்க, drawer menuவை க்ளிக் செய்யவும்.
01:25 இடது பக்கத்தில் உள்ள Site Administrationஐ க்ளிக் செய்யவும்.
01:29 முதலில் Courses tabஐ க்ளிக் செய்து, பின் Manage courses and categoriesஐ க்ளிக் செய்யவும்.
01:36 இங்கு Mathematics. என்ற ஒரே ஒரு category இருப்பதை கவனிக்கவும்.
01:41 மற்றும்,நாம் முன்பு உருவாக்கிய இரண்டுsubcategoryகள்: 1st Year Maths மற்றும் 2nd Year Maths, .
01:50 இப்போது, Mathematicsன் கீழ் ஒரு புதிய courseஐ உருவாக்குவோம்.
01:55 அதனால், Create new courseஐ க்ளிக் செய்யவும்.
01:59 மேலும் Add a new course திரையில், எல்லா fieldகளையும் காண, மேல் வலது பக்கத்தில் உள்ள Expand All ஐ க்ளிக் செய்யவும்.
02:12 Course full name textboxல், நாம்Calculus. என டைப் செய்வோம்.
02:18 Course short nameல், மீண்டும் Calculus. என டைப் செய்வோம்.
02:24 Course short name, breadcrumbs மற்றும்courseக்கு தொடர்புடைய மின்னஞ்சல்களில் பயன்படுத்தப்படும்.
02:31 இது, course full nameல் இருந்து மாறுபட்டதாக இருக்கலாம்.
02:35 நாம் காண்பது போல், Course Category, Mathematics, ஆகும்.
02:40 அடுத்த தேர்வு, Course visibility. . முன்னிருப்பாக, Show தேர்ந்தெடுக்கப்படுகிறது.
02:48 course, மற்ற courseக்களுடன் காட்டப்படுமா, இல்லையா என்பதைVisible setting தீர்மானிக்கிறது.
02:56 ஒரு மறைக்கப்பட்ட course, அந்த courseக்கு ஒதுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே புலனாகிறது- Admin, Course creator, Teacher, Manager போன்றவர்கள்.
03:08 இப்போதைக்கு, இந்த settingஐ நாம் அப்படியே விட்டுவிடுவோம்.
03:12 அடுத்து வருவது, Course start date.
03:16 செமெஸ்டர் ஆரம்பிக்கும் தேதி போன்ற ஒரு குறிப்பிட்ட தேதியில்course தொடங்கினால், start dateல் அதை தேர்ந்தெடுக்கவும்.
03:25 இதன் பொருள், start date வரை மாணவர்களுக்கு, course புலனாகாது என்பதாகும்.
03:32 Course end date, முன்னிருப்பாக enable செய்யப்படுகிறது மற்றும் course உருவாக்கப்பட்ட அதே தேதிக்கு set செய்யப்படுகிறது.
03:42 Checkboxஐ க்ளிக் செய்து, அதை disable செய்கிறேன். இதன் பொருள், course எப்போதும் முடிவு பெறாது என்பதாகும்.
03:51 எனினும், courseக்கு ஒரு முடிவு தேதி இருந்தால், நீங்கள் checkboxஐ இங்கு enable செய்யலாம். பின், உங்கள் தேவைக்கேற்றவாறு தேதியை தேர்ந்தெடுக்கவும்.
04:02 முக்கிய குறிப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட end dateக்கு பிறகு, course மாணவர்களுக்கு புலனாகாது. அதை நான் disableஆக வைக்கிறேன்.
04:13 Course ID number , Category ID number போன்றதேயாகும். Course ID number ஒரு கட்டாயமற்ற field ஆகும்.
04:22 இது, course admin userகள் ஆப்லைன் courseக்களுடன் அடையாளம் காண்பதற்காகும்.
04:28 உங்கள் கல்லூரி, courseக்களுக்கு IDக்களை பயன்படுத்தினால், பின் அந்த course ID யை இங்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த field, மற்ற Moodle usersகளுக்கு புலனாகாது.
04:40 இந்த field கட்டாயமற்றதாகும் மற்றும் வலைத்தளத்தில் இது எங்கும் காட்டப்படவில்லை. நான் இதை காலியாக விடப்போகிறேன்.
04:49 அடுத்து, Descriptionனின் கீழ் நாம் 2 fieldகளை காணலாம்: Course Summary மற்றும் Course Summary files.
04:59 Course summary, கட்டாயமற்ற, ஆனால் முக்கியமான field ஆகும். அது ஏனெனில், user ஒரு தேடுதலை தொடங்கும் போது, course summary textஉம் ஸ்கேன் செய்யப்படுகிறது.
05:13 இங்கு, தலைப்பின் பெயர்களை பட்டியலிடுவது ஒரு நல்ல கருத்தாகும். பின்வருவனவற்றை டைப் செய்யவும்: Topics covered in this Calculus course are: Limits,Graph of a function, Factorial
05:29 Courseகளின் பட்டியலுடன் Course summary உம் காட்டப்படுகிறது.
05:35 Course summary fileகள், Course summary files fieldல் upload செய்யப்படவேண்டும்.
05:42 முன்னிருப்பாக, jpg, gif மற்றும் png file வகைகள் மட்டுமே, course summary fileகளாக அனுமதிக்கப்படுகின்றன. நான் எந்த fileஐயும் upload செய்ய விரும்பாததால், இதை தவிர்க்கிறேன்.
05:57 Course format என்பது, மாணவர்களுக்காக வளங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்ற வழியை குறிக்கின்றன.
06:06 Format dropdownல், 4 தேர்வுகள் உள்ளன- Single Activity Format, Social Format, Topics Format மற்றும்Weekly Format.
06:20 வாரக்கணக்காக நடக்கின்ற courseகளும் இருக்கின்றன.
06:24 உங்கள் course, அது போன்ற ஒன்றானால், பின் Weekly formatஐ தேர்ந்தெடுக்கவும்.
06:30 course, ன் ஒவ்வொரு வாரத்திற்கும், ஒரு தெளிந்த தொடக்க தேதி மற்றும் ஒரு முடிவு தேதியுடன் ஒரு sectionஐ Moodle உருவாக்கும்.
06:39 தலைப்பு வாரியாக நடக்கின்ற coursesகளும் இருக்கின்றன. உங்கள் course, அது போன்ற ஒன்றானால், பின்Topics formatஐ தேர்ந்தெடுக்கவும்.
06:49 courseன் ஒவ்வொரு topicக்கும், Moodle ஒரு sectionஐ உருவாக்கும்.
06:55 இந்த fieldன் முன்னிருப்பு, Topics format ஆகும். அதை நாம் அப்படியே விட்டுவிடுவோம்.
07:03 Sectionகளின் முன்னிருப்பான எண்ணிக்கை 4 ஆகும்.
07:07 உங்கள் courseஐ மேலும் அதிகமாக பிரித்து இருந்தாலோ அல்லது 4 தலைப்புகளுக்கு குறைவாக இருந்தாலோ தேவைக்கேற்றார் போல் இந்த fieldஐ மாற்றவும். நான் இந்த எண்ணை, 5 ஆக மாற்றுகிறேன்.
07:20 மற்ற formatகளை பின்வரும் டுடோரியல்களில் நாம் பார்ப்போம்.
07:25 மற்ற தேர்வுகளை நாம் அப்படியே விட்டுவிடுவோம். பக்கத்தின் கீழுக்கு scroll செய்து, Save and display பட்டனை க்ளிக் செய்யவும்.
07:36 நாம் Enrolled Users பக்கத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறோம். பின்வரும் ஒரு டுடோரியலில் நாம் user enrollment பற்றி கற்போம்.
07:46 இப்போதைக்கு, category Mathematicsன் கீழ், நமது முதல் course Calculus ஐ நாம் வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம்.
08:03 இடது பக்கத்தில் இருக்கும் navigation menu, நாம் உருவாக்கியுள்ள courseக்கு தொடர்புடைய menuக்களை கொண்டிருக்கிறது. இவற்றுள், Participants, Grades போன்றவைகள் உள்ளடங்கும்.
08:15 இடது பக்கத்தில் உள்ள Calculus என்ற course பெயரை க்ளிக் செய்யவும்.
08:20 இங்கு, 5 தலைப்புகள் தெரிவதை நாம் காணலாம். அவை, Topic 1, Topic 2 என்பது போல பெயரிடப்பட்டிருக்கும். இந்த எண் 5 ஐ நாம் ஏற்கனவே கொடுத்துள்ளோம் என்பதை நினைவு கூறவும்.
08:34 மேல் வலது பக்கத்தில் உள்ள gear icon ஐ க்ளிக் செய்யவும்.
08:39 பின், Edit settingsஐ க்ளிக் செய்யவும். இந்த courseஐ உருவாக்கிய போது நாம் இருந்த பக்கத்தை போலவே ஒரு பக்கத்தை, இது திறக்கும்.
08:51 இந்த பக்கத்தில் உள்ள முந்தைய settingகளை நாம் மாற்றலாம். Course start dateஐ, 15 அக்டோபர் 2017 க்கு நான் மாற்றுகிறேன்.
09:04 பக்கத்தின் கீழுக்கு scroll செய்து, Save and display பட்டனை க்ளிக் செய்யவும்.
09:11 Gear menuக்கு கீழ் உள்ள மற்ற submenuக்களை நாம் பின்னர் ஆய்வு செய்வோம்.
09:17 இப்போது, நமது courseக்கான structureஐ சிறிது மாற்றுவோம்.
09:22 Site administrationஐ க்ளிக் செய்யவும். முதலில் Coursesஐ க்ளிக் செய்து, பின் Manage courses and categoriesஐ க்ளிக் செய்யவும்.
09:31 நாம் உருவாக்கியுள்ள courseஐ காண Mathematics categoryஐ க்ளிக் செய்யவும். courseன் வலது பக்கத்தில் உள்ள 3 iconகளை கவனிக்கவும்.
09:42 Iconகளை காண, அவற்றின் மீது வட்டமிடவும்.
09:46 Gear icon, course.ஐ edit செய்வதற்காகும். Delete அல்லது trash icon, ஒரு courseஐ நீக்குவதற்காகும்.
0 9:55 Eye icon, ஒரு courseஐ மறைப்பதற்காகும்.
10:01 குறுக்கே வெட்டப்பட்ட கண், ஒரு மறைக்கப்பட்ட courseஐ குறிக்கிறது.
10:07 course settingகளை edit செய்ய, course பெயரின் வலது பக்கத்தில் உள்ள, gear iconஐ நாம் க்ளிக் செய்யலாம்.
10:14 நான் Course Summaryஐ மாற்ற, மற்றும் ஏற்கனவே உள்ள தலைப்புகளுக்கு Binomialsஐ சேர்க்க விரும்புகிறேன். மீதமுள்ள settingகள், அப்படியே இருக்கலாம்.
10:25 பக்கத்தின் கீழுக்கு scroll செய்து, இந்த முறை Save and return பட்டனை க்ளிக் செய்யவும்.
10:34 உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி: category Mathematicsன் கீழ், Linear Algebra என்ற ஒரு புதிய courseஐ உருவாக்கவும்.
10:44 இப்போதைக்கு, இந்த courseஐ மறைக்கவும்.
10:47 Course summaryல் பின்வரும் தலைப்புகளை குறிப்பிடவும்: Linear equations, Matrices மற்றும் Vectors. Save and Return பட்டனை க்ளிக் செய்யவும்.
11:00 டுடோரியலை இடைநிறுத்தி, பயிற்சியை முடித்தவுடன் பின் தொடரவும்.
11:06 இப்போது, Mathematicsன் கீழ் நாம் 2 courseகளை கொண்டுள்ளோம்: Calculus மற்றும் Linear Algebra.
11:14 இப்போது, coursesக்கு பக்கத்தில் ஒரு புதிய icon தோன்றியிருப்பதை கவனிக்கவும்.
11:20 மேலும் கீழுமாக உள்ள அம்புக்குறிகள், coursesகளின் வரிசையை மீண்டும் ஒழுங்குபடுத்துவதற்காகும்.
11:26 Drag and drop அம்சத்தை பயன்படுத்தியும் நாம் வரிசையை மாற்றலாம். Calculus courseஐ, Linear Algebra course.க்கு மேலே நகர்த்துவோம்.
11:36 இரண்டு courseகளும், முதல் வருட மாணவர்களுக்காகும். அதனால், அவற்றை, 1st Year Maths subcategory.ன் கீழ் நகர்த்துவோம்.
11:47 அவற்றை தேர்ந்தெடுக்க, 2 courseகளின் இடது பக்கத்தில் உள்ள checkboxஐ check செய்யவும்.
11:53 பின், Move selected courses to dropdownல் Mathematics / 1st year Mathsஐ தேர்ந்தெடுக்கவும்.
12:02 பின், Move பட்டனை க்ளிக் செய்யவும்.
12:04 ஒரு வெற்றிச் செய்தியை நாம் பெறுகிறோம் - Successfully moved 2 courses into 1st year Maths.
12:14 coursesகளின் எண்ணிக்கை, Mathematicsன் கீழ் 0 ஆக இருப்பதையும், 1st year Maths ன் கீழ் 2ஆக இருப்பதையும் கவனிக்கவும்.
12:24 1st year Maths sub-category.ஐ க்ளிக் செய்யவும்.
12:28 இந்த subcategoryன் கீழ் நமது courseகள் பட்டியலிடப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
12:33 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
12:38 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு courseஐ எப்படி உருவாக்குவது மற்றும் courseகளில், edit, move போன்ற நடவடிக்கைகளை எப்படி செய்வது.
12:50 உங்களுக்கான ஒரு பயிற்சி: Mathematics, ன் கீழுள்ள, subcategory 2nd Year Maths க்கு 2 courseகளை சேர்க்கவும்.
13:00 Multivariable calculus மற்றும்Advanced Algebra.
13:06 விவரங்களுக்கு, இந்த டுடோரியலின்Code files இணைப்பை பார்க்கவும்.
13:12 15 அக்டோபர் 2017 ல் ஆரம்பிக்குமாறு, courseகளை edit செய்யவும்.
13:18 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
13:26 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
13:36 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
13:40 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
13:53 இந்த ஸ்கிரிப்ட், ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree