Moodle-Learning-Management-System/C2/Course-Administration-in-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle.லில், Course Administration குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Moodle.லில் Course Administration , Activities, மற்றும் ஒரு courseல் உள்ள Resourcesகள்.
00:17 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04,
00:24 XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP,
00:33 Moodle 3.3 மற்றும் Firefox web browser.
00:40 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
00:52 உங்கள் site administrator, ஒரு Moodle websiteஐ set செய்துள்ளதாகவும், உங்களை ஒரு teacher.ஆக பதிவு செய்துள்ளதாகவும், இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது.
01:03 இந்த டுடோரியலை கற்பவர்களுக்கு, Moodleலில் ஒரு teacher login இருக்கவேண்டும்.
01:09 அவர்களுக்கு, administratorஆல் குறைந்தபட்சம் ஒரு course ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் தங்களுக்குரிய courseக்கு ஏதேனும்material, upload செய்யப்பட்டிருக்க வேண்டும்.
01:19 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கானMoodle டுடோரியல்களை பார்க்கவும்.
01:26 Browserக்கு மாறி, உங்கள் moodle site.ஐ திறக்கவும்.
01:31 உங்கள் teacher username மற்றும் password விவரங்களை பயன்படுத்தி, login செய்யவும். நான் teacher Rebecca Raymondஆக ஏற்கனவே login செய்துள்ளேன்.
01:41 நாம் teacher’s dashboardல் உள்ளோம்.
01:44 இடது பக்கத்தில் உள்ள navigation menuல், My Coursesன் கீழ் உள்ள Calculusஐ கவனிக்கவும்.
01:51 நீங்கள் ஒரு teacher அல்லது ஒரு studentஆக பதிவு செய்துள்ள எல்லா courseகளும் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும்.
01:59 Calculus course.ஐ க்ளிக் செய்யவும்.
02:02 course topicகள் மற்றும் summaryக்களை நாம் முந்தைய டுடோரியல்களில் update செய்தோம்.
02:09 நீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில், முந்தைய டுடோரியல்களின் பயிற்சிகளை பார்க்கவும்.
02:16 இப்போது, நாம் சில பயனுள்ள course settingகளை பற்றி கற்போம்.
02:21 sectionனின் மேல் வலது பக்க்கத்தில் உள்ள gear iconஐ க்ளிக் செய்யவும்.
02:26 Edit Settingsஐ க்ளிக் செய்யவும். பின், எல்லா sectionsகளையும் விரிவாக்க, வலது பக்கத்தில் உள்ள Expand Allஐ க்ளிக் செய்யவும்.
02:36 இங்கு காணப்படுகின்ற settingகள், இந்த course உருவாக்கப்பட்ட போது, administratorஆல் வரையறுக்கப்பட்டவையாகும்.
02:44 General section, ல் நாம், Course full name.ஐ கொண்டிருக்கிறோம். course pageன் மேல், இந்த பெயர் காட்டப்படுகிறது.
02:54 Course short name என்பது, course navigation மற்றும் course சம்பந்தப்பட்ட emailsகளில் காட்டப்படுகின்ற பெயராகும்.
03:03 Course category , adminஆல் ஏற்கனவே set செய்யப்படுகிறது.
03:08 Course start date, Course end date மற்றும்Course ID numberஐ , நம் தேவைக்கேற்றவாறு நாம் மாற்றிக்கொள்ளலாம்.
03:21 Description sectionனின் கீழ், Course Summary textboxஐ காணவும். ஏற்கனவே உள்ள contentஐ நீக்கி, நான் பின்வருவனவற்றை டைப் செய்கிறேன்.
03:31 எனது courseன் முதல் பக்கத்தில், எனது மாணவர்கள் இதை பார்ப்பார்கள்.
03:37 அடுத்து வருவது, Course summary files. field ஆகும். இந்த fileகள், Course summary. யுடன் மாணவர்களுக்கு காட்டப்படும்.
03:47 முன்னிருப்பாக, jpg, gif மற்றும் png file typeகள் மட்டுமே Course summary fileகளாக அனுமதிக்கப்படுகின்றன.
03:56 ஒரு fileஐ upload செய்வதற்கு 3 வழிகள் உள்ளன: Fileஐ boxயினுள், drag and drop செய்வது,
04:03 மேல் இடது பக்கத்தில் உள்ள, Upload அல்லது Add iconஐ க்ளிக் செய்யவும். கீழ் நோக்கிய அம்புக்குறியை க்ளிக் செய்யவும்.
04:11 Upload அல்லதுAdd icon, அல்லது கீழ் நோக்கிய அம்புக்குறியை க்ளிக் செய்தால், File picker dialog box திறக்கும்.
04:21 இடது menuவில் உள்ள, Upload a file தேர்வை க்ளிக் செய்யவும்.
04:26 Browse அல்லதுChoose File பட்டனை க்ளிக் செய்யவும். பின், உங்கள் கணினியிலிருந்து விருப்பமான fileஐ தேர்ந்தெடுக்கவும்.
04:34 எனது கணினியிலிருந்து, நான் calculus.jpgஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:40 அதற்கு ஒரு வேறுபட்ட பெயரை, Save as fieldல் அதை டைப் செய்வதன் மூலம் கொடுக்கலாம்.
04:46 உரிய fieldகளில், author மற்றும் licenseன் விவரங்களை குறிப்பிடவும். இறுதியாக, கீழுள்ள Upload this file பட்டனை க்ளிக் செய்யவும்.
04:58 இவ்வாறு நாம், Course summary fileகளை upload செய்யலாம்.
05:02 அடுத்து வருவது, Course format. Resourceகள் மற்றும் activityகளை, மாணவர்களுக்கு ஏற்பாடு செய்கின்ற முறையை Course format குறிக்கிறது.
05:12 Format dropdownல், 4 தேர்வுகள் உள்ளன- Single Activity Format, Social Format , Topics Format மற்றும் Weekly Format.
05:26 நமது admin, Topics formatஐ தேர்ந்தெடுத்துள்ளார். அதை நாம் அப்படியே விட்டுவிடுவோம்.
05:33 அடுத்த setting, Hidden sectionகளுக்காகும். இவை, ஒரு course லில் உள்ள, மாணவர்களிடமிருந்து மறைக்கப்படக்கூடிய topicகளாகும்.
05:44 ஒரு ஆசிரியர், ஒரு குறிப்பிட்ட தலைப்பை நிறைவு செய்யாமல் இருக்கும் சூழ்நிலையில், இது பயன்படுகிறது. இந்த setting , Hidden sectionகளை மாணவர்கள் முன் எப்படி வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.
05:57 இந்த தேர்வை தேந்தெடுத்தால், content, மாணவர்களுக்கு ஒரு சுருங்கிய வடிவத்தில் காட்டப்படும்.
06:04 இந்த தேர்வை தேந்தெடுத்தால், மாணவர்களிடமிருந்து content மறைக்கப்படும்.
06:09 இப்போதைக்கு, அதை முன்னிருப்பாகவே நாம் வைப்போம்.
06:13 அடுத்த dropdown , Course Layout ஆகும். அதை க்ளிக் செய்யவும்.
06:19 இந்த தேர்வை தேர்ந்தெடுத்து, எல்லா sectionகளையும் ஒரே பக்கத்தில் நாம் காட்டலாம்.
06:25 இங்கிருக்கின்ற மற்றொரு தேர்வு, Show one section per page. sectionகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், இது course ஐ பல பக்கங்களில் பிரித்து வைக்கும்.
06:37 இப்போதைக்கு, அது Show all sections in one page, ல் இருக்குமாறு அதை நாம் வைப்போம்.
06:43 அடுத்தது, Appearance பிரிவாகும்.
06:46 Show gradebook to students தேர்வை கவனிக்கவும். course ல் உள்ள பல activityகள், கிரேடுகளை ஒதுக்க ஆசிரியர்களை அனுமதிக்கிறது.
06:57 இந்த தேர்வு, அந்த கிரேடுகளை ஒரு மாணவரால் பார்க்க முடியுமா என்பதை தீர்மானிக்கிறது. முன்னிருப்பாக, இந்த தேர்வு, Yes,க்கு set செய்யப்படுகிறது. நாம் அதை அப்படியே விட்டுவிடுவோம்.
07:10 முன்னிருப்பாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Show activity reportsYes,க்கு மாற்றுவோம்.
07:18 இது, ஒரு மாணவர், அவன்/அவளது activity reportகளை, அவன்/அவளது profile page.லிருந்து பார்க்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
07:27 இந்த courseக்கு upload செய்யக்கூடிய fileகளின் அதிகபட்ச அளவை நாம் set செய்யலாம்.
07:34 additional materials, assignments, போன்றவைகளுக்கும் fileகள் upload செய்யப்படலாம்.
07:41 நமது admin , இதை, அதிகபட்ச fileன் அளவான 128MBக்கு set செய்துள்ளார். இந்த அளவை நாம் அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
07:52 மற்ற எல்லா settingகளையும், அவற்றின் முன்னிருப்பான மதிப்புகளில் வைத்திருப்போம்.
07:58 கீழே scroll செய்து, Save and display பட்டனை க்ளிக் செய்யவும். நாம் Course பக்கத்திற்கு கொண்டுவரப்படுகிறோம்.
08:06 தலைப்பின் பெயர்களுக்கு மேல் உள்ள Announcements இணைப்பை கவனிக்கவும்.
08:11 இது கட்டாய தகவல்கள், சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள், முதலியன பற்றி மாணவர்களுக்கு தெரியப்படுத்தும்.
08:20 பக்கத்தின், மேல் வலது புறமுள்ள gear iconஐ க்ளிக் செய்து, பின், Turn Editing Onஐ க்ளிக் செய்யவும்.
08:28 NOTE: courseக்கு ஏதேனும் மாற்றங்களை செய்ய, Turn Editing On ஐ நீங்கள் க்ளிக் செய்யவேண்டும்.
08:35 இப்போது, Announcementsன் வலது பக்கத்தில் உள்ள, Editஐ க்ளிக் செய்து, பின், Edit Settingsஐ க்ளிக் செய்யவும்.
08:44 பின், Descriptionல் நான் பின்வரும் textஐ டைப் செய்கிறேன். “Please check the announcements regularly”.
08:52 Display description on course page. ஐ க்ளிக் செய்யவும். இது, இணைப்பிற்கு உடனடியாக கீழே உள்ள விளக்கத்தை காட்டும்.
09:01 மற்ற எல்லா settingகளையும் அப்படியே விட்டுவிடவும்.
09:05 கீழே scroll செய்து, Save and return to course. பட்டனை க்ளிக் செய்யவும். நாம் Course பக்கத்திற்கு திரும்ப வருகிறோம்.
09:15 மேலும் announcementகளை சேர்க்க, Announcements தலைப்பை க்ளிக் செய்யவும்.
09:21 இப்போது, Add a new topic பட்டனை க்ளிக் செய்யவும். Subjectஐ , Minimum requirements என டைப் செய்யவும்.
09:31 பின்வரும் messageஐ டைப் செய்யவும்: “This course requires you to submit a minimum of 3 assignments and attempt 5 quizzes to pass”.
09:43 Discussion subscription checkbox, check செய்யப்பட்டிருப்பதையும், மேலும் அதை edit செய்யமுடியாது என்பதையும் கவனிக்கவும். இது ஏனெனில், courseல் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லோரும், அதற்கு கட்டாய சந்தாதாரர்கள் ஆகிவிடுகிறார்கள்.
09:59 அடுத்தது, Attachments. இங்கு, தொடர்புள்ள fileகளை, drag and drop செய்யலாம் அல்லது upload செய்யலாம்.
10:08 forumன் மேல் announcementகள் தெரிய, நீங்கள் விரும்பினால் Pinned checkboxஐ க்ளிக் செய்யவும். நான் அதை tick செய்கிறேன்.
10:18 அடுத்த checkboxஐயும் க்ளிக் செய்யவும். இந்த forumக்கு subscribe செய்துள்ள எல்லோருக்கும், இது ஒரு notificationஐ உடனடியாக அனுப்பும்.
10:29 அடுத்த பிரிவான, Display period.ஐ விரிவாக்கவும். ஒரு data வரம்பிற்கு, இந்த forum post புலனாக வேண்டுமா என்பதை இங்குள்ள settingகள் தீமானிக்கின்றன.
10:41 முன்னிருப்பாக, இவை disable ஆகி உள்ளன. இதன் பொருள், postகள் எப்போதும் புலனாகும். நாம் முன்னிருப்பான settingகளை அப்படியே வைத்திருப்போம்.
10:52 கீழே scroll செய்து, Post to forum பட்டனை க்ளிக் செய்யவும்.
10:57 ஒரு வெற்றிச் செய்தி காட்டப்படுகிறது. postகளுக்கு ஏதேனும் மாற்றங்களை செய்ய, Post authorகளுக்கு 30 நிமிடங்கள் இருக்கும்.
11:08 breadcrumbல் உள்ள Calculus இணைப்பை நான் க்ளிக் செய்கிறேன்.
11:13 இப்போது, இந்த sectionக்கு விரிவான பாடத்திட்டத்துடன் கூடிய ஒரு பக்கத்தை சேர்க்கிறேன்.
11:19 General section.னின் கீழ் வலது பக்கத்தில் உள்ள Add an activity or resource இணைப்பை க்ளிக் செய்யவும். Resourceகளின் பட்டியலில் இருந்து, Pageஐ தேர்வு செய்யவும்.
11:32 இந்த தேர்வை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது தோன்றும் இந்த activityன் விளக்கத்தை படிக்கவும்.
11:39 பின், கீழுள்ள Add பட்டனை க்ளிக் செய்யவும். நாம் ஒரு புதிய பக்கத்திற்கு கொண்டுவரப்படுகிறோம்.
11:47 Name fieldல், டைப் செய்க:Detailed syllabus.
11:52 தலைப்பு, சுய விளக்கம் கொடுப்பதால், நான் Description textboxஐ காலியாக விடுகிறேன்.
11:59 Page Content textboxல், இந்த Calculus courseன் விரிவான பாடத்திட்டத்தை நான் enter செய்கிறேன்.
12:07 இந்த content, இந்த டுடோரியலின், Code Files இணைப்பில் உள்ளது. அதை தரவிறக்கி, பயிற்சியின் போது நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
12:18 கீழே scroll செய்து, Save and return to course பட்டனை க்ளிக் செய்யவும். நாம் course பக்கத்திற்கு திரும்ப வருகிறோம்.
12:27 இப்போது, நமது accountலிருந்து logout செய்வோம். அதைச் செய்ய, மேல் வலது பக்கத்தில் உள்ள user iconஐ க்ளிக் செய்யவும். இப்போது, Log out தேர்வை தேந்தெடுக்கவும்.
12:39 ஒரு மாணவருக்கு, இந்த பக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை நான் காட்டுகிறேன்.
12:45 student ID Priya Sinha வை நான் என்னிடம் கொண்டுள்ளேன். இந்த மாணவரும், adminஆல் Calculus courseக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார்.
12:55 நான் மாணவர் Priya Sinhaஆக login செய்துள்ளேன். இப்போது, இடது பக்கத்தில் உள்ள Calculusஐ க்ளிக் செய்கிறேன்.
13:04 ஒரு மாணவர், இந்த பக்கத்தை இவ்வாறு காண்பார். இந்த பக்கத்தின் மேல் வலது புறம், gear icon இல்லாதிருப்பதை கவனிக்கவும்.
13:14 இது ஏனெனில், courseன் எந்த பகுதியையும் ஒரு மாணவரால் edit செய்யமுடியாது.
13:20 இப்போது, student id.யிலிருந்து நாம் logout செய்வோம்.
13:24 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
13:30 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Moodle.லில் Course Administration , Activities, மற்றும் ஒரு courseல் உள்ள Resourcesகள்.
13:40 உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி: course ன் விளைவை விவரிக்கின்ற ஒரு Page resourceஐ சேர்க்கவும். விவரங்களுக்கு, இந்த டுடோரியலின்Assignment இணைப்பை பார்க்கவும்.
13:53 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
14:02 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
14:13 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
14:17 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
14:31 இந்த ஸ்கிரிப்ட், நான்ஸி மற்றும் ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree