Moodle-Learning-Management-System/C2/Blocks-in-Admin-Dashboard/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Admin's Dashboardல் blockகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் , blockகளை சேர்க்க மற்றும் நீக்க, மற்றும் Front pageஐ set செய்யக்கற்போம்.
00:18 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04
00:26 XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP
00:35 Moodle 3.3 மற்றும் Firefox web browser.
00:41 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
00:54 இந்த டுடோரியலை கற்பவர்களுக்கு, Admin’s dashboard பற்றி தெரிந்து இருக்க வேண்டும். இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கான Moodle டுடோரியல்களை பார்க்கவும்.
01:08 Browserக்கு மாறி, உங்கள் moodle site.ஐ திறக்கவும். XAMPP service செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.
01:17 உங்கள் admin username மற்றும் passwordன் விவரங்களை வைத்து login செய்யவும்.
01:22 இப்போது நாம், Admin’s dashboard.ல் உள்ளோம்.
01:26 Blockகள், ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது தகவலை தருகிறது என்பதை நினைவில் கொள்ளவும். மற்றும், அது Moodleன் எல்லா பக்கங்களிலும் காணப்படும்.
01:38 இப்போது, Moodle Blockகளுடன் எப்படி வேலை செய்வது என்பதை புரிந்துகொள்வோம்.
01:44 பயன்படுத்தப்பட்டுள்ள themeன் அடைப்படையில், blockகள், வலது பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலோ இருக்கலாம்.
01:52 மக்கள் எப்போது login செய்தாலும், அவர்கள் பார்க்கவேண்டிய தகவலை Blocksகள் கொண்டிருக்கின்றன.
01:58 Moodle.லில், பல்வேறு வகை blockகள் உள்ளன. மேலும், நமது preferenceகளுக்கு ஏற்றார் போல், அவற்றை எளிதாக நகர்த்தி மற்றும் ஒழுங்குபடுத்தலாம்.
02:09 நமது dashboardக்கு இப்போது சில blockகளை நாம் சேர்ப்போம்.
02:14 இடது பக்கத்தில் உள்ள navigation menu ஐ க்ளிக் செய்யவும்.
02:19 dashboardன் வலது பக்கத்தில் உள்ள Customise this page க்ளிக் செய்யவும்.
02:26 Add a block என்ற ஒரு புதிய menu item இப்போது தெரிவதை கவனிக்கவும். Add a blockஐ க்ளிக் செய்யவும்.
02:35 ஒரு புதிய pop-up window திறக்கிறது. நாம் சேர்க்க விரும்புகின்ற blockன் வகையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
02:43 உதாரணத்திற்கு, Messagesஐ க்ளிக் செய்யவும். இப்போது, dashboardல், Messages block தோன்றுவதை நீங்கள் காணலாம்.
02:53 தற்போது, எந்த செய்திகளும் இல்லை.
02:56 முன்னிருப்பாக, எல்லா புதிய blockகளும் வலது ஓர columnமில் சேர்க்கப்படுகின்றன.
03:02 மேலும், ஒரு blockஐ சேர்ப்போம். இடது பக்கத்தில் உள்ள Add a block menuஐ க்ளிக் செய்யவும்.
03:09 menu types பட்டியலிலிருந்து, HTMLஐ தேர்ந்தெடுக்கவும். HTML block என்பது, நாம் custom HTMLஐ எழுதக்கூடிய ஒரு block ஆகும்.
03:19 இதை பயன்படுத்தி, Library widgets, News feeds, Twitter, Facebook, போன்ற widgetsகளை நாம் உட்பொதிக்கலாம்.
03:30 Messages blockன் கீழ், ஒரு புதிய NEW HTML BLOCK சேர்க்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
03:37 HTML blockல் உள்ள gear iconஐ க்ளிக் செய்யவும். பின், Configure (NEW HTML BLOCK) blockஐ க்ளிக் செய்யவும்.
03:46 Configure HTML block, 3 sectionsகளை கொண்டிருக்கிறது: Block settings , Where this block appears மற்றும் On this page .
03:57 முன்னிருப்பாக, முதல் section விரிவாக்கப்பட்டிருக்கிறது.
04:02 எல்லா sectionகளையும் விரிவாக்க, Expand allஐ க்ளிக் செய்யவும்.
04:07 block தலைப்பில், டைப் செய்வோம்: “Things to do”.
04:12 Content area.வில், இந்த admin userக்கு சில வேலைகளை சேர்ப்போம்.
04:19 பின்வருவனவற்றை டைப் செய்யவும்: Create a new course, Create new users, Add users to the course
04:30 இங்குள்ளEditor, ஒருHTML editor ஆகும் மற்றும் வேறு எந்த word processor மற்றும் editorஐ போன்று அதை பயன்படுத்தலாம்.
04:39 Where this block appearsன் கீழுள்ள தேர்வுகளை பார்க்க, கீழே scroll செய்யவும்.
04:45 Default regionனின் கீழ், Contentஐ தேர்ந்தெடுக்கவும். Default weightல், -10ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:54 blockன் எடை குறைவாக இருப்பின், அது அந்த பகுதியில் மேல் தோன்றும். -10 மிகக்குறைந்ததாகும்.
05:03 -10ஐ தேர்ந்தெடுப்பதினால், அது content பகுதியில் மேலாக இருக்க நான் உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.
05:12 இந்த block , Admin’s dashboard. ல் தோன்றும்.
05:17 இப்போது வருவது, “On this page” section. ஆகும். இந்த block சேர்க்கப்பட்ட இவ்விடத்தில், பக்கத்திற்கான configurationஐ நீங்கள் வரையறுக்கலாம்.
05:28 நமக்கு, இது தான் dashboard.. மேலுள்ள sectionல் வரையறுக்கப்பட்டுள்ள முன்னிருப்பான configurationஐ, இந்த configuration ரத்து செய்துவிடும்.
05:40 அதுவே, Where this block appears section. இந்த sectionல், Region ல் Contentஐயும், Weightல் -10 ஐயும் நாம் தேர்ந்தெடுப்போம்.
05:53 Blockன் வகையை பொறுத்து, configuration settingகள் மாறும் என்பதை கவனிக்கவும்.
06:01 மாற்றங்களை சேமிக்க, Save Changesஐ க்ளிக் செய்து, dashboardக்கு திரும்பச் செல்லவும்.
06:07 Things to do என்ற தலைப்பை கொண்ட, புதிய HTML block இப்போது தெரிவதை கவனிக்கவும். மேலும், content பகுதியில் இதுவே, மிகவும் மேலுள்ளblock ஆகும்.
06:18 மேலும்Move icon, ஐ பயன்படுத்தி, ஒரு blockஐ இழுத்து, அதன் இடத்தை நாம் மாற்றலாம்.
06:25 Course Overview blockற்கு மேலுள்ள Things to do blockஐ, அதை drag and drop செய்து நகர்த்துவோம்.
06:34 நாம் சில நிமிடங்களுக்கு முன் set செய்த configurationஐ, இது எப்படி மாற்றுகிறது என்பதை நாம் பார்ப்போம்.
06:40 Gear iconஐ முதலிலும், பின் Configure Things to do block.ஐயும் க்ளிக் செய்யவும். பின், Expand Allஐ க்ளிக் செய்யவும்.
06:49 “On this page” sectionஐ காண, கீழே scroll செய்யவும். எடை, -2 க்கு மாறியிருக்கிறது. எனினும், default weight அப்படியே இருக்கிறது.
07:03 Dashboardக்கு திரும்பச் செல்ல, Cancelஐ க்ளிக் செய்யவும்.
07:07 இந்தLearning Plans block நமக்கு தேவையில்லை. அதனால், அதை நீக்கிவிடுவோம். Gear iconஐ முதலிலும், பின் Delete Learning plans blockஐயும் க்ளிக் செய்யவும்.
07:19 Confirm pop up window தோன்றி, இந்த நீக்குதலை உறுதிப்படுத்த நம்மை தூண்டுகிறது. இங்குள்ள, Yes பட்டனை க்ளிக் செய்யவும்.
07:29 Learning Plans block இப்போது கிடைக்கவில்லை என்பதை கவனிக்கவும். தேவைப்பட்டால், இந்த blockஐ பின்னர் நாம் எப்போது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
07:40 நமது Moodle நிறுவுதலின் front pageஐ இப்போதுcustomize செய்வோம்.
07:46 இடது பக்க menuவில் உள்ள, Site Administrationஐ க்ளிக் செய்யவும்.
07:51 Front page sectionல் Front Page settingsஐ கண்டறிய கீழே scroll செய்யவும். அதை க்ளிக் செய்யவும்.
08:00 Full Site Name ஐ , Digital India Learning Management Systemக்கு மாற்றுவோம்.
08:08 ஒவ்வொரு பக்கத்தின் மேலும், breadcrumbsக்கு மேல் இந்த text தோன்றுகிறது.
08:15 பக்கத்தின் தலைப்பில், Short name என்ற text தோன்றுகிறது.
08:20 இந்த பக்கத்தின் தலைப்புDigital India LMS, மற்றும் இதனை பின்தொடர்ந்து நாம் இருக்கின்ற பக்கத்தின் தலைப்பு வருவதை கவனிக்கவும்.
08:29 நாம் எந்த logo imageஐயும் கொடுக்கவில்லை எனில், Short name ஒரு logo textஆகவும் பயன்படுத்தப்படுகிறது. நாம் அதை அப்படியே விட்டுவிடுவோம்.
08:40 Front page itemகளுக்கான dropdownகளை காண, கீழே scroll செய்யவும். முன் பக்கத்தில் காட்டக்கூடிய itemகளின் பட்டியல் இவை.
08:50 login செய்திருந்தாலும், இல்லையெனினும் எல்லா பார்வையாளர்களும் இந்த itemகளை காணலாம்.
08:57 இதன் வரிசை, ஒரு combination boxஆல் தீர்மானிக்கப்படுகிறது. நாம் அதை அப்படியே விட்டுவிடுவோம்.
09:05 அப்போது, கிடைக்கின்ற courseகளின் பட்டியலை மட்டும் எல்லா uerகளும் பார்க்கலாம்.
09:13 அடுத்தது, Front page items when logged in. . இது, login செய்த userகளுக்கு காட்டக்கூடிய itemகளின் பட்டியல் ஆகும்.
09:24 முதல், drop-down ல் Enrolled coursesஐ தேர்ந்தெடுப்போம்.
09:29 மீதமுள்ள தேர்வுகளை, அதன் முன்னிருப்பான மதிப்புகளுடன் அப்படியே விட்டுவிடுவோம்.
09:35 கீழே scroll செய்து, Save Changesஐ க்ளிக் செய்யவும்.
09:40 சுருங்கச் சொல்ல,
09:43 இந்த டுடோரியலில் நாம் கற்றது: “Things to do” என்று அழைக்கப்படுகின்ற ஒரு HTML blockஐ சேர்ப்பது, மற்றும் பக்கத்தில் அது எங்கு தோன்ற வேண்டும் என்று குறிப்பிடுவது.
09:54 மேலும், guests மற்றும்login செய்த userகளுக்கு ஒரு frontpageஐ நாம் set செய்தோம்.
10:00 உங்களுக்கான ஒரு பயிற்சி: Private files block ஐ நீக்கவும். Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பயன்படுத்தி, ஒரு புதிய HTML blockஐ சேர்க்கவும்.
10:14 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
10:23 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
10:33 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
10:37 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
10:51 இந்த ஸ்கிரிப்ட், ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree