Moodle-Learning-Management-System/C2/Admin-dashboard/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Moodle.லில், Admin’s dashboard குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Admin’s dashboard ல் உள்ள பல்வேறு blockகள், Admin’s profile page மற்றும் preferenceகளை எப்படி edit செய்வது. |
00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04, XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, Moodle 3.3 மற்றும் Firefox web browser. |
00:46 | உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:50 | எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும். |
00:59 | இந்த டுடோரியலை கற்பவர்கள், தங்கள் கணினியில் Moodle 3.3ஐ நிறுவியிருக்க வேண்டும். இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கான Moodle டுடோரியல்களை பார்க்கவும். |
01:13 | Browserக்கு மாறி, உங்கள் moodle site.ஐ திறக்கவும். XAMPP service செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும். |
01:21 | Headerகளை மட்டும் கொண்ட ஒரு காலி பக்கத்தை நீங்கள் காணலாம். இது ஏனெனில், நமது நிறுவுதலுக்கு நாம் எந்த front page ஐயும் set செய்யவில்லை. |
01:33 | Windowவின் மேல் வலது மூலையில் உள்ள Log in இணைப்பை க்ளிக் செய்யவும். |
01:39 | நீங்கள் Moodleஐ நிறுவிய போது கொடுத்த உங்கள் admin username மற்றும் passwordஐ பயன்படுத்தி login செய்யவும். |
01:47 | நான் usernameஐ admin எனவும், passwordஐ Spokentutorial1@ எனவும் enter செய்கிறேன். பின், Log inஐ க்ளிக் செய்யவும். |
01:59 | நாம் இப்போது பார்க்கின்ற பக்கம், dashboard எனப்படுகிறது. |
02:04 | நமது dashboard, 2 columnகளாக பிரிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். |
02:08 | இடது பக்கம் இருக்கின்ற அகலமானது, முக்கிய Content column. ஆகும். |
02:13 | வலது பக்கம் இருப்பது, Blocks column ஆகும். |
02:17 | Blockகள் என்பன, இந்த columnகளில் இருக்கும் குறிப்பிட்ட நோக்கம் அல்லது தகவலை வழங்குகின்ற itemகள் ஆகும். |
02:25 | Blockகள், Moodleன் எல்லா பக்கங்களிலும் காணப்படுகின்றன. உங்கள் courseன் முக்கிய பகுதிகளுக்கான shortcutகளாக, நீங்கள் அவற்றை நினைத்துக்கொள்ளலாம். |
02:35 | உதாரணத்திற்கு, Private Files, Online Users, Course Overview போன்றவை எனது dashboardல் உள்ள blockகள் ஆகும். |
02:46 | இங்கு, எந்த activityகளும், courseகளும் இருக்காது என்பதை கவனிக்கவும். |
02:50 | இது ஏனெனில், நாம் எந்த courseஐயும் உருவாக்கவில்லை. |
02:56 | ஒரு user(அதாவது, ஒரு ஆசிரியர் அல்லது மாணவர் அல்லது admin ) க்கு, courseல் ஒரு பங்கு ஒதுக்கிடப்பட்டாலோ அல்லது பதிவு செய்யப்பட்டாலோ, எல்லா courseகளின் ஒரு பட்டியல் காணப்படும். |
03:08 | மேலும் Online Users block, நமது தற்போதய loginனான, Admin Userஐ காட்டுவதை கவனிக்கவும். |
03:17 | ஒரு குறிப்பிட்ட நேரத்தில் login செய்துள்ள எல்லா userகளையும் இந்த block காட்டுகிறது. |
03:23 | Moodle லில் உள்ள ஒவ்வொரு blockக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் உள்ளது. Moodleலில், எந்த ஒரு pageல் உள்ள எந்த ஒரு columnமிற்கும் நாம் blocksகளை சேர்க்கலாம். |
03:34 | இப்போது, pageன் headerஐ பார்ப்போம். |
03:38 | மேல் இடது மூலையில், ஒரு Navigation Drawer ஐ அல்லது Navigation menu.ஐ நாம் காணலாம். Calendar மற்றும் மற்ற Administration இணைப்புகளை அணுக, இது உதவி புரியும். இது ஒரு toggle menu. ஆகும். |
03:55 | அதாவது, க்ளிக் செய்தால், open ல் இருந்து close ற்கு, மற்றும் நேர்மாறாகவும் இது தன் status ஐ மாற்றிக்கொள்ளும். |
04:04 | அடுத்து, logoவிற்கான இடப்பிடிப்பு. |
04:08 | முன்னிருப்பாக, இது short site name. ஆகும். இதை க்ளிக் செய்தால், எந்த பக்கத்திலிருந்தும் நாம் dashboardக்கு சென்றுவிடலாம். |
04:18 | மேல் வலது பக்கத்தில், notificationகள் மற்றும் messageகளுக்கு விரைவு அணுகல் iconகள் உள்ளன. |
04:26 | அதற்கு அடுத்து இருப்பது, drop-down user menu. அது, quick access user menu எனவும் அழைக்கப்படுகிறது. |
04:35 | இந்த டுடோரியலில், Profile மற்றும் Preferences page ஐ பற்றி சுருக்கமாக பார்ப்போம். |
04:41 | இடது பக்கத்தில் இருப்பது போன்றே, இந்த அனைத்து menu itemsகளும் toggle menusக்களாகும். |
04:48 | அடுத்து, Profile இணைப்பை க்ளிக் செய்யவும். |
04:52 | Moodleலில் உள்ள ஒவ்வொரு userக்கும் ஒரு profile page இருக்கும். |
04:57 | பின்வருவனவற்றை, userகள் செய்வதற்கு அனுமதிக்கின்ற இணைப்புகளை அது கொண்டிருக்கிறது- தங்கள் profileன் தகவலை edit செய்வதற்கு, தங்கள் forum அல்லது blog postகளை பார்ப்பதற்கு, |
05:07 | தங்களுக்கு அணுகல் உள்ள ஏதேனும் reportகளை சரிப்பார்ப்பதற்கு, அவற்றின் access logகளை பார்ப்பதற்கு, மற்றும் முந்தைய முறை login செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட IP addressஐ பார்ப்பதற்கு. |
05:18 | இப்போது, Edit Profile இணைப்பை க்ளிக் செய்வோம். Edit Profile page திறக்கிறது. |
05:26 | இந்த பக்கம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: General, User Picture, Additional Names, Interests, Optional. |
05:39 | General section முன்னிருப்பாக விரிவாக்கப்பட்டு இருக்கிறது. |
05:43 | எந்த sectionனின் பெயரை க்ளிக் செய்தாலும், அது விரிவடைகிறது அல்லது சுருங்குகிறது. |
05:49 | வலது பக்கத்தில் உள்ள ‘Expand all’ இணைப்பு, எல்லா sectionகளையும் விரிவாக்குகிறது. |
05:55 | இங்குள்ள எல்லா fieldகளையும் edit செய்யலாம். |
05:59 | City / Town. ஐ நாம் சேர்ப்போம். நான்Mumbai. என டைப் செய்கிறேன். |
06:04 | Select a country dropdownல், Indiaஐ தேர்ந்தெடுக்க, மற்றும் timezone ஐ Asia/Kolkataக்கு set செய்ய உறுதிபடுத்திக்கொள்ளவும். |
06:13 | இந்த profile பக்கத்திலிருந்து, Adminகள் மட்டுமே passwordஐ மாற்றமுடியும். |
06:18 | Optional பிரிவில், சில fieldகளை நான் சேர்க்கிறேன். |
06:22 | Institution fieldல், நான் IIT Bombay என enter செய்கிறேன். மேலும் Departmentல் Mathematics ஐயும், மற்றும் Phone number fieldல், ஒரு செல்லுபடியான தொலைபேசி எண். |
06:36 | பின், பக்கத்தை சேமிக்க Update Profile பட்டனை க்ளிக் செய்யவும். |
06:42 | இப்போது, மேல் வலது பக்கத்தில் உள்ள quick access user menuஐ மீண்டும் க்ளிக் செய்யவும். Preferences இணைப்பை க்ளிக் செய்யவும். |
06:51 | தாங்கள் edit செய்ய விரும்புகின்ற பல்வேறு settingகளுக்கு விரைவான அணுகலை userகளுக்கு, preference பக்கம் கொடுக்கிறது. |
06:59 | ஒரு admin account க்கான Preferences பக்கம், 4 sectionகளாக பிரிக்கப்பட்டுள்ளது: User account, Roles, Blogs, மற்றும்Badges. |
07:12 | User Account section, Profileஐ edit செய்ய மற்றும்Passwordஐ மாற்ற, user க்கு அனுமதி அளிக்கிறது. |
07:19 | மேலும், அது Language, Forum, Calendar, Message, Notification, போன்றவைகளுக்கு preferences ஐ set செய்கிறது. |
07:30 | Calendar preferencesஐ க்ளிக் செய்வோம். |
07:34 | நேரத்தை, 24 மணி நேர formatல் காட்ட, நாம் calendarஐ set செய்வோம். |
07:40 | மேலும், Upcoming events look-aheadஐ 2 வாரங்களுக்கு set செய்வோம். |
07:46 | இதன் பொருள், அடுத்த 2 வாரங்களுக்கு நடக்கின்ற எல்லா நிகழ்வுகளுக்கும் notificationகளை, நாம் calenderல் பார்ப்போம். |
07:55 | எல்லா fieldகளுக்கு அடுத்துள்ள help iconஐ நான் highlight செய்ய விரும்புகிறேன். |
08:00 | இதை க்ளிக் செய்தால், அந்த field எதற்க்கானது என்ற ஒரு சிறிய விளக்கத்தை கொண்ட ஒரு help box திறக்கும். |
08:08 | எந்த field பற்றியும் சந்தேகம் இருந்தால், அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள எப்போதும் help iconஐ க்ளிக் செய்யவும். |
08:16 | மற்ற எல்லா தேர்வுகளும் அப்படியே இருக்கட்டும். Save Changes பட்டனை க்ளிக் செய்யவும். |
08:23 | மற்ற preferenceகளை, அவற்றின் அம்சங்களை பற்றி பின்னர் இத்தொடரில் விவாதிக்கும் போது பார்ப்போம். |
08:30 | இங்குள்ள தகவலை கவனிக்கவும். |
08:33 | இது, breadcrumb navigation. ஆகும். இது, Moodle site’ன் வரிசையில், நாம் எந்த பக்கத்தில் உள்ளோம் என்பதை குறிக்கின்ற ஒரு காட்சி ஆகும். |
08:45 | ஒரு ஒற்றை க்ளிக்கினால், ஒரு அதிக-நிலையில் உள்ள பக்கத்திற்கு திரும்பச் செல்ல இது உதவுகிறது. |
08:51 | Dashboardக்கு செல்ல, breadcrumbsல் உள்ள Dashboard இணைப்பை க்ளிக் செய்யவும். |
08:57 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
09:03 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Admin’s dashboard ல் உள்ள பல்வேறு blockகள், Admin’s profile page மற்றும் preferenceகளை எப்படி edit செய்வது. |
09:16 | உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி. Message Preferencesஐ க்ளிக் செய்யவும். Moodleலில் உள்ள Userகள், அவர்களுக்குள் அந்தரங்க செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம். |
09:27 | நான் ஆஃப்லைனில் இருந்த போதும், என் செய்திகள் மின்னஞ்சலாக போய் சேர்வதை நாம் விரும்பவில்லை. |
09:33 | ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்help boxஐ பார்த்து, settingகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். |
09:40 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
09:48 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
09:57 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
10:01 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
10:15 | இந்த ஸ்கிரிப்ட், ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. |
10:24 | கலந்துகொண்டமைக்கு நன்றி. |