Linux-AWK/C2/Basics-of-Single-Dimensional-Array-in-awk/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Awkல், Single dimensional arrayன் அடிப்படைகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Awkல் Arrayக்கள் |
00:12 | array elementகளை ஒதுக்குவது |
00:15 | மற்ற programming languageகளில் உள்ள arrayக்களில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது மற்றும் ஒரு arrayன் elementகளை பார்ப்பது. |
00:23 | இதை சில உதாரணங்கள் மூலம் நாம் செய்வோம். |
00:26 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04 Operating System மற்றும் gedit text editor 3.20.1ஐ பயன்படுத்துகிறேன். |
00:38 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:42 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, எங்கள் வலைத்தளத்தில் உள்ள முந்தையawk டுடோரியல்களை நீங்கள் படித்திருக்க வேண்டும். |
00:49 | C அல்லதுC++ போன்ற ஏதேனும் ஒரு programming language பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். |
00:56 | இல்லையெனில், எங்கள் வலைத்தளத்தில் உள்ள அதற்கான டுடோரியல்களை படிக்கவும். |
01:02 | இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள fileகள், இந்த டுடோரியல் பக்கத்தில் உள்ள Code Files இணைப்பில் உள்ளது. அவற்றை தரவிறக்கி, extract செய்துகொள்ளவும். |
01:11 | Awkல் ஒரு array என்றால் என்ன? தொடர்புடைய elementகளை சேமிப்பதற்கு, awk, arrayக்களை ஆதரிக்கிறது. |
01:18 | Elementகள், ஒருnumber அல்லது ஒருstringஆக இருக்கலாம். |
01:21 | Awkல் உள்ள arrayக்கள், associative ஆகும். |
01:24 | இதன் பொருள், ஒவ்வொரு array element உம், ஒரு index-value pair. ஆகும். |
01:29 | இது, மற்ற programming language ல் உள்ள arrayக்களை போலவே இருக்கிறது. |
01:33 | ஆனால், சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. |
01:36 | முதலாவது, ஒரு arrayஐ பயன்படுத்துவதற்கு முன்பு, அதை நாம் declare செய்ய வேண்டிய அவசியமில்லை. |
01:41 | மேலும், array கொண்டிருக்கப்போகின்றelementகளின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. |
01:47 | Programming languageகளில், array index பொதுவாக ஒரு positive integer ஆகும். |
01:52 | வழக்கமாகindex, 0ல் இருந்து தொடங்கி, பின் 1 , பின் 2 மேலும் பல. |
01:58 | ஆனால் awkல், index எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்- ஏதேனும்number அல்லது ஒரு string. |
02:03 | Awkல் ஒரு array element ஐ ஒதுக்குவதற்கான syntax இது. Array name, எந்த ஒரு செல்லுபடியான variableன் பெயராக இருக்கலாம். |
02:11 | இங்கு index என்பது, ஒரு integer அல்லது ஒரு string.ஆக இருக்கலாம். |
02:16 | Stringகள், index ன் பெயர் அல்லது ஒரு value என எதுவாக இருந்தாலும், அவற்றை இரட்டை மேற்கோள்களினுள் எழுத வேண்டும். |
02:23 | இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம். |
02:27 | நான் ஏற்கனவே codeஐ எழுதி, அதை array_intro.awk என சேமித்துள்ளேன். |
02:34 | இந்த file , playerன் கீழ் உள்ள Code Files இணைப்பில் உள்ளது. அதை தரவிறக்கி, பயன்படுத்திக் கொள்ளவும். |
02:41 | இங்கு நான், வாரநாட்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, அதை BEGIN sectionஇனுள் எழுதியுள்ளேன். |
02:48 | இங்கு, array ன் பெயர், day ஆகும். |
02:52 | நான் index ஐ 1 ஆகவும், மதிப்பை Sunday எனவும் set செய்துள்ளேன். |
02:57 | இந்த array elementல், index.ஆக நான் ஒரு string ஐ பயன்படுத்தியுள்ளேன். அதனால், index first, க்கு, மதிப்பு Sunday ஆகும். |
03:06 | முழு arrayஉம் இவ்வாறே காட்டப்படுகிறது. |
03:10 | Array elementsகள் இங்கு வரிசையில் இல்லாதிருப்பதை கவனிக்கவும். நான் day four ஐ , day threeக்கு முன் declare செய்துள்ளேன். |
03:18 | Awk arrayக்களில், index வரிசை முறையில் இல்லாமல் இருக்கலாம். |
03:23 | புதிய ஜோடிகளை எந்நேரமும் நாம் சேர்க்கமுடியும் என்பதே associative arrayன் நன்மை ஆகும். |
03:29 | Arrayல், நாள் 6ஐ நான் சேர்க்கிறேன். |
03:33 | இறுதி வரியின் கடைசியில், cursorஐ வைத்து, பின் Enterஐ அழுத்தவும். பிறகு, பின்வருவனவற்றை டைப் செய்யவும். |
03:42 | Fileஐ சேமிக்கவும். |
03:44 | நாம் arrayஐ declare செய்துவிட்டோம். ஆனால், array elementஐ எப்படி பார்ப்பது? |
03:49 | ஒரு குறிப்பிட்ட index.ல் ஒரு element ஐ பார்க்க, arrayname மற்றும் index ஐ சதுர அடைப்புக்குறிகளினுள் எழுதவும். இதை முயற்சிப்போம். |
03:58 | மீண்டும் codeக்கு மாறவும். |
04:01 | மூடுகின்ற curly braceக்கு முன், cursorஐ வைக்கவும். |
04:05 | Enterஐ அழுத்தி, டைப் செய்க: print space day சதுர அடைப்புக்குறிகளினுள்6 |
04:13 | Codeஐ சேமிக்கவும். |
04:15 | CTRL, ALT மற்றும் T keyகளை அழுத்தி, terminalஐ திறக்கவும். |
04:20 | cd commandஐ பயன்படுத்தி, நீங்கள் தரவிறக்கி, extract செய்த Code Fileகளை வைத்துள்ள folderக்கு செல்லவும். |
04:27 | இப்போது டைப் செய்க: awk space hyphen சிறியf space array_intro.awk . Enter.ஐ அழுத்தவும். |
04:38 | Outputஆக, Fridayஐ பெறுகிறோம். |
04:42 | அடுத்து, ஒரு குறிப்பிட்ட indexல், ஒரு arrayல் ஏதேனும் ஒரு element உள்ளதா என்று சரி பார்ப்போம். |
04:48 | இதற்கு, நாம் in operatorஐ பயன்படுத்த வேண்டும். இதை ஒரு உதாரணத்துடன் நான் விளக்குகிறேன். |
04:55 | Editor windowவில் உள்ள codeக்கு மாறவும். |
04:59 | Print statementன் இறுதியில் cursorஐ வைத்து, பின் Enter.ஐ அழுத்தவும். பின், காட்டப்பட்டுள்ளபடி டைப் செய்யவும். |
05:09 | Codeஐ சேமிக்கவும். |
05:11 | இப்போது நான், இரண்டு if conditionகளை சேர்த்துள்ளேன். |
05:15 | முதல் if condition , day.ல் index two உள்ளதா என்று சரி பார்க்கிறது. |
05:21 | உண்டு எனில், பின் அதற்குரிய print statement செயல்படுத்தப்படும். |
05:26 | இரண்டாவதுcondition , day.ல் index seven உள்ளதா என்று சரி பார்க்கிறது. அது true எனில், அது print statement ஐ செயல்படுத்துகிறது. |
05:35 | index two, arrayல் இருப்பதையும், seven இல்லாதிருப்பதையும் நாம் காண்கிறோம். Outputஐ சரிபார்க்க, இந்த fileஐ செயல்படுத்துவோம். |
05:44 | Terminalக்கு திரும்பவும். முன்பு செயல்படுத்தப்பட்ட commandஐ பெற Up arrow keyஐ அழுத்தவும். |
05:51 | செயல்படுத்த, Enter ஐ அழுத்தவும். |
05:54 | எதிர்பார்த்தது போல் outputஐ நாம் பெறுகிறோம். |
05:57 | இப்போது, codeக்கு மேலும் சில மாற்றங்களை செய்வோம். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, codeஐ update செய்யவும். |
06:04 | Day conditionல், 7னின் கீழ், நான் மேலும் ஒரு conditionஐ சேர்த்துள்ளேன். |
06:09 | இது, index sevenனின் மதிப்பு, nullஆக இருக்கிறதா, இல்லையா என்று சரிபார்க்கும். |
06:14 | True எனில், Index 7 is not null என அது print செய்யும். |
06:18 | 7என்ற index நம்மிடம் இல்லை என்பதனால், அது எதையும் print செய்யாது. |
06:24 | அடுத்து, day.ல் உள்ள condition 7 னின் print statement ஐ நாம் மாற்றியுள்ளோம். |
06:30 | Codeஐ சேமிக்கவும். Codeஐ செயல்படுத்தும் போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம் |
06:35 | Terminalக்கு மாறவும். முன்பு செயல்படுத்தப்பட்ட commandஐ பெற Up arrow keyஐ அழுத்தவும். |
06:43 | செயல்படுத்த, Enter ஐ அழுத்தவும். |
06:46 | எதிர்பார்க்காத outputஐ நாம் பெறுகிறோம். |
06:49 | "Index 7 is present after null comparison." என்ற statement print செய்யப்படுகிறது. இது எப்படி சாத்தியம்? |
06:57 | day[7] , nullக்கு சமமாக இல்லை என்று நாம் எழுதும் போது, நாம் index 7.ல் உள்ள elementஐ அணுக முயற்சிக்கிறோம். |
07:04 | இந்த அணுகல், முதலில் index 7 ல் ஒரு elementஐ உருவாக்கி, பின் null மதிப்புக்கு அதை initialize செய்யும். |
07:12 | அடுத்து, index 7ல் உண்மையாக ஏதேனும்element உள்ளதா என்று சரிபார்க்க நாம் முயற்சிக்கிறோம். |
07:18 | null element ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டதால், null ஒப்பீட்டுக்கு பிறகு Index 7 இருப்பதை output காட்டுகிறது. |
07:26 | இதை நினைவில் கொள்ளவும். ஒரு element இருப்பதை சரிபார்ப்பதற்கு, day at index 7 , null க்கு சமமாக இல்லை என கூறுவது தவறான வழியாகும். |
07:34 | அது, index 7ல் ஒரு null element ஐ உருவாக்கும். |
07:38 | அதற்கு பதிலாக, நாம் in operator.ஐ பயன்படுத்தவேண்டும். |
07:41 | அது, array.ல் எந்த கூடுதல் elementஐயும் உருவாக்காது. இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
07:50 | இந்த டுடோரியல் நாம் கற்றது- Awkல் Arrayக்கள் |
07:54 | array elementகளை ஒதுக்குவது |
07:56 | மற்ற programming languageகளில் உள்ள arrayக்களில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது |
08:00 | ஒரு arrayன் elementகளை பார்ப்பது. |
08:03 | பயிற்சியாக- 'ஒரு array flowerColor'ஐ வரையறுக்கவும் |
08:07 | Indexல் பூக்களின் பெயர்கள் இருக்கும். |
08:10 | பூக்களின் வண்ணம் அதற்குரிய மதிப்பாகும். |
08:14 | உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஐந்து பூக்களுக்கு, entryக்களை புகுத்தவும். |
08:18 | நான்காவது பூவின் வண்ணத்தை print செய்யவும். arrayல், “Lotus” பூ உள்ளதா என்று சரிபார்க்கவும். |
08:25 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
08:33 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு , ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
08:42 | மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
08:46 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
08:50 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
09:01 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி. |