Koha-Library-Management-System/C2/Add-an-Item-type/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Koha interfaceல், ஒரு Item typeஐ எவ்வாறு உருவாக்குவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம், Item typeகள் பற்றி, மற்றும், ஒரு Item typeஐ எவ்வாறு சேர்ப்பது என்று கற்கப்போகிறோம்.
00:17 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04 மற்றும் Koha பதிப்பு 16.05.
00:30 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவருக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:36 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:42 மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
00:52 இப்போது தொடங்கலாம். நான் Koha interface க்கு மாறுகிறேன்.
00:58 நாம் ஒரு Superlibrarian Bella.வை உருவாக்கியுள்ளோம் என்பதை நினைவுகூறவும்.
01:03 இப்போது, username Bella மற்றும் அவளின் passwordஐ வைத்து நாம் login செய்வோம்.
01:08 இப்போது, நாம் Koha interfaceவினுள், Superlibrarian Bellaவாக இருக்கின்றோம்.
01:14 நாம் மேலும் தொடர்வதற்கு முன், முதலில் Item Typeகள் பற்றி புரிந்துகொள்வோம்.
01:20 Item type, பொதுவாக libraryல் உள்ள பின்வரும் பொருள்வகைகளை குறிக்கும்- Books,, Journals, CDs/DVDs போன்றவை.
01:31 Koha வினுள் உள்ள ஒவ்வொரு Item type க்கும், ஒரு Collection code ஒதுக்கப்பட்டிருக்கும்.
01:37 இந்த code, அந்த Item type.ஐ தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும்.
01:42 ஒரு item type.ஐ சேர்க்கக்கற்போம்.
01:46 Koha Home page,ல், Koha Administration.ஐ க்ளிக் செய்யவும்.
01:52 Basic parameters பிரிவுக்கு சென்று, Item Typesஐ க்ளிக் செய்யவும்.
01:59 Item types administration பக்கத்தின் மேலுள்ள, ' New Item Type' பட்டனை க்ளிக் செய்யவும்.
02:06 Item type field ல், நீங்கள் சேர்க்க்க விரும்புகின்ற புது item type க்கு ஒரு codeஐ enter செய்யவும்.
02:13 நான் REF என டைப் செய்கிறேன்.
02:17 Description என்பது, item typeன் விவரிப்பாகும்.
02:22 அதனால், இங்கு "Reference" என நான் டைப் செய்கிறேன். நான் Search category field ஐ தவிர்க்கிறேன்.
02:30 அடுத்தது, Choose an icon:.
02:33 bridge tab ஐ க்ளிக் செய்யவும்.
02:37 இங்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகளிலிருந்து, iconஉடன் தொடர்புபடுத்த வேண்டிய item type.ஐ க்ளிக் செய்யவும்.
02:45 நான் இந்த Reference icon ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:49 அடுத்து, Hide in OPAC: எப்படி உதவி புரிகிறது என்று கற்போம்.
02:54 ஒரு புத்தகம் சேதமடைந்துவிட்டது மற்றும் / அல்லது பிணைப்பதற்கான நோக்கத்திற்காக திருப்பி வைக்கப்படவேண்டும் என்று நாம் வைத்துக்கொள்வோம்.
03:02 அச்சமயங்களில், Hide in OPAC, தேர்வு, புத்தகத்தை எல்லா userகளின் கண்களுக்கு புலப்படாமல் செய்துவிடுகிறது.
03:11 உங்கள் தேவைக்கேற்றவாறு, Hide in OPAC:க்கான checkboxஐ, check அல்லது uncheck செய்துவிடவும். நான் checkboxஐ காலியாக விடுகிறேன்.
03:21 Libraryல் வைக்கப்படுபவை, ஆனால் circulate செய்யப்படாத itemகளுக்கு, 'Not for loan' தேர்வை பயன்படுத்தவும்.
03:29 உதாரணத்திற்கு: Reference books, Rare books, Dictionary etc.
03:36 நான் இந்த checkboxஐ காலியாக விடுகிறேன்.
03:40 நீங்கள் விரும்பினால், விதிக்கப்படவேண்டிய கட்டணத்தை, Rental charge fieldல் enter செய்யலாம். Libraryயில் உள்ள சில குறிப்பிட்ட itemகளுக்கு, குறைந்தபட்ச வாடகை கட்டணம் விதிக்கப்படவேண்டி வரலாம்.
03:51 பெரும்பாலான itemகளின் மீது, வாடகை கட்டணம் விதிக்கப்படவேண்டிய அவசியம் இல்லாததால், நான் எந்த கட்டணத்தையும் enter செய்யப்போவதில்லை.
04:00 நீங்கள் ஒரு கட்டணத்தை enter செய்ய விரும்பினால், பின் ஒரு valid எண்ணை enter செய்ய நினைவில் கொள்ளவும்.
04:07 அடுத்தது, 'Checkin message:' text field.
04:11 Checkin message , குறிப்பிட்ட itemன் வகையை சார்ந்துள்ளது.
04:16 தேர்வுகள், இவைகளாக இருக்கலாம்- Book , Serial, Cds/DVDs, Bound Volume, Microfilm போன்றவை.
04:26 Checkin message:, ல், Bound Volume. என நான் டைப் செய்கிறேன்.
04:32 இதைத்தொடர்ந்து வருவது, Checkin message type:.
04:36 item type, ஐ பொறுத்து, அந்த itemக்கான, message அல்லது alertஐ தேர்ந்தெடுக்கவும்.
04:42 இந்த குறிப்பிட்ட itemக்கான, check-ins செய்யப்படும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வுக்கேற்றவாறு, ஒரு message அல்லது ஒரு alert, காட்டப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
04:53 நான் message.ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:56 அடுத்தது, SIP media type. உங்கள் libraryயில், ஒரு sorter அல்லது ஒரு locker வசதி பயன்படுத்தப்படுமானால் மட்டுமே, SIP media type பொருந்தும்.
05:07 அதனால், இங்கு நான் SIP media typeஐ தவிர்க்கிறேன்.
05:11 Summary field ல், நீங்கள் விரும்பினால், உரிய item ன் ஒரு சுருக்கத்தை எழுதவும்.
05:18 நான், -Item type- Reference, Facilitate- Self check out/return என டைப் செய்கிறேன்.
05:25 இறுதியாக, Save changes பட்டனை க்ளிக் செய்யவும்.
05:30 Item types administration என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
05:35 புது item typeக்கு பூர்த்தி செய்யப்பட்ட எல்லா விவரங்களும், Item types administration பக்கத்தில் ஒரு பட்டியல் வடிவத்தில் தோன்றுகின்றன.
05:45 நினைவில் கொள்ளவேண்டிய சில முக்கிய விஷயங்கள்-
05:49 item typeகளுக்கு ஒதுக்கப்பட்ட Collection codeகளை edit செய்ய முடியாது.
05:54 item type ன் விரிப்பை edit செய்ய முடியும். Libraryயில் உள்ள itemகளால், item type , ஒரு முறை பயன்படுத்தப்பட்டுவிட்டால், அதை delete செய்ய முடியாது.
06:05 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.
06:08 சுருங்கச்சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: Item typeகள் பற்றி, மற்றும், ஒரு Item typeஐ எவ்வாறு சேர்ப்பது.
06:18 பயிற்சியாக- உங்கள் libraryக்கு, ஒரு புது item- Book மற்றும் Serial ஐ சேர்க்கவும்.
06:25 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
06:33 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
06:43 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
06:47 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
06:59 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree