Jmol-Application/C4/Animation-using-Script-Commands/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Script commandகளை பயன்படுத்தி, animation குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், Jmol script commandகளை பயன்படுத்தி, animationகளை காட்டக் கற்போம்.
00:12 விளக்கத்திற்கு, ethane மற்றும் hemoglobin னின் modelகளை, உதாரணங்களாக பயன்படுத்துவோம்.
00:19 பின்வரும் keywordகளைக் கொண்ட, Jmol script command'கள், animationகளுக்கு பயன்படுத்தப்படும்.
00:24 move, delay, slab, loop மற்றும் capture.
00:30 இந்த டுடோரியலை பின்பற்ற, உயர்நிலை வேதியியல், மற்றும், Jmol windowவின் operationகள் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
00:39 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:44 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், Ubuntu OS பதிப்பு 14.10,
00:51 Jmol பதிப்பு 14.1.11 மற்றும் Java பதிப்பு 7ஐ பயன்படுத்துகிறேன்.
00:58 இந்த slide, ஒவ்வொரு animation commandன் செயல்பாட்டையும் விரிவாகக் காட்டுகிறது.
01:03 move command, ஒரு modelஐ , ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், rotate, zoom மற்றும் translate செய்ய அனுமதிக்கிறது.
01:11 Delay command, scriptஐ , குறிப்பிட்ட நொடிகளுக்கு, இடை நிறுத்த பயன்படுத்தப்படுகிறது.
01:17 Slab command, panelலில் காட்டப்படவிருக்கின்ற, moleculeன் percentageஐ கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
01:23 Loop command, scriptஐ தொடக்கத்திலிருந்து, கட்டாயமற்ற, time delay உடன், மீண்டும் தொடங்க வைக்கிறது.
01:30 Capture command, animationகளை, animate செய்யப்பட்ட GIF fileகளாக capture செய்கிறது.
01:36 Jmol script command பற்றிய மேலும் விவரங்களுக்கு, Jmol interactive script documentationக்கான வலைத்தள பக்கத்தைப் பார்க்கவும்.
01:44 Jmol windowஐ திறந்து, move commandஐ பயன்படுத்தி, ஒரு animationஐ விளக்குவோம்.
01:50 Ethane ஐ உதாரணமாக பயன்படுத்தி, ஒரு எளிய move commandஉடன் நான் தொடங்குகிறேன்.
01:55 Modelkit menuஐ பயன்படுத்தி, ethaneனின் ஒரு modelஐ உருவாக்கவும்.
01:59 Modelkit iconஐ க்ளிக் செய்யவும். Screenல், methaneனின் ஒரு model தோன்றுகிறது.
02:06 Hydrogenஐ க்ளிக் செய்யவும். இப்போது, திரையில் ethaneனின் ஒரு modelஐ நாம் கொண்டிருக்கிறோம்.
02:13 File menuஐ பயன்படுத்தி, consoleஐ திறக்கவும்.
02:17 Promptல், பின்வரும் commandஐ டைப் செய்யவும்.
02:21 Command line, move என்ற சொல்லுடன் தொடங்குகிறது.
02:24 அதைத் தொடர்ந்து, animation parameterகளின் ஒரு setஐ quantify செய்கின்ற, எண்கள் வருகின்றன.
02:29 Move commandஐ பற்றிய அதிக தகவல்: move commandல், ஒன்பது parameterகள் இருக்கின்றன.
02:36 முதல் மூன்று parameterகள், X,Y மற்றும் Z axes களை சுற்றி இருக்கின்ற rotationகள் ஆகும். நான்காவது, zoom modifier ஆகும். இது, positive அல்லது negative எண்களில் வெளிப்படுத்தப்படுகிறது.
02:48 zoom inக்கு positive, மற்றும், zoom outக்கு, negative .
02:52 அடுத்த மூன்று parameterகள், மூன்றுaxis நெடுகிலும் உள்ள translationஉடன் தொடர்புடையதாகும்.
02:57 எட்டாவது, slab parameter ஆகும். Slab, moleculeஐ slice செய்கிறது.
03:03 உட்புற அம்சங்களை எளிதாக கண்காணிக்க, atomகளை, ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை இது நீக்குகிறது.
03:10 Move commandஐ செயல்படுத்த, எடுத்துக் கொள்ளப்படுகின்ற நேரத்தை, secondகளில், Parameter 9 காட்டுகிறது.
03:17 Jmol panelக்கு திரும்பவும்.
03:20 Enterஐ அழுத்தி,பின், panelஐ கவனிக்கவும்.
03:25 ஏற்கனவே உள்ளவைகளுடன், மேலும் commandகளை சேர்த்து, அதிக சுவாரஸ்யமான animationகளை நாம் உருவாக்கலாம்.
03:31 முந்தைய commandஐ பெற, key boardல்,up-arrow key ஐ அழுத்தவும்.
03:36 Semicolonக்கு பின், டைப் செய்க: delay space 2.
03:41 இங்கு, delay command, அடுத்த commandஐ செயல்படுத்துவதற்கு முன், scriptஐ , 2 நொடிகளுக்கு இடைநிறுத்துகிறது.
03:48 பின், இந்த delay commandக்கு பிறகு, மற்றொரு move commandஐ டைப் செய்யவும்.
03:52 ஒவ்வொரு keyword commandன் இறுதியிலும், ஒரு semicolonஐ சேர்க்க மறக்க வேண்டாம். Enterஐ அழுத்தி,பின், panelஐ கவனிக்கவும்.
04:06 இந்த animationனின் போது, atomகளின் நிறத்தையும் நாம் மாற்றலாம்.
04:10 மீண்டும், முந்தைய commandஐ பெற, up-arrow key ஐ அழுத்தவும்.
04:15 நான் இங்கு காட்டியுள்ளபடி, consoleலில், commandஐ edit செய்யவும்.
04:19 Hydrogenகள், மற்றும் carbonகளின் நிறத்தை மாற்ற, select keywordகளை பயன்படுத்தவும். Enterஐ அழுத்தவும்.
04:27 மீண்டும், panelஐ கவனிக்கவும்.
04:34 Moleculeன், சில குறிப்பிட்ட பகுதிகள், மறைய, மற்றும் தோன்ற, ஒரு "slab" commandஐ சேர்க்கவும்.
04:41 மீண்டும், up-arrow key ஐ அழுத்தி, consoleலில், காட்டியுள்ளபடி, முந்தையcommandஐ edit செய்யவும்.
04:47 Select commandக்கு பின், டைப் செய்க: "slab on".
04:51 Commandன் இறுதியில், டைப் செய்க: "slab off".
04:55 Enterஐ அழுத்தி,பின், panelஐ கவனிக்கவும்.
05:01 Moleculeன் பகுதிகள், மறைந்து, மீண்டும் தோன்றுவதை நீங்கள் காணலாம்.
05:06 Capture keywordஐ பயன்படுத்தி, இந்த animationஐ , ஒரு GIF fileஆக நீங்கள் சேமிக்கலாம்.
05:11 முந்தைய commandஐ பெற, up-arrow key ஐ அழுத்தவும்.
05:15 "Capture" commandஐ டைப் செய்து, commandன் தொடக்கத்தில், fileன் பெயர், மற்றும் pathஐ குறிப்பிடவும்.
05:21 GIF fileஐ சேமிக்க, உங்கள் home folderன் பெயரை நீங்கள் டைப் செய்யலாம்.
05:26 நான், இந்த animationஐ , desktopல், file "sneha என சேமிக்கிறேன். Enterஐ அழுத்தவும்.
05:36 இப்போது, animation, எனது desktopல், GIF fileஆக சேமிக்கப்படும்.
05:41 GIF file ன் இடத்திற்கு செல்லவும்.
05:44 சேமிக்கப்பட்ட GIF fileஐ , Image Viewer softwareஐ வைத்து திறக்கவும்.
05:50 Jmol panelக்கு திரும்பவும்.
05:54 இவ்வாறே, ஏதேனும் ஒரு macromolecule ன், pdb fileஐ திறக்கவும்: உதாரணத்திற்கு, pdb code "2DN1"ஐ கொண்ட, oxygenated hemoglobin.
06:06 File menuஐ பயன்படுத்தி, pdb databaseல் இருந்து, structureஐ நேரடியாகdownload செய்யவும்.
06:11 Text-boxல், pdb codeஐ டைப் செய்யவும், "2DN1". Enterஐ அழுத்தவும்.
06:19 Panelலில், haemoglobinனின் ஒரு model காட்டப்படுகிறது.
06:23 Consoleலில், பின்வரும் commandஐ டைப் செய்யவும்.
06:26 Proteinனின், வெவ்வேறு unitகளின் நிறத்தை மாற்ற, நாம் select keyword commandஐ பயன்படுத்தியுள்ளோம்.
06:32 நாம் move commandஐயும் பயன்படுத்தியுள்ளோம்.
06:35 இந்த command, proteinஐ , சிவப்பு cartoonகளில் காட்டும்.
06:40 Yellow spacefill display ல் இருக்கின்ற, Haem பகுதி, moleculeலில் 50%ஐ துண்டிக்கிறது.
06:48 X-axisனின் மீது, 4 நொடிகளில், 360 degreeக்கள் rotate செய்து, எல்லா atomகளையும் மீட்டவும்.
06:56 Enterஐ அழுத்தி,பின், panelஐ கவனிக்கவும்.
07:07 மேலுள்ள அனைத்து படிகளையும் மீண்டும் செய்ய, loop commandஐ பயன்படுத்துவோம்.
07:13 அதேcommandஐ பெற, up-arrow key ஐ அழுத்தவும். Commandன் இறுதியில், டைப் செய்க:"loop 2".
07:20 முந்தைய script commandகள், 2 நிமிட கால தாமதத்திற்குப் பிறகு, மீண்டும் வரும் என்பதை, "loop 2" குறிக்கிறது. Enterஐ அழுத்தவும்.
07:34 Animate செய்ய, இது போன்ற, மேலும் பல commandகளை டைப் செய்து, நீங்கள் ஆக்கபூர்வமாக இருக்கலாம்.
07:39 சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது:
07:44 move, delay போன்ற script commandகளை பயன்படுத்தி, ethane மற்றும், haemoglobin னின் animationஐ உருவாக்குவது.
07:54 நாம், loop மற்றும், slab commandகளையும் பயன்படுத்தியுள்ளோம்.
07:58 capture commandஐ பயன்படுத்தி, animationகளை, ஒரு GIF fileஆக சேமித்துள்ளோம்.
08:03 பயிற்சியாக- உங்களுக்கு விருப்பமான ஒரு moleculeஐ எடுத்துக் கொண்டு, move, மற்றும் delay commandகளை பயன்படுத்தி, ஒரு animationஐ உருவாக்கவும்.
08:11 Animationஐ உருவாக்க, bondகளின், display, அளவு, மற்றும் நிறத்தை மாற்றவும்.
08:17 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
08:25 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
08:32 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
08:36 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT-MHRD, மூலம் கிடைக்கிறது.
08:43 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
08:48 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது சண்முகப்பிரியா.

Contributors and Content Editors

Jayashree, Priyacst