Health-and-Nutrition/C2/Type-1-and-Type-2-nutrients/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:00 | வகை 1 மற்றும் வகை 2 ஊட்டச்சத்துக்கள் குறித்த spoken tutorialக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியல், வகை 1 மற்றும் வகை 2 ஊட்டச்சத்துக்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை பற்றியதாகும் |
00:12 | இப்போது தொடங்குவோம் |
00:14 | உணவு நமக்கு ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. |
00:17 | நமது உடலின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியம். |
00:22 | இந்த ஊட்டச்சத்துக்களில் சிலவற்றை நம் உடலால் உற்பத்தி செய்ய முடியாது. |
00:27 | இத்தகைய ஊட்டச்சத்துக்க,ள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. |
00:31 | மொத்தம் 40 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், உணவிலிருந்து பெறக்கூடியவை ஆகும் |
00:36 | ஊட்டச்சத்து இல்லாத உணவுகளிலிருந்து இந்த ஊட்டச்சத்துக்களை நாம் போதுமான அளவு பெற முடியாது. |
00:42 | இத்தகைய உணவுகள், நிறைய எடுத்துக்கொண்டால் கூட, பசியாற்ற மட்டுமே உதவும். |
00:48 | இருப்பினும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் நாம் குறைபாடுள்ளவர்களாக இருக்கலாம். |
00:54 | இது மறைக்கப்பட்ட பசி என்று அழைக்கப்படுகிறது. |
00:58 | அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் 2 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன: |
01:02 | வகை 1 ஊட்டச்சத்துக்கள் அல்லது செயல்பாட்டு ஊட்டச்சத்துக்கள் |
01:05 | மற்றும் வகை 2 ஊட்டச்சத்துக்கள் அல்லது வளர்ச்சி ஊட்டச்சத்துக்கள். |
01:09 | Iron, calcium, |
01:11 | iodine, மற்றும் copper வகை 1 ஊட்டச்சத்துக்கள் ஆகும். |
01:15 | Manganese, |
01:17 | fluorine, மற்றும் selenium ஆகியவையும் இதே வகையை சேர்ந்தவை ஆகும். |
01:21 | Vitamin B, C, |
01:23 | A, D, |
01:25 | E மற்றும் K ஆகியவையும் வகை 1 ஊட்டச்சத்துக்கள் ஆகும். |
01:29 | Sulphur, chlorine மற்றும் |
01:32 | protein அல்லதுessential amino acids, வகை 2 ஊட்டச்சத்துக்கள் ஆகும். |
01:37 | Sodium, potassium, |
01:39 | magnesium, phosphorus |
01:41 | மற்றும் zinc ஆகியவையும் அதே குழுவைச் சேர்ந்தவை ஆகும். |
01:45 | omega 3 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் வகை 2 ஊட்டச்சத்துக்களாகும். |
01:51 | வகை 1 மற்றும் வகை 2 ஊட்டச்சத்துக்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வோம். |
01:56 | திசுக்களில் நடக்கின்ற குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு வகை 1 ஊட்டச்சத்துக்கள் தேவை. |
02:02 | எனவே, அவை ஒரு குறிப்பிட்ட திசு அல்லது திசுக்களின் ஒரு குழுவில் குவிந்துள்ளன. |
02:08 | calcium aமற்றும்vitamin A ஐ உதாரணங்களாக எடுத்துக்கொள்வோம் |
02:13 | வலுவான எலும்புகளுக்கு Calcium தேவைப்படுகிறது. |
02:17 | ஆரோக்கியமான கண்களுக்கு Vitamin A தேவைப்படுகிறது. |
02:21 | இதற்கு மாறாக, உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வகை 2 ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. |
02:28 | அவை உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவின் அமைப்பு மற்றும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கின்றன |
02:34 | எனவே, அவை அனைத்து உடல் திசுக்களிலும் உள்ளன |
02:38 | வகை 1 மற்றும் வகை 2 ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் நம் உடல் எவ்வாறு பாதிப்படைகிறது என்று பார்ப்போம் |
02:45 | வகை 1 ஊட்டச்சத்தின் குறைப்பாட்டினால் உடல் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. |
02:50 | இந்த ஊட்டச்சத்தை உடலானது குறிப்பிட்ட திசுக்களில் இருந்து எடுத்துக்கொள்கிறது. |
02:57 | ஒரு உதாரணமாக calciumஐ எடுத்துக்கொள்வோம் |
03:00 | calcium குறைப்பாட்டின் போது, எலும்புகளில் இருக்கக்கூடிய calciumஐ உடல் பயன்படுத்துகிறது. |
03:07 | இதன் விளைவாக, திசுக்களில் அந்த ஊட்டச்சத்தின் அளவு குறைகிறது. |
03:13 | பின்னர், அந்த ஊட்டச்சத்தை சார்ந்துள்ள உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. |
03:18 | எனவே, அந்த நபர் நோய்வாய்ப்படுகிறார். |
03:21 | நோய்வாய்ப்பட்ட நபர், குறைபாட்டின் ஒரு குறிப்பிட்ட அறிகுறியைக் வெளிப்படுத்துகிறார். |
03:26 | 4 எடுத்துக்காட்டுகளின் உதவியுடன் இதைப் புரிந்துகொள்வோம்: |
03:31 | 1. எலும்பு மெலிதல் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படக்கூடிய அதிக வாய்ப்புகள் ஆகியவை கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகளாகும். |
03:37 | 2. Anaemia' என்பது iron குறைபாட்டின் அறிகுறியாகும். |
03:41 | 3. இரவு நேரத்தில் கண் பார்வையின்மை என்பது vitamin A' குறைபாட்டின் அறிகுறியாகும். |
03:45 | 4. மேலும் Hypothyroidism என்பது iodine குறைபாட்டின் அறிகுறியாகும். |
03:50 | மாறாக, வகை 2 ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு ஒரே 1 அறிகுறி மட்டுமே உள்ளது. |
03:57 | அந்த அறிகுறி வளர்ச்சியின்மை என்று அழைக்கப்படுகிறது. |
04:00 | வளர்ச்சியின்மை என்பது, 2 முக்கிய செயல்முறைகளின் வீதத்தைக் உடல் குறைக்கிறது என்பதாகும்: |
04:06 | 1. புதிய உயிரணுக்களை உருவாக்குதல் மற்றும் |
04:08 | பழைய உயிரணுக்களை மாற்றுதல் |
04:11 | உடலானது புதிய திசுக்களை உருவாக்குவதையும் அதன் வளர்ச்சியையையும் நிறுத்திவிடுகிறது. |
04:16 | இது குறைந்த உடல் எடை, |
04:18 | குறுகிய உயரம் மற்றும் குறைந்த தசை எடையை விளைவிக்கிறது. |
04:23 | நோயெதிர்ப்பு அமைப்பு உட்பட உடலின் அனைத்து உயிரணுக்களும் பாதிக்கப்படுகின்றன. |
04:29 | இது தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. |
04:32 | இறுதியில், இது மரணத்தை ஏற்படுத்தலாம். |
04:35 | வகை 2 ஊட்டச்சத்துக்கள் உடலில் சேமிக்கப்படுவதில்லை. |
04:39 | ஒரு குறைபாட்டில், உடலின் திசுக்கள் அல்லது தசைகள் தேய ஆரம்பிக்கலாம். |
04:45 | இது உடலில் குறைபாடுள்ள வகை 2 ஊட்டச்சத்தை வெளியிடுகிறது. |
04:50 | இந்த ஊட்டச்சத்து பின்னர் உடலின் மற்ற திசுக்களுக்கு பயன்படுத்தப்படும். |
04:55 | திசுக்களின் தேய்மானம் அதிகரிக்கும் போது, உயிரணுக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. |
05:02 | மேலும், பசி குறைகிறது. |
05:05 | திசுக்கள் தேய்ந்து, உடலில் குறைபாடுள்ள ஊட்டச்சத்தை வழங்குகிறது. |
05:11 | மேலும், இது திசுக்களில் இருந்து மற்ற அனைத்து வகை 2 ஊட்டச்சத்துக்களையும் வெளியிடுகிறது. |
05:17 | இந்த ஊட்டச்சத்துக்கள் பின்னர் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. |
05:21 | எனவே, அனைத்து வகை 2 ஊட்டச்சத்துக்களும், வகை 2 ஊட்டச்சத்து குறைபாட்டில் வழங்கப்பட வேண்டும். |
05:28 | வகை 1 ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய அனைத்து வகை 1 ஊட்டச்சத்துக்களும் தேவையில்லை. |
05:34 | உடலில் குறைபாடுள்ள ஊட்டச்சத்துக்களை மட்டுமே கொடுத்து சிகிச்சையளிக்க முடியும். |
05:40 | அடுத்து, தாய்ப்பாலில் இருந்து வகை 1 மற்றும் 2 ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது பற்றி பார்ப்போம். |
05:47 | தாய்ப்பால், வகை 2 ஊட்டச்சத்துக்களை நிலையான அளவில் கொண்டிருக்கிறது |
05:52 | தாய்க்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும், அவற்றின் அளவு குறைவதில்லை |
05:57 | ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாயின் குழந்தை, போதுமான தாய்ப்பாலின் மூலம் நன்றாக வளர முடியும். |
06:03 | இதற்கு மாறாக, தாய்ப்பாலில் உள்ள வகை 1 ஊட்டச்சத்துக்களின் அளவு நிலையானது அல்ல. |
06:09 | இது, தாய் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்களின் அளவிற்கு ஏற்றார் போல் மாறுபடும் |
06:13 | vitamin Dஐ உதாரணமாக எடுத்துக்கொள்வோம். |
06:17 | vitamin Dஇன் குறைபாடுள்ள தாயின் தாய்ப்பாலில் vitamin D அளவு குறைவாக இருக்கும். |
06:23 | அடுத்து, வகை 1 மற்றும் வகை 2 ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கண்டறிவது பற்றி பார்ப்போம். |
06:30 | வகை 1 ஊட்டச்சத்து குறைபாடு பொதுவாக 2 வழிகளில் கண்டறியப்படுகிறது. |
06:36 | முதலில், குறைபாட்டின் தனித்துவமான அறிகுறிகள் கண்டறியப்படுகிறது. |
06:41 | பின்னர், உடலில் உள்ள அந்த ஊட்டச்சத்தின் அளவு இரத்த பரிசோதனை மூலம் அளவிடப்படுகிறது. |
06:46 | iron மற்றும் iodineஐ எடுத்துக்காட்டுகளாக எடுத்துக்கொள்வோம். |
06:50 | iron குறைபாட்டில், வெளிறிய தோல் மற்றும் சோர்வு போன்றவை அறிகுறிகளாகும். |
06:56 | உடலில் உள்ள haemoglobinனின் அளவு இரத்த பரிசோதனையின் மூலம் அளவிடப்படுகிறது. |
07:01 | Iodine குறைபாடு அதன் தனித்துவமான அறிகுறிகள் மற்றும் சோதனைகளால் கண்டறியப்படுகிறது. |
07:07 | கழுத்தில் வீக்கம் |
07:10 | எடை அதிகரிப்பு மற்றும் |
07:12 | முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் ஆகும் |
07:14 | உடலில் iodine மற்றும் thyroid hormoneகளின் அளவு, இரத்த பரிசோதனைகளால் அளவிடப்படுகின்றன. |
07:21 | வகை 1 ஊட்டச்சத்து குறைபாடுகள் நன்கு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றன. |
07:26 | வகை 1 ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய பல்வேறு வழிகள் உள்ளன. |
07:31 | அதற்குரிய ஊட்டச்சத்துக்களின் பரிந்துரைக்கப்பட்ட அளவை ஒருவர் உணவில் எடுத்துக் கொள்ளலாம். |
07:36 | இந்த ஊட்டச்சத்தை பெற கூடுதல் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. |
07:41 | Iron, vitamin C மற்றும் |
07:43 | folic acidஐ கொண்ட மருந்துகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன. |
07:47 | குறைபாடு பொதுவாக உள்ள பகுதிகளில் வகை 1 ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து பலப்படுத்தப்படுகிறது. |
07:53 | நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டு, iodineஉடன் கூடிய உப்பு. |
07:59 | ஒரு தகுதிவாய்ந்த ஊட்டச்சத்து நிபுணர் இந்த முறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்க முடியும். |
08:04 | ஒரு வகை 2 ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை செய்வது கடினம். |
08:10 | எந்த ஒரு வகை 2 ஊட்டச்சத்து குறைபாட்டையும் கண்டறிய ஒரே 1 வழி மட்டுமே உள்ளது. |
08:15 | அது, பின்வருவனவற்றை அளவிடுவதும் கண்காணிப்பதும் ஆகும். |
08:17 | எடை, உயரம் |
08:19 | மற்றும் மேல் கையின் நடுப்பகுதியின் சுற்றளவு. |
08:22 | இருப்பினும், இது வளர்ச்சியின்மையை கண்டறிய மட்டுமே உதவும். |
08:27 | ஒவ்வொரு வகை 2 ஊட்டச்சத்து குறைபாட்டாலும் வளர்ச்சியின்மை ஏற்படுகிறது. |
08:33 | உடலில் எந்த குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என்பதை தீர்மானிப்பது கடினம். |
08:40 | எனவே, வகை 2 ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய அனைத்து வகை 2 ஊட்டச்சத்துக்களும் தேவை. |
08:47 | அத்தகைய குறைபாட்டில், அனைத்து வகை 2 ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவு கொடுக்கப்பட வேண்டும். |
08:53 | முன்பு கொடுக்கப்பட்ட உணவின் அளவை மட்டும் அதிகரிப்பது பலனளிக்காது. |
08:59 | முன்பு கொடுக்கப்பட்ட உணவு, உடலுக்கு வகை 2 ஊட்டச்சத்துக்களை வழங்கத் தவறிவிட்டது. |
09:04 | உடலின் இயல்பான வளர்ச்சிக்கு உணவின் தரம் மாற்றப்பட வேண்டும். |
09:10 | மேலும் வழிகாட்டலுக்கு தகுதியான ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும். |
09:15 | வகை 1 மற்றும் வகை 2 நிறைந்த உணவுகள் குறித்து, மற்ற டுடோரியல்களில் விளக்கப்பட்டுள்ளன. |
09:22 | மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும் |
09:26 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |