Health-and-Nutrition/C2/Magnesium-rich-vegetarian-recipes/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:00 | Magnesium நிறைந்த சைவ உணவுகள் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: |
00:09 | Magnesiumன் பயன்கள், |
00:11 | magnesiumஇன் சைவ மூலங்கள் |
00:13 | Magnesium நிறைந்த சைவ உணவுகள் |
00:18 | Magnesium என்பது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தான ஒரு தாது ஆகும். |
00:24 | இது வகை 2 ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும், இது மற்றொரு டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது. |
00:31 | இந்த டுடோரியலுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். |
00:35 | ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கும் Magnesium தேவை. |
00:40 | ஆற்றல் உற்பத்தி, |
00:44 | மற்றும் DNA உற்பத்திக்கும் Magnesium நமக்குத் தேவை |
00:47 | Magnesiumன் முக்கியத்துவம் மற்றொரு டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது. |
00:52 | Magnesium பின்வருவனவற்றுள் நிறைந்துள்ளது |
00:54 | பீன்ஸ், கொட்டைகள், |
00:56 | விதைகள், இலை காய்கறிகள் |
00:59 | மற்றும் தானியங்கள். |
01:01 | மெக்னீசியம் உட்கொள்வது மற்றும் உடலில் அதன் உறிஞ்சுதல் இரண்டுமே முக்கியம். |
01:08 | நொதித்தல், வறுத்தல், |
01:10 | முளைக்க வைத்தல் மற்றும் சமைத்தல் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. |
01:15 | சமைப்பதற்கு முன்பு பீன்சை ஊறவைப்பதும் அதையே செய்கிறது. |
01:20 | இப்போது நமது முதல் உணவான, முளைத்த தட்டை பயறு கட்லெட்டை எப்படி தயாரிப்பதென பார்ப்போம் |
01:27 | இந்த உணவை தயாரிக்க, உங்களுக்கு பின்வருவானவை தேவை: |
01:31 | ¼ கப் முளைத்த தட்டை பயறு |
01:34 | 1 கப் கழுவி நறுக்கிய தண்டு கீரை, |
01:37 | 1 மேசைக்கரண்டி கடலை மாவு, |
01:40 | 4 முதல் 5 பூண்டு பற்கள், |
01:43 | 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, |
01:45 | 1 தேக்கரண்டி வறுத்த எள் |
01:49 | தேவைக்கேற்ப உப்பு |
01:51 | மேலும் தேவையானவை: |
01:53 | 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் |
01:55 | 3 தேக்கரண்டி எண்ணெய் |
01:58 | நான் இப்போது செயல்முறையை விளக்குகிறேன்: |
02:00 | முளைக்க வைப்பதற்கு, தட்டை பயறை முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும் |
02:05 | காலையில் அதை வடிகட்டி ஒரு சுத்தமான மஸ்லின் துணியில் கட்டவும். |
02:10 | முளைக்கட்ட, 2 நாட்களுக்கு அதை ஒரு கதகதப்பான இடத்தில் வைக்கவும் |
02:15 | வெவ்வேறு பருப்பு வகைகள் முளைப்பதற்கு வெவ்வேறு நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்க. |
02:20 | முளை கட்டியதும், அதில் பூண்டு சேர்த்து ஒரு கெட்டியான விழுதாக அரைக்கவும். |
02:27 | விழுதாக அரைக்க ஒரு மிக்சி அல்லது அம்மிக்கல்லை நீங்கள் பயன்படுத்தலாம் |
02:32 | ஒரு வாணலியை சூடாக்கி, எள் லேசான பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். |
02:37 | அவற்றை ஆற வைக்கவும் |
02:39 | கட்லெட்டுகளை தயாரிக்க, ஒரு கிண்ணத்தில் முளைத்த பயறுகளின் விழுதை எடுத்துக் கொள்ளுங்கள். |
02:43 | அதனுடன், வறுத்த எள், கீரை, கடலை மாவு, மசாலா, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும். |
02:52 | அவற்றை நன்கு கலக்கவும் |
02:54 | விழுது உலர்வாக இருந்தால், 1 தேக்கரண்டி தண்ணீரை சேர்க்கவும். |
02:59 | விழுதை 4 பகுதிகளாக பிரிக்கவும் |
03:01 | அவற்றை கட்லட்களாக வடிவமைக்கவும். |
03:04 | ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கவும். |
03:06 | கட்லெட்டுகளை நடுத்தர வெப்பத்தில் இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். |
03:12 | தட்டை பயறு கீரை கட்லெட்டுகள் தயார் |
03:15 | 4 கட்லெட்டுகளில் சுமார் 208 மி.கி magnesium உள்ளது. |
03:22 | எங்கள் அடுத்த உணவு சூரியகாந்தி விதைகள் சட்னி (டிப்) ஆகும். |
03:26 | இந்த உணவிற்கு உங்களுக்கு தேவையானவை: |
03:28 | 2 மேசைக்கரண்டி சூரியகாந்தி விதைகள் |
03:32 | 1 பச்சை மிளகாய், 4 முதல் 5 பூண்டு பற்கள் |
03:36 | 1 சிறிய நறுக்கிய தக்காளி |
03:39 | தேவைக்கேற்ப உப்பு |
03:41 | ½ தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய் |
03:44 | செயல்முறை: சூரியகாந்தி விதைகளை நடுத்தர வெப்பத்தில் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். |
03:50 | பின், அவற்றை ஆற வைக்கவும் |
03:52 | ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கவும் |
03:55 | அதில் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். |
03:57 | அதை ஆற வைக்கவும் |
04:00 | பூண்டு, மிளகாய், உப்பு, தண்ணீரை சேர்த்து ஒரு விழுதாக அரைக்கவும். |
04:07 | சூரியகாந்தி விதைகள் சட்னி தயாராக உள்ளது. |
04:10 | இந்த சட்னியின் 2 மேசைக்கரண்டி சுமார் 133 மிகி magnesiumஐ கொண்டுள்ளது. |
04:17 | அடுத்த உணவு, முளைத்த காராமணி பராத்தா(அடைத்த தட்டையான ரொட்டி). |
04:21 | முளை பயறுகளை உருவாக்குவதற்கான செயல்முறை இந்த டுடோரியலில் முன்னர் விளக்கப்பட்டுள்ளது. |
04:27 | இந்த உணவிற்கு உங்களுக்கு தேவையானவை: |
04:30 | 1/4 கப் கோதுமை மாவு |
04:32 | 2 மேசைக்கரண்டி முளைத்த காராமணி |
04:36 | 1 மேசைக்கரண்டி எள் |
04:39 | 1 பச்சை மிளகாய் |
04:40 | 1 தேக்கரண்டி சீரகம் |
04:43 | ½ தேக்கரண்டி மஞ்சள் தூள் |
04:46 | மேலும், தேவைக்கேற்ப உப்பு |
04:49 | மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய். |
04:53 | முதலில், மிக்சியைப் பயன்படுத்தி பச்சை மிளகாயுடன் முளைத்த காராமணியை சேர்த்து ஒரு கெட்டியான விழுதாக அரைக்கவும் |
05:00 | மிக்சி கிடைக்கவில்லை எனில், நீங்கள் ஒரு அம்மிக்கல்லை பயன்படுத்தலாம் |
05:05 | ஒரு கடாயில் எண்ணையை சூடாக்கி, சீரகம் சேர்த்து, பின்னர் எள்ளை சேர்க்கவும். |
05:11 | அவை நிறம் மாறும் வரை வதக்கவும். |
05:13 | முளைத்த காராமணி விழுதை சேர்த்து மற்றொரு 2 நிமிடங்கள் வதக்கவும். |
05:19 | பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும். |
05:24 | அதை ஆற வைக்கவும் |
05:27 | பராத்தாவை செய்ய ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும் |
05:31 | போதுமான தண்ணீரை சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும் |
05:35 | உருள் கட்டையை பயன்படுத்தி மாவை தட்டையாக்கவும். |
05:39 | முளைத்த காராமணி விழுதை தட்டையான மாவின் மீது வைக்கவும் |
05:42 | எல்லா பக்கங்களிலிருந்தும் மூடவும். |
05:44 | சிறிது மாவை அதன் மீது தூவி |
05:46 | அதை ஒரு பராத்தாவாக உருட்டவும். |
05:49 | ஒரு தவாவை சூடாக்கி, நெய்யை அல்லது எண்ணெயை இருபுறமும் ஊற்றி பராத்தாவை சமைக்கவும். |
05:55 | முளைத்த காராமணி பார்த்தா தயார் |
05:59 | ஒரு பராத்தாவில் சுமார் 173 மி.கி magnesium உள்ளது. |
06:05 | அடுத்த உணவு, முளைத்த கொண்டைக்கடலை பொரியல் |
06:09 | இந்த உணவிற்கு, உங்களுக்கு தேவையானவை: |
06:12 | ¼ கப் முளைத்த கொண்டைக்கடலை |
06:15 | 1 கப் கழுவிய வெந்தயம் இலைகள் |
06:19 | 1 நடுத்தர அளவிலான நறுக்கிய தக்காளி |
06:21 | மற்றும் 1 நடுத்தர அளவிலான நறுக்கிய வெங்காயம் |
06:25 | மேலும் தேவையானவை: |
06:27 | ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், |
06:29 | ½ தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், |
06:31 | 1 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை தூள், |
06:35 | 1 மேசைக்கரண்டி எண்ணெய் |
06:37 | மற்றும் தேவைக்கேற்ப உப்பு |
06:39 | செயல்முறை: 2 விசில் வரும் வரை முளைத்த கொண்டைக்கடலையை பிரஷர் குக்கரில் சமைக்கவும் |
06:45 | அழுத்தம் வெளிவரும் வரை காத்திருங்கள். |
06:47 | ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கவும், |
06:49 | வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். |
06:53 | தக்காளியைச் சேர்த்து அவை மென்மையாகும் வரை சமைக்கவும். |
06:57 | வெந்தயம் இலைகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும். |
07:02 | இப்போது மசாலா, உப்பு மற்றும் முளைத்த கொண்டைக்கடலையை சேர்த்து |
07:08 | இதனுடன், வேர்க்கடலை தூளை சேர்க்கவும் |
07:11 | வாணலியை மூடி 5 முதல் 10 நிமிடங்கள் சமைக்கவும். |
07:15 | முளைத்த கொண்டக்கடலை பொரியல் தயார் |
07:19 | இந்த பொரியலின் ½ கிண்ணத்தில் சுமார் 141 மி.கி magnesium உள்ளது. |
07:26 | இறுதி உணவு, சிறு கீரை வதக்கல் |
07:30 | இந்த உணவிற்கு உங்களுக்கு தேவையானவை |
07:33 | 100 கிராம் கழுவிய முளைக்கீரை, |
07:36 | 4 பூண்டு பற்கள் |
07:38 | 1 சிறிய வெங்காயம், |
07:40 | 2 மேசைக்கரண்டி துருவிய தேங்காய், |
07:43 | 2 பச்சை மிளகாய், |
07:45 | 1 சிட்டிகை மஞ்சள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு |
07:49 | மேலும் 1 தேக்கரண்டி எண்ணெய் தேவை |
07:53 | செய்முறை: ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கவும். |
07:56 | பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும் |
08:01 | அவை நிறம் மாறும் வரை வறுக்கவும். |
08:03 | இப்போது சிறு கீரையை சேர்த்து நன்கு கலக்கவும். |
08:07 | அதை மூடி 5 முதல் 7 நிமிடங்கள் சமைக்கவும். |
08:12 | உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து 1 நிமிடம் சமைக்கவும். |
08:16 | இதில் துருவிய தேங்காயை சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும். |
08:21 | சிறு கீரை வதக்கல் தயார். |
08:25 | இந்த வதக்கலின் ½ கிண்ணத்தில் சுமார் 209 மில்லிகிராம் magnesium உள்ளது. |
08:31 | இந்த magnesium நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவும். |
08:37 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி |