Health-and-Nutrition/C2/Importance-of-Magnesium/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 magnesium.ன் முக்கியத்துவம்குறித்த spoken tutorialக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
00:09 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாக தாதுக்கள்,
00:12 நம் உணவில் magnesiumன் முக்கியத்துவம்,
00:15 அதன் குறைபாட்டிற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்,
00:20 magnesium நிறைந்த உணவுகள்
00:23 மற்றும் வெவ்வேறு வயதினருக்கான தேவைகள்.
00:27 நம் உணவில் தாதுக்கள் ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வோம்.
00:32 தாதுக்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
00:36 நல்ல ஆரோக்கியத்திற்கு சிறிய அளவில் தாதுக்கள் நமக்கு தேவை.
00:42 நம் உடல் தானாகவே தாதுக்களை உற்பத்தி செய்வதில்லை.
00:46 எனவே அவற்றை உணவு மூலம் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
00:49 இரத்த உறைவதற்கு தாதுக்கள் தேவை.
00:53 இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க அவை உதவுகின்றன.
00:57 hemoglobin மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்திக்கு தாதுக்கள் தேவை.
01:03 அவை தசைச் சுருக்கம்
01:07 மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன
01:10 வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கும்
01:14 thyroid hormoneகளின் உற்பத்திக்கும் தாதுக்கள் தேவைப்படுகின்றன.
01:18 Magnesium நம் உடலுக்குத் தேவையான ஒரு முக்கிய கனிமமாகும்.
01:23 இது தசையை தளர்த்துவதற்கு தேவைப்படுகிறது.
01:27 இது மத்திய நரம்பு மண்டலம், செய்திகளை அனுப்பவும் பெறவும் உதவுகிறது.
01:34 ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கும் இந்த ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.
01:40 ஆற்றல் உற்பத்திக்கும் நமக்கு மெக்னீசியம் தேவை
01:44 DNAன் உற்பத்திக்கும் நமக்கு மெக்னீசியம் தேவை
01:47 இந்த ஊட்டச்சத்தின் குறைபாட்டின் காரணங்களையும் அறிகுறிகளையும் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
01:55 சில காரணிகள் மெக்னீசியம் குறைபாட்டிற்கான அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
02:02 சத்தில்லாத உணவு
02:04 மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்ளுதல்
02:08 மற்ற காரணிகள்- மதுபானங்கள்,
02:13 தேநீர் மற்றும் / அல்லது காபியை அதிகமாக உட்கொள்வது
02:17 மெக்னீசியத்தின் போதிய உறிஞ்சுதல் இல்லாமையும், அதிகரித்த குறைபாட்டிற்கு காரணமாகும்.
02:25 கர்ப்ப காலத்தில், மெக்னீசியத்தின் தேவை அதிகரிக்கிறது.
02:30 இந்த தேவையை பூர்த்தி செய்யத் தவறுவதும் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.
02:36 magnesium குறைபாட்டின் அறிகுறிகள்
02:39 பசியின்மை
02:41 மற்றும் உடல் பலவீனம்.
02:43 மேலும் தலைவலி,
02:46 migraine மற்றும் தசை பிடிப்புகளும் காணப்படும்
02:50 அதிக குறைப்பாட்டினால், மக்கள் அசாதாரண இதயத் துடிப்பை கொண்டிருக்கலாம்.
02:56 calcium மற்றும் potassium ன் அளவுகள் குறைவதற்கான வாய்ப்பும் உள்ளது
03:03 மெக்னீசியம் குறைபாடு வகை 2 நீரிழிவு நோய்
03:08 மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது.
03:11 இது osteoporosis
03:15 மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
03:18 எலும்பின் அடர்த்தி குறைகின்ற ஒரு நிலை ஆஸ்டியோபோரோசிஸ் ஆகும்.
03:24 எலும்புகள் உடையக்கூடியவையாகவும், எலும்பு முறிவுகளுக்கும் ஆளாகின்றன.
03:30 ஆஸ்டியோபோரோசிஸின் பிற அறிகுறிகள் - வளைந்த தோற்ற அமைவு
03:35 குறைந்த உயரம்
03:38 மற்றும் முதுகுவலி.
03:40 குறைபாட்டைத் தவிர்க்க, நம் உணவில் magnesium நிறைந்த உணவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
03:47 பீன்ஸ்,
03:49 கொட்டைகள், விதைகள்,
03:52 இலை காய்கறிகள்
03:54 மற்றும் தானியங்கள் மெக்னீசியத்தின் நல்ல ஆதாரங்கள்.
03:59 இந்த உணவு மூலங்களில் காணப்படும் இந்த ஊட்டச்சத்தின் அளவை பார்ப்போம்.
04:06 30 கிராம் பீன்ஸில் சுமார் 64 மில்லிகிராம் magnesium உள்ளது.
04:12 2 மேசைக்கரண்டி விதைகளில் சுமார் 123 மில்லிகிராம் உள்ளது.
04:19 100 கிராம் இலை காய்கறிகளில் 194 மில்லிகிராம் உள்ளது.
04:26 20 கிராம் கொட்டைகள் சுமார் 61 மில்லிகிராம் உள்ளது.
04:31 மற்றும் 30 கிராம் தானியங்கள் கிட்டத்தட்ட 81 மில்லிகிராம்களை கொண்டிருக்கின்றன.
04:38 உணவின் மூலம் நாம் magnesium பெற முடியும் என்றாலும், அதன் உறிஞ்சுதலும் முக்கியமானது.
04:44 உணவில் உள்ள பைட்டேட்டுகள் மற்றும் ஆக்சலேட்டுகள் magnesium உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன.
04:51 நார்ச்சத்துக்களும் இதே விளைவை ஏற்படுத்துகின்றன
04:54 சமைப்பதற்கு முன் பீன்ஸை ஊறவைத்தல்,
04:57 நொதித்தல், போன்றவை இந்த ஊட்டச்சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.
05:02 முளைத்தல்
05:04 சமைத்தல்
05:06 மற்றும் வறுத்தல் ஆகியவையும் இதை செய்கின்றன
05:08 பரிந்துரைக்கப்பட்ட magnesiumன் அளவு வெவ்வேறு வயதினருக்கு மாறுபடுகிறது:
05:14 7 முதல் 12 மாத குழந்தைகளுக்கு 75 மில்லிகிராம்
05:19 1 முதல் 8 வயது குழந்தைகளுக்கு 80 முதல் 130 மில்லிகிராம்
05:25 குமார பருவத்தினருக்கு 360 முதல் 400 மில்லிகிராம்
05:30 18 முதல் 19 வயது கர்ப்பிணிப் பெண்களுக்கு 400 மில்லிகிராம்
05:36 18 முதல் 19 வயது பாலூட்டும் தாய்மார்களுக்கு 360 மில்லிகிராம் பரிந்துரைக்கப்படுகிறது
05:44 பெரியவர்களுக்கு, 310 முதல் 400 மில்லிகிராம் வரை அறிவுறுத்தப்படுகிறது
05:50 கர்ப்பிணிப் பெண்களுக்கு 350 மில்லிகிராம்
05:55 மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 310 மில்லிகிராம் அறிவுறுத்தப்படுகிறது.
06:01 இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய, உங்கள் உணவில் போதுமான magnesium நிறைந்த உணவைச் சேர்த்துக்கொள்ளவும்.
06:07 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree