Health-and-Nutrition/C2/Hand-expression-of-breastmilk/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | கைமுறையாக தாய்ப்பாலை வெளிக்கொணர்வது குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது,தாய்ப்பாலை வெளிக்கொணர்வதின் பயன்கள், |
00:11 | கையினால் தாய்ப்பாலை எப்படி வெளிக்கொணர்வது மற்றும் |
00:15 | எவ்வளவு அடிக்கடி, ஒரு தாய் தாய்ப்பாலை வெளிக்கொணர வேண்டும். |
00:20 | பின்வருவனவற்றிக்கு தாய்ப்பாலை வெளிக்கொணர்வது பயனுள்ளதாகிறது: கனமான வீங்கிய மார்பகங்களிலிருந்து நிவாரணம் பெற, |
00:25 | புண்பட்ட மார்பகக்காம்புகள் மற்றும் மார்பகக்காம்பை சுற்றியுள்ள கருத்த பகுதியின் வறண்ட தோலுக்கு சிகிச்சை செய்ய, |
00:31 | பிடிமானத்தின் போது, தாயின் புண்பட்ட மார்பகக்காம்புகள் மிகவும் அதிக வலி கொண்டதாக இருக்கும் போது, குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட, |
00:38 | தாயின் தாய்ப்பாலின் வழங்கலை குறையாமல் பராமரிக்க மற்றும் அதிகரிக்க, |
00:42 | தாய், வெளியே அல்லது வேலைக்கு செல்லும் போது, குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்க |
00:49 | மார்பகக்காம்பை சுற்றியுள்ள கருத்த பகுதியை மென்மையாக்கி, பால் நிறைந்து மார்பகத்துடன் ஒரு குழந்தை தன்னை இணைத்துக்கொள்ள உதவ, |
00:56 | மற்றொரு மார்பகத்தை தருவதற்கு முன்பு குழந்தை ஒரு மார்பகத்திலிருந்து முழுவதுமாக பாலை குடித்துவிட்டதா என்பதை சரிபார்க்க |
01:05 | தண்ணீர் அல்லது பசுவின் பாலுக்கு பதிலாக தாய்ப்பாலை பயன்படுத்தி, ஒரு குழந்தைக்கு, சத்தான மாற்று உணவை தயாரிக்க, |
01:14 | மற்றும் பின்வரும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட- குறைமாத குழந்தைகள் |
01:18 | நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் |
01:20 | பலகீமான தசை தன்மையை கொண்ட குழந்தைகள் |
01:22 | பிளவுபட்ட உதடு அல்லது அண்ணத்தை கொண்ட குழந்தைகள் மற்றும் |
01:27 | மார்பகத்துடன் ஆழமாக இணைத்துக்கொள்ள கஷ்டப்படும் குழந்தைகள். |
01:32 | இப்போது, தாய்ப்பாலை வெளிக்கொணரக்கற்போம். |
01:37 | ஒரு தாய்க்கு, தாய்ப்பாலை வெளிக்கொணர்வதற்கு, மிகவும் பரிந்துரைக்கப்படுகின்ற ஒரு வழி, தன் கையை பயன்படுத்துதல் ஆகும். |
01:44 | ஏனெனில், இது மார்பகக்காம்பை சுற்றியுள்ள கருத்த பகுதிக்கு குறைத்த அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. |
01:51 | மேலும், இந்த முறைக்கு எந்த உபகரணமும் தேவையில்லை. அதனால், தாய் இதை, எங்கு வேண்டுமானாலும் எந்நேரத்திலும் செய்யலாம். |
02:00 | தாய்ப்பாலை கைமுறையாக வெளிக்கொணர்வது, ஒரு கற்றல் திறன் மற்றும் பயிற்சியின் மூலம் அது மேம்படும். |
02:08 | மார்பகங்கள் மென்மையாக இருக்கும் போது, தாய்ப்பாலை கைமுறையாக வெளிக்கொணர்வது எளிதாகும். |
02:13 | அதனால், குழந்தை பிறந்த முதல் அல்லது இரண்டு நாட்களில், தாய் இந்த திறனை கற்றுக்கொள்ள வேண்டும். |
02:21 | தாய்ப்பாலை வெளிக்கொணர்வதற்கு முன், அதை சேகரிக்க, தாய் ஒரு ஸ்டீல் அல்லது கண்ணாடி கிண்ணத்தை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். |
02:29 | பரந்த வாயை கொண்ட ஒரு கிண்ணம், கண்ணாடி கூஜா அல்லது ஜாடியை அவள் தேர்வு செய்ய வேண்டும். |
02:36 | தேர்வு செய்யப்பட்ட பாத்திரத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் அவள் கழுவ வேண்டும். |
02:41 | அதன் பின், அவள் கொதிக்கும் நீரில் அந்த பாத்திரத்தை வைக்க வேண்டும் அல்லது அதனுள் கொதிக்கும் நீரை ஊற்றி, அப்படியே சில நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். |
02:52 | பின் அந்த பாத்திரத்தை அவள் முழுவதுமாக காற்றில் உலர்த்த வேண்டும் அல்லது பயன்படுத்தப்படாத சுத்தமான துணியினால் அதை உலர துடைக்க வேண்டும். |
03:02 | பயன்படுத்தப்பட்ட சமையலறை துணி போன்ற ஒரு துணியை வைத்து பாத்திரத்தை, ஒரு போதும் துடைக்கக்கூடாது. |
03:10 | சுத்தம் செய்யப்பட்ட பாத்திரம் முழுவதுமாக உலர்ந்த பிறகு, மார்பகத்திலிருந்து தாய்ப்பாலை வெளியேற்றுவது அடுத்த படியாகும். |
03:17 | தன் பாலை கொடுப்பதற்கு ஏதுவாக, தாய் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மற்றும் உணர்ச்சி ரீதியாக தனது குழந்தையுடன் தொடர்பு கொள்ள வேண்டும். |
03:26 | பின்வருவனவற்றை அவள் முயற்சிக்கலாம்: ஒரு ஆதரிக்கின்ற நண்பருடன் அவள்,அமைதியாகவும் தனித்தும் இருக்கலாம். |
03:34 | தாய்ப்பாலை வெளிக்கொணர்கின்ற வேறு தாய்மார்களின் ஒரு கூட்டத்தில், சில தாய்மார்கள் எளிதாக பாலை வெளிக்கொணரலாம். |
03:41 | தனது குழந்தையை, தோலுடன் தோல் தொடர்பில் தனது மடியில் அவள் வைத்துக்கொள்ளலாம். |
03:46 | அல்லது தனது குழந்தையை அவள் பார்க்கலாம் அல்லது குழந்தையின் குரலை கேட்கலாம். |
03:53 | சில நேரங்களில்- தனது குழந்தையின் ஒரு புகைப்படத்தை பார்ப்பது அல்லது குழந்தையின் ஆடையை முகர்வது உதவும். |
04:00 | இளஞ்சூட்டில் ஒரு இதமான பானத்தை அவள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அந்த பானம், காபி, வலுவான தேநீர், மது அல்லது எந்த ஊக்கப்பொருளாகவும் இருக்கக்கூடாது. |
04:12 | தன் பாலை வழங்குதலுக்கு உதவ, அவள் தனது மார்பகங்களை சூடாக்கிக்கொள்ளலாம். |
04:17 | தனது மார்பகங்களை சூடாக்க, சூடான நீரில் ஊற வைக்கப்பட்ட ஒரு துணியை தனது மார்பகங்களின் மீது அவள் வைத்துக்கொள்ளலாம் அல்லது சூடான ஒரு குளியலை எடுத்துக்கொள்ளலாம். |
04:28 | தனது மார்பகக்காம்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கருத்த பகுதியை உணர்வூட்ட, அவற்றை மென்மையாக இழுக்கலாம் அல்லது தனது விரல்களை வைத்து அவற்றை உருளச் செய்யலாம். |
04:38 | வட்ட சுழற்சிகளை பயன்படுத்தி, அவள் தனது மார்பகங்களை லேசாக அழுத்திவிடலாம். |
04:44 | தாய், ஒரு உதவியாளரை கூப்பிட்டு தனது முதுகை தேய்த்து விடச்சொல்லலாம். |
04:47 | முதுகை தேய்ப்பதற்கு, தாய், உட்கார்ந்து, முன்னோக்கி சாய்ந்து, |
04:53 | தனது முன்னே உள்ள மேசையின் மீது தனது கைகளை மடக்கி, கைகளின் மீது தனது தலையை வைக்க வேண்டும். |
05:01 | அவளது மார்பகங்கள் ஆடையில்லாமலும், தளர்வாக தொங்கிக்கொண்டும் இருக்கவேண்டும். |
05:07 | உதவியாளர், தாயின் முதுகுத்தண்டின் இரண்டு பக்கங்களிலும் தேய்க்கவேண்டும். |
05:12 | தனது கட்டைவிரல்களை முன்னோக்கி வைத்து, மூடிய கையை அவள் பயன்படுத்த வேண்டும். |
05:17 | தனது கட்டைவிரல்களால் சிறிய வட்ட சுழற்சிகளை ஏற்படுத்துமாறு, அவள் உறுதியாக அழுத்தவேண்டும். |
05:25 | கழுத்திலிருந்து தோள்பட்டைகள் வரை, ஒரே நேரத்தில் முதுகுத்தண்டின் இரண்டு பக்கங்களிலும் அவள் அழுத்திக்கொண்டு வர வேண்டும். |
05:34 | இதை அவள் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு செய்ய வேண்டும். |
05:38 | இந்த அனைத்து படிகளும் தாய்ப்பாலை வெளியேற்றுவதற்கு உதவி புரியும். |
05:43 | தாய்ப்பாலின் இந்த வெளியேற்றுதல், Oxytocin reflex அல்லது let down reflex எனப்படும். |
05:51 | Oxytocin reflex தொடங்கியவுடன், தாய் தனது கைகளை கழுவி மற்றும் முழுவதுமாக உலர்த்திக்கொள்ள வேண்டும். |
05:59 | பின், தாய் சௌகர்யமாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். |
06:04 | அவள் சிறிது முன்னோக்கி சாய வேண்டும். |
06:07 | அவள், பாத்திரத்தை தனது மார்பகத்துக்கு அருகே வைத்துக்கொள்ள வேண்டும். |
06:11 | இப்போது, தனது கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களால் மார்பகத்தை பக்கத்திலிருந்து அழுத்தி, அதை சி வடிவ பிடிமானத்தில் வைக்க வேண்டும். |
06:20 | எந்த மார்பகத்தையும் பிடித்துக்கொள்ள எந்த கையையும் அவள் பயன்படுத்தலாம். முதல் கை சோர்வடைந்தால், மற்றொரு கைக்கு அவள் மாறிக்கொள்ளலாம். |
06:29 | மார்பகத்தை பிடித்துக்கொள்ளும் போது, அவளது கட்டைவிரல் மார்பகத்தின் மேல்புறம் இருக்க வேண்டும். |
06:35 | மற்றும் அவளது மற்ற விரல்கள், கட்டைவிரலுக்கு எதிராக, மார்பகத்தின் கீழ்ப்பகுதியில் வைக்கப்பட வேண்டும். |
06:42 | அவளது கட்டைவிரல், மார்பகக்காம்பு மற்றும் மற்ற விரல்கள், ஒரே நேர்க்கோட்டில் எப்போதும் இருக்கவேண்டும். |
06:48 | மற்றும் மார்பகக்காம்பு, கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கிடையே இருக்க வேண்டும். |
06:54 | மார்பகக்காம்பு மற்றும் அவளது கட்டைவிரலுக்கிடையேயும், மார்பகக்காம்பு மற்றும் அவளது மற்ற விரல்களுக்கிடையேயும், 2 விரல்களின் இடைவெளி இருக்கவேண்டும். |
07:04 | விரல்கள், மார்பகக்காம்புக்கு மிக அருகே இருந்தால், பால் வழங்கல் அதிக நேரத்திற்கு இருக்காது. |
07:10 | மார்பகக்காம்பை சுற்றியுள்ள கருத்த பகுதிக்கு கீழே உள்ள பால் நாளங்களை அவள் அழுத்தும் போது, தாய் அதிக பாலை வெளியேற்றுவாள். |
07:19 | இப்படத்தில், தாய் தனது வலது மார்பகத்தை, தனது வலது கையினால் சரியாக பிடித்துக்கொண்டிருக்கிறாள். |
07:27 | இப்போது, நிலையான அழுத்தத்தை கொடுத்து, அவள் மார்பகத்தை மார்பின் சுவரை நோக்கி சிறிது உள்பக்கமாக அழுத்தவேண்டும். |
07:36 | பின், கையை நகர்த்தாமல், கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களுக்கிடையே மார்பகத்தை மென்மையாக அழுத்தவும். |
07:44 | பின், மார்பகத்தின் மீதுள்ள அழுத்தத்தை விடுவிக்கவும். |
07:48 | தாய், இந்த 3 படிகளை மீண்டும் செய்யவேண்டும்- பின்னால் தள்ளுவது, அழுத்துவது மற்றும் விடுவிப்பது. |
07:56 | முதல் படியான, மார்பின் சுவரை நோக்கி பின்னால் அழுத்துவது ஒரு முக்கிய படியாகும். |
08:02 | மார்பகக்காம்பை நோக்கி மட்டும் அழுத்துவது, மிகச் சிறிய அளவு பாலை கொடுக்கும். |
08:07 | ஆனால், மார்பகம் பின்னால் அழுத்தப்படும் போது, அடர்ந்த மார்பக திசுவிலிருந்து பால் வெளியேற்றப்படுகிறது. |
08:15 | ஆனால், மிகவும் பின்னால் அழுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில், அது பால் நாளங்களை அடைக்கக்கூடும். |
08:23 | தாய், கைமுறையாக தாய்ப்பாலை வெளிக்கொணர தொடங்கும் போது, முதலில் மிகச் சிறிய பால் துளிகள் மட்டுமே வரக்கூடும். |
08:30 | let down reflex தொடங்குகையில், பால் வெளியே சொட்டுகிறது. |
08:36 | முதல் சில முயற்சிகளில், பால் வெளியில் கொட்டுவது அல்லது மெதுவாக வருவது சகஜமாகும். |
08:42 | பின்னர், தாய்ப்பால் ஒரு ஓடை போல் பாயலாம். ஏனெனில், தாய்ப்பாலூட்டுதலில், தாய்ப்பாலை வெளிக்கொணர்தல் என்பது பயிற்சியுடன் வருகின்ற ஒரு திறனாகும். |
08:53 | கொலஸ்ட்ரம் என்ற முதல் பால், குழந்தை பிறந்தவுடன் சில துளிகளே வரக்கூடும். ஆனால், பிறந்த குழந்தைக்கு அது போதுமானது. |
09:01 | தடித்த, பொதுவாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் பால், குழந்தைக்கு மகத்தான பாதுகாப்பு நன்மைககளை கொண்டிருக்கிறது. |
09:08 | பால் வழங்கல், மீண்டும் சொட்டுக்களாக குறையும் வரை, தாய் 3 படிகளை மீண்டும் செய்ய வேண்டும். |
09:16 | பின், மார்பகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து பாலை வெளிக்கொணர தனது விரல்களை அவள் வேறு இடத்தில் வைக்க வேண்டும். |
09:23 | பால் நிறைந்ததாக இருக்கும் மார்பகப்பகுதிகளை உணர்ந்து, அவள் அவற்றை அழுத்தலாம். |
09:30 | பாலின் வழங்குதல் குறையும் வரை, ஒரே மாபாகத்திலிருந்து அவள் குறைந்தபட்சம் 3ல் இருந்து 5 நிமிடங்களுக்கு பாலை வெளிக்கொணர வேண்டும். |
09:38 | பின், மற்ற மார்பகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் இதே முறையில், அவள் பாலை வெளிக்கொணர வேண்டும். |
09:45 | பின், இரண்டாவது முறையாக, இரண்டு மார்பகத்திலிருந்தும் பாலை மீண்டும் வெளிக்கொணர வேண்டும். |
09:51 | இரண்டு மார்பகத்திலிருந்தும் தாய்ப்பாலை வெளிக்கொணர்வதற்கு, போதுமானதாக 20ல் இருந்து 30 நிமிடங்கள் வரை எடுக்கும். |
09:57 | குறிப்பாக, முதல் சில நாட்களில், இதற்கு அதிக நேரம் எடுக்கலாம். ஏனெனில், அந்நாட்களில் சிறிது பால் மட்டுமே உற்பத்திசெய்யப்படுகிறது. |
10:07 | குறைந்த நேரத்தில் வெளிக்கொணர்வதற்கு முயற்சிக்காமல் இருப்பது முக்கியமாகும். |
10:12 | தாய்ப்பாலை கைமுறையாக வெளிக்கொணர்வது வலியை ஏற்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். அப்படி வலி உண்டானால், நுட்பம் தவறானது. |
10:21 | மார்பக திசு மென்மையானது. |
10:24 | மார்பகக்காம்பை நோக்கி, தேய்ப்பது, தோலுடன் சேர்த்து விரல்களை இழுப்பது மற்றும் சறுக்குவதை தவிர்க்கவும். இது மார்பகத்தை புண்படுத்தலாம். |
10:36 | மார்பகக்காம்பை சுற்றியுள்ள கருத்த பகுதியின் மீது, தோலை இறுக்குவது அல்லது இழுப்பதை தவிர்க்கவும். |
10:42 | மேலும், மார்பகக்காம்பை கசக்குவது மற்றும் இழுப்பதை தவிர்க்கவும். |
10:46 | மார்பகக்காம்பை அழுத்துவது அல்லது இழுப்பது போதுமான அளவு பாலை வெளிக்கொணராது. |
10:51 | அது, மார்பகக்காம்பை குழந்தை உறிஞ்சுவதை போன்றதேயாகும். |
10:57 | தாய்ப்பாலை வெளிக்கொணர்ந்த பின்பு, தாய் அந்த பாத்திரத்தை ஒரு சுத்தமான துணி அல்லது தட்டினால் மூட வேண்டும். |
11:04 | பின், பிற்கால பயன்பாட்டிற்கு அவளது தாய்ப்பாலை அவள் பாதுகாப்பாக சேமிக்க வேண்டும். |
11:09 | தாய்ப்பாலின் பாதுகாப்பான சேமிப்பு மற்றும் சேமித்த பாலை குழந்தைக்கு கொடுப்பது ஆகியவை மற்றொரு டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது. |
11:19 | இப்போது, எவ்வளவு அடிக்கடி ஒரு தாய் பாலை வெளிக்கொணர வேண்டும் என்பதை பார்ப்போம். |
11:24 | தாய்ப்பாலின் உற்பத்தியை தொடங்க, பராமரிக்க அல்லது குறைவான பிறப்பு எடை குழந்தை அல்லது நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு பாலூட்ட |
11:35 | குழந்தை பிறந்த உடனுக்குடனே அவள் பாலை வெளிக்கொணர வேண்டும். |
11:40 | முதலில், அவள் கொலஸ்ட்ரமினின் சில துளிகளை மட்டுமே வெளிக்கொணரலாம். |
11:45 | இது, தாய்ப்பாலின் உற்பத்தியை தொடக்க உதவும். |
11:48 | இது, பிறந்தவுடன் குழந்தை உறிஞ்சுவதை போல செயல்படுகிறது. |
11:54 | தாய், தன்னால் முடிந்த அளவுக்கு மற்றும் குழந்தை தாய்ப்பால் பெற விரும்பும்போதெல்லாம் வெளிக்கொணர வேண்டும். |
12:02 | இரவு நேரத்தையும் சேர்த்து, இது 2ல் இருந்து 3 மணி நேரத்திற்கு ஒரு முறை செய்யப்பட வேண்டும். |
12:08 | வெளிக்கொணர்தலுக்கிடையே அதிக இடைவெளிகள் இருந்தால், போதிய அளவு பாலை அவளால் உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம். |
12:16 | அடுத்து, தாயின் பாலின் வழங்கலை மேம்படுத்துவதற்கும், மற்றும் பால் சில வாரங்களுக்கு பிறகு குறைவது போல தோன்றினால், |
12:25 | குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிய உடனே, ஒவ்வொரு 1ல் இருந்து 2 மணி நேரத்திற்கிடையே, அவள் தாய்ப்பாலை வெளிக்கொணர வேண்டும். |
12:33 | குழந்தை 3 மணி நேரத்திற்கு மேலே தூங்குவதாக தோன்றினால், பின் தாய்ப்பாலூட்டுதலுக்கிடையே அவள் வெளிக்கொணரலாம். |
12:43 | கனமான வீங்கிய மார்பகங்கள் மற்றும் வேலையின் போது தாய்ப்பால் கசிவு போன்ற அறிகுறியிலிருந்து விடுபடவேண்டுமெனில்- தாய் தேவையான அளவு பாலை மட்டுமே வெளிக்கொணர வேண்டும். |
12:53 | மார்பகத்தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டுமெனில் : மார்பகக்காம்பின் மீது தேய்ப்பதற்கு, ஒரு சிறிய துளி தாய்ப்பாலை தாய் வெளிக்கொணர வேண்டும். |
13:02 | ஒரு குளியலுக்கு பிறகு மற்றும் தாய்ப்பாலூட்டிய பிறகு, இதை அவள் செய்யவேண்டும். |
13:07 | வேலையின் காரணமாக தாய் வெளியில் இருக்கும் போது குழந்தைக்கு பாலை வைத்து செல்ல வேண்டுமெனில்: |
13:14 | வழங்குதலை நிலையாக வைத்துக்கொள்ள, தாய் வேலையின் போது பாலை வெளிக்கொணர வேண்டும். |
13:20 | மேலும், வேலைக்கு போகும் முன், தாய் தாய்ப்பாலை வெளிக்கொணர்ந்து, குழந்தைக்கு கொடுக்க, அதை கவனித்து கொள்பவரிடம் விட்டுச் செல்ல வேண்டும். |
13:29 | இதைச் செய்ய- அவளிடம் குளிர்சாதன பெட்டி இருந்தால், சில வாரங்களுக்கு முன்னதாகவே இதை தாய் திட்டமிடலாம். |
13:34 | அவள் அதிக பாலை வெளிக்கொணர்ந்து, பிற்கால பயன்பாட்டிற்கு அதை சேமிக்கலாம். |
13:39 | குழந்தை தாய்ப்பாலுண்ட பிறகும், தாய் பாலை வெளிக்கொணரலாம். |
13:44 | ஒவ்வொரு தாய்ப்பாலூட்டுதலுக்கும், 60ல் இருந்து 90 மில்லிலிட்டர் பாலை தாய் ஒதுக்க வேண்டும். |
13:51 | தாய் வெளியில் இருக்கும் போது, குழந்தையின் தேவைக்கேற்றவாறு, மேலும் தாய்ப்பால் கொடுக்கப்படலாம். |
13:57 | அடிக்கடி, கைமுறையை பயன்படுத்தினால்- பாலை வெளிக்கொணர்தல் எளிதாகிறது, விரைவாக பால் வெளியேறுகிறது |
14:07 | மற்றும் தாய், அதிக பாலை உற்பத்தி செய்வாள் என்பதை நினைவில் கொள்ளவும். |
14:11 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |