Health-and-Nutrition/C2/Cradle-Hold-for-Breastfeeding/Tamil
From Script | Spoken-Tutorial
00:01 | தாய்ப்பாலூட்டலுக்கான Cradle பிடிமானம் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, |
00:09 | தாய் தன் குழந்தைக்கான சரியான தாய்ப்பாலூட்டுகின்ற பிடிமானத்தை தேர்வு செய்வது. |
00:15 | தாய்ப்பாலூட்டும் முன் தாய் தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டிய முறை மற்றும் |
00:18 | Cradle பிடிமானத்தை செய்யும் முறை. |
00:22 | இப்போது தொடங்கலாம். உலகெங்கிலும் தாய்மார்கள், பல்வேறு பிடிமானங்களை பயன்படுத்தி தன் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுகின்றனர். முந்தைய ஒரு டுட்டோரியலில் நாம் கற்றது போல், சிறந்த தாய்ப்பாலூட்டுகின்ற பிடிமானம் எதுவெனில், |
00:39 | தாய் மற்றும் குழந்தை இருவரும் தாய்ப்பாலூட்டுகின்ற நேரம் முழுவதும் சௌகர்யமாக இருக்க வேண்டும். |
00:45 | குழந்தையால், தாயின் மார்பகத்தை ஆழமாக இணைத்துக்கொண்டு, |
00:50 | போதிய அளவு பாலை பெற முடிய வேண்டும். |
00:54 | Cradle பிடிமானம் என்ற ஒரு பிடிமானத்தைக் கற்போம். |
00:59 | தாய்ப்பாலூட்டுவதற்கு முன்பு, தாய் தன் கைகளை சோப்பு மற்றும் நீரினால் கழுவி, |
01:05 | பின் ஒழுங்காக உலர்த்திக்கொள்ள வேண்டும். |
01:10 | பின் அவள், கொதிக்கவிடப்பட்டு, பின் குளிரவைக்கப்பட்ட, ஒரு குவளை நீரை அருந்த வேண்டும். |
01:15 | தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்கள், நாளொன்றுக்கு சுமார் 750ல் இருந்து 850 மில்லிலிட்டர் வரை பாலை உற்பத்தி செய்வதால் அவர்கள், |
01:22 | அதிக நீரை அருந்த வேண்டும். |
01:27 | அடுத்து, தாயின் நிலையை பற்றி பார்ப்போம். |
01:31 | தாய், கட்டில் அல்லது தரையின் மீது குறுக்கு கால் நிலையில், |
01:36 | அல்லது அவளது கால்கள் தரையில் படுமாறு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளவேண்டும். |
01:41 | நாற்காலியின் உயரம் மிக அதிகமாக இருந்து, அவளது கால்கள் தரையை தொடமுடியவில்லையெனில், பின்- |
01:47 | தரையின் மீது ஒரு சிறிய மேசை மீது அல்லது தலையணைகளின் மீது அவளது கால்கள் படுமாறு வைத்துக்கொள்ளலாம். |
01:53 | உட்காருகையில், முதுகுவலியை தவிர்க்க, தனது முதுகை நேராக வைத்துக்கொள்ள வேண்டும். |
02:00 | அவளது தோள்கள், உயர்த்திய நிலையில் இல்லாமல் அல்லது வளைந்தும் இல்லாமல், தளர்வாக இருக்க வேண்டும். |
02:05 | தாய்ப்பாலூட்டுகின்ற நேரம் முழுதும் இந்த தளர்ந்த நிலை பராமரிக்கப்பட வேண்டும். |
02:12 | இப்போது, தாய் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட விரும்புகின்ற மார்பகத்தை திறக்க வேண்டும். |
02:18 | தனது ப்ரா மற்றும் ரவிக்கையின் அழுத்தம், மார்பகத்தின் மீது படாமலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். |
02:25 | சௌகர்யமாக உட்கார்ந்து கொண்ட பிறகு, குழந்தையை தாயிடம் கொண்டு வரவும். |
02:29 | தான் தாய்ப்பாலூட்டுகின்ற மார்பகத்தின் அதே பக்க கையினால், தாய் தனது குழந்தையை பிடித்துக்கொள்ள வேண்டும். |
02:37 | அந்த கை முழங்கையின் உள் வளைவில் குழந்தையின் தலையை வசதியாக வைக்கவேண்டும். |
02:44 | அதே கையினால், தாய் தனது குழந்தையின் தலை, கழுத்து மற்றும் மார்பை தாங்கிக்கொள்ள வேண்டும். |
02:51 | இப்படத்தில் உள்ள தாய், தனது வலது மார்பகத்திலிருந்து குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுகிறாள். |
02:56 | அதனால், தனது குழந்தையின் தலை, கழுத்து மற்றும் மார்பை தாங்கிக்கொள்ள அவள் தனது வலது கையை பயன்படுத்துகிறாள் மற்றும் |
03:04 | அவளது முழங்கையின் உள் வளைவில், குழந்தையின் தலை உள்ளது. |
03:10 | குழந்தையை தூக்குவதற்கு அவளுக்கு கூடுதலான ஆதரவு தேவைப்பட்டால், அவளது மடியின் மீது ஒரு தலையணையை வைத்து, அதன் மீது குழந்தையை வைத்துக்கொள்ளலாம். |
03:19 | தாய் தனது முதுகை வளைத்து, தனது மார்பகத்தை குழந்தையிடம் எப்போதும் கொண்டுவரக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். |
03:25 | இது அவளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி, முதுகு வலியை தூண்டக்கூடும். |
03:30 | அவள் எப்போதும் தனது முதுகை நேராக வைத்துக்கொண்டு, குழந்தையை தூக்கி, தனது மார்பகத்திற்கு கொண்டு வர வேண்டும். |
03:36 | அடுத்து, குழந்தையின் உடம்பை எவ்வாறு சரியான நிலையில் வைப்பது என்று கற்போம். |
03:42 | குழந்தையின் வயிற்றின் மீது, தாயின் உடம்பு மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும். |
03:47 | அவர்களுக்கிடையே உள்ள இடைவெளி குறைந்தால், அது மார்பகத்தை அடைய குழந்தை எடுக்கும் முயற்சியை குறைக்கும். |
03:54 | அதனால், குழந்தை மார்பகத்துடன் ஆழமாக இணைத்துக்கொள்வது எளிதாகும். |
04:00 | குழந்தையின் முழு உடம்பு எந்த திசையில் பிடித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது இரண்டாவது முக்கிய குறிப்பாகும். |
04:08 | நாம் உணவு உண்கையில், நமது தலை, கழுத்து மற்றும் உடம்பு, ஒரே திசையில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். |
04:16 | ஆனால், தாய்ப்பாலூட்டுகையில் பல தாய்மார்களால், குழந்தையின் தலை அடிக்கடி பக்கவாட்டமாக திருப்பப்படுகிறது. |
04:23 | இது குழந்தை பாலை விழுங்க, அசௌகரியத்தை ஏற்படுத்தும். |
04:28 | தாய்பாலூட்டலின்போது குழந்தையின் தலை, கழுத்து மற்றும் உடம்பு, ஒரே திசையில் இருக்க வேண்டும். |
04:35 | இது குழந்தை பாலை விழுங்குவதற்கு எளிதாக இருக்கும். |
04:41 | குழந்தையின் உடம்பை வைத்திருக்கும் முறையில், மூன்றாவது குறிப்பிற்கு நாம் இப்போது வருகிறோம். |
04:46 | தாய், குழந்தையின் தலை, கழுத்து மற்றும் மார்பை தாங்கிக்கொள்ள வேண்டும். |
04:51 | இல்லையெனில், குழந்தை மார்பகத்துடன் ஆழமாக இணைத்துக்கொள்ள அதிக முயற்சி எடுத்துக்கொள்ளும். |
04:58 | அடுத்து, குழந்தையின் மூக்கு மற்றும் கன்னத்தின் நிலைப்படுதலை பற்றி பார்ப்போம். |
05:03 | குழந்தையின் மூக்கும் முலைக்காம்பும் ஒரே கோட்டில் இருக்க வேண்டும். |
05:07 | மேலும் அவளது கன்னம் முன்னுக்கு கொண்டுவரப்பட்டு, மார்பகதிற்கு மிக அருகே வைக்கப்பட வேண்டும். |
05:13 | இது, குழந்தை, areolaவின் கீழ்ப்பகுதியை அதிகமாக பற்றிக்கொள்வதை உறுதிப்படுத்தும். |
05:19 | அதனால், அதிக பாலை குடிக்க, குழந்தை தனது கீழ்த்தாடையை திறமையாகப் பயன்படுத்தும். |
05:26 | Areola என்பது முலைக்காம்பை சுற்றியிருக்கின்ற கருமையான பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். |
05:32 | இப்போது, குழந்தை சரியாக பிடித்துக்கொள்ளப்பட்டுள்ளதால், |
05:35 | மார்பகத்தை எவ்வாறு பிடித்துக்கொள்ள வேண்டும் என்று கற்போம். |
05:39 | மற்றொரு கையின் விரல்களை பயன்படுத்தி தாய், மார்பகத்தை மேலிருந்து தள்ளி அதை, யு வடிவான பிடிமானத்தில் வைக்க வேண்டும். |
05:48 | இப்படத்தில் உள்ள தாய், தனது வலது மார்பகத்தை பிடித்துக்கொள்ள, தனது இடது கையை பயன்படுத்துகிறார். |
05:55 | கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் சரியான நிலையை புரிந்துகொள்ள, தாயின் வலது மார்பகத்தின் முலைக்காம்பை ஒரு கடிகாரத்தின் மையப்பகுதியாக கற்பனை செய்து கொள்ளவும். |
06:04 | இந்த கடிகாரத்தில், தாய் தனது இடது கட்டைவிரலை 3’O மணி நிலையில் வைக்க வேண்டும். |
06:10 | அவளது இடது ஆள்காட்டி விரலும் நடு விரலும் 9’O மணி நிலையில் வைக்கப்பட வேண்டும். |
06:18 | மார்பகத்தை பிடித்துக்கொள்கின்ற விரல்களும், குழந்தையின் உதடுகளும் ஒரே திசையில் இருக்க வேண்டும். |
06:25 | எதற்கு? ஒரு எளிய உதாரணத்தை பயன்படுத்தி இதைப்புரிந்து கொள்வோம். |
06:30 | ஒரு வடா பாவ் அல்லது பர்கர் சாப்பிடுகையில், நமது உதடுகள் கிடைமட்டமாக திறக்கின்றன. |
06:35 | ஒரு பெரிய கடியை எடுத்துக்கொள்ள, நாம் வடா பாவ் அல்லது பர்கரை கிடைமட்டமாக பிடித்துக்கொள்கிறோம். |
06:40 | இங்கு, கட்டை விரலும் மற்ற விரல்களும், உதடுகள் இருக்கின்ற அதே திசையில் வைக்கப்படுகின்றன. |
06:46 | வடா பாவ் அல்லது பர்கரை நாம் செங்குத்தாக பிடித்துக்கொண்டால், நம்மால் ஒரே வாயில் அதிகமாக உட்கொள்ள முடியாது. |
06:53 | இவ்வாறே, குழந்தையின் உதடுகளை பார்க்கவும். இங்கு, உதடுகள் செங்குத்தாக இருக்கின்றன. |
07:00 | ஆகையால், தாயின் கட்டை விரலும், மற்ற விரல்களும் மார்பகத்தின் மீது செங்குத்தாக வைக்கப்பட வேண்டும். |
07:06 | இது, கீழ் ஏரியோலாவின் ஒரு பெரிய பகுதியை, குழந்தை தன் வாயினுள் எடுத்துக்கொள்ள உதவி புரியும். |
07:13 | குழந்தையின் உதடுகள் இருக்கின்ற அதே திசையில் இருப்பது மட்டுமன்றி, தாயின் கட்டை விரலும், மற்ற விரல்களும் முலைக்காம்பிலிருந்து, மூன்று விரல்களின் அளவு தூரத்தில் எப்போதும் இருக்க வேண்டும். |
07:23 | மீண்டும், ஒரு வடா பாவ் அல்லது பர்கர் சாப்பிடுகையில், அதை மிக அருகில் நாம் பிடித்துக்கொண்டால், ஒரு பெரிய கடி எடுத்துக்கொள்ளும் போது நமது விரல்கள் நமது வாயை தடுக்கும். |
07:34 | அதை அதிக தூரத்தில் நாம் பிடித்துக்கொண்டால், நமது வாயினுள் புக, அது சரியாக அமையாது. |
07:41 | அதனால், ஒரு பெரிய கடி எடுத்துக்கொள்ள, அதை சரியான தூரத்தில் நாம் பிடித்துக்கொள்கிறோம். |
07:47 | இவ்வாறே குழந்தைக்கும், படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, முலைக்காம்பிலிருந்து மூன்று விரல்கள் தூரமே, சரியான இடைவெளியாகும். |
07:55 | கீழ் ஏரியோலாவை குழந்தை தன் வாயினுள் எடுத்துக்கொள்வதற்கு, தாயின் விரல்கள் தடுக்காமல் இருக்க, இந்த தூரம் உறுதிப்படுத்தும். |
08:05 | மிகவும் சிறிய அளவு பாலை கொடுக்கக்கூடிய முலைக்காம்பை மட்டும் தாய் அழுத்துவதில்லை. |
08:11 | மேலும் அதிக பாலை வெளிக்கொணர, areolaவின் கீழ் இருக்கின்ற பெரிய பால் நாளங்களை தாய் அழுத்துகிறார். |
08:17 | மேலும், குழந்தை ஆழமாக இணைத்துக்கொள்ள மார்பகம் சரியாக வடிவமைக்கப்படுகிறது. |
08:23 | குழந்தையின் கன்னம் இருக்கின்ற அதே மார்பக பக்கத்தின் மீது தாயின் கட்டைவிரல் இருக்கவேண்டும். |
08:30 | மற்றும் குழந்தையின் மூக்கு இருக்கின்ற அதே மார்பக பக்கத்தின் மீது அவளின் மற்ற இரண்டு விரல்களும் இருக்கவேண்டும். |
08:36 | வடா பாவ் அல்லது பர்கர் பற்றிய உதாரணத்திற்கு திரும்பச்செல்வோம். |
08:41 | வடா பாவ் அல்லது பர்கரை சரியாக பிடித்துக்கொண்ட பின்னர், ஒரு பெரிய கடியை எடுத்துக்கொள்ள நாம் எப்போதும், அதை அழுத்துகிறோம். |
08:48 | அதே போல், தாய் தனது மார்பகத்தை மேலிருந்து மென்மையாக அழுத்தி, அதை யு வடிவ பிடிமானத்திற்கு கொண்டு வரவேண்டும். |
08:54 | கீழ் areolaவின் ஒரு பெரிய பகுதியை தன் வாயினுள் புகுத்திக்கொள்ள, இது குழந்தைக்கு உதவி புரியும். |
09:01 | ஆனால், தாய் தனது மார்பகத்தை தலைகீழான வி வடிவ பிடிமானத்தில் அழுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். |
09:07 | வி வடிவ அழுத்துதல் மார்பகத்தை கிள்ளி, முலைக்காம்பின் மூலம் தாய்ப்பாலூட்டுதலை உண்டாக்கும். |
09:14 | மேலும், கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் மூலம் மார்பகத்திற்கு கொடுக்கப்படுகின்ற அழுத்தம் சமமாக இருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும். |
09:21 | இல்லையெனில், முலைக்காம்பு இடது அல்லது வலது திசையில் நகர்ந்துவிடும். |
09:27 | மேலும், குழந்தையினால் மார்பகத்துடன் ஆழமாக இணைத்துக்கொள்ள முடியாது. |
09:32 | மார்பகத்தை குழந்தையை நோக்கி பக்கவாட்டமாக நகர்த்தி, குழந்தையிடம் எப்போதும் கொண்டுவரக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். |
09:39 | எப்போதும் குழந்தையை மார்பகத்தை நோக்கி கொண்டுவரவும். |
09:43 | இப்போது, குழந்தை Cradle பிடிமானத்தில் இருக்கிறது, மற்றும் தாய்ப்பாலூட்டுதலுக்கு மார்பகத்துடன் இணைத்துக்கொள்ள தயாராக உள்ளது. |
09:49 | இதே தொடரின் மற்றொரு காணொளியில், குழந்தை மார்பகத்தோடு சரியாக இணைத்துக்கொள்ளுதல் பற்றி விளக்கப்பட்டுள்ளது. |
09:58 | குழந்தை மார்பகத்தோடு ஆழமாக இணைத்துக்கொண்டவுடனே, மற்றும் மார்பகம் மிகவும் கனமாக இல்லாமல் இருந்தால், பின்- |
10:05 | தாய் தன் மார்பத்திலிருந்து தன் கையை விலக்கிக்கொண்டு, |
10:09 | குழந்தையை தாங்கிக்கொள்ள, அந்தக்கையை குழந்தையின் கீழ் கொண்டுவர வேண்டும். |
10:14 | இந்நிலையில், தனது இரண்டு கைகளையும் தனது உடம்பிற்கு மிக அருகே கொண்டு வரவேண்டும். |
10:21 | இது, தாய்ப்பாலூட்டும் போது அவளை, சௌகர்யமாக வைத்துக்கொள்ளும். |
10:26 | இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்குநன்றி |