Health-and-Nutrition/C2/Complementary-food-for-6-to-24-month-old-babies/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:00 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான கூடுதல் உணவு குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, வீட்டில் தயாரிக்கப்பட்ட சத்தான கூடுதல் உணவு
00:16 அதன் அளவு
00:18 வகை
00:20 மற்றும் வேளை இடைவெளி.
00:23 6 மாத குழந்தைக்கான கூடுதல் உணவுடன் தொடங்கலாம்
00:29 குழந்தைக்கு 6 மாதம் முடிந்த பின்பே கூடுதல் உணவு தொடங்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்
00:38 குழந்தையின் முதல் உணவு, ஒரே ஒரு உணவால் செய்யப்பட்ட ஒரு கெட்டியான கூழாக அல்லது பேஸ்ட்டாக இருக்க வேண்டும்.
00:46 இந்த உணவுக்கு பயன்படுத்தக்கூடிய உணவுகளின் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
00:52 முளைத்த, சமைக்கப்பட்ட மற்றும் கூழாக்கப்பட்ட கொண்டைக்கடலை போன்ற முழு பீன்ஸை பயன்படுத்தப்படலாம்.
01:00 முளைத்த, சமைக்கப்பட்ட மற்றும் கூழாக்கப்பட்ட கேழ்வரகு போன்ற தானியங்களையும் தேர்வு செய்யலாம்.
01:07 ஊறவைத்த, சமைக்கப்பட்ட மற்றும் கூழாக்கப்பட்ட உடைத்த பச்சை பயறு பீன்ஸ் போன்ற உடைத்த பருப்புகளைப் பயன்படுத்தலாம்.
01:16 சமைத்து மற்றும் கூழாக்கப்பட்ட முட்டை, கோழி, மீன் போன்ற அசைவ உணவுகளையும் பயன்படுத்தலாம்.
01:25 கெட்டியான கூழை தயாரிக்க அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்க.
01:30 இங்கே, முளைத்த, சமைத்த மற்றும் கூழாக்கப்பட்ட சிவப்பு காராமணி 1 வது உணவாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
01:38 தேவைப்பட்டால், கூழை தயாரிக்க உணவில் சிறிது தாய்ப்பாலை சேர்க்கவும்.
01:45 தாய்ப்பால் கிடைக்காவிட்டால் மட்டுமே, கொதித்து பின் ஆறிய நீரை பயன்படுத்தவும்
01:53 கூழ் அல்லது பேஸ்டின் நிலைத்தன்மை மிகவும் முக்கியமானது.
01:59 கரண்டியை சாய்த்தாலும் எளிதில் கீழே விழாத அளவிற்கு அது கெட்டியாக இருக்க வேண்டும்.
02:06 முதல் நாளில் குழந்தையின் முதலாவது வேளை உணவுக்கு 1 தேக்கரண்டி முதலாவது உணவை கொடுக்கவும்.
02:14 அதே நாளில் 2 வது வேளை உணவுக்கு மற்றொரு தேக்கரண்டி முதலாவது உணவை கொடுக்கவும்.
02:21 முதல் நாளில் இந்த 2 உணவுகளுடன், குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கொடுங்கள்.
02:29 இந்த டுடோரியலில் பயன்படுத்தப்படும் தேக்கரண்டி சுமார் 15 கிராம் உணவைக் கொண்டிருக்கும் என்பதை கவனிக்கவும்.
02:37 2 வது நாளில், ஒரு வேளை உணவுக்கு 2 தேக்கரண்டி அதே உணவை கொடுக்கவும்.
02:44 தாய்ப்பால் கொடுப்பதோடு இதுபோன்ற உணவுகளை இரு வேளையும் அதே நாளில் கொடுக்கவும்.
02:50 3 வது நாளில், ஒவ்வொரு வேளை உணவிலும் 3 தேக்கரண்டி அதே உணவை கொடுக்கவும்.
02:57 தாய்ப்பால் கொடுப்பதோடு இதுபோன்ற உணவுகளை இரு வேளையும் அதே நாளில் கொடுக்கவும்.
03:03 4 வது நாள், 2 வது புதிய உணவைக் கொடுக்கத் தொடங்கும் நாள் ஆகும்.
03:09 எந்தவொரு உணவுக் குழுவிலிருந்தும் ஊட்டச்சத்தை மிகுதியாக கொண்ட ஒரு புதிய உணவை தேர்வுசெய்க.
03:15 இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் உணவுக் குழுக்கள் விளக்கப்பட்டுள்ளன.
03:22 முளைத்த, சமைக்கப்பட்ட மற்றும் கூழாக்கப்பட்ட கேழ்வரகு 2 வது உணவாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
03:30 தாய்ப்பால் அல்லது கொடுத்து ஆறிய நீரினால் இந்த உணவின் ஒரு கெட்டியான பேஸ்டை செய்யவும்.
03:38 ஒரு வேளை உணவுக்கு 2 வது உணவினுடைய பேஸ்டின் 1 தேக்கரண்டியுடன் தொடங்கவும்.
03:44 1 வது உணவு பேஸ்டின் 3 தேக்கரண்டியுடன் இதை சேர்த்து கொடுக்கவும்.
03:50 ஒவ்வொரு வேளை உணவிலும் மொத்தம் 4 தேக்கரண்டி உணவு பேஸ்ட் கொடுக்கப்பட வேண்டும்.
03:57 இதுபோன்ற 2 வேளை உணவை 4 வது நாளில் தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்கவும்.
04:03 5 வது நாளில், 2 வது பேஸ்டின் அளவை, 1 வேளை உணவுக்கு 2 தேக்கரண்டி வரை அதிகரிக்கவும்.
04:11 ஒவ்வொரு வேளை உணவிலும் 1 வது உணவு பேஸ்டின் 2 தேக்கரண்டியை சேர்த்து கொடுக்கவும்.
04:18 இதுபோன்ற 2 வேளை உணவை 5 வது நாளில் தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்கவும்.
04:24 6 வது நாளில், 2 வது பேஸ்டின் அளவை 1 வேளை உணவுக்கு, 3 தேக்கரண்டி வரை அதிகரிக்கவும்.
04:32 ஒவ்வொரு வேளை உணவிலும் 1 தேக்கரண்டி 1 வது உணவு பேஸ்டுடன் சேர்த்து கொடுக்கவும்.
04:39 இதுபோன்ற 2 வேளை உணவை 6 வது நாளில் தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்கவும்.
04:45 7 வது நாளில், 3 வது புதிய ஊட்டச்சத்து நிறைந்த உணவு கூழை கொடுக்கத் தொடங்குங்கள்.
04:53 இந்த படத்தில், 3 வது புதிய உணவு கூழை உருவாக்க முட்டை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
04:59 ஒரு வேளை உணவுக்கு,1 தேக்கரண்டி 3 வது உணவு கூழை கொடுக்கத் தொடங்கவும்.
05:05 3 தேக்கரண்டி, 1 மற்றும் 2 வது உணவு கூழுடன் சேர்த்து கொடுங்கள்.
05:12 ஒவ்வொரு உணவிலும் மொத்தம் 4 தேக்கரண்டி உணவு கூழ் கொடுக்கப்பட வேண்டும்.
05:19 இதுபோன்ற 2 வேளை உணவை 7 வது நாளில் தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்கவும்.
05:25 படிப்படியாக 3 வது உணவு கூழின் அளவை 3 தேக்கரண்டி ஒரு வேளை உணவில் அதிகரிக்கவும்.
05:33 முன்பு கொடுத்த அனைத்து கூழ்களுடன் சேர்த்து அதை கொடுக்கவும்.
05:38 ஒவ்வொரு வேளை உணவிலும் மொத்தம் 4 தேக்கரண்டி உணவு கூழை கொடுங்கள்.
05:45 6 மாத குழந்தைக்கு ஒரு நாளைக்கு இதுபோன்ற 2 வேளை உணவை தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்கவும்.
05:53 இதேபோல், 10 வது நாளில் 4 வது புதிய ஊட்டச்சத்து நிறைந்த உணவு கூழை கொடுக்கவும்.
06:00 இந்த படத்தில், 4 வது புதிய உணவு கூழை தயாரிக்க மீன் பயன்படுத்தப்படுகிறது.
06:07 பின்னர், 13 வது நாளில் 5 வது புதிய உணவைக் கொடுக்கவும். இவ்வாறே தொடரவும்.
06:14 ஒவ்வொரு 4 வது நாளிலும் ஒரு புதிய உணவைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
06:19 குழந்தை அனைத்து உணவுக் குழுக்களிடமிருந்தும் பலவகையான உணவுகளை உண்ணும் வரை தொடரவும்.
06:26 புதிய தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளைத் தொடங்கிய பிறகு, அவற்றை எப்போதும் குழந்தையின் உணவில் சேர்க்கவும்.
06:34 6 மாதம் முடிந்த உடனேயே இதுபோன்ற கலவைகளை கொடுங்கள்.
06:41 அவை ஒரு குழந்தைக்கு முழுமையான புரதத்தை வழங்கும்.
06:46 உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்கும் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துங்கள்.
06:53 சில எடுத்துக்காட்டுகள் ஆவன, வறுத்தல், ஊறவைத்தல், முளைத்தல், நொதித்தல் மற்றும் சமைத்தல்.
07:02 இந்த நுட்பங்கள் இதே தொடரின் பிற டுடோரியல்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
07:10 புதிதாக சமைத்த, வீட்டில் சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவு, குழந்தைக்கு சிறந்தது.
07:17 குழந்தையின் உணவு சேமிக்கப்பட வேண்டுமானால், பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
07:25 குழந்தையின் உணவை பாதுகாப்பாக தயாரித்தல் மற்றும் சேமித்தல் மற்றொரு டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது.
07:32 குழந்தையின் உணவைப் பாதுகாப்பாக வழங்குவதும் அதே டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது.
07:39 மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
07:44 இப்போது, ​​7 மாத குழந்தைக்கு கூடுதல் உணவளிப்பதைப் பற்றி பார்ப்போம்
07:51 இந்த வயதில், ஒரு வேளை உணவின் அளவை படிப்படியாக அரை கப் வரை அதிகரிக்கவும்.
07:58 தாய்ப்பால் கொடுப்பதோடு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவின் எண்ணிக்கையை 3 ஆக உயர்த்தவும்.
08:06 இந்த டுடோரியலில் பயன்படுத்தப்படும் கப் 250 மில்லி லிட்டர் அளவு என்பதை கவனிக்கவும்.
08:14 இந்த வயதில், உணவின் நிலைத்தன்மையை மாற்ற வேண்டும்.
08:21 7 மாத குழந்தைக்கு வழங்கப்படும் உணவை பிசைந்து அல்லது கட்டியாக கொடுக்க வேண்டும்.
08:28 அத்தகைய உணவுக்கு ஒரு எடுத்துக்காட்டு பலாப்பழ விதைகள் கஞ்சி.
08:33 குழந்தைக்கு 8 மாதங்கள் ஆகும் போது, ​​ஒரு வேளை உணவின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 4 ஆக உயர்த்தவும்.
08:41 ஒரு வேளை உணவுக்கு அரை கப் உணவைக் கொடுப்பதைத் தொடரவும்.
08:46 தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரவும்.
08:49 இந்த வயதில், குழந்தைக்கு உணவு கூழ்கள் மற்றும் பேஸ்ட்களைக் கொடுப்பதை நிறுத்துங்கள்.
08:56 மென்மையான மென்று சாப்பிடக்கூடிய உணவைக் கொடுக்கத் தொடங்குங்கள்.
09:01 அத்தகைய உணவுக்கு ஒரு எடுத்துக்காட்டு முளைத்த, சமைத்த கொண்டைக்கடலை.
09:08 குழந்தைக்கு 9 முதல் 11 மாதங்கள் இருக்கும் போது, ​​மென்மையான கைகளால் சாப்பிடக்கூடிய உணவுகளை கொடுக்கத் தொடங்குங்கள்.
09:15 இவை கைகளால் பிடித்து சாப்பிடக்கூடிய உணவுகள் என்பன கைகளால் பிடித்து சாப்பிடக்கூடிய உணவு வகைகளாகும்
09:22 வேகவைத்த முட்டை மற்றும் சமைத்த காய்கறி துண்டுகள் அத்தகைய உணவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
09:29 இந்த வயதில், ஒரு வேளை உணவின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 5 ஆக உயர்த்தவும்.
09:35 ஒவ்வொரு வேளை உணவிலும் அரை கப் உணவைக் கொடுப்பதைத் தொடரவும்.
09:41 தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரவும்.
09:44 12 மாதங்கள் முடிந்த பிறகு, ஒரு குழந்தை குடும்பத்தின் ஒரு பகுதி உணவை சாப்பிட தொடங்கலாம்.
09:52 இந்த வயதில், ஒரு வேளை உணவுக்கு 1 கப் வரை உணவின் அளவை அதிகரிக்கவும்.
09:59 தாய்ப்பால் கொடுப்பதோடு ஒரு நாளைக்கு 5 வேளை உணவைத் தொடர்ந்து கொடுங்கள்.
10:05 ஒரு நாளைக்கு 5 வேளையில், 3 வேளை முக்கிய உணவாகவும் 2 வேளை சிற்றுண்டிகளாகவும் கொடுக்கலாம்.
10:12 சிற்றுண்டிற்கு, 1 கப் சத்தான உணவு கொடுக்க வேண்டும்.
10:19 பழம், தயிர், சமைத்த பன்னீர் மற்றும் சமைத்த காய்கறிகள் சிற்றுண்டிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
10:28 சமைக்கும் போது இந்த தின்பண்டங்களில் சத்தான கொட்டைகள், விதைகள் மற்றும் இலையின் பொடிகளை சேர்க்கவும்.
10:36 சத்தான தூள் சமையல் இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது.
10:44 குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்க நினைவில் வைத்துக்கொள்க.
10:51 குழந்தையின் முதல் பிறந்தநாளுக்கு முன்பு, இறால்களையும் கிளிஞ்சல் மீன்களையும் உணவாக கொடுக்க வேண்டாம்.
10:58 மேலும், குழந்தைக்கு தயாரிக்கப்பட்ட உணவில் உப்பு சேர்க்க வேண்டாம்.
11:05 2 வயதாகும் வரை, குழந்தைக்கு எந்த வகையான சர்க்கரையும் கொடுக்க வேண்டாம்.
11:13 அதில் வெல்லம், தேன் மற்றும் பழச்சாறுகள் அடங்கும்.
11:19 மேலும், தேநீர், காபி, பேக் செய்யப்பட்ட உணவு அல்லது பானங்கள்
11:25 மற்றும் வெளியில் தயாரிக்கப்பட்ட உணவு எதையும் கொடுக்க வேண்டாம்
11:29 இவைகள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற குறிப்பிட்ட கூடுதல் உணவிற்கான வழிகாட்டுதல்கள் ஆகும்.
11:36 எல்லா வயது குழந்தைகளுக்கும் இன்னும் பல முக்கியமான உணவு வழிகாட்டுதல்கள் உள்ளன.
11:43 இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் அவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன
11:50 இத்துடன் நாம் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி




.


. .

Contributors and Content Editors

Jayashree